Untitled Document
May 1, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இளையராஜாவிற்கு, கங்கை அமரன் 'ஆள் சேர்த்து அடிப்பார் போலிருக்கு' - இசையமைப்பாளர் செளந்தர்யன்
[Tuesday 2017-03-21 19:00]

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அப்படிப்பட்டவரை தவறான வார்த்தைகளால் விமர்சித்து இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்திவிட்டார் கங்கை அமரன் என்கிறார் இசையமைப்பாளர் செளந்தர்யன். அதுகுறித்து அவர் கூறுகையில்,ஒரு செய்தி சேனலில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என் இசையில் உருவான பாடல்களை பாடக்கூடாது என்று இளையராஜா கூறியுள்ளாரே? என்று கங்கை அமரனிடம் கேட்கிறார்கள்.


நான் அந்த மாதிரி கிடையாது! - ராகுல் பிரீத் சிங்
[Tuesday 2017-03-21 19:00]

தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ என தமிழில் மூன்று படங்களில் நடித்த ராகுல்பிரீத் சிங்கிற்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை. அதனால் தோல்வி முகத்துடன் தெலுங்கிற்கு சென்ற அவர், போன வேகத்திலேயே ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாகிவிட்டார். அதோடு, மீண்டும் தமிழுக்கு வந்திருப்பவர், இந்தி படங்களிலும் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், ராகுல் பிரீத் சிங்கை படுகவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க சில கமர்சியல் டைரக்டர்கள் அணுகி கதை சொன்னார்களாம். ஆனால், அந்த கதைகளில் நடிக்க மறுத்துவிட்டாராம் அவர்.


மகாபாரதத்தை இழிவுப்படுத்தியாக கமல் மீது வழக்கு பதிவு..
[Tuesday 2017-03-21 16:00]

மகாபாரதத்தை கொச்சைப்படுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது அவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் அரசியல், சினிமா, ஆன்மீகம், திராவிடம்... என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார்.


'13 படங்கள்' ஒரே நாளில் ரிலீஸ்..
[Tuesday 2017-03-21 08:00]

வருகிற வெள்ளிக்கிழமை அன்று, ஒரே நாளில் 13 படங்கள் ரிலீசாக உள்ளன. தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரத்தின் கடைசியிாள, வெள்ளிக்கிழமை தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் ரிலீசாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுவதாக கூற முடியாது. முன்பெல்லாம் 50 நாள்கள் அல்லது 100 நாள்கள் ஓடினால் தான் படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் படங்கள் 2 முதல் 3 நாள்கள் திரைகளில் முழுவதுமாக ஓடினாலே வெற்றிப் படம் என கொண்டாடுகின்றனர்.


ஐந்தே நாட்களில் உருவான மலேசிய தமிழ் படம் 'RIP'
[Tuesday 2017-03-21 08:00]

மலேசியாவில் தமிழ் படம் ஒன்று ஐந்தே நாட்களில் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க மலேசியாவிலேயே எடுக்கப்பட்ட தமிழ் படம் ஒன்று அடுத்த மாதம் மலேசியாவில் வெளியாகவிருக்கிறது. RIP என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் வெறும் 1.30 மணி நேரம் ஓடக்கூடியது. இந்த படத்தை 5 நாட்களில் படமாக்கியிருக்கிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறும்போது, மலேசியாவில் நேரடி தமிழ் படங்கள் கடந்த 7 வருடங்களாகத்தான் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


மீடியாக்களை மையப்படுத்தி உருவாக்கியுள்ள படம் 'கவண்'
[Tuesday 2017-03-21 08:00]

அனேகன் வெற்றிக்கு பிறகு அதே தயாரிப்பு நிறுவனமா ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இணைந்து இருக்கிறார் கே.வி.ஆனந்த். வழக்கம்போல எழுத்தாளர் சுபாவுடன் இணைந்து அவர் உருவாக்கி உள்ள படம் கவண். விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ராஜேந்தர், விக்ராந்த், பாண்டியராஜன், நாசர், போஸ் வெங்கட், ஜெகன் நடித்திருக்கிறார்கள். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார், அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது, வருகிற 31ந் தேதி படம் வெளிவருகிறது. சமீபகாலமாக வரும் திரைப்படங்களில் மீடியாக்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுகிறது. அந்த வரிசையில் கவண் படம் முழுக்க முழுக்க மீடியாக்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறதாம்.


தனுஷின் அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை மூலம் மாற்றம் - மருத்துவ அறிக்கை தாக்கல்
[Tuesday 2017-03-21 08:00]

நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை முறையில் மாற்றப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களது மகன், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மேலூர் கோர்ட், நடிகர் தனுசை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்தும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரியும் நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


'உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்' பாரதிராஜாவால் ஆரம்பம்
[Tuesday 2017-03-21 08:00]

பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம் என்ற பெயரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்பட கல்வி நிலையம் ஒன்றை துவங்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்று தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதையுடன் எதார்த்த வாழ்வியலை புகுத்தி தன்னுடைய படைப்புகளினால் தமிழ் சினிமாவிற்கு புதிய திசை ஏற்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.


கணவருடனான பிரச்சினையை பேசித் தீர்க்குமாறு ரம்பாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
[Monday 2017-03-20 20:00]

கணவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று நடிகை ரம்பாவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் பிரபு நடித்த `உழவன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி(வயது 39). இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்தனர்.


எனக்காக கண்ட கனவுகளில் பாதி கூட நிறைவேற்றவில்லை ; கவலையில் கமல்
[Monday 2017-03-20 20:00]

நடிகர் கமலஹானின் சகோதரர் சந்திரஹாசன் (82) லண்டனில் காலமானார். லண்டனில் உள்ள அவரது மகள் அனு வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானார். சகோதரரின் மறைவு குறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் இரங்கல் செய்தி விடுத்துள்ளார், அதில் கூறியிருப்பதாவது: நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல்வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை. என குறிப்பிட்டுள்ளார்.


கவர்ச்சிக்கு நோ ; சவாலான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் : அருந்ததி நாயர்
[Monday 2017-03-20 20:00]

விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்தின் மூலம் அறிமுகமான அருந்ததி நாயர் தனக்கு கவர்ச்சி வேண்டாம், சவாலான வேடங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்தில் கேரளாவில் இருந்து வந்து நாயகியாக அறிமுகமானவர் அருந்ததி நாயர். இதில் இவருடைய நடிப்பு பேசப்பட்டது. தமிழ் சினிமா பற்றி அருந்ததி நாயரிடம் கேட்டபோது..


இளையராஜா - SPB இடையே நடந்தது என்ன?
[Monday 2017-03-20 20:00]

இளையராஜா- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையேயான மோதலுக்கான காரணம் என்ன? தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த கூட்டணியாக மறக்க முடியாத பாடல்களை கொடுத்த இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் 40 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்தனர்.2500-க்கும் அதிகமான பாடல்களை இளைய ராஜா வும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.ஏ.ஆர்.ரகுமானுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா தான் என்று எஸ்.பி.பால சுப்பிரமணியம் பல மேடை களில் கூறியுள்ளார்.


சூர்யாவிற்கு நன்றி சொன்ன விஜய்
[Monday 2017-03-20 20:00]

யார் ரசிகருக்கு உதவினார் சூர்யா, அதற்கு ஏன் விஜய் நன்றி சொல்கிறார் என்கிற கேள்வி நிச்சயம் தலைதூக்கவே செய்யும். விஜய் ரசிகருக்குத்தான் சூர்யா உதவினார், அதற்குத்தான் நன்றி கூறியுள்ளார் விஜய். என்ன உதவி செய்தார் சூர்யா..? அதற்கு முன் ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்து விடுவோம் ‛சி-3' பட புரமோஷனுக்காக கடந்த ஜனவரி மாதம் கேரளாவுக்கு சென்றிருந்த சூர்யா, திருவனந்தபுரத்தில் உள்ள தனது ரசிகர்களையும் சந்தித்தார். அதில் ஒரு மாற்றுத்திறனாளி ரசிகர் தன்னை பார்க்க துடிப்பதை அறிந்து அவரை அருகில் வரவழைத்து பேசினார்..


இளையராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டோம்: எஸ்.பி.பி.சரண்
[Monday 2017-03-20 20:00]

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தற்போது தனது தந்தை பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து எஸ்.பி.பி 50 என்ற நிகழ்ச்சியை உலக நாடுகள் முழுவதும் நடத்தி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சி அமெரிக்க நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் இளையராஜா தன் பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் இசை கச்சேரி நடத்துவதற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் கூறியிருப்பதாவது:


சாதனை படைத்தது 'பாகுபலி 2' டிரைலர் ..
[Monday 2017-03-20 20:00]

'பாகுபலி 2' படத்தின் டிரைலர் கடந்த வாரம் 16ம் தேதியன்று காலை வெளியானது. 24 மணி நேரத்தில் 5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த டிரைலர் தொடர்ந்து பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. இப்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனைதான் அது. யு டியூபில் நான்கு மொழிகளில் வெளியான இப்படத்தின் டிரைலரை, தெலுங்கில் 5 லட்சத்து 94 ஆயிரம் பேரும், ஹிந்தியில் 3 லட்சத்து 61 ஆயிரம் பேரும், தமிழில் 86 ஆயிரம் பேரும், மலையாளத்தில் 16 ஆயிரம் பேரும் லைக் செய்துள்ளனர். மொத்தமாக 10 லட்சம் லைக்குகளை 'பாகுபலி 2' டிரைலர் கடந்துள்ளது.


இளையராஜா செய்தது சரி - சப்போட் பண்ணுகிறார் 'மதன் கார்க்கி'
[Monday 2017-03-20 20:00]

இளையராஜாவின் இசையில் அதிக பாடல்களை பாடியவர்கள் எஸ்.பி.பால சுப்ரமணியம், மனோ, சித்ரா ஆகியோர். இந்நிலையில், சமீபகாலமாக திரைப் படங்களில் தனக்கு பாட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், வெளிநாடுகளில் கச்சேரிகள் நடத்தி வருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்நிலையில், இளையராஜா பெற்றுள்ள காப்பி ரைட்ஸ் பிரச்னை காரணமாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்பட இளையராஜாவின் இசையில் பாடல்கள் பாடிய பாடகர் பாடகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.


பாடக்கூடாது என்றால் எதற்கு இசை அமைக்க வேண்டும் - கங்கை அமரன் கண்டனம்
[Monday 2017-03-20 20:00]

இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இளையராஜாவின் தம்பியும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன் இது குறித்து கூறியிருப்பதாவது:


டோரா படத்தின் கதை நயன்தாராவுக்காக எழுதப்பட்டது: இயக்குனர் பெருமிதம்
[Saturday 2017-03-18 18:00]

இயக்குனர் சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி உள்ள படம் டோரா. நயன்தாரா தான் படத்தின் முதன்மையான ரோல். அவரின் தந்தையாக தம்பி ராமய்யாவும், வில்லனாக ஹரீஷ் உத்தமனும் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் சிவா மெர்வின் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் கதை நயன்தாராவுக்காக எழுதப்பட்டது என்கிறார் இயக்குனர் தாஸ் ராமசாமி.


சல்மான் கான் காஷ்மீரின் சுற்றுலா தூதராகிறார்..
[Saturday 2017-03-18 18:00]

காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கானை நியமிக்க விரும்புவதாக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் நேற்று மும்பையில் நிகழ்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி பங்கேற்றார். அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மஞ்சு வாரியர் பெண்களுக்கு சொல்லும் யோசனை..
[Saturday 2017-03-18 18:00]

கேரளாவில் பெண்கள் பாதுகாப்புக்கு நடிகை மஞ்சு வாரியர் ஒரு யோசனையை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் சித்ரவதை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கேரளாவில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுந்தது இல்லை. இங்கு பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இதனால் கேரள காவல் துறை பெண்களை பாதுகாக்க ‘பிங்க் ரோந்து’ என்ற போலீஸ் பிரிவை தொடங்கி உள்ளது. இதற்கு பெண்கள் தகவல் கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணுக்கு மகளிர் போலீசார் வந்து உதவுவார்கள்.


ரஜினியுடன் ஜோடிசேரும் தீபிகா படுகோன்..
[Saturday 2017-03-18 18:00]

ஷங்கர் இயக்கத்தில் படத்தில் நடித்து முடித்ததும் சில வார ஓய்வுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியும், பா.ரஞ்சித்தும் இணையும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது! தாணுவின் பைனான்ஸில் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் தனுஷின் வுண்டர் பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவிருக்கிறது. படத்தை தயாரித்து தாணு கையில் தனுஷ் கொடுத்த பிறகு அவர் மிரட்டலான விளம்பரங்களை செய்து படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்.


ஆபாச காட்சிகளுடன் வெளிவந்த 'புரூஸ் லீ'க்கு ரசிகர்கள் எதிர்ப்பு
[Saturday 2017-03-18 18:00]

சமூக வலைத்தளங்களில் தங்களை லட்சக்கணக்கான பேர் பின் தொடர்ந்தால், தாங்கள்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், வசூல் சக்கரவர்த்தி என்ற எண்ணத்தில் சில ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களைத் தொடர்பவர்களும், சினிமா ரசிகர்களும் மிகவும் தெளிவானர்கள் என்பது அவர்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது களத்தில் இறங்கி போராடியவர்களில் ராகவா லாரன்ஸ், ஜி.வி.பிரகாஷ் இருவரும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். தங்களை தமிழ்க் கலாசாரத்தின் காவலர்களாகவே காட்டிக் கொண்டார்கள். அதன்பின் அவர்கள் நடித்து வெளிவந்த இரண்டு படங்களுமே ஆபாசக் குப்பைகள் என்பதும், கலாசாரத்தையே கெடுக்க வந்த படங்கள் என்பதும் ரசிகர்களுக்கு நன்றாகவே புரிந்த ஒன்றுதான்.


கிளாமர் கேட்பதால் வேதனையில் அருந்ததி நாயர்..
[Saturday 2017-03-18 18:00]

விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தில் நாயகியாக நடித்தவர் அருந்ததி நாயர். கேரளத்து நடிகையான இவர், அந்த படத்தில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தார். ஆனால் முதல் படத்திலேயே வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்து பாராட்டு பெற்ற அவருக்கு இன்னும் அவர் எதிர்பார்க்கிற மாதிரியான புதிய படங்கள் கமிட்டாகவில்லை. இதுபற்றி அருந்ததி நாயர் கூறுகையில், சைத்தான் படத்தில் மிக அழுத்தமான வேடத்தில் நடித்தேன். நான் புதுமுக நடிகை என்றபோதும் என்னை நம்பி வெயிட்டான வேடத்தை கொடுத்தனர். நானும் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர், ஹீரோவின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நடித்தேன்.


சசிகுமாருடன் யோடி சேருகிறார் ஹன்சிகா..
[Saturday 2017-03-18 18:00]

குட்டிப்புலி படத்தில் முத்தையாவை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் எம்.சசிகுமார். அந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தியை வைத்து கொம்பன், விஷால் நடித்த மருது ஆகிய படங்களை இயக்கினார் முத்தையா. இவற்றில் கொம்பன் நல்ல வெற்றியையும், மருது மோசமான தோல்வியையும் சந்தித்தன. அது மட்டுமல்ல, இந்த இரண்டு படங்களுமே இயக்குநர் முத்தையா மீது சாதி வெறியர் என்ற முத்திரையை குத்தப்பட காரணமாக அமைந்தன. அதனாலேயே அவருக்கு காலஷீட் தர சம்மதித்திருந்த சூர்யாவும், விஷாலும் பின்வாங்கிவிட்டனர் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில்தான் முத்தையாவை அழைத்து அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சசிகுமார்.


ராய்லட்சுமியும் கையில் காயத்துடன் புகைப்படம் வெளியிட்டார்..
[Saturday 2017-03-18 17:00]

டுவிட்டரில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகர் நடிகைகள் தங்களைப்பற்றி அவ்வப்போது ஏதேனும் ஒரு அதிரடியான விசயங்களை வெளியிட்டு தங்களைச்சுற்றி ஒரு பரபரப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், இலியானா உள்ளிட்ட சில நடிகைகள் தண்ணீருக்குள் தாங்கள் நிற்பது போன்ற புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதேப்போல், லண்டன் நடிகை எமிஜாக்சன் தனது ஆபாச படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது நடிகை ராய்லட்சுமியும் ஒரு புதிய பரபரப்பை கிரியேட் செய்திருக்கிறார்.


சட்டசபையில் எனக்கு நாற்காலி ரெடியாகிறது - கங்கை அமரன்
[Saturday 2017-03-18 17:00]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்; அவர் கூறியதாவது: மோடியின் உத்தரவுப்படி நடக்கும் ஊழியனாக தொண்டனாக வருவதில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் என்னை பரிந்துரை செய்த தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள். சுத்தமான அரசியல்வாதிகள் மட்டுமே உள்ள பாஜ.,வில் இருப்பது பெருமைப்படுகிறேன். வேட்பாளரானதால் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது எனக்கு உற்சாகமாக உள்ளது.


ஸ்ரேயா கோஷலுக்கு மெழுகுச்சிலை..!
[Friday 2017-03-17 16:00]

நம்ம ஊரில் கொடிகட்டி பறக்கும் ஹீரோக்களுக்கு நம் உள்ளூர் மக்கள் அங்கீகாரம் கொடுப்பது பெருமைதான் என்றாலும், நம்மவர்களை வெளிநாட்டினர் பாராட்டும்போது தான் அவர்களுக்கான கூடுதல் அங்கீகாரம் கிடைத்ததாக கிடைக்கிறது. அப்படி ஒரு கெளரவம், அதிர்ஷ்டம் பின்னணி பாடகி ஸ்ரேயா கிடைத்திருக்கிறது. ஆம்.. ஸ்ரேயாவின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக உலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸின் டெல்லி மியூசியத்தில் முதல் இந்திய பாடகராக இவரது மெழுகுச்சிலை நிறுவப்படவுள்ளது. இந்தி மட்டுமல்லாது தமிழ் படங்களிலும் மனதை மயக்கும் பாடல்களை பாடி, இந்திய இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரேயா கோஷல்..


மீண்டும் இணைந்து நடிக்கும் சமந்தா - நாகசைதன்யா
[Friday 2017-03-17 16:00]

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நடிகை சமந்தா அவருடன் திரைப்படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து வரும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் இறுதியில் ராகுல் ப்ரீத்தி சிங் அப்படத்தில் நாயகியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக அவரது காதலி சமந்தா நடிக்கவிருக்கின்றாராம். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா