Untitled Document
April 18, 2024 [GMT]
எமி ஜாக்சனுக்கு பீட்டா வாழ்த்து தெரிவிப்பு
[Thursday 2017-02-02 19:00]

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் உச்சரித்த ஒரு வாக்கியம் பீட்டாவே இந்தியாவை விட்டு வெளியேறு என்பதுதான். நடிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் பீட்டா இந்தியா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களில் பீட்டா ஆதரவாளர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை உடனே சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாமலே எமி ஜாக்சன் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஜோடியாக ஷங்கர் இயக்கத்தில் 350 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் 2.0 படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் இரண்டு நாட்களுக்கு முன்பு ஷங்கர் முன்னிலையில் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.


சுந்தர்.சி, ஆர்யா, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட வரலாற்று காவியம்
[Thursday 2017-02-02 19:00]

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி தங்களது உடல்எடையை அதிகரித்து வருகின்றனர். அதே நேரத்தில் குதிரை சவாரி, வாள் சண்டை உள்ளிட்டவற்றிக்கும் பயிற்சி எடுத்து வருகின்றனர். கடம்பன் படத்திற்காக 90 கிலோ வரை உடல் எடையை கூட்டியிருந்த ஆர்யா `சங்கமித்ரா'வுக்காக உடல் எடையை மேலும் அதிகரித்து வருகிறார்.


விஜய் 61-ல் ஒப்பந்தமாகியுள்ள பிரபல ஆடை வடிவமைப்பாளர்
[Thursday 2017-02-02 19:00]

விஜய் - அட்லி இணையும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, வடிவேல், சத்யன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தொகுப்புக்கு ரூபன், கலைக்கு முத்துராஜ், சண்டைப்பயிற்சிக்கு அனல் அரசு, திரைக்கதைக்கு விஜயேந்திர பிரசாத் என பிரபல டெக்னீசியன்களும் கைகோர்த்துள்ள இப்படத்தில் தற்போது பிரபல ஆடை வடிவமைப்பாளரும் இணைந்துள்ளார்.


செல்வராகவனால் மனமுடைந்த தனுஷ்
[Thursday 2017-02-02 08:00]

30 வயதுக்குள் சினிமா உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்கள் பட்டியலை பிரபல நாளிதழ் ஒன்று தயாரித்து வெளியிட்டது. அதில், இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், கவுதம் மேனன், பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி,


வணங்காமுடியில் அரவிந்த்சாமியுடன் இரண்டு நாயகிகள்
[Thursday 2017-02-02 07:00]

அரவிந்த்சாமி நடிக்கவிருக்கும்


ஜி.வி.யுடன் யோடி சேர்ந்த நடிகை
[Thursday 2017-02-02 07:00]

ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது


வெளியானது தலயின் விவேகம்..
[Thursday 2017-02-02 07:00]

தல அஜித்தின் புதிய படமான விவேகம் படத்தின் first look வெளியானது. சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57'. நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வரும் `தல 57' படத்திற்கு இன்னும்வெளியானது தலயின் விவேகம்.. தலைப்பு வைக்கப்படாத நிலையில் படத்தின் பெயர் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், `தல 57' படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியிடப்படும் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கைத்தறி விற்பனைக்கு தூதராக சமந்தா நியமனம்!
[Wednesday 2017-02-01 18:00]

தெலுங்கானா மாநிலத்தில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கைத்தறி துணிகளை பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறது.இந்த நிலையில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் மகனும், மாநில மந்திரியுமான கே.தாரங்க ராமராவை நடிகை சமந்தா ஐதராபாத்தில் சந்தித்து பேசினார். அப்போது கைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தெலுங்கானா மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதுபற்றி மந்திரி தாரங்க ராமராவ் கூறுகையில்,


ரசிகர்களை திடீரென சந்தித்த ரஜினிகாந்த்: - ஏன் தெரியுமா?
[Wednesday 2017-02-01 18:00]

நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது ஓய்வாக இருக்கிறார். இவர் எப்போதுமே தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை நேரம் கிடைக்கும்போது நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார்.ஆனால் 2.0 படத்திலும், உடல் நிலை காரணங்களாலும் இந்த சந்திப்பு வெகு நாட்களாக நடைபெறவில்லை. தற்போது நேற்று இந்த சந்திப்பு நடந்துள்ளது. சென்னையில் அவருக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் அவர் பல விஷயங்களை கலந்துரையாடியதாக சொல்லப்படுகிறது.


அட்லீ இயக்கும் விஜய் 61 சிறப்பு பூஜையுடன் தொடங்கியது!
[Wednesday 2017-02-01 14:00]

இளையதளபதி விஜய் தற்போது அட்லீயுடன் விஜய் 61 படத்திற்காக இணைந்துள்ளார். இரண்டாவது முறையாக சேரும் இவர்களது கூட்டணி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.2016 ல் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் பிளாக்பஸ்டர் அந்தஸ்த்தை பெற்ற படம் தெறி. இப்படத்தை அட்லீ இயக்க தாணு தயாரித்திருந்தார்.தற்போது அட்லீயை இவர் நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவர் தெறி படத்தை விட விஜய் 61 படம் பெரிய சாதனை படைக்க விஜய் மற்றும் அட்லிக்கு எனது வாழ்த்துக்கள் என ட்விட்டரில் கூறியுள்ளார்.விஜய் 61 படத்தின் பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் சென்னை ECR ல் உள்ள பனையூரில் தொடங்கியுள்ளது. மேலும் படத்தின் சென்னை பின்னி மாலில் எடுக்கப்படவுள்ளது.


பிரசன்னா சினேகாவிற்குள் இப்படி ஒரு பிரச்சனையா?
[Wednesday 2017-02-01 14:00]

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த பிரபலங்களில் அனைவராலும் விரும்பப்பட்டவர்கள் சினேகா, பிரசன்னா. இவர்களுக்கு விஹான் என்ற மகனும் இருக்கிறார். திருமணம், குழந்தை என சினிமாவில் இருந்து விலகி இருந்த சினேகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார், பிரசன்னாவும் தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகி பிஸியாகி விட்டார்.ஆனால் பிரசன்னாவிற்கோ தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்பது ஆசை. தயாரிப்பாளர்கள் தற்போது படும்பாட்டை பார்த்த சினேகா தயாரிப்பு எல்லாம் வேண்டாம் என்று கூறினாராம். இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனை என கூறப்படுகிறது.


நடிகர் விமலுக்காக சிவகார்த்திகேயன் இப்படி செய்தாரா?
[Wednesday 2017-02-01 14:00]

சிவகார்த்திகேயன், விமலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே.இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் வளர்ச்சி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் தற்போதெல்லாம் பாடவும் தொடங்கிவிட்டார்.இவர் தன் படத்தை தவிர வேறு எந்த நடிகரின் படங்களிலும் பாடியது இல்லை, ஆனால், விமன் தன் நண்பர் என்பதால் அவருடைய படத்திற்கு மட்டும் பாட சம்மதித்துள்ளார்.விமல் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடவுள்ளாராம்.


தானா சேர்ந்த கூட்டம் படக்குழு எடுத்த அதிரடி முடிவு!
[Wednesday 2017-02-01 14:00]

சூர்யாவின் S3 படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதியில் மாற்றங்கள் ஏற்பட்டது. ஒருவழியாக இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது.இப்படத்தை தொடர்ந்து சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் ரிலீஸை படக்குழு ஜுலையில் திட்டமிட்டிருந்தனர். தற்போது வந்த தகவல்படி, ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் விடுமுறை மாதமான மே மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.இந்த தகவல் சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.


சிம்புவின் AAA படத்தில் படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை!
[Wednesday 2017-02-01 14:00]

சிம்பு படம் என்றாலே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அவருக்கு எத்தனை வருடம் கழித்து படம் வந்தாலும் ஒரு மாஸ் ஓப்பனிங் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.இந்நிலையில் கடந்த வருடம் இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா என இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்ட இடத்தை பிடித்துவிட்டார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே, இப்படத்தில் இவருக்கு 3 கதாபாத்திரம் என கூறப்பட்டது.ஆனால், உண்மையாகவே படத்தில் இரண்டு கதாபாத்திரம் தானாம், மூன்றாவது ரோல் என்று ஏதும் இல்லை என ஒரு தகவல் வெளிவந்துள்ளது.


தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இருந்து விலகிய குஷ்பு: - அதிர்ச்சியில் விஷால்
[Wednesday 2017-02-01 14:00]

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் மார்ச் மாதத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டிபோட இருக்கிறார் என விஷால் கூறியிருந்தார். இந்நிலையில் குஷ்பு போட்டியில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இப்போது இந்த போட்டியில் தோற்றால் அது தன் அரசியல் வாழ்க்கைக்கு சரியாக வராது என்று குஷ்பு யோசித்திருக்கிறாராம்.ஒரு சில காரணங்களால் குஷ்புவை ஆதரிப்பதில் விஷாலுக்கு நெருக்கமானவர்களே தயக்கம் காட்டியுள்ளார்களாம்.


விஜய் 61 படப்பிடிப்பு சென்னையில் இன்று ஆரம்பம்
[Wednesday 2017-02-01 09:00]

தெறி


பள்ளி மாணவர்களுக்கு நன்கொடையாக மிதிவண்டிகள் வழங்கிய விஷால்
[Wednesday 2017-02-01 09:00]

நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், தனது அம்மாவின் பெயரில் தேவி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன்மூலம், திறமை இருந்தும் கல்விக்காக கஷ்டப்படும் குழந்தைகள், மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பல கிராமங்களிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வருவதை அறிந்த விஷால், தனது தேவி அறக்கட்டளையின் மூலம் அந்த மாணவர்கள் சுலபமாக பள்ளிக்கூடம் வருவதற்கு 35 இரு சக்கர மிதிவண்டிகளை இலவசமாக வழங்கியுள்ளார்.


நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
[Wednesday 2017-02-01 09:00]

ஜெயம் ரவியுடன் ஹன்சிகா நடித்த


அவசியம் ஏற்பட்டால் மாணவர்களுடன் இணைந்து அரசியலுக்கு வருவேன் - லாரன்ஸ்
[Wednesday 2017-02-01 09:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் - இளைஞர்கள் ஒருவாரத்திற்கு மேலாக மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக கலந்து கொண்டு முக்கிய பங்கு வகித்தார். இறுதி நாளில் வன்முறை நடைபெறுவதற்கு முன்பாக மெரினாவில் மாணவர்களுடன் சமாதான முயற்சியிலும் ஈடுபட்டார். அதோடு, வன்முறைக்கு பிறகு சில மாணவர்களுடன் முதல்வரை சந்தித்த லாரன்ஸ், சிறையில் உள்ள அப்பாவி மாணவர்கள்-இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.


அப்படி செய்தாரா கீர்த்தி சுரேஷ்? - பழிபோடும் முன்னணி ஹீரோ
[Tuesday 2017-01-31 18:00]

கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் நேனு லோக்கல்.இப்படம் சொன்ன தேதியில் முன்பு வரவில்லை, இதற்கு நானி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுக்கும் ஏதோ பிரச்சனை, அதனால் தான் படப்பிடிப்பு தள்ளிப்போனது, படத்தின் ரிலிஸ் தேதியும் தள்ளிப்போனது என கூறப்பட்டது. ஆனால், நானியோ


அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்: - யுவன் ஷங்கர் ராஜா
[Tuesday 2017-01-31 18:00]

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஒரு படம் என்றாலே அந்த படம் ஹிட் தான். இளைஞர்களின் ரசனையை அறிந்து அதற்கேற்றார் போல் இசையமைப்பார்.இன்று (ஜனவரி 31) அவருடைய இசையமைப்பில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் சத்ரியன் படத்தின் பாடல்களை வெளியாகி இருந்தது. இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர், யுவன் சார் நீங்கள் விஜய்யுடன் எப்போது இணைவீர்கள். உங்களது கூட்டணியை நாங்கள் மிகவும் எதிர்ப்பார்க்கிறோம் என கூறியிருந்தார்.இதனைப் பார்த்த யுவன் ஷங்கர் ராஜா நானும் அந்நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என பதில் கொடுத்துள்ளார்.


இந்த பிறந்தநாளிலும் அந்த இயக்குனருடன் தான் எமி இருக்கிறாரா?
[Tuesday 2017-01-31 18:00]

எமி ஜாக்ஸன் இன்று தன் 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.இந்நிலையில் இவர் டுவிட்டரில்


எங்கள் பிரிவிற்கு என் அப்பாவே காரணம்: - இயக்குனர் விஜய் கவலை
[Tuesday 2017-01-31 18:00]

பிரபல நடிகையான அமலா பால் இயக்குனர் விஜய்யை பிரிந்து வாழ விவாகரத்து முடிவை கடந்த வருடம் எடுத்திருந்தார். ஒரே வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் விரைவில் அப்படியொரு முடிவை அறிவித்தது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் இன்னும் அன்பு வைத்துள்ளதாக அமலா பால் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.தற்போது இயக்குனர் விஜய் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் எங்கள் பிரிவிற்கு என் அப்பாவே காரணம் என்று சொல்லிக்கொண்டு வருகிறாராம்.


போராட்டத்தை நடத்தி வெற்றிப்பெற்ற இளைஞர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்: - சிவகார்த்திகேயன்
[Tuesday 2017-01-31 18:00]

சிவகார்த்திகேயன் விஜய், அஜித், சூர்யாவிற்கு அடுத்த இடத்தில் இருப்பவர். இவரின் ரெமோ படம் ரூ 90 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.இவரை கௌரவப்படுத்தும் விதமாக சமீபத்தில் Youth Icon விருது வழங்கப்பட்டது. இவ்விருதை பெற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன்


மீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி
[Tuesday 2017-01-31 10:00]

தனுஷ் நடித்த


சமந்தாவின் நிச்சயதார்த்தப் புடவைக்குள் ஒளிந்திருந்த இரகசியம்..
[Tuesday 2017-01-31 09:00]

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தாவுக்கும், தெலுங்குத் திரையுலகின் இளம் நாயகனான நாகசைதன்யாவுக்கும் நேற்று ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்ட இந்த விழாவில் காதல் ஜோடிகளின் பொருத்தம் பற்றி பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள். விழாவின் ஹைலைட்டாக சமந்தாவின் நிச்சயதார்த்தப் புடவை அமைந்துள்ளது. அந்தப் புடவையில் சமந்தா - நாகசைதன்யா இருவரது காதல் ஆரம்பமான மாச சே வே படத்திலிருந்து அவர்கள் இருவரும் நாகசைதன்யாவின் தம்பி அகில் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட குடும்பப் புகைப்படம் வரையிலான முக்கிய தருணங்கள் புடவையில் வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.


தமிழ் பாரம்பரிய கலைகளை சினிமாவில் புகுத்தி புத்துணர்ச்சி அளிக்கவேண்டும் - ராம்ஜி
[Tuesday 2017-01-31 09:00]

திரைப்பட நடிகரும், நடன இயக்குனருமான ராம்ஜி ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நான் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமா துறைக்கு வந்துவிட்டேன். தற்போது 25 ஆண்டுகள் ஆகிறது. 30 படங்களில் நடன இயக்குனராகவும், 400-க்கும் மேற்பட்ட படங்களில் உதவி நடன இயக்குனராகவும் பணி புரிந்து உள்ளேன்.


படப்பிடிப்பில் பேருந்தை ஓட்டி ஆச்சிரியத்தில் ஆழ்த்திய ராதிகா
[Tuesday 2017-01-31 09:00]

90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து பலரின் மனதை கொள்ளையடித்த நடிகைகளுள் ஒருவர் ராதிகா சரத்குமார். இவரது அர்பணிப்பும், சவாலான நடிப்பும் இவருக்கு பல முக்கிய விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. மேலும் ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ராதிகா உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `இப்படை வெல்லும்' படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் அம்மாவாக வரும் ராதிகா, பேருந்து ஓட்டுநராகவும் நடித்துள்ளார். பேருந்து ஓட்டுநராக வரும் காட்சிகளில் ஓட்டுநர் இருக்கையில் நீங்கள் அமர்ந்தால் போதும். மற்ற காட்சிகளை கிராபிக்ஸ் செய்து கொள்ளலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா