Untitled Document
August 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மனநலம் குன்றிய இளைஞரின் கனவை நிறைவேற்றிய மாநகர காவல்துறை ஆணையர்!
[Saturday 2017-08-19 18:00]

மனநலம் குன்றிய வாலிபரின் கனவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நிறைவேற்றினார். ஸ்டீவனின் கனவை நனவாக்க காவல்துறையினருக்கு அவரின் பெற்றோர் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்துக்கொண்டனர். சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜீவ் தாமஸ். இவர் கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். அவரின் மகன் ஸ்டீவன். 19 வயதான ஸ்டீவன் மனநலம் குன்றியவர். ஆனாலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உடையவர். அவரின் கனவு ஒரு காவல்துறை அதிகாரியாகி மக்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்பதே.


அணிகள் இணைந்தால் என்ன இணையாவிட்டால் என்ன? - கொதிக்கும் சீமான்
[Saturday 2017-08-19 18:00]

தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்துவரும் நிலையில், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முக்கிய பிரச்னையாகப் பேசப்பட்டு வருவதை வெறுப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


அஸ்ஸாம் வெள்ளத்தால் வனச்சரணலாயத்தில் 253 விலங்குகள் பலி!
[Saturday 2017-08-19 18:00]

அஸ்ஸாம் வெள்ளத்தால் காசிரங்கா வனச்சரணலாயத்தில் 253 விலங்குகள் பலியாகியுள்ளன. ஆயிரக்கணக்கான விலங்குகள் காணாமல் போயுள்ளன. அஸ்ஸாமில் வரலாறு காணாத வெள்ளத்தால், 25 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற காசிரங்கா வனச்சரணாலயமும் வெள்ளக்காடானது. வெள்ளத்தில் சிக்கி 185 மான்கள், 14 காண்டாமிருகங்கள், 4 யானைகள், புலி ஒன்று உள்பட 253 விலங்குகள் இறந்துள்ளன. பலியாகியுள்ள விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


சென்னையில் ஒரே இடத்தில் 23,615 பேர் பல் துலக்கி புதிய சாதனை!
[Saturday 2017-08-19 18:00]

பற்களை முறையாக பராமரிக்காவிட்டால் அவை நாளடைவில் வலுவிழந்து உதிர்ந்து விடுவதுடன் பற்சொத்தை, பற்குழி மற்றும் பற்களை பலமாக பற்றிநிற்கும் ஈறுகளின் வீக்கத்துக்கும் காரணமாகி நம்மை படாதபாடு படுத்தி விடும். பற்களை முறையாக தேய்த்து பரமாரிக்க வேண்டிய அவசியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல பற்பசை தயாரிப்பு நிறுவனமான கோல்கேட் பால்மோலிவ் (இந்தியா) திட்டமிட்டது.


ஜீவசமாதி தியானத்தை தொடங்கிய முருகன்: - சிறையில் பரபரப்பு
[Saturday 2017-08-19 07:00]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் ஜீவசமாதி தியானத்தை தொடங்கியுள்ளதால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த கொலை வழக்கில் நான் குற்றமற்றவன் என்றும் தன்னை விடுதலை செய்யுமாறு முருகன் பலமுறை கோரிக்கை விடுத்தும், தனது வழக்கறிஞரின் உதவியுடன் வாதாடியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.இதனால், அவர் ஆன்மீகத்தின் பக்கம் கவனம் செலுத்தி வந்தார்.


என்னை இங்கிருந்து காப்பாற்றுங்கள்: - தாயிடம் கதறிய 16 வயது சிறுமி
[Saturday 2017-08-19 07:00]

ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது ஷேக்கை திருமணம் செய்துகொண்ட 16 வயது சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டும் என தனது தாயிடம் கதறியுள்ளார்.கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 65 வயது ஷேக்கிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.தற்போது அச்சிறுமி ஷேக்குடன் மஸ்கட்டில் வசித்து வருகிறார், 5 லட்சம் கொடுத்து சிறுமியை விலைக்கு ஷேக் வாங்கியுள்ளதாகவும் இதற்கு தனது கணவரின் அக்கா உடந்தையாக இருந்ததாகவும் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.


பெரிய நிறுவனங்களிடம் நிதி பெறுவதில் இந்த கட்சி தான் முதலிடம்!
[Saturday 2017-08-19 07:00]

ஏ.டி.ஆர் என்கிற ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு கட்சிகள் பெருநிறுவனங்களிடம் இருந்து பெறும் நிதி குறித்த ஆய்வு ஒன்றைச் செய்துள்ளது.இதில், கடந்த 2012-13 மற்றும் 2015-16 காலகட்டத்தில் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிதிகுறித்து ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, இந்தியாவில் மிகப்பெரிய ஐந்து கட்சிகள் வாங்கிய நிதிகுறித்து ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக முதலமைச்சரும் பிரதமரும் கூட்டுக் குற்றவாளிகள்: - வைகோ காட்டம்!
[Friday 2017-08-18 17:00]

"காவிரியில் கர்நாடகா அமைக்கும் மேகதாது அணை விவகாரத்தில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விவாதம் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடாகும். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சரும் பிரதமரும் கூட்டுக் குற்றவாளிகள். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வைகோ அதிரடியாகத் தெரிவித்தார்.


சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்வது போல் ரூ.15 ஆயிரம் பணத்தை சுருட்டிய நபர்கள்!
[Friday 2017-08-18 17:00]

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை செய்யும் நரேந்திரா என்பவர் டெல்லி வழியாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்று உள்ளார். டெல்லியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காஷ்மேரா கேட் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது அவர் மீது கார் ஒன்று பலமாக மோதிவிட்டது. இதில் நரேந்திரகுமாருக்கு ரத்தக் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இடுப்பு, கழுத்து, கால்களில் அடிபட்டு நடக்க முடியாமல் கதறி அழுது உள்ளார். சுமார் 12 மணி நேரமாக சாலையின் ஓரத்தில் உதவி கோரி கதறி அழுது உள்ளார், ஆனால் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.


பார்ப்போரின் கண்களை குளமாக்கிய அல்வா வாசுவின் மகள்!
[Friday 2017-08-18 16:00]

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு நேற்று கல்லீரல் நோயால் காலமானார், ஆரம்ப காலத்தில் மதுரையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் சினிமா துறையில் நுழைந்து பல விடயங்கள் குறித்து அலசி ஆராய்ந்தார்.இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய வாசுவுக்கு நகைச்சுவை கதாபாத்திரங்கள் கைக்கொடுக்க மக்களிடம் புகழ் அடைந்தார்.


தன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணின் மூக்கினை அறுத்த வீட்டு உரிமையாளர்!
[Friday 2017-08-18 16:00]

மத்தியபிரதேச மாநிலத்தில் தன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணின் மூக்கினை வீட்டு உரிமையாளர் அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாகர் மாவட்டத்தை சேர்ந்த சாகப் சிங் என்பவர் தனது வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர், தான் சொன்ன வேலையை செய்யாத காரணத்தால் அவரை பயங்கரமாக தாக்கியுள்ளார்.


நினைவிடமாக மாறும் ஜெயலலிதா வாழ்ந்த வீடு!
[Friday 2017-08-18 16:00]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.1967 ஆம் ஆண்டு இந்த இடத்தை ஜெயலலிதாவும் அவரது தாயார் சந்தியாவும் இணைந்து வாங்கினர், அப்போது இதன் மதிப்பு ரூ.1.30 லட்சம் ஆகும்.அதன் பின்னர் அந்த இடத்தில் வீடு கட்டி அந்த வீட்டிற்கு தனது தாயின் உண்மையான பெயரான வேதா(வேதவள்ளி) என பெயர் சூட்டினார்.


மருமகளை காப்பாற்ற தனது மகனை கொன்ற தாய்!
[Friday 2017-08-18 16:00]

மும்பையில் மருமகளை காப்பாற்ற தனது மகனை கொன்ற தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.நதீம்(45) என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. போதைக்கு அடிமையான இவர், தனது மனைவியை எப்போதும் சித்ரவதை செய்து வந்தார்.


தாஜ்மகாலை அழிக்கப் போகிறீர்களா?
[Friday 2017-08-18 08:00]

தாஜ்மகாலை சுற்றி உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரிய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. முகலாய மன்னர் ஷாஜகான், தன் காதல் மனைவி மும்தாஜ் நினைவாக 1631-ம் ஆண்டு ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டினார். தாஜ்மகால், உலக அதிசயமாக திகழ்ந்து வருகிறது. ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக தாஜ்மகாலை அறிவித்துள்ளது.


தந்தையின் குடிபோதையால் உயிரிழந்த மகள்!
[Thursday 2017-08-17 17:00]

தமிழகத்தின் ஜெயங்கொண்டம் பகுதியில் தந்தையின் குடிபோதையால் வெள்ளத்தில் மகள் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் இரண்டு நாள்களாக கடும் மழை பெய்துவருகிறது. இதனால், காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.


பெண் குழந்தையை பெற்றெடுத்த பாலியல் வல்லுறவுக்குள்ளான 10 வயது சிறுமி!
[Thursday 2017-08-17 17:00]

இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருந்த நிலையில் அவருக்கு கருக்கலைப்பு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது, அச்சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: -முதல்வர் அறிவிப்பு
[Thursday 2017-08-17 17:00]

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.


65 வயது ஷேக்கை திருமணம் செய்து கொண்ட 16 வயது சிறுமி!
[Thursday 2017-08-17 10:00]

தெலுங்கானா மாநிலத்தில் 65 வயது ஷேக்கை 16 வயது சிறுமி திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவைச் சேர்ந்த சையதா உன்னிசா என்பவரது 16 வயது மகளை ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது(60) என்பவர் விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொண்டதாக சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்துள்ளார்.


மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த விமானப் பணிப்பெண்: - தொடரும் சர்ச்சை
[Thursday 2017-08-17 08:00]

கொல்கத்தாவில், தனது குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த விமானப் பணிப்பெண் கிளாராவின் மரணம், தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேகாலயா மாநிலம், ஷில்லாங்கைச் சேர்ந்தவர் கிளாரா கோங்சிட். 22 வயதான இவர், ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்தார். கடந்த புதன்கிழமை காலை, மரணமடைந்த நிலையில் கிளாராவின் உடல், அவரது அப்பார்ட்மென்டின் கீழே கண்டெடுக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்படுமா ப்ளூ வேல் ஒன்லைன் விளையாட்டு? - டெல்லியில் இன்று விசாரணை
[Thursday 2017-08-17 08:00]

‘ப்ளூ வேல்’ என்ற ஆன்லைன் விளையாட்டு, உலக அளவில் இளைஞர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. இந்த விளையாட்டின் இறுதிக்கட்டம், தற்கொலைக்குக் கூட்டிச்செல்வதால், விளையாட்டில் மூழ்கிய ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த விளையாட்டின் இறுதிக்கட்டத்தை எட்டிய சுமார் ஆறு சிறுவர்கள், கடந்த இரண்டு வாரங்களில் மரணமடைந்துள்ளனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது.


மோடியின் சுதந்திர தின உரையைக் கிண்டல்செய்யும் ராகுல்!
[Thursday 2017-08-17 08:00]

நாட்டின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் உரையாற்றினார். அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இப்படி உரையாற்றி வந்தாலும், இந்த ஆண்டு அவர் குறைவான நேரமே பேசினார். இதையடுத்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 'இந்த ஆண்டு பிரதமர் செங்கோட்டையில் ஆற்றிய உரை 45 நிமிடங்களே வரும். அடுத்த ஆண்டு அது 15 நிமிடங்களாகக் குறையும்.


ராஜீவ் காந்தி படுகொலைக்கு ஆயுதங்கள் எப்படி வாங்கப்பட்டன? - புயலைக் கிளப்பிய அர்ஜுன் சிங் ஆவணம்
[Wednesday 2017-08-16 18:00]

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அர்ஜூன் சிங் எழுதிய கடிதம், தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘சி.பி.ஐ விசாரணையைத் தாண்டி, ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள்குறித்து விசாரிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


வாடகை தொகையை செலுத்தாததால் லதா ரஜினி நடத்திய பள்ளிக்கு பூட்டு போட்ட உரிமையாளர்!
[Wednesday 2017-08-16 18:00]

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வந்தது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வாடகை கட்டிடத்தில் இந்த பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளிக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ் வரலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


திருடிய பொருட்களை அப்படியே கொண்டு வந்து வைத்த திருடன்!
[Wednesday 2017-08-16 18:00]

கேரளாவில் வீட்டில் திருடிய பொருட்களை அப்படியே கொண்டுவந்து வைத்துவிட்டு கடிதம் ஒன்றையும் அதில் வைத்துவிட்டு சென்றுள்ளார் திருடன்.திருவனந்தபுரத்தில் உள்ள நஸீம் என்பவரது வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடன் ஒருவன் திருடி சென்றுள்ளான்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி!
[Wednesday 2017-08-16 08:00]

தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் ராசாத்தியம்மாள், கனிமொழி, மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் வந்துள்ளனர். பரிசோதனை முடிந்து கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பீகாரில் கன மழை: - பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!
[Wednesday 2017-08-16 07:00]

பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இதுவரை 56 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான 100 சதவீத வீடியோ ஆதாரங்கள் உள்ளன: - ஜெயானந்த்
[Wednesday 2017-08-16 07:00]

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருப்பப்பட்டால் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.திவாகரனின் மகனான ஜெயாந்த் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி சசிகலாவிடம் மன்னிப்பு கோர வேண்டும்.


மாணவியை கற்பழித்த காதலன்: - காதலன் உட்பட மூவர் கைது
[Tuesday 2017-08-15 18:00]

கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மேக்கோடு பனிச்சகுழி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி, திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுபற்றி பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பினு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடினார்கள்.

Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா