Untitled Document
September 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நடிப்புத் திறமையை தான் வெளிப்படுத்தினேன். நிர்வாணமாக நடிக்கவில்லை - அதிர்ச்சியில் ஆண்ட்ரியா
[Sunday 2012-11-25 08:00]

ஜீவா நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண போஸ் கொடுத்து நடித்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. ஏற்கனவே இசையமைப்பாளர் அணிருத்தை உதட்டில் முத்தமிடும் படங்கள் இன்டர்நெட்டில் பரவியது. இதனால் ஆண்ட்ரியா அதிர்ச்சியானார். ஒரு விருந்து நிகழ்ச்சியில் இந்த படத்தை யாரோ எடுத்து வெளியிட்டு விட்டனர். இதன் தொடர்ச்சியாக நிர்வாண போஸ் செய்தி வந்துள்ளது. ஓவியக் கல்லூரி மாணவர் படம் வரைவதற்காக இது போன்று போஸ் கொடுத்து நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.


மீண்டும் வசந்தமாளிகை - டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளிவருகிறது
[Sunday 2012-11-25 08:00]

சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1973-ல் ரிலீசான படம் 'வசந்த மாளிகை'. கே.எஸ். பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. இதில் இடம் பெற்றுள்ள 'மயக்கம் என்ன', 'கலைமகள் கைப்பொருளே', 'இரண்டு மனம் வேண்டும்', 'யாருக்காக' ,'ஒரு கிண்ணத்தில் ஏந்துகிறேன்'. போன்ற பாடல்கள் அப்போது பட்டி தொட்டி எங்கும் கலக்கின.


வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டுக்கு மாறினார் அஞ்சலி
[Sunday 2012-11-25 08:00]

'கற்றது தமிழ்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. 'அங்காடி தெரு' அவரை பிரபலப்படுத்தியது. தற்போது ஆர்யாவுடன் 'சேட்டை', விஷாலுடன் 'மதகஜ ராஜா' படங்களில் நடிக்கிறார். சம்பளமும் கூடி விட்டது. அஞ்சலிக்கு இதுவரை சொந்த வீடு இல்லாமல் இருந்தது. வாடகை வீட்டிலும் ஓட்டலிலுமாக தங்கி இருந்தார். சொந்த வீடு வாங்க முடிவு செய்து புரோக்கர்கள் மூலம் தேடினார்.


'இலக்கியவாதிகள் சினிமாவுக்குள் வரவேண்டும்' - பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன்
[Saturday 2012-11-24 23:00]

புதுமுக இயக்குனர் இப்ராகிம் இயக்கத்தில், புதுமுங்கள் நடித்த பூர்வகுடி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பேசினர். விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது, மிக இயல்பாக தன் கருத்துக்களை பதிவு செய்தார். அப்போது இந்த படத்தில் இலக்கிய உலகில் நீண்ட காலமாக இருந்து வரும் தமிழ்மணவாளன் வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார், இது வரவேற்கதக்கது.


'கடல்' மற்றும் 'நீர்ப்பறவை' படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் தனுஷின் 'மரியான்'
[Saturday 2012-11-24 23:00]

தற்போது மணிரத்னம் இயக்கும் கடல் மற்றும் சீனுராமசாமி இயக்கும் நீர்ப்பறவை ஆகிய இரண்டு படங்களுமே கடல்சார்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியுள்ளன. ஆனால் மணிரத்னத்தின் மேக்கிங் ஸ்டைல் என்பது வேறு மாதிரியாக இருக்கும் என்பதால், என்னதான் இரண்டு கதையிலும் ஒரே மாதிரியான நெடி அடித்தாலும், கதையோட்டம், காட்சி அமைப்புகள் கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்கும் என்பதை இரண்டுதரப்பினருமே யூகித்துக்கொண்டார்கள்.


'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் காணாமல் போன காட்சிகள்
[Saturday 2012-11-24 22:00]

விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். கடந்த 3 மாதத்துக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான படம். ஒரு மாதத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. விபத்தில் பாதிக்கப்படும் ஒருவன் தன் ஒரு வருட ஞாபகத்தை இழந்து விடுகிறான் (ஷார்ட் டைம் மெம்மரிலாஸ்). அதனால் ஏற்படும் பிரச்சினைகளை காமெடியாக சொல்லும் படம். படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை பாராட்டியதோடு நீளத்தை குறைக்கச் சொன்னார்கள்.


நடிகர் திலகம் சிவாஜியின் வேடத்தில் நடிக்கிறார் மகன் பிரபு
[Friday 2012-11-23 21:00]

சமீபகாலமாக, மாறுபட்ட ரோல்களில் பயணித்து வருபவர் பிரபு. ஆனால், அவரை மீண்டும் ஹீரோவாக நடிக்க வைக்க ஒரு முயற்சி நடக்கிறது. அதற்கு, அவர் உடன்பட மறுத்தபோது, 'முதல்மரியாதை படத்தில், உங்கள் தந்தை சிவாஜி நடித்தது போன்ற கெட்டப் தான். இப்போது, அது உங்களுக்கு கனகச்சிதமாக இருக்கும் எனக் கூறி, அவரை சம்மதிக்க வைத்துள்ளனர். இதனால், முதலில் இரண்டு மனதாக இருந்த பிரபு, அப்பா நடித்த வேடம் என்றதும், தற்போது முழுமனதோடு நடிக்க தன்னை தயார்படுத்திவிட்டார்.


துப்பாக்கிக்கு வசூலை அள்ளிகொடுக்கும் கேரளா - வசூல் தொகை 15 கோடி
[Friday 2012-11-23 21:00]

விஜய் நடித்த துப்பாக்கி தமிழ்நாட்டில் நவம்பர் 13 தீபாவளி அன்று வெளியானது. தீபாவளியை அதிகம் கொண்டாடாத கேரளாவில் 126 தியேட்டர்களில் துப்பாக்கி வெளியானது. தீபாவளி அன்று அதிகாலையில் தமிழர்கள் எண்ணை தேய்த்து குளித்துக் கொண்டிருக்கும்போது பெரும்பாலான மலையாளிகள் துப்பாக்கி படத்தை பார்த்து விட்டார்கள். கேரளாவில் முக்கிய நகரங்களில் தீபாளியன்று அதிகாலை 4 மணிக்கும், 5 மணிக்கும் துப்பாக்கி படம் திரையிடப்பட்டது. ஆக தமிழர்களை விட துப்பாக்கியை முதலில் பார்த்து ரசித்தது மலையாளிகள்தான்.


மீண்டும் நடிகையாக நடிக்கிறார் மும்தாஜ்!
[Friday 2012-11-23 21:00]

டி.ராஜேந்தரால் 'மோனிகா என் மோனலிசா' என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் மும்தாஜ். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் அவரால் வளர முடியவில்லை. காரணம் நடிப்பு திறமை இல்லாமல் வெறும் கவர்ச்சி மட்டுமே இருந்ததால். குஷி படத்தின் மூலம் கவர்ச்சியான சிறு வேடங்களில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவது என்று டிராக் மாறினார். டி.ராஜேந்தருக்கு ஜோடியாக வீராசாமி படத்தில் நடித்ததோடு தன் சினிமா கேரியருக்கு தானே முடிவுரை எழுதிக் கொண்டார் என்றும் சொல்லலாம்.


மும்பையில் ஒன்றாக நடைபெறவுள்ள தல - தளபதியின் படப்பிடிப்புகள்..
[Friday 2012-11-23 12:00]

அஜித் - விஜய் நடிக்கும் புதிய படங்களுக்கான படப்பிடிப்புகள் ஒன்றாகவே நடக்க உள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் மும்பையில் உருவாகிவருகிறது. இப்படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, விதார்த் என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. துப்பாக்கி திரைப்படத்தை அடுத்து இப்படமும் மும்பையில் நடைபெற இருக்கிறது. எனவே அஜித் - விஜய் நடிக்கும் இருபடங்களும் ஒரே நகரத்தில் நடைபெற இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க மோகன் லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


மீண்டும் பிகினி அவதாரத்தில் நயன்..
[Friday 2012-11-23 12:00]

அஜீத்துடன் நடித்த பில்லா படத்தில் பிகினி உடையில் நடித்து இளவட்ட ரசிகர்களை துவம்சம் செய்தவர் நயன்தாரா. அதிலிருந்து சூடுபிடித்த அவரது மார்க்கெட் பின்னர் காதல் கல்யாணம் போன்ற விவகாரங்களால் அடங்கிப்போனது. அதோடு, கவர்ச்சி விசயத்தில் அடக்கியும் வாசித்தார் நயன். ஆனால் தற்போது தனக்கு எந்தவித தடையும் இல்லாததால் சுதந்திர பறவையாகி விட்டவர், பில்லாவில் நடித்தது போல் மீண்டும் பிகினி உடைதரித்து நிற்கிறார்.


ஹன்சிகாவை எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டும் என்று துடிக்கிறதாம் சிம்புவின் மனசு!
[Friday 2012-11-23 12:00]

ஒஸ்தி படத்தில் வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி என்று ரிச்சாவைப்பார்த்து பாடினார் சிம்பு. அவரிடத்தில் உங்களுடன் நடித்த நடிகைகளின் எந்த நடிகை ரொம்ப க்யூட் என்று கேட்டால், ஹன்சிகாதான் என்கிறார். எதை வைத்து சொல்கிறீர்கள்? என்று கேட்டபோது, ஒரு பெண்ணைப்பார்த்ததும் நமக்குள்ளே ஏதோ கலவரம் நடக்க வேண்டும். கண்கள் அவரையே தேடிக்கொண்டிருக்க வேண்டும். எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்க வேண்டும். அப்படி எல்லா அம்சமும் கொண்ட ஒரு நடிகைதான் ஹன்சிகா.


'டுவிட்டர்' என உச்சரித்தாலே அலறும் ஹன்சிகா!
[Thursday 2012-11-22 21:00]

"டுவிட்டர் என யாராவது உச்சரித்தாலே அலறுகிறார் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பியூட்டி ஹன்சிகா. அம்மணிக்கு சமூக வலைத் தளமான "டுவிட்டர்ல் அக்கவுன்ட் உள்ளது. இவருக்கு தெரியாமலேயே, இவரது அக்கவுன்டுக்குள் ஊடுருவிய இணையதள குறும்பர்கள் சிலர் அவரின் "பாஸ்வேர்ட் டையும் மாற்றி விட்டனர். ஹன்சிகாவின் பெயரில் எக்குத் தப்பான கமென்ட்டுக்களை பறக்க விட்டு கலங்கடித்தனர். இந்த விவகாரம் ஹன்சிகாவுக்கு லேட்டாகத் தான் தெரியவந்ததாம். அரண்டுபோன ஹன்சிகா "நான் கூறியது போல் சில தவறான தகவல்களை எனக்கு தெரியாமல் என் பெயரில் வெளியிட்டுள்ளனர். என்னுடைய புகழை கெடுப்பதற்காக நடந்த சதி இது என புலம்பி தீர்த்ததோடு இது பற்றிய விஷயத்தையும் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


கேரளாவின் அனைத்து பட வசூல் சாதனைகளையும் முறியடித்து, வீறு நடை போடுகிறது துப்பாக்கி!
[Thursday 2012-11-22 21:00]

விஜய் நடித்த துப்பாக்கி படம் வசூலில் பெரிய சாதனையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. கேரளாவில் இதுவரை வெளியான அத்தனை படங்களின் வசூல் சாதனையையும் இந்தப் படத்தின் வசூல் தாண்டி விட்டதாகவும் கூறுகிறார்கள். பல சர்ச்சைகள், விதம் விதமான விமர்சனங்களுக்கு மத்தியில் து்பபாக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்யின் பன்ச் வசனம் இல்லாத இன்னும் ஒரு படம் என்ற புதிய அந்தஸ்தும் இப்படத்திற்குக் கிடைத்துள்ளதால் படத்திற்கு கூட்டம் கட்டி ஏறிக் கொண்டபடிதான் உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பெரிய வெற்றி விஜய்யை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளதாம்.


கண்டிசன் போட்ட மேக்கப் மேன் மீது கடுப்பான நயன்தாரா..
[Thursday 2012-11-22 21:00]

என்னதான் நடிகைகளுக்கு மேனேஜர் என்று ஒருநபர் இருந்தாலும், அவருக்கும், நடிகைகளுக்குமே இடையே நிறைய இடைவெளி இருக்கும். ஆனால் மேக்கப்மேன், காஸ்டியூமர், ஹேர் டிரஸ்ஸர் போன்றவர்கள்தான் ஒட்டி உறவாடும் உதவியாளர்கள். அதிலும் உடம்பு முழுக்க வண்ணம் தேய்த்து விடும் மேக்கப்மேனுக்கு சம்பந்தப்பட்ட நடிகைகளைப்பற்றி தெரியாத ரகசியங்களே இருக்காது. அதனால் தங்கள் விசயங்களை சீக்ரெட்டாக வைத்திருக்கும் மேக்கப்மேன்களை எப்போதும் கூடவே வைத்திருப்பார்கள் நடிகைகள். அதோடு அவர்களுக்கு நிறைய பண உதவிகளும செய்வார்கள்.


வரலட்சுமிக்கு தெரியாமல் டப்பிங் செய்த சுந்தர்.சி..
[Thursday 2012-11-22 20:00]

சிம்பு நடித்து தீபாவளிக்கு வெளியாகியுள்ள போடா போடி படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் வரலட்சுமி. அந்த படத்தில் அவரது நடிப்பும், கவர்ச்சியும் இளசுகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு, அப்படத்திற்கு அவரே டப்பிங் பேசியிருப்பது சினிமா வட்டாரங்களில் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. காரணம், இன்றைய முன்னணி நடிகைகள்கூட தங்களுக்கு தாங்களே டப்பிங் பேச நினைப்பதில்லை. மொழி தெரிந்தவர்கள்கூட எதற்கு ரிஸ்க் என்று தவிர்த்து விடுகிறார்கள்.ஆனால் வரலட்சுமியோ முதல் படத்திலேயே தனக்குத்தானே டப்பிங் பேசினார். அவரது குரல் சற்று கரகரப்பாக இருந்தபோதும், அவர் பேசிய விதம் அந்த லண்டன் கேரக்டருக்கு மேட்சாகவே இருந்தது.


கன்னட படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ஸ்ரேயா!
[Thursday 2012-11-22 20:00]

ரஜினி, விஜய் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. என்றாலும் நீண்டகாலம் அவரால் கோடம்பாக்கத்தில் கோலேச்ச முடியவில்லை. அதனால் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் சிலவற்றை கைப்பற்றி நடித்து வருகிறார். அதில் கன்னடத்தில் உருவாகும் சந்திரா படம் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மகாராணி வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. அதனால் அந்த காலத்து ராணிகள் போன்று வாள் சண்டையெல்லாம் போடுகிறார். அதற்காக சில மாதங்கள் கடினமாக உழைத்திருக்கிறாராம்.


விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் மோகன்லால்
[Wednesday 2012-11-21 18:00]

விஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளனர். மோகன்லால் ஏற்கனவே கமலுடன் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு ரிலீசான விஜய்யின் 'துப்பாக்கி' படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். விஜய், மோகன்லால் இணைந்து நடிப்பதற்கான கதை தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். விஜய் தற்போது 'மதராசபட்டணம்' டைரக்டர் விஜய் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.


'ராஜா ராணி' படப்பிடிப்பில் நயன்தாராவுடன் ரசிகர் ரகளை
[Wednesday 2012-11-21 18:00]

படப்பிடிப்பில் நயன்தாராவுடன் ரசிகர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். அவரை படக்குழுவினர் விரட்டியடித்தனர். 'ராஜா, ராணி' படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. பெசன்ட் நகர் கடற்கரையில் இதன் படப்பிடிப்பை நடத்தினர். இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். அட்லீ குமார் இயக்குகிறார். இந்த படப்பிடிப்பில்தான் நயன்தாரா தனது பிறந்தநாளை சில தினங்களுக்கு முன் கேக் வெட்டி கொண்டாடினார்.


ஹன்சிகாவின் படத்தில் பிராமணர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் - நடிகர் மோகன்பாபு மீது வழக்கு தாக்கல்
[Wednesday 2012-11-21 18:00]

தெலுங்கு நடிகர் மோகன்பாபு தயாரித்துள்ள படம் ‘டேனி கைனா ரெடி’.இதில் மோகன் பாபு மகன் விஷ்ணு நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிராமணர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. மோகன் பாபு, விஷ்ணுக்கு எதிராக போராட்டமும் நடந்தது. விஷ்ணு மீது செருப்பும் வீசப்பட்டது. படத்தை தடை செய்ய வேண்டும் என்று பிராமணர்கள் வற்புறுத்தினர்.


ஆண்களை இழிவாக பேசியதாக நடிகை சோனா மீது வழக்கு
[Wednesday 2012-11-21 18:00]

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்தவர் வக்கீல் ஜானகிராமன். இவர் பா.ம.க.வின் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளராக உள்ளார். இந்த நிலையில் வக்கீல் ஜானகிராமன், ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆண்களை இழிவாக பேசியதாக திரைப்பட நடிகை சோனா மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள குற்ற முறையீட்டில் கூறியிருப்பதாவது:-


ஒரே வாரத்தில் ரூ.65 கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது 'துப்பாக்கி'
[Wednesday 2012-11-21 18:00]

விஜய்யின் 'துப்பாக்கி' படம் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தீபாவளிக்கு இப்படம் ரிலீசானது. ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ. 65 கோடியே 32 லட்சம் வசூலித்து உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆறு நாட்களில் ரூ. 40 கோடி வசூலித்து உள்ளது. தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆந்திரா, கேரளாவிலும் நன்றாக ஓடுகிறது. உலகம் முழுவதும் ஆயிரம் தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டு உள்ளது.


நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் மனோரமா - 3 கைவசம்
[Wednesday 2012-11-21 18:00]

நடிகை மனோரமா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குளியல் அறையில் வழுக்கி விழுந்து காலிலும் அடிப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல் நிலை பூரண குணமாகி உள்ளது. இதனால் திரும்பவும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து மனோரமா அளித்த பேட்டி வருமாறு:-


சிம்புவிற்கு பிடித்த நடிகைகள் - அமலாபால், ஹன்சிகா தானாம்
[Tuesday 2012-11-20 20:00]

'போடா போடி'யை ரிலீஸ் செய்து விட்டு 'வாலு', 'வேட்டை மன்னன்' படப்பிடிப்புகளில் பிசியாகியுள்ளார் சிம்பு. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி: கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

பதில்: கதைக்கு நான் எந்த அளவு தேவைப்படுகிறேன் என்று பார்ப்பேன். கேரக்டருக்கு நான் பொருந்துவேனா என்றும் யோசிப்பேன். இதற்கு சரியா இருந்தால் நடிப்பேன்.


முன்னாள் நடிகை ஷாலினிக்கு இன்று 32 ஆவது பிறந்தநாள்
[Tuesday 2012-11-20 20:00]

நடிகர் அஜீத் குமாரின் மனைவி ஷாலினி இன்று தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஷாலினி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக 80 படங்களில் நடித்துள்ளார். வளர்ந்த பிறகு ஹீரோயினான ஷாலினி அமர்க்களம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அஜீத்தை மணந்த பிறகு ஷாலினி சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார். அவர்களுக்கு அனோஷ்கா என்ற 4 வயது மகள் உள்ளார்.


சகுனி தோல்வியடைந்ததால் பிசியான கார்த்தி..
[Tuesday 2012-11-20 16:00]

தொடர்ந்து வெற்றி படங்களைக் கொடுத்து வந்த கார்த்தி, சகுனி படத்தின் தோல்வியால் சற்றே தடுமாறிப் போனார். இருப்பினும், தோல்வியை தொடரவிடக் கூடாது என்பதற்காக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சுராஜ் இயக்கத்தில், அலெக்ஸ் பாண்டியன் படத்தை முடித்துக் கொடுத்து விட்ட கார்த்தி, வெங்கட் பிரபுவுடன், பிரியாணி முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்குத் தயாராகி விட்டார். அதைத் தொடர்ந்து, இம்மாதம் இறுதியில், அலெக்ஸ் பாண்டியன் இசை வெளியீட்டுக்காக சென்னை திரும்புபவர், அழகு ராஜா ஆல் இன் ஆல் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


சம‌ரில் சொந்தக் குரலில் பேசிய த்ரிஷா..
[Tuesday 2012-11-20 16:00]

நடிகை த்ரிஷா, சென்னையிலேயே பிறந்து, வளர்ந்தவர் என்றாலும், தமிழில் சரளமாக பேசுவதற்கு தடுமாறுவார். இதனால், படங்களில் சொந்த குரலில் பேசுவதற்கு, அவர் ஆர்வம் காட்டுவது இல்லை. பெரும்பாலான படங்களில், இவருக்கு டப்பிங் குரல் தான். மணிரத்னம் கேட்டுக் கொண்டதால், ஆயுத எழுத்து படத்தில், சொந்த குரலில் பேசினார். இதற்கு பின், கமல், ரவிகுமார் ஆகியோரின் வற்புறுத்தலால், மன்மதன் அம்பு படத்திலும், லேட்டஸ்ட்டாக, மங்காத்தாவிலும், சொந்த குரலில் பேசினார். நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது, சமர் படத்தில், சொந்த குரலில் பேசவுள்ளாராம், த்ரிஷா. இந்த படத்தின் ஹீரோ, விஷால். உடனடி வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும், விஷாலுக்கும், த்ரிஷாவுக்கும், இந்த படம், ஒரு திருப்புமுனையாக அமையும் என்கின்றனர் படக் குழுவினர்.


15 வருட இடைவெளிக்கு பின்பு மீண்டும் இசை ஆல்பம் தயாரிக்கும் ரஹ்மான்.
[Tuesday 2012-11-20 14:00]

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1997ம் ஆண்டு 'மா துஜே சலாம்' என்ற இசை ஆல்பம் தயாரித்தார்.இதில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது. இது ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தை பெற்றுத் தந்தது.தற்போது புதிய இசை ஆல்பம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், மா துஜே சலாம் இசை ஆல்பம் தயாரித்து 15 வருடம் ஆகிவிட்டது. இது என்னுடைய முதல் தனி ஆல்பம்.இன்னொரு முறை அதுபோல் ஒரு ஆல்பம் என்னால் தயாரிக்க முடியாது. என்னுடைய இடைவிடாத பணிக்கு மத்தியில் மற்றொரு ஆல்பம் தயாரிப்பது சவாலானது.

Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா