Untitled Document
April 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மகேஷ் பாபு - முருகதாஸ் இணைந்து தரும் புத்தாண்டு விருந்து
[Thursday 2017-03-23 22:00]

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ஸ்பை திரில்லர் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையிலும் இப்பட தலைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் டீசரை ஏப்ரல் 14 தமிழ்புத்தாண்டு அன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் மே 28ல் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை ஐதராபாத்தில் நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம்.


நம் மண் இசையே நமக்கு தேவை - தனுஷ்
[Thursday 2017-03-23 21:00]

பவர்பாண்டி படம் மூலம் இயக்குனராகியுள்ள நடிகர் தனுஷ், தன் தாய், தந்தை, சகோதரி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளதோடு, எதிர்காலத்தில், நம் மண் இசையே நமக்கு தேவை என்றார். நடிகர் தனுஷ் முதல் முறையாக இயக்கியுள்ள படம், பவர்பாண்டி. இதில், கதை நாயகனாக ராஜ்கிரண் நடித்துள்ளார். பிரசன்னா, ரேவதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. பின், நடிகர் தனுஷ் கூறியதாவது: உலகில், நல்லது, கெட்டது; அன்பு, வெறுப்பு என, இரண்டும் உள்ளது. இதில், நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம்; எதை நோக்கி போகிறோம் என்பது, நம் கையில்தான் உள்ளது. நேர்மறையான சிந்தனைகளை தேர்ந்தெடுத்தால், நிம்மதியாக இருக்கலாம்; இதுதான், பவர்பாண்டி.


பாகுபலி - 2 இசையை ரஜினி வெளியிடுகிறார்..
[Thursday 2017-03-23 21:00]

இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் பாகுபலி-2 படத்தின் இசையை, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். இதற்கான விழா சென்னையில், பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது. 'பாகுபலி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகியுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர், உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட 7-வது டிரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில் டிரைலருக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் படக்குழு உற்சாகமாகியுள்ளது.


குத்துப்பாட்டுக்கு ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா
[Thursday 2017-03-23 21:00]

குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட நடிகை கேத்தரின் தெரசா ரூ.65 லட்சம் வாங்கியுள்ளார். `மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்' படத்திலும், தெலுங்கில் `நேனே ராஜு நேனே மந்த்ரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.


மாமாவானார் சிம்பு..
[Thursday 2017-03-23 20:00]

சிம்பு நிஜத்தில் மாமாவாகியுள்ளார். சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் சிம்பு அஸ்வின் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். திரையில் தாத்தாவாக நடிக்கும் சிம்பு, நிஜத்தில் மாமாவாகியுள்ளார்.


மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா'
[Thursday 2017-03-23 09:00]

இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்களுக்கு, கோலிவுட்டில் மீண்டும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. விக்ரம் வேதா என்ற படத்தில், மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர். மாதவன், நேர்மையான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாகவும், விஜய்சேதுபதி, தாதாவாகவும் நடித்துள்ளனர். இரண்டு பேருமே போட்டிப் போட்டு நடித்துள்ளனராம். கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாதவனுக்கு, இந்த படத்தின் மூலம், செமத்தியான தீனி கிடைத்துள்ளதாம். இதனால், இந்த படத்துக்கு, கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


ஆர்யா மீது வண்டுகள் தாக்குதல்..
[Thursday 2017-03-23 09:00]

தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுக்காவிட்டால், கோலிவுட், நம்மை சுத்தமாக மறந்து விடும். ரசிகர்களும் மறந்து விடுவர் என்பதை, தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் ஆர்யா. சமீபகாலமாக, இவரது படங்கள் சரியாக போகவில்லை. இதனால், அடுத்து நடிக்கும், கடம்பன் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்பதற்காக கடுமையான உழைக்கிறார் அவர். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தில், இவருடன் கேத்ரின் தெரசா, ஜோடி சேர்ந்துள்ளார். மலைத்தேன் எடுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவராக இருவரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பின் போது, தேனீ மட்டுமல்லாமல், ஏராளமான பூச்சி மற்றும் வண்டுகளிடம் கடி வாங்கி, நடித்துள்ளாராம் ஆர்யா.


'மகளிர் மட்டும்' ஜோதிகாவுக்காக தயாரான கதை..
[Thursday 2017-03-23 08:00]

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கப்பட்டுள்ள படம், மகளிர் மட்டும். ஜோதிகாவுக்காகவே, பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கதையாம் இது. சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே, இந்த படத்தில் நடித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின், அதிகமான நட்சத்திரங்கள் நடித்து வெளிவரும் படம் இது. பானுப்ரியா, ஊர்வசி போன்ற நடிகையரை இதில் நடிக்க வைக்கும்படி வற்புறுத்தியதும், ஜோதிகா தானாம். இந்த படம் வெற்றியடைந்தால், தொடர்ச்சியாக அதிக படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம் ஜோதிகா.


தேர்தலுக்காக இந்த பில்டப் கொடுக்காமல் உண்மையில் மாறுங்கள் ; விஷாலை தாக்கிய தயாரிப்பாளர்
[Thursday 2017-03-23 08:00]

கண்ணப்பன் என்ற தயாரிப்பாளர் விஷாலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் தேதி நெருங்கிவரும் சமயத்தில், தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் ஒரு அணியாக இருக்கும் விஷாலை கடுமையாக சாடியுள்ளார் தயாரிப்பாளர் கண்ணப்பன். இவர் ‘பாஸ்மார்க்’, ‘உளவாளி’ போன்ற படங்களை தயாரித்தவர். பல தியேட்டர்களையும் நிர்வகித்து வருகிறார். வினியோகஸ்தராகவும் பணியாற்றி வருகிறார்.


காருக்குள் நடக்கும் கதையை மையமாக கொண்ட படம் 'டோரா'
[Thursday 2017-03-23 08:00]

நயன்தாரா நடித்த படங்களை இப்போது அதிகம் பார்க்க முடிவது இல்லையே என்ற, அவரது ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்க வரப்போகிறது டோரா. ஒரு காரில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்துத் தான், இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாம். காருக்குள் இருக்கும் ஒரு பேயையும், அதை விரட்ட முயற்சிக்கும் நயன்தாராவையும் சுற்றித் தான், மொத்த காட்சிகளும் தயாராகி உள்ளதாம். குழந்தைகளுக்கு பிடித்த தலைப்பான, டோரா என, பெயர் வைக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


மலையாளத்திலும் தனது வேலையை ஆரம்பித்தார் தனுஷ்
[Wednesday 2017-03-22 18:00]

மலையாளத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக தயாரிக்க உள்ளார். விஜய், அஜீத், சூர்யாவுக்கு மலையாளத்திலும், தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் மம்முட்டி, திலீப் நடித்த ‘கம்மத் அண்ட் கம்மத்’ என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ் ஆகவே வருகிறார். தற்போது தனுஷ் மலையாளத்தில் படம் தயாரிக்கிறார். தனுசின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாளப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகரான டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இதை டோமினிக் அருண் என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. நாயகன் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.


ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல் படிய நடிகை 'மடோனா'
[Wednesday 2017-03-22 18:00]

சிறிய வயதில் இருந்தே இசை மீது ஆர்வம் கொண்டவர் நடிகை மடோனா செபஸ்டியன். அதன்காரணமாக பல ஆல்பங்களில் அவர் பாடியிருக்கிறார். அவர் பாடிய சில மியூக் ஆல்பங்களை யு -டியுப்பில் பார்த்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, கவண் படத்தில் மடோனாவை ஹேப்பி நியூ இயர் என்ற பாடல் பாட வைத்துள்ளார். இதுபற்றி ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறுகையில், நான் இசையமைக்கும் படங்களில் இண்டர்நெட்டில் இருந்து புதுப்புது ஆட்டிஸ்டுகளை எடுத்து அறிமுகம் செய்கிறோம். அப்படி பார்க்கும்போது, யு-டியூப்பில் மடோனாவோட இண்டிபெண்டன் சாங்க்ஸ் பார்த்திருக்கிறேன். அதன்பிறகுதான் கவண் படத்தில் அவரை பாட வைக்க முடிவு செய்தேன்.


நயன்தாரா படத்துக்கு எதிராக வழக்கு..
[Wednesday 2017-03-22 18:00]

நடிகை நயன்தாரா நடித்த டோரா படத்துக்கு தடை கோரி துணை இயக்குநர் தொடர்ந்த வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாரா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள படமான டோரா விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் உதவி இயக்குநரான நாடிமுத்து என்பவர் சென்னை 16-வது உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த 2013-ஆம் ஆண்டு நீயும் நானும் என்ற தலைப்பில் தான் எழுதிய கதை, திரைக்கதையை தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக், வாங்கி விட்டு மறுநாள் திருப்பித் தந்ததாகவும் அதே கதையை தலைப்பை மட்டும் மாற்றி டோரா என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி சாந்தி, படத் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கை வரும் 24ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.


‘பிசாசு’ நாயகியைத் தாக்கிய மேக்கப்மேன்..
[Wednesday 2017-03-22 18:00]

மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தின் மூலம் நாயகி ஆன பிரயாகா மார்ட்டின், மேக்கப்மேன் தனது கையை முறுக்கி அடித்ததாக புகார் ஒன்றை கூறியுள்ளார். மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படம் மூலம் நாயகி ஆனவர் பிரயாகா மார்ட்டின். கேரளாவை சேர்ந்த இவர், தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். பி.டி.குஞ்சு முகமது இயக்கத்தில் ‘விஸ்வாச பூர்வம் மன்சூர்’ என்ற படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் சென்றபோது நடந்த சம்பவம் பற்றி கூறிய பிரயாகா... “இந்த படத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். எனவே மேக்கப் தேவை இல்லை என்றார்கள். சம்பவத்தன்று நான் அதிகாலை 4.30 மணிக்கு செட்டுக்கு சென்றேன். முகம் டல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். மேக்கப் மேனிடமும் இதை தெரிவித்தார்.


இளையராஜாவின் முடிவால் பாடகர்களின் எதிர்காலம் இருளாகி விடும்: பாடகர் மனோ
[Wednesday 2017-03-22 18:00]

இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒன்று சேர வேண்டும். அவர்கள் மோதல் போக்கு நீடித்தால் பின்னணி பாடகர்கள் எதிர்காலம் இருளடைந்து விடும் என்று பாடகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். mஇளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையிலான பாடல் காப்புரிமை மோதல் விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது இசையில் உருவான பாடல்களை மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று இளையராஜா அனுப்பி உள்ள வக்கீல் நோட்டீசால் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இனிமேல் இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் என்று அவர் அறிவித்து விட்டார்.


ஓட்டல் சர்வரிடம் ‘செக்ஸ்’ கேட்ட பிரபல நடிகை..
[Wednesday 2017-03-22 18:00]

ஓட்டல் சர்வரிடம் இந்தி நடிகை ஒருவர் ‘செக்ஸ்’ வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். பாரதிராஜாவின் ‘தாஜ்மகால்’ படம் மூலம் நடிகை ஆனவர் ரியாசென். பிரசாந்துடன் ‘குட்லக்’ படத்திலும் நடித்தார். பிரபல இந்தி நடிகை மூன்மூன் சென்னின் இளைய மகள். இவரது அக்காள் இந்தி நடிகை ரைமாசென். ரியாசென் சமீபத்தில் மும்பை அந்தேரியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு தனது தோழிகளுடன் சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த சர்வர் ‘என்ன வேண்டும்’ என்று கேட்டார். உடனே ரியாசென் ‘செக்ஸ் தான் வேண்டும் தருகிறீர்களா?” என்று சொல்ல அந்த சர்வரும், நடிகையுடன் வந்த தோழிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.


சூரிக்கு ஜோடியானார் நயன்தாரா..
[Wednesday 2017-03-22 18:00]

புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் சூரிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். தாஸ் ராமசாமி இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவாகி உள்ள `டோரா' படம் மார்ச் 31-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தற்போது `அறம்', `கொலையுதிர் காலம்', `இமைக்கா நொடிகள்', `வேலைக்காரன்' உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


பத்திரிகையாளர் மீது 2.o படக்குழு தாக்குதல் ; இயக்குநர் சங்கர் வருத்தம்
[Wednesday 2017-03-22 18:00]

2.o படப்பிடிப்பின் போது, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க இயக்குநர் சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த சம்பவம் எனது கவனத்திற்கு வராமல் நடந்துள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். சம்பவம் நடந்த போது, அங்கு நான் இல்லை. படப்பிடிப்பு நடந்த வீட்டிற்குள் சென்று விட்டேன். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின்போது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என நான் பல முறை அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.இதனை தொடர்ந்து, தாக்குதல் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.


பொது இடத்தில் அடி வாங்கிய பிரபலங்கள்..
[Wednesday 2017-03-22 18:00]

பொதுவாக நமது நடிகர்கள் திரையில் வில்லன் மற்றும் அடியாட்களை புரட்டி எடுத்து தான் பார்த்திருப்போம். ஆனால், சில தமிழ் நடிகர்களை பொது இடத்தில் வைத்தே தாக்கிய சம்பவங்களும், தாக்க முயலும் போது அவர்கள் தப்பித்து ஓடிய சம்பவங்களும் கூட பல நடந்தேறியுள்ளது.


இலங்கை வருகின்றார் சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த்..
[Wednesday 2017-03-22 18:00]

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகையின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.


செல்ஃபி கேட்டவருக்கு கவுண்டமணியின் பதில்..
[Tuesday 2017-03-21 19:00]

சென்னை விமானநிலையத்தில் ஒரு செல்ஃபி எடுக்க கேட்ட ரசிகரிடம் தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார் நடிகர் கவுண்டமணி. 80-90 களில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிக்கட்டி பறந்தவர் கவுண்டமணி. இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்திருக்கும் இவர், ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் நடிக்கும்போது அவர்களையே இவர் கலாய்த்து அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார்.


நடுரோட்டில் உருண்டு புரண்ட நயன்தாரா..
[Tuesday 2017-03-21 19:00]

‘டோரா’ படத்திற்காக ஒரு காட்சியில் நயன்தாரா நடுரோட்டில் உருண்டு புரண்டதாக இயக்குநர் தாஸ் ராமசாமி கூறியுள்ளார். தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘டோரா’. இது நாயகியை சுற்றி சுழலும் கதை. நயன்தாராவுடன் தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.“நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான காட்சிகளை அப்படியே நடித்துக் கொடுப்பதில் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் நயன்தாரா எளிமையாக நடந்து கொள்வார். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் கேரவனுக்குள் போய் உட்காரமாட்டார்.


இளையராஜாவிற்கு, கங்கை அமரன் 'ஆள் சேர்த்து அடிப்பார் போலிருக்கு' - இசையமைப்பாளர் செளந்தர்யன்
[Tuesday 2017-03-21 19:00]

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அப்படிப்பட்டவரை தவறான வார்த்தைகளால் விமர்சித்து இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்திவிட்டார் கங்கை அமரன் என்கிறார் இசையமைப்பாளர் செளந்தர்யன். அதுகுறித்து அவர் கூறுகையில்,ஒரு செய்தி சேனலில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என் இசையில் உருவான பாடல்களை பாடக்கூடாது என்று இளையராஜா கூறியுள்ளாரே? என்று கங்கை அமரனிடம் கேட்கிறார்கள்.


நான் அந்த மாதிரி கிடையாது! - ராகுல் பிரீத் சிங்
[Tuesday 2017-03-21 19:00]

தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ என தமிழில் மூன்று படங்களில் நடித்த ராகுல்பிரீத் சிங்கிற்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை. அதனால் தோல்வி முகத்துடன் தெலுங்கிற்கு சென்ற அவர், போன வேகத்திலேயே ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாகிவிட்டார். அதோடு, மீண்டும் தமிழுக்கு வந்திருப்பவர், இந்தி படங்களிலும் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், ராகுல் பிரீத் சிங்கை படுகவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க சில கமர்சியல் டைரக்டர்கள் அணுகி கதை சொன்னார்களாம். ஆனால், அந்த கதைகளில் நடிக்க மறுத்துவிட்டாராம் அவர்.


மகாபாரதத்தை இழிவுப்படுத்தியாக கமல் மீது வழக்கு பதிவு..
[Tuesday 2017-03-21 16:00]

மகாபாரதத்தை கொச்சைப்படுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது அவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் அரசியல், சினிமா, ஆன்மீகம், திராவிடம்... என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார்.


'13 படங்கள்' ஒரே நாளில் ரிலீஸ்..
[Tuesday 2017-03-21 08:00]

வருகிற வெள்ளிக்கிழமை அன்று, ஒரே நாளில் 13 படங்கள் ரிலீசாக உள்ளன. தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரத்தின் கடைசியிாள, வெள்ளிக்கிழமை தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் ரிலீசாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுவதாக கூற முடியாது. முன்பெல்லாம் 50 நாள்கள் அல்லது 100 நாள்கள் ஓடினால் தான் படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் படங்கள் 2 முதல் 3 நாள்கள் திரைகளில் முழுவதுமாக ஓடினாலே வெற்றிப் படம் என கொண்டாடுகின்றனர்.


ஐந்தே நாட்களில் உருவான மலேசிய தமிழ் படம் 'RIP'
[Tuesday 2017-03-21 08:00]

மலேசியாவில் தமிழ் படம் ஒன்று ஐந்தே நாட்களில் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க மலேசியாவிலேயே எடுக்கப்பட்ட தமிழ் படம் ஒன்று அடுத்த மாதம் மலேசியாவில் வெளியாகவிருக்கிறது. RIP என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் வெறும் 1.30 மணி நேரம் ஓடக்கூடியது. இந்த படத்தை 5 நாட்களில் படமாக்கியிருக்கிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறும்போது, மலேசியாவில் நேரடி தமிழ் படங்கள் கடந்த 7 வருடங்களாகத்தான் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


மீடியாக்களை மையப்படுத்தி உருவாக்கியுள்ள படம் 'கவண்'
[Tuesday 2017-03-21 08:00]

அனேகன் வெற்றிக்கு பிறகு அதே தயாரிப்பு நிறுவனமா ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இணைந்து இருக்கிறார் கே.வி.ஆனந்த். வழக்கம்போல எழுத்தாளர் சுபாவுடன் இணைந்து அவர் உருவாக்கி உள்ள படம் கவண். விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ராஜேந்தர், விக்ராந்த், பாண்டியராஜன், நாசர், போஸ் வெங்கட், ஜெகன் நடித்திருக்கிறார்கள். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார், அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது, வருகிற 31ந் தேதி படம் வெளிவருகிறது. சமீபகாலமாக வரும் திரைப்படங்களில் மீடியாக்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுகிறது. அந்த வரிசையில் கவண் படம் முழுக்க முழுக்க மீடியாக்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறதாம்.

Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா