Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கதையை கேட்டவுடன் சம்பளத்தை குறைத்த நயன்தாரா!
[Monday 2017-10-23 16:00]

குற்றம் 23 படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் கொடுத்துள்ளார். முதலில் இந்தப் படத்தின் ஒன்லைனை கேட்ட அவர், மிகப் பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டாராம். ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு முழு கதையையும் கேட்ட அவர், தன் கேரக்டரின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சம்பளத்தைக் கணிசமாகக் குறைத்திருக்கிறாராம்.


எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை: - ஓவியா
[Monday 2017-10-23 16:00]

எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே திட்டமிடுவது இல்லை என்கிறார், ஓவியா. ‘இந்த வருஷம் முழுக்க இப்படி இருக்கணும். அடுத்த வருஷத்துல இதை வாங்கணும்னு எல்லாம் முன்கூட்டியே பிளான் பண்ண மாட்டேன். இன்னைக்கு சந்தோஷமா இருக்கேனா, அதுதான் முக்கியம்.


எக்ஸ் வீடியோஸ் பெண்களுக்கான விழிப்புணர்வு படம்: - சஜோ சுந்தர்
[Monday 2017-10-23 08:00]

அபிநவ், நிஜய், ஷான், அஜய் ராஜ், ஆஹிருதி சிங் நடித்துள்ள படம், எக்ஸ் வீடியோஸ். ஹரி மற்றும் பிரகாஷ்ராஜ் இயக்கிய படங்களில் பணியாற்றிய சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: கல்லூரி மாணவிகளையும், குடும்பப் பெண்களையும் இணையதள ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. தலைப்பைப் பார்த்துவிட்டு, கிளுகிளுப்பான படம் என்று நினைக்க வேண்டாம். த்ரில்லர் கதை.


ஹாலிவுட் ஸ்டைலில் இந்திரஜித்தில் சண்டை காட்சிகள்!
[Monday 2017-10-23 08:00]

கலைப்புலி எஸ்.தாணு மகன் கலாபிரபு இயக்கியுள்ள படம், இந்திரஜித். கவுதம் கார்த்திக், சொனாரிகா படோரியா, அஸ்ரிதா ஷெட்டி, சுதான்ஷு பாண்டே நடித்துள்ளனர். படத்தைப் பற்றி கவுதம் கார்த்திக் கூறியதாவது: என் தந்தை கார்த்திக் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத சண்டைக் காட்சிகள் இருக்கிறது.


நடிப்பு வராததால் ஜானி படத்திலிருந்து ஹீரோயின் மாற்றம்!
[Monday 2017-10-23 08:00]

ஜானி படத்தில் பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்தராஜ் நடிக்கின்றனர். இயக்கம், வெற்றிச்செல்வன். படத்தைப் பற்றி தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியதாவது: இது ஒரு ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. படம் தொடங்கிய 15வது நிமிடத்தில் இருந்து கிளைமாக்ஸ் தொடங்கி விடும் என்பதுதான் திரைக்கதையின் புதுமை. அடுத்து என்ன என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு படத்தின் வேகம் இருக்கும். படத்தில் நடிக்க முதலில் ஒரு புதுமுகத்தை ஒப்பந்தம் செய்தோம்.


எனது காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன: - டுவிட்டரில் தெரிவித்த ஏமி ஜாக்சன்
[Sunday 2017-10-22 21:00]

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் `2.0' படத்தில் உருவாகி வந்த பாடல் காட்சிகளை நடித்து முடித்த ஏமி ஜாக்சன் தனத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் வசூலை அள்ளிய மெர்சல்!
[Sunday 2017-10-22 19:00]

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் ‘மெர்சல்’ வெளிநாடுகளிலும் சக்கை போடு போட்டு வசூலை அள்ளியுள்ளது. அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’.


இளையதளபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த திரையுலகினர்!
[Sunday 2017-10-22 18:00]

பல்வேறு தடைகளை தாண்டி நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளிவந்துள்ளது. ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த கருத்துக்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.க கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மெர்சல் படத்துக்கு ஆதரவாக திரையுலகினர் தங்களின் இணைய தளங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.


நீங்களே இப்படி செய்யலாமா? - தன் பேச்சை தானே மீறிய விஜய்
[Friday 2017-10-20 16:00]

விஜய் இன்று தமிழ் சினிமாவை ஆளும் உச்ச நட்சத்திரம். இவருடைய படங்களின் வருகையில் போது திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்.அப்படியிருக்கையில் விஜய் துப்பாக்கி படத்தின் போது தான் கடைசியாக சிகரெட் பிடிப்பது போல் ஒரு போட்டோ வெளிவந்தது, பிறகு இவை படத்தில் இருக்காது என்றும் முருகதாஸ் கூறினார்.


மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை: - பா.ரஞ்சித்
[Friday 2017-10-20 16:00]

`மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை கூறிய பா.ரஞ்சித் ‘காலா’ படத்தின் ரிலீஸ் குறித்து மனம் திறந்தந்துள்ளார்.பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ரஜினி தனது காட்சிகளை நடித்து முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


கபாலி சாதனையை முறியடித்த மெர்சல்!
[Friday 2017-10-20 15:00]

விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘மெர்சல்’ படம் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல் செய்து ரஜினியின் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.


எனக்கு பிடித்தவர் கமல்ஹாசன்: - நடிகை ஓவியா
[Friday 2017-10-20 15:00]

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன் என நடிகை ஓவியா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


ராதிகாவும் பாலியல் கொடுமைகளை அனுபவித்துள்ளாரா? - ரசிகர்கள் வருத்தம்
[Friday 2017-10-20 07:00]

நடிகைகள் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாவது பற்றி இப்போது நிறைய பிரபலங்கள் கூறி வருகின்றனர். அவர்கள் கூறும் சில விஷயங்களை கேட்கும் போது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது.இந்த நிலையில் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான நடிகைகள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் Me too என்று பதிவு செய்து தாங்களும் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துள்ளோம் என்று தெரிவித்து வருகின்றனர்.


எனக்கு இரண்டு மடங்கு வயதானவருடன் திருமணமா? - ஷாக்கான நமீதா
[Thursday 2017-10-19 18:00]

நடிகை நமீதாவை புலிமுருகன் படத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பார்த்திருப்பார்கள். இஞ்சி, ஏலக்காய் என அவர் ஸ்டைலில் சொன்னதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் அவருக்கும் சீனியர் நடிகரான சரத்பாபுவுக்கும் திருமணம் என செய்திகள் பரவியது. ஆனால் அவர் இதை மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது நமீதா இந்த வதந்தியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.


எப்பொழுது நினைக்கிறேனோ அன்று தீபாவளி கொண்டாடுவேன்: - ஓவியா
[Thursday 2017-10-19 18:00]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா முன்னணி பிரபலமாகிவிட்டார். எங்கு திரும்பினாலும் ஓவியாவிற்கு என்ன ஆச்சு என்று தான் மக்கள் கேட்டு வந்தனர் அந்த சமயத்தில். தற்போது இவர் காஞ்சனா-4ல் நடித்து வருகின்றார், இந்நிலையில் நேற்று தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு தொலைக்காட்சியில் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.


அஜித்,ஷாலினிக்கு மெர்சல் படத்தில் பிடித்த காட்சிகள் இதுதானாம்!
[Thursday 2017-10-19 18:00]

பொதுவான ஆடியன்ஸ்க்கு அஜித், விஜய் இருவரையுமே பிடிக்கும். ஆனால் சிலர் செய்கின்ற விசயங்கள் உண்மையான ரசிகர்களுக்கு முகம் சுளிப்பை உண்டாக்குகிறது.விவேகம் படம் முடிந்ததும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சில காயங்களால் அஜித் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது ஓய்வுக்காக லண்டன் சென்றுள்ளாராம்.


முதலில் டைட்டிலை காப்பியடிக்காம இருங்க: - வெங்கட் பிரபு
[Thursday 2017-10-19 18:00]

வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான இயக்குனர். இவர் படங்களும் எல்லோரும் பார்த்து மகிழ்வது போல் ஜாலியாக இருக்கும்.இந்நிலையில் வெங்கட் பிரபு டுவிட்டரிலும் அவ்வபோது கிண்டலாக ஏதாவது கருத்து சொல்வார், யாரையாவது கலாய்ப்பார்.


கர்நாடகாவில் மெர்சல் படம் திரையிடுவது நிறுத்தம்!
[Thursday 2017-10-19 08:00]

கன்னட அமைப்பினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெங்களூரு - மைசூருவில் மெர்சல் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முதல் திரையிடப்பட்டது.


அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது: - தீபிகா படுகோனே ஆவேசம்
[Thursday 2017-10-19 08:00]

கலைப் படைப்பின் சுதந்திரத்தின்மீது வன்முறையை செலுத்துவதற்கு அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்று நடிகை தீபிகா படுகோனே கேள்வி எழுப்பியுள்ளார்.


நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதீர்கள்: - ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
[Wednesday 2017-10-18 16:00]

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சுகாதாரக்கேடு உள்ளிட்ட காரணங்களால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.


எனக்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால் 90 வயதுவரை நடிப்பேன்: - அலியா பட்
[Tuesday 2017-10-17 19:00]

பிரபல இந்தி நடிகை அலியா பட், வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை என்று கூறியிருக்கிறார்.பிரபல இந்தி பட இயக்குனர் மகேஷ்பட் மகள் அலியாபட். இவர் நடித்த பல படங்கள் விருதுகளை பெற்றுள்ளன. இவருக்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன. படங்களில் நடிப்பது பற்றி கூறிய அலியாபட்...


திருமண தேதியை மாற்றிய பாவனா!
[Tuesday 2017-10-17 19:00]

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் பாவனா, தனது திருமண தேதியை திடீர் என்று மாற்றியுள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் பாவனா. ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ‘தீபாவளி’, ‘ஜெயம்கொண்டான்’, ‘அசல்’ உள்பட பலபடங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலிலும் இடம் பிடித்தார்.


இவ்வருடம் தலை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!
[Tuesday 2017-10-17 08:00]

வருடாவருடம் தீபாவளி வந்தாலும் வாழ்வில் ஒருமுறைதான் தலை தீபாவளி வரும். ‘வண்ணத்திரை’ வாசகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏதுவாக இருக்கும் வகையில், இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்களின் பட்டியலை வழங்குகிறோம்.


படக்குழு மீது பாய்ந்த பார்வதி!
[Tuesday 2017-10-17 08:00]

அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவிய தலைவன் படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ். தற்போது மலையாளத்தில் பெண் இயக்குனர் ரோஷ்னி தினகர் இயக்கும் ‘மை ஸ்டோரி’ படத்தில் நடிக்கிறார். ‘பூ’ பார்வதி ஹீரோயின். இப்படத்துக்கு சரிவர கால்ஷீட் தராமல் பிருத்விராஜ் இழுத்தடிப்பதாக ரோஷ்னி புகார் அளித்தார். அதனை விசாரித்த மலையாள தயாரிப்பாளர் சங்கம் ரோஷ்னி படத்துக்கு கால்ஷீட் தர வேண்டும் என்று பிருத்திவிராஜிடம் தெரிவித்தது. பரபரப்பை ஏற்படுத்தியது.


போருக்கு தயார் ஆகுங்கள்!
[Tuesday 2017-10-17 08:00]

ஒருவழியாக உலகநாயகன் அரசியல் கோதாவில் குதித்து குஸ்தி போட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. முன்னதாக அவருடைய நாற்பதாண்டு கலையுலக போட்டியாளரான சூப்பர் ஸ்டாரும், தன்னுடைய ரசிகர்களுக்கு ‘போருக்கு தயார் ஆகுங்கள்’ என்று கட்டளையிட்டிருந்தார்.


ஐஸ்வர்யாராயை தனியாக அனுப்பி வைக்கும்படி கூறிய ஹாலிவுட் தயாரிப்பாளர்!
[Saturday 2017-10-14 17:00]

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராயை ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் அடைய விரும்பிய தகவல் ஐஸ்வர்யா ராயின் மானேஜர் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹாலிவுட் பட தயாரிப்பாளர் வெயின் ஸ்டீபன். இவர் பலநடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். ஐஸ்வர்யா ராயையும் இவர் அடைய விரும்பிய சம்பவம் இப்போது வெளியாகி இருக்கிறது.


செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பி நடிகை துர்கா கிருஷ்ணாக்கு செக்ஸ் தொல்லை!
[Saturday 2017-10-14 17:00]

செல்போனில் ஆபாச வீடியோவை அனுப்பி தனக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதாக மலையாள நடிகை துர்கா கிருஷ்ணா புகார் கூறியுள்ளார்.மலையாள பட உலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் அதிகம் உள்ளது. சினிமா துறையில் இருப்பவர்களாலும் ரசிகர்களாலும் இந்த தொல்லைகளை அவர்கள் சந்திக்கின்றனர். பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் அங்கு நடந்தது.


மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதித்த நீதிமன்றம்!
[Saturday 2017-10-14 09:00]

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மெர்சல் திரைப்படதின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடைகோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா