Untitled Document
September 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அலெக்ஸ் பாண்டியன் படத்தின் திரை விமர்சனம்
[Monday 2013-01-14 18:00]

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் சென்னை துறைமுகத்துக்கு 1000 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் அடங்கிய ஒரு கப்பலுடன் வருகிறது. இதை விற்பனை செய்ய முதலமைச்சரின் உத்தரவுக்காக காத்திருக்கிறது. முதலமைச்சர் விசு இந்த மருந்தின் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும் எனக்கூறி அந்த மருந்தை விற்க தடை செய்கிறார். உடனே, அந்த வெளிநாட்டுக் கும்பல் சென்னையில் பிரபல டாக்டரான சுமனின் உதவியுடன் சாமியாரான மகாதேவன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எண்ணுகிறது. அதன்படி, முதலமைச்சரிடம் மூன்று பேரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போகவே முதலமைச்சரின் மகளான அனுஷ்காவை கடத்தி தங்களது திட்டத்தை சாதிக்க நினைக்கின்றனர்.


'கண்ணா லட்டு தின்ன ஆசையா' - திரைக்கண்ணோட்டம்..
[Monday 2013-01-14 18:00]

ஏற்கனவே பாக்யராஜ் நடித்து இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான இன்று போய் நாளை வா படத்தைத் தழுவிதான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதால் கதை என்னவோ அதேதான். ஆனால் அதில் வந்த இந்தி வாத்தியார் வேடத்தை இந்தப் படத்தில் பாட்டு வாத்தியாராக காட்டியிருக்கிறார்கள். இது போன்று ஏகப்பட்ட மாற்றங்களையும் கதையிலும் காட்சிகளிலும் செய்திருக்கிறார்கள். படத்தின் கதை என்னன்னா.. சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிற சந்தானம், வெட்டி ஆபிசர்களாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் பவர் ஸ்டார், சேது மூன்று பேரும் நண்பர்கள். சேது வீட்டின் எதிர் வீட்டில் புதிதாக குடித்தனம் வருகிறார்கள் விகாஷா குடும்பத்தினர்.


ஆக்ஷன் படங்களிலும் கலக்கப்போகும் உதயநிதி ஸ்டாலின்
[Monday 2013-01-14 18:00]

இது கதிர்வேலின் காதலி படத்தில் உதயநிதி வேலைவெட்டி இல்லாதவராக வருகிறாராம். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவான தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கும் படம் இது கதிர்வேலின் காதலி. முதல் படத்தில் காமெடி ஹீரோவாக வந்த அவர் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக வருகிறாராம். ஆனால் ஓவர் பில்ட் அப் கொடுக்காமல் அவரால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே முயற்சி செய்யப் போகிறார். படத்தில் அவர் வேலை வெட்டியில்லாமல் சுற்றும் வாலிபராக நடிக்கிறார். மதுரைக்கு போகும் இடத்தில் நயன்தாராவை காதலிக்கிறார். படம் முழுக்க சிரிக்க வைக்க சந்தானம் இருக்கிறார். இந்த படத்தை சுந்தர பாண்டியன் பட புகழ் பிரபாகரன் இயக்குகிறார். எனது பர்சனாலிட்டிக்கு ஏற்றவாறு இருந்ததால் தான் இது கதிர்வேலின் காதலி படத்தில் நடிக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.


பிரபுதேவாவிற்காக பாலிவுட் போகும் நயன்தாரா
[Monday 2013-01-14 18:00]

நயன்தாரா பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். நயன்தாரா பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் ஸ்ரீராம ராஜ்ஜியம். இந்த படத்தில் நயன் சீதையாக நடித்தார். தற்போது இப்படத்தை இந்தியில் டப் செய்திருக்கிறார்கள். அண்மையில் மும்பையில் நடந்த பிரீமியர் ஷோவைப் பார்த்துவிட்டு அங்குள்ள பல பிரபலங்கள் நயனின் நடிப்பு சூப்பா் என்று பாராட்டியுள்ளனர். இதனால் குஷியில் இருக்கும் அவர் இப்படம் மட்டும் ஹிட்டானால் பாலிவுட் படத்தில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளாராம். பாலிவுட்டில் ரீமேக் மன்னனாக இருக்கும் நயனின் முன்னாள் காதலர் பிரபுதேவா இதைக் கேட்டு என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லையே. நயனைப் பிரிந்த பிறகு அவர் மும்பையில் செட்டிலானார். இப்பொழுது என்னவென்றால் நயனுக்கும் மும்பை போகும் ஆசை வந்துவிட்டது. அது என்னமோ தெரியவில்லை கோலிவுட், டோலிவுட் நடிகைகளில் சிலருக்கு இப்போது பாலிவுட் ஆசை வந்துவிட்டது.


ஒருவாரத்தில் விஸ்வரூபம் டி.டி.எச் இல் வெளியீடு..
[Monday 2013-01-14 14:00]

தியேட்டரில் வெளியான ஒருவாரத்திற்கு பின்னர் பிப்-2.,ம் தேதி டி.டி.எச்.-இல் விஸ்வரூபம் படம் வெளியாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் முதலிலும், பின்னர் தியேட்டரிலும் வெளியிடப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த கமல், அதன்பிறகு இரண்டையும் ஒரே நாளில் வெளியிட இருப்பதாக சொன்னார். இதற்கு தியேட்டர், டிடிஎச் இரண்டு தரப்பிலுமே பலத்த எதிர்ப்பு கிளம்ப ஜன., 25ம் தேதி தியேட்டரில் வெளியிடப்படும் என்ற அறிவித்தார். ஆனால் டிடிஎச்சில் வெளியிடுவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தார் கமல். படம் தியேட்டரில் வெளியாகும் என்று சொன்னவுடனேயே டி.டி.எச்., உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தி கிளம்பியது. இதனால் சில டி.டி.எச். உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து வருவதாக தகவல் வெளியானது.


புத்தாண்டை காட்டுக்குள் கொண்டாடினால் அமலா பாலுக்கு ராசியாம்..!
[Monday 2013-01-14 14:00]

இந்த புத்தாண்டை, பெரும்பாலான நடிகைகள், ஆட்டமும், பாட்டமுமாக, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், தங்கள் வீடுகளிலும் கொண்டாடினாலும், ஒரு சில நடிகைகளுக்கு படப்பிடிப்புகள் இருந்ததால், படப்பிடிப்பு குழுவினருடன் கொண்டாடினர். ஆனால், மைனா நாயகி அமலா பாலுக்கு, இந்த புத்தாண்டை, மிகவும் வித்தியாசமான இடத்தில் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாம். படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்பதற்காக, பாங்காக் சென்றிருந்தார், அமலா பால்.


நடிகர்களின் கனவை கலைத்துவிட்ட கெளதம்மேனன்
[Sunday 2013-01-13 16:00]

'நடுநிசி நாய்கள்' படம் ஏமாற்றியபோதுகூட பெரிய அளவில் பீல் பண்ணாத கெளதம்மேனன், இப்போது நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தோல்வியால் ரொம்ப தடுமாறிப்போயிருக்கிறார். இந்நிலையில், அடுத்தபடியாக யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்து சூர்யாவை நாயகனாக வைத்து துப்பறியும சந்துரு என்ற பெயரில் ஒரு படம் இயக்கயிருந்தார். ஆனால் விஜய் அந்த கதையில் நடிக்க மறுத்தபோது அடுதது தான் நடித்து தருவதாக வாக்களித்திருந்த சூர்யா, இப்போது அவருக்கு பதில் சொல்லாமல் மெளனம் சாதிக்கிறாராம். கைவசம் பல படங்கள் இருப்பதாக சொல்லி பட்டியல் போடுகிறாராம்.


'முந்தானை முடிச்சு' படத்தின் இரண்டாம் பாகம் ஜீவா - ரஷ்மி கவுதம் நடிப்பில் வெளிவருகிறது.
[Sunday 2013-01-13 16:00]

நடிகர் பாக்யராஜ் - ஊர்வசி ஜோடியாக நடித்த முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகம், மாப்பிள்ளை வினாயகர் என்ற பெயரில் தயாராகிறது. நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த ஜீவா, இந்த படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மி கவுதம் நடிக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி இருவரும் ஜீவாவின் பெற்றோர்களாக நடிக்கிறார்கள். பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டூ படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன், இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். ரமேஷ் தயாரிக்கிறார். சி.ஆர்.மாறவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அபிஷேக் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் வாலி, நா.முத்துக்குமார் ஆகிய இருவரும் எழுதியிருக்கிறார்கள். படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறுகிறது.


ஒன்றாக களமிறங்கும் சிம்புவின் வேட்டை மன்னன், வாலு
[Sunday 2013-01-13 15:00]

வேட்டை மன்னன், வாலு என இரு படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சிம்பு. இதில் வேட்டை மன்னன் முதலில் தொடங்கப்பட்டது. ரொம்ப நாட்கள் கழித்து தொடங்கியது வாலு. ஆனால் சீனியா‌ரிட்டி வ‌ரிசையில் படத்தை வெளியிடும் எண்ணம் சிம்புக்கு இல்லை. இது என்ன வேலை வாய்ப்பு அலுவலகமா? வாலு சிம்புக்கு திடீரென்று உதித்த எண்ணம். சரசரவென சின்னதாக ட்ரெய்லர் தயார் செய்து சந்தானத்தையும் ஹன்சிகாவையும் கூட்டணி சேர்த்து அந்த பம்பளிமாஸ் வாயால், சில பசங்களை பார்க்க பார்க்கதான் பிடிக்கும், உன்னை மாதி‌ரி பசங்களை பார்த்த உடனே பிடிச்சிடும் என்று தனுஷுக்கு ராக்கெட் விட வைத்து.. ம்.. ரொம்ப தூரம் வாலில் பயணித்துவிட்டார். ரயில்வே காலனி பின்னணியில் நடக்கும் காதல் பிளஸ் காமெடி கதை.


'நீச்சல் உடை நாயகியாகவும் மாறத் தயார்' என அறிக்கை வெளியிட்ட காரத்திகாவிற்கு, அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புக்கள்..
[Sunday 2013-01-13 11:00]

'கோ' பட நாயகியான கார்த்திகா அந்த படத்திற்கு பிறகு பாரதிராஜா இயக்கியுள்ள அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் ஆடுமேய்க்கும் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தபோது அவரைத்தேடி பல வாய்ப்புகள் சென்றன. ஆனால் நான் பாரதிராஜா பட நாயகி ஆகிவிட்டேன். அதனால் இனிமேல் நார்மலான கதைகளில் நடிக்க மாட்டேன். கதைகளில் கதாநாயகனுக்கு இணையாக எனக்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன். அதோடு கிளாமர் விசயத்தில் கட்டுப்பாடு காப்பேன் என்று புதிய கண்டிசன்களை அள்ளிப்போட்டார். இதன்காரணமாக, அதிர்ச்சியடைந்த இயக்குனர்கள், இப்பவே இப்படியென்றால் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு என்னென்ன பில்டப் கொடுப்பாரோ என்று சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடித்து விட்டனர்.


ஆங்கிலேயரை விட, நமது நாட்டின் ஊழல் தலைவர்கள் அதிகமாக சுரண்டி உள்ளனர் - அஜித்
[Sunday 2013-01-13 11:00]

ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர், என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். நடிகர், நடிகைகளுக்கு சேவை வரிவிதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள், உள்ளிட்ட அனைத்து திரைப்பட சங்கத்தினரும் பங்கேற்றார்கள். மும்பையில் ஷூட்டிங்கில் இருந்ததால் அஜித் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சேவை வரிவிதிப்பு குறித்து நடிகர் அஜித் அளித்துள்ள பேட்டியில், ரெயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாது. நான் திரை உலகினர் மீது சுமத்தப்பட்டுள்ள சேவை வரி பற்றி மட்டும் குறிப்பிடவில்லை.


மீண்டும் திரையுலகை கலக்க போகும் நிலா
[Sunday 2013-01-13 11:00]

எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நிலா. சிம்ரனுக்கு போட்டியாக வருவார் என்று கருதப்பட்ட நிலா, அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். பின்னர் காணாமல் போனார். படப்பிடிப்பு தளங்களில் ஆர்ப்பாட்டமாக நடந்து கொள்வது, நட்சத்திர ஓட்டல் வசதி, குளிக்க மினரல் வாட்டர் வசதி என பல பிரச்னைகளில் சிக்கியவருக்கு பலரும் வாய்ப்புத் தர தயங்கினார்கள். அதோடு நிலா நடிப்பு கிலோ என்ன விலை என்று வேறு கேட்டார். இவர் நடித்து வெளிவராமல் இருந்த கில்லாடி படத்தை இப்போது வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் நுழைந்து விடலாம் என்று கருதிய நிலா இப்போது மீடியாக்கள் முன் வந்து நிற்கிறார்.


விஸ்வரூபம் ரூ.150 கோடி வசூலிக்கும் - கமல்ஹாசன்
[Saturday 2013-01-12 18:00]

விஸ்வரூபம் படம் நிச்சயம் ரூ.150 கோடி வசூலிக்கும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகளும் விஸ்வரூபமாகவே இருந்தது. இப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும் புதிய திட்டத்தை கமல் கொண்டு வந்தார். இதுதொடர்பாக நாட்டில் உள்ள முக்கிய டி.டி.எச்., நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி, படமும் கடந்த 10ம் தேதி இரவே டி.டி.எச்.-இல் ஒளிப்பரப்பாக இருந்தது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பிரபல ஆங்கில நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கையின் பிரபலங்கள் பட்டியலில் நடிகை ஹன்சிகா
[Saturday 2013-01-12 18:00]

பிரபல ஆங்கில நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கையின் பிரபலங்கள் பட்டியலில் நடிகை ஹன்சிகாவும் இடம்பெற்றுள்ளார். மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் நடித்து தற்‌போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தற்போது சேட்டை, வேட்டை மன்னன், வாலு, சிங்கம்-2, பிரியாணி போன்ற படங்களில் ஓய்வின்றி நடித்து வருகிறார்.


இந்தி திரையுலகில் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுக்கும் பிரபுதேவா
[Saturday 2013-01-12 18:00]

உடம்பைப் போல பிரபுதேவாவின் கே‌ரியரும் எந்தத் திசையிலும் இழுபடும் என்று தோன்றுகிறது. தமிழில் எனக்கும் உனக்கும் என்ற பெய‌ரில் வெளியான படத்தை இந்தியில் ஸ்ருதிஹாசனை வைத்து இயக்கி வருகிறார் பிரபுதேவா. நடுவில் ஏபிசிடி என்ற 3டி நடன படத்தில் நடித்தார். சச்சின், சேவாக் இருவரும் எப்படி பேட் செய்வார்கள் என்பதை நடனம் மூலம் வெளிப்படுத்தி ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். இத்தனை வேலைகளுக்கு நடுவில் தனது அடுத்தப்பட வேலைகளையும் முடுக்கிவிட்டிருப்பது ஆச்ச‌ரியம்.


ஹாலிவுட் படமான 'தி லாஸ்ட் ஸ்டாண்ட்' தமிழில் வெளிவருகிறது
[Saturday 2013-01-12 17:00]

65 வயது ஹாலிவுட் ஹீரோ கம் அரசியல்வாதி அர்னால்டு ஸ்வார்ஸ்நேகர் நடித்துள்ள புதிய படம் 'தி லாஸ்ட் ஸ்டாண்ட்'. ஜானி நாக்ஸ், லூயிஸ் கஸ்மேன், ஜேமி அலெக்ஸாண்டர் ஆகியோரும் நடித்துள்ளனர். கிம் ஜி வூன் இயக்கி உள்ளார். பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்று, சுயசரிதை எழுதிக் கொண்டிருக்கும் அவரை தேவையில்லாமல் சீண்டிப் பார்க்கிறது, சர்வதேச போதைக் கடத்தல் கும்பல். ஒரு காலத்தில் தங்களை மாட்டிவிட்ட அர்னால்டுக்கு இப்போது வயதாகி விட்டதால் அவரை போட்டுத் தள்ள படையை அனுப்புகிறது. வெகுண்டு எழும் அர்னால்டு சுயசரிதை எழுதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு கிளம்புகிறார்.


மீண்டும் விஜய்யுடன் ஜோடி போட்டு நடிக்கும் காஜல் அகர்வால்!
[Saturday 2013-01-12 17:00]

துப்பாக்கி படத்திற்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் விஜய் இயக்கும் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படத்திற்கு பிறகு விஜய், புதுமுக இயக்குனர் நேசன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார். அப்படத்திற்கு ஜில்லா என்று பெயரிட்டிருக்கின்றனர். இயக்குனர் நேசன் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இருவரும் இணையும் இரண்டாவது படம் இது.


நான் காமெடியான ஆள் என்பதால் தான் காமெடி படங்களில் நடிக்கிறேன் - உதயநிதி
[Saturday 2013-01-12 17:00]

நான் இயற்கையாகவே காமெடியான ஆள்தான், என்று நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் கடந்த வருடம் ரிலீசாகி வெற்றிகரமாக ஒடியது. தற்போது கதிர்வேலன் காதலி என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பிரபாகரன் இயக்குகிறார். இவர் சமீபத்தில் ரிலீசாகி ஹிட்டான சுந்தர பாண்டியன் படத்தை இயக்கியவர். இதில் உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.


பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் பற்றிய பார்வை
[Friday 2013-01-11 20:00]

இந்தாண்டு டஜன் கணக்கில் ரிலீஸ் ஆக இருந்த பொங்கல் படங்கள் வழக்கம் போல் தியேட்டர்கள் பற்றாக்குறையால் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டது. இதனால் இந்த பொங்கலுக்கு வெறும் 5 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக இருக்கிறது. அதில் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், விஷாலின் சமர், சந்தானத்தின் கண்ணா லட்டு திண்ண ஆசையா போன்ற படங்கள் அடங்கும்.


ரவி 5 வேடங்களில் நடித்த 'ஆதிபகவன்' டிரைலர் Top News
[Friday 2013-01-11 10:00]

அமீரின் ஆதிபகவன் படத்தில் ஜெயம் ரவி, 5 வேடங்களில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின், இயக்குனர் அமீரின் ஆதிபகவன் மெதுமெதுவாக முடிந்திருக்கிறது. தான் இயக்கும் படங்கள் நன்றாக வரவேண்டும் என்பதற்காகவே நீண்ட நாட்கள் படப்பணிகளை இழுப்பாராம் அமீர். இந்நிலையில் ஆதிபகவனில் மாஃபியா கும்பலைப்பற்றி எடுத்துள்ளார் அமீர். பாங்காக்கில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், முழு நீள ஆக்ஷன் படமாகும்.


சிம்ரனின் இடத்தை பிடித்த காஜல்..!
[Friday 2013-01-11 10:00]

விஜய்க்கு ஏற்ற ஜோடி த்ரிஷா என்றாலும், அவருக்கு ஏற்ற டான்ஸ் ஜோடி காஜல் அகர்வால் தான். விஜய் சூப்பராக டான்ஸ் ஆடுவார் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. பிரபுதேவா இயக்கிய இந்தி படமான ரவுடி ரத்தாரில் விஜய் ஒரு பாடலில் அதுவும் சில ஸ்டெப்ஸ் தான் போட்டிருப்பார். அதற்கே படத்தின் நாயகன் அக்ஷய் குமார் அதிர்ந்துவிட்டார். இவருக்கு என்ன 17 வயதா என்று கேட்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். விஜய் நச்சுன்னு ஆடினாலும் படத்தில் அவருடன் ஆடும் நாயகிகளும் அவருக்கு இணையாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் விஜய்க்கு இணையாக டான்ஸ் ஆடிய நாயகி என்றால் அது சிம்ரன் மட்டுமே. இந்நிலையில் விஜய்க்கு ஏற்ற புதிய டான்ஸ் ஜோடி கிடைத்துள்ளது.


இளையதளபதியுடன் மலையாள சூப்பர் ஸ்டார் இணையும் 'ஜில்லா'
[Friday 2013-01-11 10:00]

இளையதளபதி விஜய் - காஜல் அகர்வால் இணையும் புதிய படத்திற்கு ஜில்லா என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட்பிலிம்ஸ் தயாரிப்பில், நேசனின் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. இமானின் இசையமைக்கிறார், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தெரிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.


ஆஸ்கர் பரிசுக்கு தமிழ்ப் பாடல் பரிந்துரை - லைப்-ஆப்-பை திரைப்படப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு ஏ.ஆர். ரகுமான் வாழ்த்து:
[Friday 2013-01-11 10:00]

அமெரிக்காவில் உலகின் சிறந்த திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி இந்த 85-வது அகாடமி விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதற்காக இந்தியக் கதையை மையமாக வைத்து டைரக்டர் ஆங்-லீ இயக்கியுள்ள "லைப்-ஆப்-பை" திரைப்படம் 11 பிரிவுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் இசையமைப்பாளர் மைக்கேல் தன்னாவின் இசையில், தாலாட்டுப் பாடலைப் பாடிய பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ் பாடலும் ஆஸ்கார் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் தமிழ்ப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ரிலீஸுக்கு முன்பே 300 கோடிக்கு மேல் வசூல் - சாதித்தார் கமல்!
[Friday 2013-01-11 09:00]

இது யாருமே எதிர்பார்க்காத உலக சாதனை. நிகழ்த்தியவர் வேறு யாருமில்லை நம் உலக நாயகன் தான். ஏர்டெல் நிறுவனம் மட்டும் நேற்று 30 லட்சம் முன்பதிவைத் தொட்டிருப்பதாய் தெரிவித்திருக்கிறது, விஸ்வரூபத்திற்காக. அதாவது 30 லட்சம் x 1000 = 300 கோடிகள். இதில் பாதிப்பேர் தமிழுக்கு புக்கிங், தமிழுக்கு 500 என்று வைத்துக்கொண்டாலும் 200 கோடிகளை தாண்டுகிறது. இது வெறும் ஏர்டெல் கணக்கு. இன்னும் 6 dth நிறுவனங்களும் இருக்கு. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் ரிலீஸுக்கு முன்பே 500 முதல் 1000 கோடியை வசூல் பண்ணலாம் விஸ்வரூபம். இது இதுவரை உலக அளவிலேயே எந்த திரைப்படமும் செய்திராத சாதனையாய் இருக்கும்.


கதாநாயகர்களோடு கடலை போடும் ஹன்சிகா..
[Thursday 2013-01-10 20:00]

மாப்பிள்ளை, எங்கேயும் காதல் படங்களில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே மற்றவர்களிடம் பழகுவதிலும், பேசுவதிலும் ஒரு இடைவெளி வைத்தே செயல்பட்டு வந்தார் ஹன்சிகா. ஆனால் அதுவே அவரது சினிமா மார்க்கெட்டுக்கு ஆப்பு வைக்கும் செயலாகி விட்டது. அதனால் பின்னர் படப்பிடிப்பு தளங்களில் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு அருகில் அமர்ந்து கடலை போடும் நடிகையாக தன்னை மாற்றிக்கொண்டார் ஹன்சிகா. இப்படி திடுதிப்பென்று பிழைக்கத் தெரிந்த நடிகையாகி விட்டதால் அதன்பிறகு இளவட்ட ஹீரோக்களுக்கு ஹன்சிகா மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்பட்டது. திரைக்குப்பின்னால் தீவிரமாக சிபாரிசு செய்யவும் தொடங்கினார்கள்.


சினிமாவிலும் அரசியல்.. விஜய் படத்திலிருந்து நாசர் நீக்கம்!
[Thursday 2013-01-10 20:00]

விஜய் நடிக்கும் படத்துக்கு நீண்ட மூக்கு வில்லன் நடிகர்தான் முதலில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்சும் கொடுக்கப்பட்டிருந்ததாம். அந்த நடிகரின் மனைவி தயாரிப்பாளர் சங்கத்தில் கில்லி நடிகரின் தந்தைக்கு எதிர் அணியில் தீவிரமாக செயல்படுகிறவர். இதனால் ஆத்திரம் அடைந்த கில்லி நடிகரின் தந்தை விஜயமான இயக்குனருக்கு போன் போட்டு அந்த நடிகரை என் மகன் படத்திலிருந்து உடனே நீக்குங்கள். இல்லாவிட்டால் என் மகன் உங்கள் படத்தில் நடிக்க மாட்டான் என்று சவுண்ட் விட பயந்து போன இயக்குனர் தந்தைகுலத்தை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு. அடுத்த நிமிடமே வில்லன் நடிகருக்கு போன்போட்டு அவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு விஷயத்தை கமுக்கமாக முடித்தாராம்.


வித்யாபாலன் பாணியில் அதிரடி கிளாமர் கதைகளில் ப்ரியாமணி..
[Thursday 2013-01-10 20:00]

சாருலதா படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்தார் ப்ரியாமணி. எந்த நடிகைகளும் செய்யத்துணியாத வேடம் என்பதால், அந்த படத்திற்கு பிறகு தன்னைத்தேடி சவாலான வேடங்கள் வரும் என்று எதிர்பார்த்திருந்தார் நடிகை. ஆனால், அந்த படத்திற்கு பிறகு ப்ரியாமணியின் மார்க்கெட்டே டல்லடித்து விட்டது. இதனால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உள்ள தனது அபிமானிகளை சந்தித்து சான்ஸ் கேட்டு பலன் அளிக்காததால் இப்போது கன்னட சினிமாவை தஞ்சமடைந்து விட்டார்.


த்ரிஷா, சமந்தா, அனுஷ்காவை பவர்ஸ்டாருக்கு பிடிக்கவே இல்லையாம்!
[Thursday 2013-01-10 20:00]

தமிழ் சினிமாவில் பவர்ஸ்டார் எனும் பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் டாக்டர் சீனிவாசன். லத்திகா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சீனிவாசன், இப்போது ஆனந்த தொ‌ல்லை, கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஐ, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் இவர் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா பொங்கல் விருந்தாக வர இருக்கிறது. சந்தானம், பவர்ஸ்டார், சேது ஆகி‌ய மூவரும் விஷாகா சிங்கை விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். கடைசியில் விஷாகா யா‌ருடைய காதலை ஏற்றுக்கொண்டார் என்பதை முழுக்க முழுக்க ‌காமெடியாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் மணிகண்டன்.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா