Untitled Document
March 29, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பிரிட்டனில் இந்தியர்களுக்கு முதலிடம்..
[Saturday 2017-02-25 09:00]

பிரிட்டனில் பணி புரியும் வெளிநாட்டினரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, அந்நாட்டு அரசு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பிரிட்டன் உள்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனில், வெளிநாட்டினர், 93 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். இவர்களில், 53 ஆயிரம் பேருடன், இந்தியர்கள் முதலிடத்திலும்; 9,348 பேருடன், அமெரிக்கர்கள் இரண்டாமிடத்திலும் உள்ளனர். தொழில்முறை விசா பெற்று வருவோரில், 50 சதவீதத்திற்கும் மேல் இந்தியர்கள் உள்ளனர்.


குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர் சிங்குடன் மோத இருந்த சீன வீரர் விலகல்
[Saturday 2017-02-25 09:00]

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து ஆசிய பசிபிக் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் விஜேந்தர்சிங், தனது அடுத்த மோதலில் சீன வீரர் சுல்பிகர் மைமைடியாலியை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மோதல் மும்பையில் ஏப்ரல் 1-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் விஜேந்தர் சிங்குடன் மோத இருந்த சுல்பிகர் போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். ஆனால் அவரது விலகல் முடிவுக்கு காரணம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை.போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ள அதே தேதியில் விஜேந்தர்சிங்குடன் வேறு ஒரு வீரரை மோத வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.


ராகுலுக்கு அனுபவம் போதாது என முன்னாள் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவிப்பு
[Saturday 2017-02-25 09:00]

காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு அனுபவம் போதாது என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் டில்லி முதல்வருமான ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: காங்., தற்போது ஒரு தலைமுறை மாற்றத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில், தற்கால அரசியல் சூழல் பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகியுள்ளது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப காங்., தன்னை மாற்றியமைத்துக் கொண்டு வருகிறது.


இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
[Saturday 2017-02-25 08:00]

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-


ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்த மோடி!
[Friday 2017-02-24 22:00]

ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.இதைத் திறப்பதற்காக தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் இடத்தை அடைந்தார். சிலை திறப்புக்குப் பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது: - சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. மகா சிவராத்திரி நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. காசி முதல் கோவை வரை சிவபெருமான் நம்மை இணைத்துள்ளார். மொழிகள் பல இருக்கலாம் ஆனால் ஆன்மிகம் ஒன்றுதான், எல்லா மனிதர் இதயத்திலும் ஆன்மிக குடிகொண்டுள்ளது. உணர்வில் இருந்து சிவனுக்கு அழைத்துச் செல்லூம் கிரியாயூக்கியாக யோகா இருக்கிறது.


தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்: - பிரேமலதா விஜயகாந்த்
[Friday 2017-02-24 22:00]

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்திற்கு நிலையான முதல்வ மற்றும் ஆளுநர் இல்லை.


கட்சியையும் ஆட்சியையும் மீட்பதற்காக தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளேன்: - ஓ.பன்னீர்செல்வம்
[Friday 2017-02-24 22:00]

ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.இதில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் பல்வேறு இன்னல்களை சந்தித்து கட்சியை வளர்த்தார் ஜெயலலிதா.யாருடைய கைகளில் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என ஜெயலலிதா பாதுகாத்து வந்தாரோ, அவர்களுடைய கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது. ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு மாறாக இது நடந்துள்ளது, கட்சியையும், ஆட்சியையும் மீட்பதற்காக தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளேன், தர்மயுத்தம் வென்றதாக தான் வரலாறு உள்ளது.


செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் செய்து முடிப்பேன்: - சசிகலா கணவர் நடராஜனின் சபதம்
[Friday 2017-02-24 18:00]

அதிமுகவில் எவ்வித பதவிக்கும் வராமல் செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் செய்து முடிப்பேன் என சசிகலாவின் கணவர் நடராஜன் சூசகமாக கூறியுள்ளது அதிமுகவினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.தஞ்சாவூரில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 69 வது பிறந்தநாளில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் பங்கேற்று பேசியதாவது, அதிமுகவில் எந்தப் பதவிக்கும் நான் வர மாட்டேன்.ஆனால், செய்ய வேண்டியதைச் சரியான நேரத்தில் செய்து முடிப்பேன்.


மாதவன் வாங்கிகொடுத்த இனிப்பு விலை மதிக்க முடியாதவை: - மனம் திறந்த ஜெயலலிதா
[Friday 2017-02-24 18:00]

தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்த ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் இன்று.அறிவாற்றல், துணிச்சலும் கொண்ட இவர், ஒரு பெண் சிங்கம் போன்று தமிழகத்தை வலம் வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.இவர், இறந்த பிறகு வருகின்ற முதல் பிறந்தநாள் இது. தனது பிறந்தநாளின் போது பல்வேறு பரிசுகள் குவிந்தாலும், தனக்கு மிகவும் பிடித்த பிறந்தநாள் பரிசு எது என்பது குறித்து விகடன் நாளிதழில் மனம் திறந்து பேசியுள்ளார்."வாரம் ஒரு நட்சத்திரம்" என்ற பகுதியில் தான் ஜெயலலிதா இதுகுறித்து பேசியுள்ளார்.


தமிழக அரசை கவிழ்க்க ஒட்டுமொத்த தமிழகமே தயாராக உள்ளது: - குஷ்பு
[Friday 2017-02-24 18:00]

குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக அரசை கவிழ்க்க ஒட்டுமொத்த தமிழகமே தயாராக உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுக அரசு முயற்சி செய்து வருகிறது என அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, அதிமுக ஆட்சியை வீழ்த்த திமுக கட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் தயாராக இருக்கிறது என கூறியுள்ளார்.


டெல்லியில் மாவை காலால் பிசைந்து உணவு தயாரித்த உணவகம்!
[Friday 2017-02-24 17:00]

டெல்லியில் உள்ள பிரபல உணவகம் ஒன்று மாவை காலால் பிசைந்து சமையல் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் உள்ள கேகா டா என்ற உணவகம் (Kake-Da-Hotel) பிரபலமான உணவகம் ஆகும். இந்த உணவகத்திற்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகம்.இந்நிலையில், இந்த உணவகத்தில் சப்பாத்தி மற்றும் புரோட்டா செய்வதற்காக மாவை காலால் மிதித்து ஊழியர் ஒருவர் பிசைந்து கொண்டிருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. காலால் பிசையப்படும் மாவில் தான் சமையல் செய்யப்படுகிறது என தெரியவந்துள்ளது. தற்போது இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாகியுள்ளது.


தலைமை பொறுப்பை வகிக்க டி.டி.வி.தினகரனுக்குத் தகுதியில்லை: - அதிரடியைக் கிளப்பும் ஜெ.அண்ணன் மகன் தீபக்
[Thursday 2017-02-23 17:00]

டி.டி.வி.தினகரன் தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியிருப்பது அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தீபக் அளித்த பேட்டியில், ''ஜெயலலிதாவின் மரணத்தில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். விசாரணை கமிஷன் அமைத்தால் அனைத்தும் தெரியவரும். மருத்துவ சிகிச்சைகள் குறித்து பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பவில்லை. ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்றுதான் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தைக் கடன் வாங்கிக் கட்டுவோம். போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமையாளர்கள் நானும் தீபாவும்தான். தீபா அரசியல் பயணத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை.


ஜெயலலிதா கட்டை விரலை தூக்கி காண்பித்தார்: - ஆளுநர் வித்யாசாகர்ராவ் பேட்டி
[Thursday 2017-02-23 17:00]

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது கட்டை விரலை தூக்கி காண்பித்ததாக ஆளுநர் வித்யாசாகர்ராவ் பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலமானார்.அவர் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பொதுமக்கள் உட்பட பலரும் கூறிவருகின்றனர்.ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் மூன்று முறை அப்பல்லோ சென்றதாகவும், அங்கு அவர் மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், ஆனால் அவர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறப்பட்டது.


நாளை ஜெ உயில் வெளியாகிறது! - மோடி அதிர வாய்பிளக்குது சசி கூட்டம்!
[Thursday 2017-02-23 17:00]

அதிமுக பொதுச் செயலாளா் ஜெயலலிதாவிற்கு தன் உடன் இருக்கும் சசிகலா மற்றும் அவரது உறவினா்களை பற்றி நன்கு அறிந்து இருந்தார். அதனால்தான், ஜெயலலிதா கடந்த பல வருடங்களுக்கு முன்னரே உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த உயில் பத்திரிக்கையாளா் சோ.ராமசாமியிடம் இருந்தது. அவா் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த உயில் ஆடிட்டா் குருமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. அவரும் சசியின் கூட்டத்தின் ஆட்டத்திற்கு பயந்து பிரதமா் மோடியிடம் ஒப்படைத்ததாகக்கூறப்படுகிறது.


என்னை சில காலம் ஒதுங்கியிருக்கும்படி ஜெயலலிதா சொன்னார்: - டி.டி.வி.தினகரன் பேட்டி
[Thursday 2017-02-23 14:00]

'நான், திடீரென்று வந்திருக்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா என்னை சில காலம் ஒதுங்கியிருக்கும்படி கூறினார். அவரது கட்டளையை ஏற்று, ஒரு போர்வீரனாக இன்றைக்கும் நான் எனது பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்' என அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'எம்ஜிஆர் மறைந்த காலத்திலேயே ஜெயலலிதாவால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவன் நான். பிறகு, ஜெயலலிதாவால் 1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, ஜெயலலிதாவாலும் தொண்டர்களாலும் நான் வெற்றிபெற்றேன். நாடாளுமன்ற உறுப்பினராக 11 ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றேன். அதுபோல ஜெயலலிதாவால், புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராகவும் பிறகு அமைப்புச் செயலாளராகவும் பொருளாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். அனால், நான் திடீரென்று வந்திருக்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா என்னை சில காலம் ஒதுங்கியிருக்கும்படி கூறினார். அவரது கட்டளையை ஏற்று ஒரு போர்வீரனாக இன்றைக்கும் நான் எனது பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்.


அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய உருக்கமான கடிதம்!
[Thursday 2017-02-23 14:00]

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் மற்றும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் நாளை வருகிறது. இதையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, புரட்சித் தலைவி அம்மாவின் உள்ளமெல்லாம் நிறைந்திருந்த, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புக்களே!


ஜெயலலிதா புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என கோரினார்: - அப்பல்லோ தகவல்
[Thursday 2017-02-23 14:00]

ஜெயலலிதா மரணம் குறித்து அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு மார்ச் 13க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் ஒய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு தொடுத்தார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கேட்டு ஜோசப் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்பல்லோ மருத்துவனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில், எம்.சி.ஏ விதிகளின் படி நோயாளி குறித்த விவரங்களை வெளியிடவில்லை என்றும் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கோரினார் என அப்போலோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்த எம்எல்ஏ-க்களின் லீலைகள்: - கூவத்தூர் ஆதாரம் சிக்கியது
[Thursday 2017-02-23 14:00]

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்த எம்எல்ஏ-க்களின் லீலைகளை அம்பலப்படுத்துவேன் என நாமக்கல் எம்பி சுந்தரம் தெரிவித்துள்ளார். ராசிபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நேற்று பேசுகையில், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த கட்சியை ஒரு குடும்பத்தின் கைக்கு செல்ல அனுமதிக்ககூடாது, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி பினாமி ஆட்சி, கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் என்னென்ன செய்தார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? கூவத்தூர் ரிசார்ட்சில் டான்ஸ் ஆடுவதற்கும், ஜாலியாக சைக்கிள் ஓட்டுவதற்குமா சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தீர்கள். அவர்கள் என்னென்ன செய்தார்கள்? என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.


சென்னையை தாக்கவுள்ள குடிநீர் பஞ்சம்: - ஆய்வாளர்கள் எச்சரிக்கை
[Thursday 2017-02-23 07:00]

தமிழகத்தின் தலைநகர் சென்னையை மிக விரைவில் குடிநீர் பஞ்சம் போட்டுத் தாக்கவிருப்பதாக ஆய்வாளர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தற்போதைக்கு 40 நாட்களுக்கான குடிநீர் மட்டுமே கையிருப்பு இருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நீர்த் தேக்கங்கள் வற்றியுள்ளதால் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.இந்நிலையில் சென்னைக்கு தேவையான குடிநீர் 40 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரி வறண்டு போயுள்ளதால் அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து இதற்கு தானாம்!
[Thursday 2017-02-23 07:00]

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தாம் போடும் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதிவிசாரணை கோரித்தான் என மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் சர்ச்சைக்குரிய வகையிலேயே இன்னும் இருந்து வருகிறது. 75 நாட்கள் அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன? ஏன் சிசிடிவி கமரா வைக்கவில்லை என்பது உள்பட பல கேள்விகளூக்கு பதில் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்று சசிகலாவுக்கு செக் வைத்தார்.இந்நிலையில் இன்று உண்ணாவிரத்தத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தால் எங்கள் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணத்தின் மீதான நீதிவிசாரணை குறித்த கையெழுத்துதான் என்றும், நீதிவிசாரணை நடத்தினால் பெங்களூரு சிறையில் உள்ளவர்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.


சசிகலா படத்தை புறக்கணித்த தொண்டர்கள்: - தலைவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
[Thursday 2017-02-23 07:00]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை 24 ஆம் திகதி அன்று கொண்டாடுவதற்கு தர்மபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் கே.பி.அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் அனைவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா இருப்பதுபோன்ற படத்தை பாக்கெட்டில் தெளிவாக தெரியும்படி சட்டை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.


ஜெயலலிதாவுடன் நீதிகேட்க புறப்படுகிறார் பன்னீர் செல்வம்!
[Thursday 2017-02-23 07:00]

பொதுமக்கள் மற்றும் அதிமுக அடிமட்ட தொண்டர்களை தனது பக்கம் ஈர்க்கும் வண்ணம் பன்னீர் செல்வம் நீதிகேட்கும் பயணம் ஒன்றை தொடங்கவுள்ளனர்.ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் திகதியன்று, தொடங்கும் இப்பயணத்திற்காக மகேந்திராவின் கார்களில் பிரத்யேகமான XYLO காரை தான் பன்னீர் செல்வம் பயன்படுத்த உள்ளார்.நீதி கேட்கும் பயணத்திற்கென்றே இந்த கார் பிரத்யேகமான வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. காரின் முன்புறம் ஜெயலலிதாவின் படம் வட்டவடிவில் காரில் பொறிக்கப்பட்டுள்ளது.


புலிகளை வேட்டையாடுபவர்களை கண்ட இடத்திலே சுடலாம்: - அதிரடி உத்தரவு
[Wednesday 2017-02-22 18:00]

புலிகள் மற்றும் சிறுத்தைகளை வேட்டையாடுபவர்களை கண்ட இடத்திலேயே சுடலாம் என, இந்தியாவில் பிரசித்தி பெற்ற கார்பெட் வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்இந்த சரணாலயத்தில், முக்கியமாக புலிகள் வாழும் இடங்களில் ஆயுதமேந்திய வேட்டைக்காரர்களை கண்ட உடனே சுடலாம் என்று வன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாக கார்பெட் வனவிலங்கு சரணாலயத்தின் இயக்குனர் கூறியதாக ஹிந்து நாளிதழ் தெரிவிக்கிறது. அங்கு சுற்றுலாப் பயணிகளையும் சோதனை செய்வது தொடங்கப்படவுள்ளது. காஜிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில், வேட்டைக்காரர்களை கண்டதும் சுடும் கொள்கைகள் இப்பகுதியில் அதிக அளவு மனித உயிர்களை பலிகொள்வதாக கூறும் ஒரு ஆவணப்படம் வெளியான சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


சென்னைக்குள் ஆறு ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள்: - சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சித் தகவல்
[Wednesday 2017-02-22 17:00]

சென்னைக்குள் ஆறு ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் ஊடுருவியுள்ளதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் மாநில எல்லை வழியாக ஊடுருவி ஆறு ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் சென்னை வந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.


மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலனை 16 கூறாக கோடாரியால் வெட்டிய கணவன்!
[Wednesday 2017-02-22 17:00]

பஞ்சாப்பில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலனை மனைவியின் கணவர் அவர் குடும்பத்தாருடன் சேர்ந்து 16 கூறுகளாக வெட்டுத்தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப்பில் விமானப்படை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் விபன்சுக்லா(27), இவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழந்து வந்துள்ளார்.பணியில் சேர்ந்த சில மாதங்களிலே மற்றொரு விமானப்படை அதிகாரியான சுலேஷ்குமாரின் மனைவியான அனுராதாவுடன் விபன்சுக்லா நெருங்கி பழகியுள்ளார்.இது நாளைடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அனுராதா கற்பமாகியுள்ளார்.


உயிரிழந்த இளைஞன் மீண்டும் உயிர்பிழைத்து வந்த அதிசயம்!
[Wednesday 2017-02-22 17:00]

கர்நாடகாவில் உயிரிழந்த இளைஞனை அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்ற போது வழியில் விழித்தெழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் தர்வாட் மாவட்டத்தின் மானாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் குமார் மார்வாத்(17).இவரை கடந்த மாதம் நாய் ஒன்று கடித்துள்ளது, நாய் கடிக்கு மார்வாத் எந்த வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாததால் அண்மையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் குமாரின் உடல்நிலை மிகவும் அபாயகட்டத்தை எட்டியதால், மருத்துவர்கள் அவரை உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.


ஜெயலலிதாவின் விருப்பத்தை புதிய அரசு நிறைவேற்றுமா? - கேள்விஎழுப்புகிறார் நடிகர் சத்யராஜ்
[Wednesday 2017-02-22 13:00]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவுக்குத் தயாராகி வருகிறது அ.தி.மு.க தலைமைக் கழகம். அதேநேரம், சிறைக் கைதிகளின் முன்விடுதலை குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன. 'ராஜீவ் காந்தி வழக்கில் சிறைப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக உறுதியான முடிவை எடுத்தார் ஜெயலலிதா. அவரது நோக்கத்தை புதிய அரசு நிறைவேற்றுமா?' எனக் கேள்வி எழுப்புகிறார் நடிகர் சத்யராஜ். தமிழக சிறைச் சாலைகளில் நீண்டநாட்கள் சிறையில் வாடும் கைதிகளை முன்விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. காரணம். பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி தொடுத்திருந்த வழக்கு. அந்த வழக்கும் முடிவுக்கு வந்துவிட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில், முன்விடுதலை நம்பிக்கையோடு காத்திருந்த கைதிகளின் கனவுகள் வீணாகிவிட்டன. இதனால், அதிகப்படியான மனஉளைச்சலுக்கும் அவர்கள் ஆளானார்கள். "தமிழக சிறைகளில் இருபது ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் கைதிகள் 80 பேர் உள்ளனர். பத்து ஆண்டுகளைக் கடந்து சிறைவாழ்க்கையை அனுபவித்து வருகின்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல். கடந்த ஆண்டு இவர்களின் முன்விடுதலை தொடர்பாக, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது என்பது கைதிகளுக்கான உரிமையாகப் பார்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், சிறைக் கண்காணிப்பாளர், நன்னடத்தை அலுவலர் ஆகியோரைக் கொண்ட அறிவுரைக் கழகம், 14 ஆண்டுகள் சிறை வாழ்வை நிறைவு செய்தவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்கிறது. இந்த அறிவுரைக் கழகம் முறையாகக் கூட்டப்படுவதில்லை.


ஈஷா யோகா மையம் நடத்தும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது: - கம்யூனிஸ்ட் தலைவர்கள்
[Wednesday 2017-02-22 13:00]

சென்னை, சேப்பாக்கத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின் போது, 'ஈஷா யோகா மையம் நடத்தும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது' என்று தெரிவித்தனர். வரும் 24-ம் தேதி சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். ஈஷா யோகா மையம் விதிமுறைகளை மீறியுள்ளதால், இந்நிகழ்வில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மூவரும் கூறினர்.அப்போது பேசிய முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், 'விதிகளை மீறி 13 லட்சம் சதுர அடியை ஆக்கிரமித்துதான் ஈஷா யோகா மையம் கட்டடங்களை நிறுவியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தொடர்ந்து கட்டடங்களைக் கட்டி வருகிறது ஈஷா. எனவே, வரும் 24-ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கக் கூடாது' என்று கேட்டுக்கொண்டார்.

SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா