Untitled Document
June 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மீண்டும் நயன்தாரா படத்தில் இணையும் விஜய் சேதுபதி!
[Sunday 2017-05-28 15:00]

நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.நயன்தாராவும் விஜய் சேதுபதியும் இணைந்து ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


மலேசியாவில் படமாகியிருக்கும் கில்லி பம்பரம் கோலி!
[Sunday 2017-05-28 15:00]

ரஜினி நடிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவான ‘கபாலி’ படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து, தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து உருவாகும் பெரும்பாலான படங்கள் மலேசியாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் ‘கில்லி பம்பரம் கோலி’ என்ற படமும் முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாகியுள்ளது.


தமிழில் வெளியாகும் பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படம் பேவாட்ச்!
[Sunday 2017-05-28 15:00]

பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச்’ படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி தமிழில் ரிலீஸாகிறது. இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படம் ‘பேவாட்ச்’. இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது.


திருமண தடை நீங்க நடிகை அனுஷ்கா கோவிலில் சிறப்பு பூஜை!
[Saturday 2017-05-27 17:00]

திருமண தடை நீங்க நடிகை அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.நடிகை அனுஷ்கா 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. அனுஷ்காவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தும், இன்னும் திருமணம் முடிவாகவில்லை. நடிகர்கள் ஆர்யா, பிரபாஸ் உள்பட சில கதாநாயகர்களுடன் இணைத்தும் பேசப்பட்டார்.


அமீர்கானை விடவும் கடந்த பல வருடமாக செய்து வருகிறேன்: - கமல்
[Saturday 2017-05-27 17:00]

பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுக விழாவில் அந்த மாதிரி விஷயங்களை நிகழ்ச்சி மூலம் தான் செய்ய வேண்டுமென்று இல்லை என்று கமல் கூறினார்.சமீபத்தில் எங்கும், எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம் பிக் பாஸ். இதன் முதல் பார்வை வெளியான நாளில் இருந்தே இது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மனதில் உருவாக்கியுள்ளது. இதை தொகுத்து வழங்க இருப்பது உலகநாயகன் கமல்ஹாசன் என்பது கூடுதல் சிறப்பு. 5 வயதில் இருந்து, கடந்த 58 வருடமாக சினிமாவிலேயே இருந்து கலைச்சேவை ஆற்றி வரும் சகலகலா வல்லவன் கமல்ஹாசனை விட சிறப்பான ஒரு தொகுப்பாளர் கிடைக்க மாட்டார்.


அந்த படத்திற்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வராதீர்கள்: - பிரியங்கா சோப்ரா
[Saturday 2017-05-27 17:00]

விஜய் நடித்த தமிழன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹாய் சொன்னவர் பிரியங்கா சோப்ரா. பிரபல பாலிவுட் நட்சத்திரமான இவர் baywatch என்னும் படத்தில் நடித்துள்ளார்.வரும் ஜூன் 2 ல் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகவுள்ளது. இது பற்றி மும்பையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.


ரஜினியை சந்தித்த நடிகர் ஆனந்த்ராஜ்!
[Saturday 2017-05-27 17:00]

ரஜினி அரசியலில் ஈடுபடப்போகிறார் என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது. இந்நிலையில், நடிகர் ஆனந்த்ராஜ் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ரசிகர்களை சந்தித்தார். சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ரஜினியுடன் அவர்களது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி, ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். இதில் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை தனது ரசிகர்கள் மத்தியில் சூசகமாக தெரிவித்தார். அதாவது போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று பேசினார்.


பூட்டிய அறையில் விஷாகா சிங்கிற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
[Saturday 2017-05-27 17:00]

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஜோடியாக நடித்தவர் விஷாகா சிங். இவர் சினிமா நிகழ்ச்சிகளில் விடாமல் கலந்துகொள்வாராம். அதே போல ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் தங்கியிருந்த அறையை பூட்டிவிட்டு படவிழாவிற்கு வந்துள்ளார்.


சைதன்யா குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்த சமந்தா!
[Friday 2017-05-26 19:00]

சமந்தா, நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி நடத்துவதுபற்றி இருகுடும்பத்தாரும் பேசி வருகின்றனர். வெளிநாட்டில் நடத்துவதா? ஐதராபாத்திலேயே நடத்துவதா? என்பதுபற்றியும் ஆலோசிக்கின்றனர். திருமணத்தையொட்டி 3 மாத விடுமுறை எடுக்க சமந்தா எண்ணியுள்ளதாக தகவல் பரவினாலும் அவ்வளவு நீண்ட விடுமுறை எடுக்க அவருக்கு நேரமிருக்காது. தொடர்ச்சியாக அவர் படங்களை ஒப்புக்கொண்டிருப்பதால் அதில் நடிக்க வேண்டி உள்ளது என்று ஒரு தரப்பு கூறுகிறது.


பாவாடை தாவணியில் ரகுல் ப்ரீத் சிங்: - சீனியர் ஹீரோ அட்வைஸ்
[Friday 2017-05-26 19:00]

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். பட விழாக்களுக்கு வரும்போது சக நடிகைகளுக்கு சளைத்தவர் இல்லை என்பதுபோல் கிக்கான மாடர்ன் உடைகள் அணிந்து கவனத்தை கவர்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபத்தில் பட விழா ஒன்றுக்கு வந்தவர் பாவாடை, தாவணி, கைநிறைய வளையல், தலைநிறைய மல்லிகைப்பூ என அசல் கிராமத்து பெண்போல் பங்கேற்றார்.


கமலுடன் மோகன்லால் நடிக்கும் படத்துக்கு எதிர்ப்பு!
[Friday 2017-05-26 19:00]

மகாபாரதத்தை மையமாக கொண்டு மலையாள திரைப்பட எழுத்தாளர் எம்.டி.வாசு தேவன் நாயர் ‘ரண்டாமூழம்’ என்ற நாவல் எழுதி இருக்கிறார். இந்த நாவலை தழுவி மோகன்லால் நடிப்பில் ‘மகாபாரதம்’ பெயரில் படம் உருவாக உள்ளது. பாரதப் போரில் பெரும் பங்குவகித்த பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். பெரும் பொருட் செலவில் உருவாகும் இதில் முக்கிய வேடங்களில் அமிதாப்பச்சன், கமல், நாகார்ஜூனாவும் நடிக்க உள்ளனர். இப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.


கர்ணணாக நடிக்கும் நாகர்ஜுனா!
[Friday 2017-05-26 18:00]

சிவாஜி நடித்த கர்ணன் கேரக்டரில் நடிக்க, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்க உள்ளார். இந்திய சினிமாவை, உலக அளவில் நிமிர செய்த பாகுபலியால் தற்போது சரித்திரப் படங்களை எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபல மலையாள எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுத, ‘மகாபாரதம்’ படமாக்கப்பட உள்ளது. சுகுமாறன் இயக்க, கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இமைக்கா நொடியில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!
[Friday 2017-05-26 18:00]

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷிகன்னா, மற்றும் இந்திய பட இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்துள்ள படம் இமைக்கா நொடிகள். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழில் நடிக்கும் முதல் படத்திலேயே வில்லனாக அதுவும் ஒரு சீரியல் கில்லராக அனுராக் காஷ்யப் நடித்திருக்கிறார்.


ரெஜினாவின் தொலைபேசி இலக்கத்தை கேட்டு இயக்குனருக்கு தொல்லை!
[Thursday 2017-05-25 18:00]

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடித்துள்ள படம், ‘சரவணன் இருக்க பயம் ஏன்’. எழில் இயக்கி உள்ளார். இப்படத்தின் வெற்றியையடுத்து பட குழு நேற்று நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தியது. இயக்குனர் எழில் கூறும்போது,’சரவணன் இருக்க பயம் ஏன் இறைவன் அருளால் வெற்றி பெற்றிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின், சூரி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எம்புட்டு இருக்கு ஆசை பாடலை இதுவரை 20 லட்சம்பேர் பார்த்திருப்பதாக கூறினார்கள்.


பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் வரலட்சுமி!
[Thursday 2017-05-25 18:00]

சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் சத்யா படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தை இயக்கியவர். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார். தெலுங்கில் வெளியான ஷணம் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. குழந்தை கடத்தலை பின்னணியாகக் கொண்ட திரில்லர் கதை இது.


குறும்பட இயக்குனர்களுக்கு பரிசில் வழங்கிய சூர்யா!
[Thursday 2017-05-25 17:00]

மூவி பஃப் அமைப்பு சூர்யாவின் 2டி என்டர்டயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பர்ஸ் கிளாப்ஸ் என்ற பெயரில் குறும்பட போட்டி ஒன்றை நடத்தியது. 3 நிமிடங்கள் ஓடக்கூடிய படங்களுக்கான போட்டி இது. இந்த போட்டியில் 254 படங்கள் கலந்து கொண்டது. அதில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் 170. திரையரங்குகளில் படங்களின் இடைவேளையின் போது திரையிடப்பட்டது. வெற்றி பெற்ற இயக்குனர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்பட்டது.


கதாநாயகிகள் போட்டியை சமாளிக்க செல்ஃபி சலுகை அறிவித்த டாப்ஸி!
[Thursday 2017-05-25 17:00]

தென்னிந்திய படங்களில் ஒன்றிரண்டு படங்களை தவிர தனக்கு நல்ல வேடங்கள் தரப்படவில்லை என்ற கோபத்தில் இந்தி படங்களில் நடிக்கச் சென்றார் டாப்ஸி. அது ஒர்க் அவுட் ஆனது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஒதுக்கி வந்தார். தற்போது கோபம் தணிந்து தென்னிந்திய படங்களுக்கு ஓ.கே. சொல்லி இருக்கிறார்.


மூன்று மாதங்களுக்கு நடிப்புக்கு ஓய்வு கொடுக்க சமந்தா முடிவு!
[Thursday 2017-05-25 17:00]

3 மாதங்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுக்க சமந்தா முடிவு செய்துள்ளார். நாக சைதன்யா - சமந்தா திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது விஜய்யுடன் நடித்து வரும் சமந்தா, விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் சேதுபதியுடன் அநீதி கதைகள், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், தெலுங்கில் 2 படங்கள் என பிசியாக நடித்து வருகிறார். திருமணத்தையொட்டி அக்டோபர் முதல் டிசம்பர் வரை அவர் நடிப்புக்கு ஓய்வளிக்க முடிவு செய்துள்ளார்.


அனுஷ்காவின் பதிலுக்காக காத்திருக்கும் இயக்குனர்!
[Wednesday 2017-05-24 18:00]

அசின் தொடங்கி எமி ஜாக்ஸன்வரை தென்னிந்திய ஹீரோயின்கள் பலர் இந்தி படங்களில் நடிக்கச் சென்றனர். ஒர்க் அவுட் ஆகாத நிலையில் பலர் மீண்டும் தென்னிந்திய படங்களுக்கே திரும்பினர். அனுஷ்கா, நயன்தாராவுக்கு பாலிவுட்டிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்காமல் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக பாகுபலி படத்துக்கு பிறகு அனுஷ்காவுக்கு இந்தி பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. இயக்குனர் இ.நிவாஸ் தான் இயக்கவுள்ள ‘ஜூவனைல்’ படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்டார்.


விஜய் சேதுபதி - திரிஷாவுக்கு ஜூனியர் தேடல்!
[Wednesday 2017-05-24 17:00]

இளம் வயது தொடங்கி வாலிப வயது வரையான கதை அமைப்பு கொண்ட படங்களுக்கு அதில் ஜோடிபோடும் நட்சத்திரங்களின் முகசாயலுக்கு ஏற்ப ஜூனியர் நட்சத்திரங்களை தேர்வு செய்ய வேண்டும். விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடிக்கும் புதிய படம் ‘96’. சிறுவயது நட்பு தொடங்கி வாலிப பருவ காதல் வரையிலான கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக விஜய் சேதுபதி, திரிஷா முகசாயலுக்கு பொருத்தமான சிறுவயது கதாபாத்திர நட்சத்திர தேர்வு நடத்தி வருகிறார் இயக்குனர் பிரேம்குமார்.


இணையதளங்களில் வைரலாகி வரும் நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி புகைப்படங்கள்!
[Wednesday 2017-05-24 17:00]

நடிகை நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ஒருநாள்கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.


இழந்த மார்க்கெட்டை மீண்டும் தக்க வைக்க போராடி வரும் ஸ்ரேயா!
[Wednesday 2017-05-24 17:00]

ரஜினி, விஜய் என டாப் ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயா இளம் நடிகைகளின் என்ட்ரியால் மார்க்கெட் இழந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள ‘கவுதமி புத்தர சாதகர்ணி’ தமிழில் திரைக்கு வரவுள்ளது. தமிழில் சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். சரஸ்வதி புத்ரா ஞானசேகர் ஒளிப்பதிவு. பாரதி புத்ர சிரஞ்சன் இசை. ரகுநாத் வழங்க நரேந்த்ரா தயாரித்திருக்கிறார். நேரடி தமிழ் படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திலும் தற்போது ஸ்ரேயா நடித்து வருகிறார்.


லிப் லாக் முத்தத்திற்கு நோ சொன்ன சிபிராஜ்!
[Wednesday 2017-05-24 17:00]

கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்து வரும் படம் சத்யா. இந்த படத்தில் வரலட்சுமி, ரம்யாநம்பிசன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த தலைப்பு கமலின் படம் என்பதால் கமல் ஸ்டைலில் முத்தக்காட்சி ஒன்றை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி வைத்திருந்தார். ஆனால் முத்தகாட்சிக்கு சிபிராஜ் மறுத்துவிட்டார். இது குறித்து இயக்குனர் கூறிய போது சிபிராஜுக்கு அவரது கேரியரில் இந்த படம் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.


பா.ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் இணையும் சமுத்திரக்கனி!
[Wednesday 2017-05-24 17:00]

கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தின் ஷூட்டிங் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா பரபரப்பு பேச்சு
[Tuesday 2017-05-23 17:00]

இயக்குனர் பேரரசு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில், பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, யாரும் அரசியல் செய்யலாம், தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று பரபரப்பாக பேசினார்.இயக்குனர் பேரரசு எழுதிய ‘என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.


சுஜாவின் போராட்டம் இன்னும் ஓயவே இல்லை!
[Tuesday 2017-05-23 17:00]

ஜெயித்துக் கொண்டே இருப்பவர்கள் மட்டும் ஹீரோக்கள் அல்ல. ஜெயிப்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறவர்கள் ஹீரோக்கள்தான். சுஜா வாருணி, இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.சமீபத்தில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தில் அவர் வில்லனுடைய மனைவியாக நடித்தார். வில்லனைப் பார்த்து அவர் கேட்கும் ஒரு கேள்விதான் படத்திற்கான ஆதார சுருதி. அப்படிப்பட்ட முக்கியமான கேரக்டர்.


மூன்று தமிழ் படங்களிலிருந்து விலகினார் சாய் பல்லவி!
[Tuesday 2017-05-23 17:00]

சில வருடங்களுக்கு முன் வெளியான ‘பிரேமம்’ மலையாள படம் சென்னையில் 200 நாட்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது. இதில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருந்தார். அவருக்கு ரசிகர் வட்டம் அதிகரித்தது. இதையடுத்து சாய் பல்லவியை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்த இயக்குனர்கள் எண்ணினர். மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் சாய் பல்லவி.


விரைவில் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல் வரிகள்: - கமல்ஹாசன்
[Tuesday 2017-05-23 17:00]

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் எடுத்து வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்கள் முடிவடைந்து விட்டதாக நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘விரைவில் ‘விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே, மனதை தொற்றிப் பிடிக்கும் இசை.

Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா