Untitled Document
November 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கதைக்கே முதலிடம், கதாநாயகன் இரண்டாம் பட்சம் - நிஷா அகர்வால்.
[Friday 2013-01-25 09:00]

'இஷ்டம் படத்தில் அறிமுகமானவர் நிஷா அகர்வால். பிரபல நடிகை காஜல் அகர்வாலின் தங்கையான இவருக்கு, அதன் பிறகு புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. இருப்பினும், மனம் தளராமல் விடா முயற்சி செய்து, இப்போது, 'யாருடா மகேஷ் என்ற படத்தை கைப்பற்றியுள்ளார்.இப்படத்திலும், 'இஷ்டம் படத்தில் நடித்தது போன்று வித்தியாசமான வேடம் தான் என்று சொல்லும் நிஷா, 'நான் காஜலின் தங்கையாக இருந்தும், அவரது சிபாரிசை எதிர்பார்க்கவில்லை என்கிறார். 'என் அழகு, திறமையை முன்வைத்தே வாய்ப்புகளைஎதிர்பார்க்கிறேன். முக்கியமாக கதைக்கே முதலிடம், கதாநாயகன் இரண்டாம் பட்சம் தான் என்கிறார் நிஷா அகர்வால்.


முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் - 'ரெட்டை தல'
[Friday 2013-01-25 07:00]

முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு ரெட்டை தல என்று பெயர் வைக்கிறார்களாம். 2001ம் ஆண்டு வெளிவந்த அஜீத் நடித்த தீனா படம் மூலம் இயக்குனர் ஆனவர் ஏ.ஆர். முருகதாஸ். அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணவில்லை. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது அவர்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள். அல்டிமேட் ஸ்டாரான அஜீத்துக்கு 'தல' என்ற பட்டப்பெயரை சூட்டிய முருகதாஸ் தனது படத்திற்கும் அதையே பெயராக வைக்கிறாராம். அவரது படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருவதால் 'ரெட்டை தல' என்று படத்திற்கு பெயர் வைக்கிறார் முருகதாஸ். முருகதாஸ் துப்பாக்கி இந்தி ரீமேக்கை முடித்துவிட்டும், அஜீத் சிவா படத்தை முடித்த பிறகும் ரெட்டை தல பட ஷூட்டிங் துவங்கும். இனிமேல் துவங்கவிருக்கிற படத்திற்கு பெயரை முடிவு செய்துவிட்டனர் ஆனால் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு இன்னும் ஒரு பெயரை வைத்தபாடில்லையே. சீக்கிரமா பெயரை சொல்லுங்கப்பா.


சுனைனாவின் செயற்கை அழகின் ரகசியம்
[Thursday 2013-01-24 21:00]

தெலுங்கு நடிகை சுனைனா, சமீபகால நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பதை நிரூபித்து வருகிறார். என்றபோதிலும், கிளாமர் என்ற பக்கத்தைப்பொறுத்தவரை அவர் மீது சினிமாத்துறையினருக்கு போதிய நம்பிக்கை இருந்ததில்லை. அந்த அளவுக்கு சுமாரான உடல்கட்டைத்தான் மெயின்டெயின் பண்ணி வைத்திருந்தார். அதனால் அவரை முன்னணி நடிகர்களுடன் நடிக்க வைப்பதற்கு இயக்குனர்கள் தயங்கினர். இதை சிலர் அவரிடம் நேரில் சொன்னதையடுத்து செயற்கை சிகிச்சை மூலம் தனது உடலழகை மெருகூட்டியிருக்கிறார் சுனைனா. அதற்காக அடிக்கடி அயல்நாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார். காரணம் அங்கு உடம்பில் செய்யப்படும் அதிநவீன சிகிச்சையினால் அவரது உடல் பளபளக்கிறதாம். மேலும் அவர்கள் சொன்னபடி உணவு பழக்கத்தை கடைபிடித்தால் உடம்பு பூசினாற் போன்று சதை போடுகிறதாம். இதைத்தான் சமீபகாலமாக கடைபிடித்து வருகிறார் சுனைனா.


16 வயது மைனர் பெண்ணை உதட்டோடு உதடு முத்தக் காட்சியில் நடிக்க வைப்பதா? - மணிரத்னத்துக்கு எதிராக பார்த்திபன்
[Thursday 2013-01-24 21:00]

காதல் என்ற பெயரில் 16 வயது மைனர் பெண், உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியில் நடிக்க வைத்திருப்பது தவறு என மணிரத்னத்துக்கு இயக்குநர் பார்த்திபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'கடல்' படத்தில் இளம் புதுமுகங்கள் கவுதமும் துளசியும் உதட்டோடு உதடு பதித்து முத்தக் காட்சியில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் மீடியாவில் வலம் வருகின்றன. இதற்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தக் காட்சி குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'உதட்டோடு உதடு முத்தக் காட்சி, இளம் வயதினரை தவறாக காட்டுவதோடு, குழந்தைகளிடத்தில் உண்டாகும் பகுத்தறிவுக்கு பொருந்தாத காதல் உணர்வை தோற்றுவித்துவிடும். உதாரணமாக, எனது 'அழகி' படத்தில் 10 வயது குழந்தைகள் காதல் செய்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் கூட காட்சி இருந்தது. குழந்தைகளை காதலர்களாக காட்டுகிற காட்சிகள் பரவாயில்லை.


தன் சொந்த கதையை படமாக எடுக்கிறார் - ஷகிலா
[Thursday 2013-01-24 21:00]

கடந்த 25 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி ஏரியாவில் கலக்கியவர் ஷகிலா. குறிப்பாக மலையாள சினிமா உலகில் தனக்கென தனி வியாபார களத்தை உருவாக்கியவர். ஒரு கட்டத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களில் கலெக்ஷனையே மிஞ்சியவர். ஷகிலா நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று அறிவித்து ஷகிலாவை கட்டம் கட்டி தமிழ்நாட்டுக்கு பேக் பண்ணினார்கள் மல்லுவுட் சூப்பர் ஸ்டார்கள். அதன்பிறகு ஷகிலாவுக்கு இறங்குமுகம் தொடங்கியது. வயதும் ஆனதால் கவர்ச்சியை கைவிட்டு காமெடி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன்னையே கிண்டல் செய்தும், அவமானப்படுத்தியும் எடுக்கப்பட்ட காட்சிகளிலுமே நடித்தார். தற்போது ஷகிலா அடுத்த அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் மலையாளப் படம் ஒன்றை இயக்குகிறார். படத்தின் பெயர் 'நீலகுறிஞ்சி பூத்து'. ஒரு கேரளத்து பெண் தனது மூன்று பெண் குழந்தைகளை வளர்க்கபடும் கஷ்டங்களை சொல்லும் கதையாம்.


நண்பனும் துப்பாக்கியும் என்னை பெரிய ஆளாக்கிடுச்சு - சத்யன்
[Thursday 2013-01-24 21:00]

"சின்னதம்பி பெரியதம்பி" படத்தில் அறிமுகமான சத்யனுக்கு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் "ஒன்பதுல குரு" 50வது படம். பிரபல சினிமா தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் மகனான சத்யன், ஆரம்பததில் அப்பா தயாரிப்பில் இளையவன், கண்ணா உன்னைத் தேடுகிறேன் படங்களில் ஹீரோவாக நடித்தார். அது அப்பாவை கடனாளியாக்கிதே தவிர இவரை ஹீரோவாக்கவில்லை. அதனால் காமெடியில் இறங்கினார். தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு 50வது படத்துக்கு வந்து விட்டார். கடந்த ஆண்டு விஜய்யுடன் இவர் நடித்த நண்பன், துப்பாக்கி இரண்டும் ஹிட் என்பதால் சத்யனும் பெரிய காமெடியனாகிவிட்டார்.


ஆர்யாவும், விஷாலும் சூப்பர் ப்ளே பாய்ஸ்! - ஆசைப்படும் அஞ்சலி
[Thursday 2013-01-24 21:00]

அங்காடித்தெரு படத்துக்குப்பிறகு அஞ்சலியின் சினிமா கேரியரே மாறியது. அடுத்த நம்பர்ஒன் நடிகை இவராகத்தான் இருக்கும் என்று எல்லோருமே கருதினர். அந்த அளவுக்கு நடிப்பில் மேன்மைப்பட்டிருந்தார் அஞ்சலி. ஆனால் அடுத்தடுத்து பிசியான நடிகையானார் என்றபோதிலும் மேல்தட்டு ஹீரோக்களை அவரால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. வளர்ந்து வரும் நடிகர்களுடன் மட்டுமே தொடர்ந்து டூயட் பாடி வந்தார். இந்த நிலையில், தற்போது ஆர்யா, விஷால் என்று கேட்ச் பண்ணி விட்டார்.


இயக்குனர் பாலாவின் படவாய்ப்பெனில் சம்பளம் இன்றியும் வேலைபார்க்க தயார் - ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த் Top News
[Thursday 2013-01-24 10:00]

பாலா படத்தில் என்றைக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறதோ அன்று தான், தான் முழுமை அடைந்தாக அர்த்தம் என்று கூறுகிறார் ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த். இவர் அண்மையில் வெளியான 'கள்ளத் துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளர். திருநெல்வேலிக்காரரான இவர். ஒளிப்பதிவு மோகத்தால் கிறங்கிக் கிடந்தவர். சந்தோஷ் சிவன்,பி.சி.ஸ்ரீராம்,ரத்னவேலு போன்றவர்களின் ஒளிப்பதிவில் மெய் மறந்தவர். இந்த ஆர்வத்தில் சென்னையில் தங்கி சூளைமேட்டில் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். தமிழ்நாட்டிலேயே சென்னை சூளைமேடு மாநாகராட்சி மேல்நிலை பள்ளியில் மட்டும்தான் மேல்நிலை அதாவது ஹையர் செகண்டரி வகுப்பில் போட்டோ கிராபி பிரிவு உள்ளது. இதில் சேர்ந்து படித்தால் திரைப்படக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் படித்தார் வசந்த்.


'கேடி பில்லா கில்லாடி ரங்கா' க்கு பிறகு தான் 'பரதேசி' - ஸ்டுடியோ கி‌‌ரீன்
[Wednesday 2013-01-23 19:00]

அலெக்ஸ் பாண்டியனின் மெகா தோல்விக்குப் பிறகு இரண்டு படங்களை விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது ஸ்டுடியோ கி‌‌ரீன். ஒன்று பாலாவின் 'பரதேசி'. இன்னொன்று பாண்டிரா‌ஜின் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'. இதில் எது முதலில் என்ற கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது. பரதேசி முதலில் தொடங்கப்பட்டு முதலில் முடிவடைந்த படம் என்றாலும் பிப்ரவ‌ரி மாதம் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வை வெளியிடுவது என ஸ்டுடியோ கி‌ரின் முடிவு செய்துள்ளது. இப்படத்துக்குப் பிறகே பரதேசி வெளியாகிறது. இரு படங்களின் அதிகாரப்பூர்வ ‌ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


ரஜினியின் இல்லத்திற்கு சென்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்
[Wednesday 2013-01-23 19:00]

படப்பிடிப்புக்காக சென்னை வந்திருந்த இந்தி நடிகர் சஞ்சய் தத், ரஜினி‌யின் அழைப்பை ‌ஏற்று அவரது இல்லத்திற்கு போய் சந்தித்து பேசினார். ஹரி இயக்கத்தில், விக்ரம்-த்ரிஷா நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த சாமி படம், தற்போது இந்தியில் 'போலீஸ் கிரி' என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது. இதில் 'சஞ்சய் தத்' ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் சஞ்சய் சத், சென்னை வந்திருப்பதை கேள்விப்பட்டு நடிகர் ரஜினிகாந்த், சஞ்சய் தத்தை தமது இல்லத்திற்கு வரும்படி அழைத்துள்ளார். அதன்படி சஞ்சய் தத்தும் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். சஞ்சய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார் ரஜினி.


'முனி 3' லட்சுமி ராய்யிடம் இருந்து தாப்ஸியிடம் தாவல்..
[Wednesday 2013-01-23 19:00]

முனி 3 ஆம் பாகத்தை தாப்ஸியை வைத்து தொடங்கியிருக்கிறார் லாரன்ஸ். இரண்டாம் பாகத்தில் நடித்த லட்சுமிராய்தான் மூன்றாவது பாகத்திலும் நடிப்பார் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அவருக்குப் பதில் தாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சில மாதங்கள் முன்பே இந்த தகவலை நாம் சொல்லியிருந்தோம். முனி 3 ல் நடிக்காததற்கு இப்போது லட்சுமி ராய் விளக்கம் சொல்லியிருக்கிறார். 'முனி 3' ல் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் கதையை லாரன்ஸ் முற்றிலுமாக மாற்றிவிட்டதால் நான் நடிக்கவில்லை. ரிபெல் படத்தின் மகத்தான தோல்வி, தயா‌ரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் பல கோடி நஷ்டஈடு என்று பல்முனை தாக்குதலுக்குள்ளான லாரன்சுக்கு முனி 3 ன் வெற்றி மிக முக்கியம். முனீஸ்வரன் துணை பு‌ரியட்டும்.


'நய்யாண்டியாகிய' தனுஷின் 'சொட்டவாளக்குட்டி'
[Wednesday 2013-01-23 19:00]

சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த சொட்டவாளக்குட்டி படத்தின் தலைப்பு நய்யாண்டி என்று மாற்றப்பட்டுள்ளது. '3' படத்திற்கு ரஞ்சனா மற்றும் மரியான் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்திற்கு பிறகு சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். குத்துவிளக்கு கடை வைத்திருக்கும் பையனுக்கும், பல் டாக்டருக்குப் படிக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதல்தான் படத்தின் கதை. படத்திற்கு 'சொட்டவாளக்குட்டி' என்று பெயர் வைத்து இருந்தனர். படத்திற்கான ஹீ‌ரோயின் தேர்வு நடந்து வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த கதிரேசன் இந்தபடத்தை தயாரிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்க நிலையில் படத்தின் தலைப்பை 'நய்யாண்டி' என்று மாற்றியுள்ளார் டைரக்டர். மேலும் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை நஸ்ரியா நசீமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


த்ரிஷாவுக்கு மது போத்தல்களை அனுப்பவுள்ளோம்! - இந்து மக்கள் கட்சி
[Wednesday 2013-01-23 19:00]

பெண்கள் மது அருந்துவது பற்றி த்ரிஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு மதுபாட்டில்களை அனுப்பி வைக்க இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. சமீபத்தில் விஷால் - த்ரிஷா நடிப்பில் வெளியான சமர் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் பிரஸ்மீட் ஒன்று சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நடிகை த்ரிஷாவிடம் நீங்கள் இந்த படத்தில் மது அருந்துவது போன்று நடித்துள்ளீர்கள், பெண்கள் மது குடிப்பது பற்றி தங்களது கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டபோது, அது அவரவர் விருப்பம் என்று கூறினார். இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவருக்கு மது போத்தல்களை அனுப்ப அந்தகட்சி முடிவு செய்துள்ளது.


12 வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தது ஏன்? அரவிந்தசாமி பதில்
[Wednesday 2013-01-23 18:00]

12 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கும் கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் அரவிந்த்சாமி. இத்தனை வருட இடைவெளியில் சினிமாவை மறந்து இருந்தது ஏன் என்பதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 20 வயசுல தளபதி படத்துல மணிரத்னம் சார் நடிக்க வச்சார். அப்போ எனக்கு நடிப்புன்னா என்னென்னே தெரியாது. அவர் சொல்றபடி செஞ்சேன். அது எனக்கு பெரிய பெயரை கொடுத்துச்சு. முதல் படமே தமிழக சூப்பர் ஸ்டாருடனும், மலையாள சூப்பர் ஸ்டாருடனும் நடிக்க வாய்ப்பு. அவர்களோடு என்னையும் மக்கள் ரசித்தார்கள்.


மீண்டும் இரட்டை வேடத்தில் அஜித் - இயக்குகிறார் முருகதாஸ்
[Tuesday 2013-01-22 19:00]

தீனா படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும், முருகதாஸூம் இணையவுள்ளனர். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து தீனா என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். டைரக்டராக அறிமுகமான முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட். தீனா படத்தால் அஜித்துக்கும், ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் பெரிய பெயர் கிடைத்தது. மேலும் அஜித்துக்கு தல என்ற பெயரே இந்த படத்தால் தான் கிடைத்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 11 வருடத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும், முருகதாஸூம் இணைந்து படம் பண்ண இருக்கின்றனர். அதுவும் இந்தபடத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமாம். ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன ஒன்-லைன் ஸ்டோரி, அஜித்துக்கு ரொம்ப பிடித்து போக உடனே ஒப்புக்கொண்டுவிட்டாராம்.


நடிகை சோனா இயக்கும் புதிய படம்..
[Tuesday 2013-01-22 19:00]

'பூவெல்லாம் உன்வாசம்' படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் சோனா. அதன் பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் சென்று அங்கும் பல படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்தார். மீண்டும் தமிழுக்கு வந்து மிருகம், குசேலன் படங்களில் கவர்ச்சியாக நடித்தார். இதுவரை எந்தப் படத்திலும் ஹீரோயினாக நடித்திராத சோனா, 4 கோடி செலவில் 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்தார். வெங்கட்பிரபு, பிரேம்ஜி டீமில் இணைந்து பார்ட்டி பறவையாக இருந்தார். யுனிக் என்ற செயற்கை நகை கடையை திறந்தார். திடீரென்று ஒரு நாள் ஒரு... பார்ட்டியில் பாடகர் எஸ்.பி.பி.சரண் என் கையயை பிடித்து இழுத்தார் என்று புகார் செய்தார். உஷாரான வெங்கட்பிரபு பிரேம்ஜி கம்பெனி சோனாவிடமிருந்து ஜகா வாங்கிவிட்டது. தனித்து விடப்பட்ட சோனா சுயசரிதை எழுதப்போகிறேன். என் கதையை படமாக எடுக்கப்போகிறேன் என்று ஸ்டேட்மெண்ட் விட்டு நெருக்கமாக இருந்த நண்பர்களை அலற வைத்தார். பிறகு எந்த வழியில் அவரை சமாதானம் செய்தார்கள் என்று தெரியவில்லை அமைதியாகவிட்டார்.


நீண்ட இடைவெளிக்கு பிறகு பாக்யராஜ் இயக்கும் புதிய படம் 'துணை முதல்வர் அன்னபோஸ்ட்'
[Tuesday 2013-01-22 19:00]

ஒரு இடைவெளிக்குப் பிறகு தான் இயக்கும் புதிய படத்துக்கு 'துணை முதல்வர் அன்னபோஸ்ட்' என்று பெரிட்டுள்ளார் இயக்குநர் கே பாக்யராஜ். தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா இயக்குநர், திரைக்கதை மன்னன் என்று வர்ணிக்கப்படுபவர் கே பாக்யராஜ். தொடர்ந்து 9 வெள்ளி விழாப் படங்களைத் தந்தவர். சமீபத்தில் அவர் இயக்கி வந்த படம் சித்து ப்ளஸ டூ. இந்தப் படம் சரியாகப் போகவில்லை. இந்த நிலையில் புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளார் பாக்யராஜ். இந்தப் படத்துக்கு துணை முதல்வர் அன்னபோஸ்ட் என்று தலைப்பிட்டுள்ளார். இந்தப் படம் அரசியல் தொடர்புடையதா.. முழு நீள காமெடி படமா.. நடிகர் நடிகைகள் யார் என்பது குறித்து அவர் விவரங்களை வெளியிடவில்லை. நேற்று மதுரையில் நடந்த அன்னக் கொடியும் கொடிவீரனும் விழாவில் பேசிய பாக்யராஜ் கூறுகையில், 'எங்க டைரக்டர் பாரதிராஜாவுக்கு கோபம் அதிகம், அதுவே அவரது பலம் மற்றும் பலவீனம்.


இரண்டாவது கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தாலே போதும் - ப்ரணிதா
[Tuesday 2013-01-22 19:00]

உதயன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர், தெலுங்கு நடிகை ப்ரணிதா. பிறகு கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்தார். தமிழில் முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர், முதல் படமே தோல்வி அடைந்ததால் ராசியில்லாத நடிகை பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதனால், மீண்டும் தெலுங்கு, கன்னடம் என்று நடித்து வந்த ப்ரணிதாவுக்கு, இப்போது அங்கேயும் மார்க்கெட் டல்லடிக்கிறதாம். அதனால், சில தெலுங்கு படங்களில் செகண்ட் ஹீரோயினாக கமிட்டாகியுள்ள நடிகை, மீண்டும் கோடம்பாக்க கோதாவிலும் குதிக்கிறார். 'முன்னணி ஹீரோவுடன், முதன்மை நாயகியாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், 'செகண்ட் ஹீரோயின் சான்ஸ் கிடைத்தாலும் போதும், புதுமுக நடிகர்களுடன் டூயட் பாட கூட, தயாராக இருக்கிறேன்.


'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் நடுவே பெரிய ஓட்டையை கண்டுபிடித்த பார்த்திபன்
[Tuesday 2013-01-22 19:00]

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்துள்ள படம் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'. இந்த படம் 50 நாட்கள் ஓடி வெற்றிபெற்றிருக்கிறது. முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் துண்டக்காணோம் துணியக்காணோம் என்று தியேட்டர்களை விட்டு ஓட்டம் பிடித்துக்கொண்டிருக்க, இன்னமும் நின்று பவுண்டரிகளை அடித்து சாதித்துக்கொண்டிருக்கிறது இந்த சின்ன பட்ஜெட் படம். இதனால் கோடம்பாக்கத்தில் இப்படத்தின் ஹீரோ, இயக்குனருக்கு மவுசு கூடியுள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்பு படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், ஒரு விழாவை சென்னையில் நடத்தினர். அப்போது இயக்குனர் பார்த்திபன், அப்படம் குறித்து தனது கருத்தை பேசும்போது, இந்த படத்தில் ஒரு பெரிய ஓட்டை உள்ளது என்று தனது பேச்சை ஆரம்பித்தார். அவர் வழக்கம்போல் ஏதாச்சும் காமெடியாக சொல்வார் என்று அனைவருமே நினைத்திருக்க, நிஜமாலுமே இந்த கதையில் பெரிய ஓட்டை உள்ளது. லாஜிக் இல்லை என்றார்.


படப்பிடிப்பு முடிவதற்குள் உதயநிதியை மாற்றிக்காட்டுகிறேன்: உதயநிதியின் மனைவியிடம் சவால் விட்ட நயன்!
[Tuesday 2013-01-22 07:00]

சுந்தரபாண்டியனின் வெற்றி அதன் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனை உதயநிதி ஸ்டாலினிடம் கொண்டுபோய் நிறுத்தி விட்டது. காமெடியுடன் சின்ன ஆக்ஷன் உள்ள கதையாக தேடிக்கொண்டிருந்த உதயநிதிக்கு பிரபாகரன் சொன்ன கதை பிடித்துவிடவே தனது அடுத்த படத்தை டிக் அடித்து விட்டார். படத்தின் பெயர் "இது கதிர்வேலின் காதல்" ஒரு கல் ஒரு கண்ணாடியிலேயே நயன்தாரா நடிக்க வேண்டியது. அப்போது அவர் பிரபுதேவாவுடன் தீவிர காதலில் இருந்ததால் உதயநிதியின் கோரிக்கைக்கு நோ சொன்னார். இப்போது காதல் முறிந்து விட்டதால் ஓகே ஓகே என்று சொல்லிவிட்டார்.


ஸ்ருதியை இயக்க நான் ரெடி! - விஷால்
[Monday 2013-01-21 20:00]

'சமர்' படத்தின் வெற்றியால் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார் விஷால். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹிட் படத்தை கொடுத்த மகிழ்ச்சி அவருடைய முகத்தில் தெரிகிறது. அதிரடி ஆக்ஷனில் வெளுத்து கட்டும் இவருக்கு இயக்குனராகும் ஆசையும் ஒளிந்து கிடக்கிறது. இதுகுறித்து அவரே கூறும்போது, ஒரு படத்தை சொந்தமாக இயக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் நீண்ட காலமாகவே உள்ளது. அதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஆனால் கதை ரெடியாக உள்ளது. இந்த கதை ஸ்ருதிஹாசனுக்கு பொருத்தமாக இருக்கும். அது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.


தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் 'வழக்கு எண் 18/9' ற்கு விருது!
[Monday 2013-01-21 20:00]

பாலாஜி சக்திவேல் இயக்கிய படம் "வழக்கு எண் 18/9". இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் படம். தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் இதனை சிறந்த படமாக தேர்வு செய்து விருதுகள் வழங்கியிருந்தாலும் கடல்தாண்டி முதல் விருதை தட்டி வந்துள்ளது படம்.


பவர்ஸ்டார் இல்லாமல் சந்தானம் வேண்டாம்: படாதிபதிகள் வைத்த ஆப்பு!
[Monday 2013-01-21 20:00]

வடிவேலுவின் காமெடி நாற்காலி நொடிந்த பிறகு புது நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டவர் சந்தானம். படத்துக்குப்படம் ஹீரோக்களை கலாய்த்தபடி கவுண்டமணி பாணியில் காமெடி செய்து வந்தார். இந்த நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் சந்தானத்துடன் ஒட்டிக்கொண்டவர்தான் டாக்டர் சீனிவாசன் என்கிற பவர்ஸ்டார். ஒரு டம்மி பீஸை கூடவே வைத்துக்கொண்டால் இஷ்டத்துக்கு கலாய்க்கலாம் என்றுதான் அவரை கூட்டணியில் சேர்த்தார் சந்தானம். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாகி விட்டது. சந்தானத்தை புக் பண்ண வருபவர்கள், கண்டிப்பாக பவர்ஸ்டாரும் வேண்டும் என்கிறார்களாம். இதனால் பவர்ஸ்டார் நடிக்க மறுத்தால் நம்மையும் கழட்டி விட்டு விடுவார்கள் போலிருக்கிறதே என்று விழிபிதுங்கிப்போய் இருக்கிறார் சந்தானம்.


சுனேனாவை ஏமாற்றிய சமர் படக்குழு!
[Monday 2013-01-21 16:00]

விசாலும் த்ரிஷாவும் ஜோடியாக நடித்த படத்தில், செகண்ட் ஹீரோயினாக நடித்தார் காதலில் விழுந்த நடிகை. ஆனால் படத்தில் இவர் நடித்த காட்சியையெல்லாம் வெட்டி வீசிவிட்டார்களாம். ஒரு பாடல் காட்சி, ஒரு காதல் பிரிவு காட்சி, அப்புறம் வெளிநாட்டு சந்திப்பு காட்சி இதோடு அவரது போர்ஷனை முடித்து விட்டார்களாம். அவர் நடித்த வெளிநாட்டு காட்சிகள் படத்தில் இல்லையாம். அதோடு படத்தின் புரமோஷனுக்கோ, சமீபத்தில் நடந்த சக்சஸ் மீட்டுக்கோ அவரை அழைக்கவில்லையாம். பெரிய படம் என்பதால் சம்பளம் பற்றி பெரிதாக நினைக்காத நடிகை இப்போது அவர்கள் காட்சியை குறைத்து ஏமாற்றிவிட்டதால் சம்பள பாக்கியை கேட்டு நடிகர் சங்கத்தின் கதவை தட்ட முடிவு செய்திருக்கிறாராம்.


இரண்டு வருடமாக சரிந்து கிடக்கும் எனது மார்க்கெட்டை '555' தூக்கி நிறுத்தும் - பரத்
[Monday 2013-01-21 16:00]

சாக்லேட் பாய் இமேஜிலிருந்து படிப்படியாக மாறி சில ஆக்சன் படங்களிலும் நடித்தார் பரத். ஆனால் அவர் பெரிய அளவில் எதிர்பார்த்த சில படங்கள் தடுக்கி விடவே கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது மார்க்கெட் சரிந்து கிடக்கிறது. இருப்பினும் சசி இயக்கத்தில் நடித்துள்ள 555 படம் எனது மார்க்கெட் தூக்கி நிறுத்தும் என்று சொடக் போடுகிறார் அவர். படம் வெளியாகும் முன்பே இப்படி அடித்து பேசுகிற அளவுக்கு அப்படி அந்த படத்தில் என்ன புதுமை இருக்கிறது என்று பரத்தைக்கேட்டால், நிறைய இருக்கிறது என்கிறார்.


சித்தார்த் உடன் காதலா? சொந்த விசயத்தை வெளிச்சம் போட விரும்பவில்லை - சமந்தா காட்டமான பதில்!
[Monday 2013-01-21 15:00]

சினிமா என்கிற கனவு தொழிற்சாலைக்குள் வந்து விட்டாலே அவர்களைப்பற்றிய கலர் கலரான கிசுகிசுக்கள் பரவுவதும் தொடர்கதையாகி விட்டது. அந்த வகையில், நடிகை சமந்தாவைப்பற்றி ஆந்திர பட உலகில் தினம் தினம் ஒரு புது வதந்திகள் பரவிக்கொண்டேயிருக்கிறது. ஆரம்பத்தில் இதுவே தனக்கு பப்ளிசிட்டி என்று நினைத்து கண்டும் காணாமலும் இருந்தார் சமந்தா. ஆனால் இப்போது ஊரறிந்த நடிகையாகி விட்டதால், அதுபோன்ற செய்திகள் பரவினால் அது தனது இமேஜை களங்கப்படுத்தி விடுமோ என்று அஞ்சத்தொடங்கியிருக்கிறார்.


ரசிகர்களின் பாராட்டே எனக்கு மிகப்பெரிய விருது - அஜித்
[Sunday 2013-01-20 21:00]

ரசிகர்களின் பாராட்டு ஒன்றே போதும், எனக்கு விருது எல்லாம் தேவையில்லை என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். பில்லா-2 படத்திற்கு விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் அஜித் உடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகி‌யோரும் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இப்படத்திற்கு பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம் படத்திற்கு பெயர் முடிவாகிவிட்டதாகவும், விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை அறிவிப்பேன் என்று டைரக்டர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். இந்நிலையில் அஜித் புதுமுடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது 8 மாதத்திற்கு ஒரு புதியபடத்தை கொடுக்க எண்ணியுள்ளார்.


கடலிற்கு யு சான்றிதழ்: பிப்ரவரி முதல்வாரத்தில் வெளியீடு!
[Sunday 2013-01-20 21:00]

மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்று அளித்துள்ளனர். ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கியுள்ள படம் கடல். இப்படத்தில் கார்த்திக் மகன் கவுதம் ஹீரோவாகவும், ராதாவின் 2வது மகள் துளசி ஹீரோயினாகவும் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் அர்ஜூன், அரவிந்தசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடற்கரையோர மக்களின் வாழ்க்கை பதி‌வுடன் ஒரு அழகிய காதலுமே கடல் படத்தின் கதை. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா