Untitled Document
April 20, 2024 [GMT]
'ஜாபர் சாதிக் கைது'- போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி!
[Saturday 2024-03-09 15:00]

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.


'15 மணி நேரத்தில் 20 லட்சம்' - திணறிய த.வெ.க ஐடி விங்!
[Saturday 2024-03-09 15:00]

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுதான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.


நள்ளிரவு வரை நடந்த ஆலோசனை: குழு அமைத்த ஓபிஎஸ்!
[Saturday 2024-03-09 08:00]

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.


'சிறை சென்றும் திருந்தவில்லை'- மீண்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!
[Saturday 2024-03-09 08:00]

புதுச்சேரியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி, கஞ்சா போதை இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சோக சம்பவத்தின் வடுக்கள் மறையும் முன்னரே நீலகிரியில் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து சிறை தண்டனை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடல் சார் உயர் இலக்கு படை தொடக்கம்!
[Saturday 2024-03-09 08:00]

இந்தியாவிலேயே முதன்முறையாக மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தியில் உள்ள கடல் வளங்கள் மற்றும் கடல் பல்லுயிர்களைப் பாதுகாக்க இந்தியாவின் முதல் கடல்சார் உயர் இலக்கு படை இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


“பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும்” - தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
[Friday 2024-03-08 18:00]

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு; பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க தில்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50% ஆக உயர்ந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.


“தோழர்களாய் ஒன்றிணைவோம்” - உறுதிமொழியை அறிவித்த த.வெ.க. தலைவர் விஜய்!
[Friday 2024-03-08 18:00]

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுதான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கட்சியின் முதல் கூட்டமாக, கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்தனர்.


இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவிக்கு எம்.பி. பதவி: பிரதமர் மோடி வாழ்த்து!
[Friday 2024-03-08 18:00]

மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்களின் பதவிக்கான சீட்டுகள் உள்ளன. இதில், 238 எம்.பிக்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மீதமுள்ள 12 எம்.பி.க்கள், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது ஜனாதிபதியால் நேரடியாகவோ நியமிக்கப்படுவார்கள். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்களிப்பு வழங்கியவர்களுக்கு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்படும்.


மதிமுகவிற்கு எத்தனை தொகுதி? - கையெழுத்தான ஒப்பந்தம்!
[Friday 2024-03-08 18:00]

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.


இந்தியாவில் கிடைத்த பிரிட்டிஷ் காலத்து பொக்கிஷம்!
[Friday 2024-03-08 06:00]

இந்தியாவில் 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் (British Era) கால பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மார்ச் 5-ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நடந்துக்ள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த தொழிலாளர்களால் ஆங்கிலேயர் காலத்து வெள்ளிக் காசுகள் கண்டெடுக்கப்பட்டன. குவாலியரின் கல்லாசிபுரா பகுதியில் தொழிலாளர்களால் இந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


போதைப் பொருள் விற்பனை விவகாரம்: குஜராத்தில் அதிரடி காட்டிய தமிழக போலீசார்!
[Friday 2024-03-08 06:00]

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வலி நிவாரணி மாத்திரைகளைப் போதை ஊசிகளாக மாற்றி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகப் போலீசார் 15 பேரை கைது செய்தனர். இந்த 15 பேரிடம் தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தைச் சேர்ந்த சிக்திக் கவுசிக் என்பது தெரியவந்தது.


மார்ச் 9இல் தமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு?
[Friday 2024-03-08 06:00]

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்த விஜய்!
[Thursday 2024-03-07 18:00]

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவசமாக 7 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார் விஜய். நடிகர் விஜயும் கடந்த மாதத் தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிய அவர், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்பதையும் அவர் கூறினார்.


ஆதார் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய விதி!
[Thursday 2024-03-07 18:00]

ஆதார் அட்டையில் இலவசமாக விவரங்களை ஒன்லைனில் புதுப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 14ஆம் திகதிக்குள் ஆதார் அட்டையில் பெயர், விலாசம் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், 15ஆம் திகதியில் இருந்து மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டுமாம். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இவாஞ்சலினின் பேச்சுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடும் கண்டனம்!
[Thursday 2024-03-07 18:00]

கிருத்துவ மத போதகர் பவுல் தினகரனின் மனைவி இவாஞ்சலினின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அவர், கனடாவில் தங்கள் குடும்பம் சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், ஆனால் கடவுளை பிரார்த்தனை செய்த பின்னர் சொந்த வீடு வாங்கும் அளவுக்கு வசதி கிடைத்ததாகவும் கூறினார்.


அரசு மருத்துவரான 3 அடி உயரமுள்ள இளைஞர்!
[Thursday 2024-03-07 18:00]

மூன்று அடியே உயரம் கொண்ட இளைஞர் ஒருவர் பல தடைகளை தாண்டி மருத்துவராகி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்திய மாநிலமான குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்தவர் கணேஷ் பாரையா. இவர் 72% உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷ் பாரையாவுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.


இந்தியாவுடனான முக்கிய ஒப்பந்தத்தை புறக்கணித்த மாலைதீவு!
[Thursday 2024-03-07 06:00]

இந்திய - மாலைதீவு உறவில் விரிசலானது நீடித்துவரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்ஸூ பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். நாட்டின் நீர் நிலைகள் குறித்த தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார் .


“பாடப் புத்தகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு” - கர்நாடக அரசு!
[Thursday 2024-03-07 06:00]

கர்நாடகாவில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு கடந்த 2022 - 2023 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் வரலாறு புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் பலராம் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றிருந்தன. அதே சமயம் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் குறித்த தகவல்களும், சமுதாய முன்னேற்றத்துக்கான இலக்கியங்களைப் படைத்த எழுத்தாளர்களின் கதை மற்றும் கவிதைகளும் நீக்கப்பட்டன. இந்த செயல் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
[Thursday 2024-03-07 06:00]

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு நேற்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்!
[Wednesday 2024-03-06 18:00]

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.


தே.மு.தி.க. - அ.தி.மு.க. பேச்சுவார்த்தை: தொகுதிப் பங்கீடு குறித்து வெளியான தகவல்!
[Wednesday 2024-03-06 18:00]

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது.


சிறுமி கொலை: புதுச்சேரியில் உச்சக்கட்ட பரபரப்பு!
[Wednesday 2024-03-06 18:00]

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சிறுமி ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் நேற்று (05.03.2024) கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டித்து சிறுமியின் உறவினர்கள், ஊர்ப் பொதுமக்கள் என ஏராளமானோர் முத்தியால்பேட்டை அருகே உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது, “கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.


பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட என்.ஐ.ஏ.!
[Wednesday 2024-03-06 18:00]

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர்.


அழைப்பு விடுத்த அ.தி.மு.க.: தொல். திருமாவளவன் பதிலடி!
[Wednesday 2024-03-06 06:00]

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையொட்டி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.


மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!
[Wednesday 2024-03-06 06:00]

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


தமிழகத்திற்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் சேவை?
[Wednesday 2024-03-06 06:00]

இந்திய ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீலம் - வெள்ளை நிறம் மற்றும் காவி - சாம்பல் நிறத்திலும் இருக்கும் வகையில் இருக்கும் வகையில் வரை இயக்கப்பட்டு வருகிறது.


3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு: பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!
[Tuesday 2024-03-05 17:00]

கர்நாடகா மாநிலம், மங்களூர் பகுதியில் கடாபா என்ற அரசுக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், நேற்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடகா மாநில பல்கலைக்கழகத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.


‘அடுத்தடுத்து குண்டு வெடிக்கும்’ - மின்னஞ்சல் மிரட்டலால் பரபரப்பு!
[Tuesday 2024-03-05 17:00]

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் ஒன்று வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.

Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா