Untitled Document
August 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
எல்லா தியேட்டர்களிலும் கட்டாயம் ஒரு சிறிய படம் திரையிட வேண்டும்: - கே.பாக்யராஜ்
[Friday 2017-07-28 13:00]

ஜாய்சன் இயக்கி உள்ள படம் சதுரஅடி 3500. நிகில் மோகன், இனியா ஆகியோருடன் ரகுமான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கணேஷ் ராகவேந்தர் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இனியா, ரகுமான் கலந்து கொள்ளவில்லை.


இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்கும் சியான் விக்ரம்?
[Friday 2017-07-28 12:00]

இருமுகனை தொடர்ந்து 3 படங்களில் நடித்து வருகிறார் சியான் விக்ரம். இந்நிலையில் 4-வது படமாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச், கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் இந்த இரண்டு படங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே!
[Thursday 2017-07-27 18:00]

பிரபல நடிகை ராதிகா ஆப்தே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது புகைப்படம் எடுக்கும் கலைஞரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது புகைப்படத்தை டெலிட் செய்யும் படி சண்டை போட்ட ராதிகா ஆப்தேவின் செயல் செய்தியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெப்பர் சால்ட் தோற்றத்தில் ஸ்ருதியுடன் அர்ஜுன்!
[Thursday 2017-07-27 18:00]

நன்றி’ படம் மூலம் 1984ம் ஆண்டு தமிழில் அறிமுகமான அர்ஜுன் தற்போது ‘நிபுணன்’ படம் மூலம் தனது 150 வது படத்தை நிறைவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’எனது திரையுலக பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நேசித்ததுடன் பல்வேறு தடைகளையும் கடந்து வந்திருக்கிறேன். நிறைய போலீஸ் கதைகளில் நடித்திருக்கிறேன். ‘நிபுணன்’ புத்திசாலித்தனமான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டது. பெப்பர் சால்ட் தோற்றத்துடன் டிஎஸ்பி கதாபாத்திரம் ஏற்றிருக்கிறேன்.


நிவின்பாலியுடன் ஜோடி சேரும் அமலாபால்!
[Thursday 2017-07-27 12:00]

ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களை இயக்கியவர் ஆவார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் அடுத்த படத்தில் நிவின்பாலி, அமலாபால் நடிக்க உள்ளனர்.


நடிகர் கமலின் அடுத்த படம் தலைவன் இருக்கிறான்!
[Thursday 2017-07-27 07:00]

நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் பெயர் 'தலைவன் இருக்கிறான்' ட்விட்டரில் அறிவித்துள்ளார். விஸ்வரூபம் -2, 'சபாஷ்நாயுடு படத்துக்கு பின் தலைவன் இருக்கிறான் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தலைவன் இருக்கிறான் படத்தலைப்பை 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து விட்டதாக கமல் கூறியுள்ளார்.


மீண்டும் பேய் வேடத்தில் இனியா!
[Thursday 2017-07-27 07:00]

மாசாணி’ படத்தில் பேய் வேடத்தில் நடித்த இனியா மீண்டும் ‘சதுர அடி 3500’ படத்தில் பேய் வேடம் ஏற்கிறார். இப்படத்தின் டிரெய்லரை நேற்று, தயாரிப்பாளர் எஸ்.தாணு வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.


இளைய தளபதி 25 + இசை புயல் 25 + தேனாண்டாள் பிலிம்ஸ் 100: - மெர்சல் ஸ்பெஷல்
[Thursday 2017-07-27 07:00]

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல்அகர்வால், நித்யாமேனன் நடிக்கின்றனர். மெர்சல் படத்தின் படப்பிடிப்பு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவாக முடித்துவிட்டு படத்தை தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


மலையாள நடிகை கடத்தல் வழக்கு: - கதறி அழுத காவ்யா மாதவன்!
[Wednesday 2017-07-26 18:00]

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்ட போது அவர் கதறி அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பிரபல மலையாள திரைப்பட நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.


குட்டை ஆடை பறக்கத் தொடங்கியதால் பதறிப் போன ஷில்பா!
[Wednesday 2017-07-26 17:00]

மிஸ்டர் ரோமியோ, குஷி ஆகிய 2 தமிழ் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இளம் நடிகைகளின் வரவால் இவரது மார்க்கெட் டல்லடித்தது. கடந்த 3 வருடமாக ஒரு படம்கூட அவரை தேடி வரவில்லை. ஆனாலும் தன்னை டிரெண்டில் வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார். இதனால் அடிக்கடி செய்திகளில் அவரது பெயர் அடிபட்டு வருகிறது.


தடம் படத்தில் அருண்விஜய்க்கு 3 கதாநாயகிகள்!
[Wednesday 2017-07-26 17:00]

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் படம் தடம். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அருண்விஜய்க்கு ஏற்பட்ட காயத்தில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகி யார் என்று இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படத்தில் 3 கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.


பிஸியாக இருக்கும் சொப்பன சுந்தரி காவ்யா ஷா!
[Wednesday 2017-07-26 17:00]

‘சொப்பன சுந்தரி நான்தானே.... நான் சொப்பன லோகத்தின் தேன்தானே’ என்று ‘வீரசிவாஜி’யின் ஹாட் டான்ஸில் கலக்கிய அயிட்டம் காவ்யா ஷா. ‘‘பொறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூருதான். மாடலிங், டி.வி. தொகுப்பாளர்னு வளர்ந்து சினிமாவில் என்ட்ரி ஆனேன். கன்னடத்துல ‘பைசா’ செம ஹிட் ஆகி, காவ்யா யாருனு இந்த உலகத்துக்கு காண்பிச்சது.


கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: - நிக்கி கல்ராணி
[Wednesday 2017-07-26 07:00]

நடிகை நிக்கி கல்ராணி தனது வெற்றிக்கான ரகசியம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. 3 வருடங்களில் 25 படங்களில் நடித்துள்ள இவர் தனது அனுபவம் பற்றி கூறுகிறார்....


கமல் கூறிய கருத்தில் யாரும் தலையிட முடியாது: - நடிகை கவுதமி
[Wednesday 2017-07-26 07:00]

அனைத்து துறையிலும் ஊழல் என்று கமல் கூறிய கருத்தில் யாரும் தலையிட முடியாது என்றார் நடிகை கவுதமி. அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், பாபநாசம் உள்ளிட்ட படங்களில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்ததுடன் அவருடன் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவர் கவுதமி. பிறகு அவரை பிரிந்தார். சமீபகாலமாக தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி கமல் விமர்சித்து வருகிறார். இதையடுத்து கமலை தாக்கி அமைச்சர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.


காவ்யா மாதவனிடம் 6 மணிநேரம் விசாரணை: - இன்று கைது ஆவார் என தகவல்
[Wednesday 2017-07-26 07:00]

நடிகர் திலீப்பின் 2-வது மனைவி நடிகை காவ்யா மாதவனிடம் ஏ.டி.ஜி.பி. சந்தியா 6 மணிநேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இன்று நடைபெறும் விசாரணைக்கு பின்னர் காவ்யாமாதவன் கைதாவார் என்று கூறப்படுகிறது.கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை நடந்தது. இது தொடர்பாக நடிகை அளித்த புகாரின்பேரில் பிரபல ரவுடி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பல்சர் சுனில் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நடிகர் திலீப்புக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார்.


சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபட மாட்டேன்: - நடிகை காஜல்
[Tuesday 2017-07-25 18:00]

தெலுங்கு சினிமா பிரபலங்கள், போதைப் பொருள் பயன்படுத்துவதாக ஆந்திர காவல்துறைக்கு புகார் வந்ததையடுத்து, அவர்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது காவல்துறை.


நிக்கி என் தங்கை மாதிரி: - கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
[Tuesday 2017-07-25 12:00]

சர்வதேச கிரிக்கெட் வீரராக ஏற்கனவே புகழ்பெற்றவர் ஸ்ரீசாந்த். இப்போது ‘டீம்-5’ படத்தின் மூலமாக சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக சென்னைக்கு வந்தார் அவ்வேளையில் பேட்டி ஒன்றில் நிக்கி கல்ராணி பற்றி கூறுகையில் .


போதை மருந்து விவகாரத்தில் காஜல் அகர்வாலின் மேனஜர் கைது!
[Tuesday 2017-07-25 12:00]

போதை மருந்து விவகாரம் தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை தொடங்கியது. நடிகர்கள் ரவிதேஜா, தருண், சுப்பராஜு, ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. நேற்று நவ்தீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. விரைவில் சார்மியிடம் விசாரணை நடக்கவிருக்கிறது.


நாயகியை மையமாக வைத்தும் எடுக்கும் படத்தில் நயன்தாரா!
[Tuesday 2017-07-25 07:00]

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நயன்தாரா முக்கியத்துவம் தந்து நடித்து வருகிறார். டோரா படத்தை தொடர்ந்து அறம், கொலையுதிர்காலம் படம் கதாநாயகியாக மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான். தற்போது நயன்தாரா இமைக்கா நொடிகள்’, ‘வேலைக்காரன்’ படங்களிலும் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்களே கொடுக்கப்பட்டுள்ளதாம்.


குடும்ப வாழ்க்கை பற்றி கேட்டதால் ஆத்திரமடைந்த தனுஷ்!
[Tuesday 2017-07-25 06:00]

தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீசாக உள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2. இந்த படம் வரும் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ், கஜோல், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கவர்ச்சி உடையில் சமந்தா: - நாக சைதன்யா ரசிகர்கள் கவலை
[Monday 2017-07-24 17:00]

சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி கோவாவில் நடக்கவுள்ளது. இதையடுத்து ஒப்புக்கொண்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு செய்திருப்பதால் அடுத்தடுத்து புதிய படங்களையும் ஒப்புக்கொள்கிறார்.


ஏமாற்றமடைந்த பத்மப்ரியா!
[Monday 2017-07-24 17:00]

பொக்கிஷம், தங்கமீன்கள், பிரம்மன், இரும்புகோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் நடித்த பத்மப்ரியா கடந்த 2014ம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை மணந்தார். அதன்பிறகு நடிப்புக்கு முழுக்குபோட்ட பத்மப்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெகபதிபாபுவின், ‘பட்டேல் எஸ்ஐஆர்’ படத்தில் ரீஎன்ட்ரி ஆனார். தனது ரீஎன்ட்ரிக்கு இப்படம் கைகொடுக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தார்.


போதை மருந்து விவகாரம்: - சார்மியை குறிவைக்கும் அதிகாரிகள்
[Monday 2017-07-24 17:00]

போதை மருந்து விவகாரம் தொடர்பாக தருண், ரவி தேஜா, சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 நட்சத்திரங்களுக்கு அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பியது. இதில் ரவிதேஜா உள்ளிட்ட சிலரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்திருக்கிறது.


விண்வெளி கதையாக உருவாகி வரும் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்!
[Monday 2017-07-24 13:00]

மிருதன் படத்தைத் தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம், டிக் டிக் டிக். இந்தியாவின் முதல் விண்வெளி கதையாக உருவாகி வரும் இதில் ஜெயம் ரவிக்கும், நிவேதா பெத்துராஜுக்கும் காதல் காட்சிகள் கிடையாது.


நடிகை பாவனா கடத்தல் வழக்கு: - திலீப் ஜாமீன் மனு தள்ளுபடி
[Monday 2017-07-24 13:00]

நடிகை கடத்தல் வழக்கில் செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீன் கோரி திலீப் தாக்கல் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பாவனா. கடந்த பிப்ரவரி 17ம் தேதி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திருச்சூரில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தவர் காரில் கடத்தப்பட்டார்.


எனது ரசிகர்கள் எக்காரணம் கொண்டும் தரம் தாழ்ந்து போக வேண்டாம்: - கமல்ஹாசன் அறிவுரை
[Monday 2017-07-24 08:00]

நாடு காக்கும் நற்பணியை மட்டும் மேற்கொள்ளவேண்டும் என தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.இது தொடர்பாக தனது சுட்டுரை பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் பதிவு செய்துள்ள செய்தி: -


அப்பா நாத்திகவாதி: - கோவில் கோவிலாக செல்லும் மகள் ஸ்ருதி
[Sunday 2017-07-23 18:00]

அமிர்தசரஸ்: நடிகை ஸ்ருதி ஹாஸன் பொற்கோவிலுக்கு சென்று வணங்கியுள்ளார்.உலக நாயகன் கமல் ஹாஸன் நாத்திகவாதி. அவர் மகள் ஸ்ருதி ஹாஸன் கடவுள் பக்தி உள்ளவர். கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருபவர் ஸ்ருதி.


அந்த நேரத்தை நமக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: - இலியானா
[Sunday 2017-07-23 18:00]

பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் குஷியில் கும்மாளம் போடுவது போல் நடிகை இலியானாவுக்கு படப்பிடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு ஊர்சுற்றுவதென்றால் ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து நடித்துவிட்டு, 2 நாள் கேப் கிடைத்தால் உடனே மூட்டையும் முடிச்சுமாக காதலன் ஆண்ட்ரு நிபோன் உடன் வெளிநாடு பறந்துவிடுகிறார்.

Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா