Untitled Document
April 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பொதுச் செயலாளர் - முதலமைச்சர் பதவி யாருக்கு? - இரு அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை
[Thursday 2017-04-20 08:00]

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஆகும்.இந்த கோரிக்கையை அமைச்சர்கள் ஏற்று நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர். இதை ஏற்று அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்குவதாக தினகரனும் அறிவித்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து பிரிந்து இருக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருக்கிறது.அ.தி.மு.க. இரு அணிகள் இணைவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.


தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!
[Thursday 2017-04-20 08:00]

டெல்லியில் கடந்த 37 நாட்களாக போராடி வந்த தமிழக விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 37 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய 2-ம் வகுப்பு சிறுவன்!
[Thursday 2017-04-20 08:00]

தமிழகத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி தனியாக நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது படூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடக் கோரி அக்கிராமமக்கள் சில தினங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமின்றி மதுக்கடைகளை அடித்தும் நொறுக்கியுள்ளனர்.


தினகரனுக்கு முற்றும் நெருக்கடி: - சென்னை வருகிறது டெல்லி போலீஸ்
[Wednesday 2017-04-19 17:00]

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, அவர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சுகேஷ் சந்தர் என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரியவந்தது. இது தொடர்பான எப்ஐஆர் நகலையும் நேற்று வெளியிட்டது போலீஸ்.


தென்னிந்திய தவளைகளிடமிருந்து மருந்து கண்டுபிடிப்பு: -ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்
[Wednesday 2017-04-19 17:00]

தவளையிடமிருந்து கிடைக்கும் ஒருவித பிசுபிசுப்பான திரவம் ஃப்ளூ தொற்றைத் தடுக்க ஒரு புதிய வழியை வழங்கும் என்று அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென்னிந்திய தவளை இனம் ஒன்றின் தோலிலிருந்து வெளிப்படும் திரவம் ஒன்றிலிருந்து பெறப்படும் ரசாயனம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த பிசுபிசுப்பான திரவம் ஆய்வக சோதனைகளில் ஃப்ளூ காய்ச்சல் வைரஸ்களின் டஜன்கணக்கான வகைகளை மட்டுப்படுத்தியது.


தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி: - பன்னீர் செல்வம் பேட்டி
[Wednesday 2017-04-19 17:00]

ஜெயலலிதா மரணத்திற்கு பின் கட்சி சசி குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக தர்ம யுத்தம் துவக்கப்பட்டது.மக்கள் விருப்பத்திற்காக தான், எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைபடி எங்கள் அடிப்படை கருத்தாக வைத்து தர்ம யுத்தம் துவக்கினோம்.தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றியாக சசி குடும்பத்தை விலக்கி வைப்பது என அவர்கள் தரப்பில் முடிவு எடுத்துள்ளார்கள்.


மதுரையில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் இருதயம் மற்றொரு இளைஞருக்கு பொறுத்தப்பட்டது!
[Wednesday 2017-04-19 17:00]

மதுரையில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் இருதயம் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு 19 வயது இளைஞருக்கு பொறுத்தப்பட்டது. மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழ் மணி என்பவர் அண்மையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் தமிழ் மணியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதைத் தொடர்ந்து தமிழ்மணியின் இருதயம், 2 சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகிய உறுப்புகள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.


நடிகர் ரஜினிக்கு பதில் ட்வீட் செய்த சச்சின் டெண்டுல்கர்!
[Wednesday 2017-04-19 07:00]

2012-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபோது, 100 கோடி இதயங்கள் நொறுங்கின. அவற்றை ஒன்று சேர்க்க யாராலும் முடியாது. ஆனால், சச்சினை மீண்டும் தரிசிக்க, சச்சினை மீண்டும் லயிக்க, சச்சினை மீண்டும் திரையில் பார்க்க, அதுவும் வெள்ளித்திரையில் பார்க்க இன்னொரு வாய்ப்பு, மே மாதம் 26-ம் தேதி வெளியாகப்போகும் 'சச்சின்' பயோகிராஃபியின் ட்ரெய்லர் சில நாள்களுக்கு முன்னர் வெளியானது. தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்த நிலையில், படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், 'அன்புக்குரிய சச்சின், 'சச்சின்' திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்' என்று பதிவுசெய்துள்ளார்.


இரட்டை இலையை கைப்பற்ற நாடகமாடுகின்றனரா தினகரன் அணி? - வெளியான பரபரப்பு தகவல்
[Wednesday 2017-04-19 07:00]

தினகரன் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்காது என்ற உறுதியாகியுள்ள நிலையில் அதனை பெற அந்த அணியினர் நாடகமாடுகின்றனரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிமுக அம்மா அணியில் அரங்கேறும் அதிரடி நிகழ்வுகள் இரட்டை இலைச்சின்னத்தை கைப்பற்ற தினகரன் அணி நாடகமாடுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சசிகலா-ஓபிஎஸ் அணியினர் அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோரி புகார் அளித்ததால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கியது.


சசிகலா குடும்பம் தொடர்ந்து பல நெருக்கடியை சந்தித்து வருவதற்கு ஜெயலலிதாவின் ஆவி தான் காரணமா/
[Wednesday 2017-04-19 07:00]

சசிகலா, தினகரன் ஆகியோரை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி பழிவாங்குகிறதாம். அதனால், தான் அமைச்சர்கள் திடீரென இருவரையும் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்படும் நிலையில், சசிகலா தான் அதற்கு காரணம் என கூறப்பட்டு வருகிறது.ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா, ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து ஓரங்கட்டி தமிழக முதல்வராக வியூகம் வகுத்தார். இறுதியில் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த்துக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது: - சுப்பிரமணியன் சுவாமி
[Tuesday 2017-04-18 18:00]

'நடிகர் ரஜினிகாந்த்துக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது' என்று பா.ஜ.க மாநிலங்களவை எம்பி. சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். வேலூர் கலவையை அடுத்து, காஞ்சிபுரம் சங்கரமடத்துக்குச் சுப்பிரமணியன் சுவாமி இன்று சென்றார். அங்கு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் நடிகர்கள்தான். நடிகர் ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.


கைதான மூன்று மணிநேரத்தில் ஜாமீனில் வெளியே வந்த விஜய் மல்லையா!
[Tuesday 2017-04-18 18:00]

இந்திய வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பி பிரித்தானியாவில் தலைமறைவாக வசித்து வந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜய் மல்லையா மதுபானம், விமான நிறுவன சேவை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுப்பட்டு கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.


பேச்சுவார்த்தை நடத்த யாரிடமும் மண்டியிட மாட்டோம்: - சசிகலா தரப்பு எம்எல்ஏ-க்கள்.
[Tuesday 2017-04-18 18:00]

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு இருக்கும்பட்சத்தில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.இதனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டதாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர் சசிகலா தரப்பு எம்எல்ஏ-க்கள்.அதிமுக-வின் பிரிந்து கிடக்கும் இரு அணிகளும் இன்று ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஓபிஎஸ் தரப்போ சசிகலா குடும்பம் இருக்கும்வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.


பேச்சுவார்த்தை நடத்தினால் இணைந்து செயல்படுவது குறித்து பரிசீலிப்போம்: - ஓ.பன்னீர்செல்வம்
[Tuesday 2017-04-18 10:00]

அ.தி.மு.க இணைவது பற்றி இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. சசிகலா தரப்பில் ஒரு குழு அமைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் இணைந்து செயல்படுவது பற்றி முடிவெடுப்போம்”, என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.


பொதுமக்கள் அவசியமின்றி வெயிலில் செல்ல வேண்டாம்: - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை
[Tuesday 2017-04-18 08:00]

மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணை மது பாட்டிலால் குத்திய மர்ம கும்பல்!
[Tuesday 2017-04-18 08:00]

மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணை மர்ம கும்பல் ஒன்று மது பாட்டிலால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் பணக்காடி கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றகோரி மனு எழுதிய அப்பகுதி சமூக ஆர்வலர் செல்வி, மனுவில் ஊரார் பலரிடம் கையெழுத்து வாங்கினார்.இதை நேற்று நடைபெறும் மனு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.இதையறிந்த விஜய் என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.


கலப்பு திருமணம் செய்த கர்ப்பிணி பெண்ணை அடித்து கொலை செய்த பெற்றோர்!
[Monday 2017-04-17 18:00]

தமிழ்நாட்டில் கலப்பு திருமணம் செய்த சொந்த மகளை அவர் பெற்றோரே அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்மிளா, இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி சர்மிளா அவரை திருமணம் செய்து கொண்டார்.


கர்நாடகாவில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட குரங்குகள்: - அதிர்ச்சி சம்பவம்
[Monday 2017-04-17 18:00]

இந்தியாவில் விவசாய பகுதிகளில் புகுந்து விளைச்சலை சாப்பிட்ட ஆத்திரத்தில் 30 குரங்குகளை விஷம் வைத்து கொன்றவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய சென்றனர்.அப்போது அங்கு ஏராளமான குரங்குகள் இறந்து கிடப்பதையும், சில குரங்குகள் உயிருக்கு போராடுவதையும் பார்த்த அவர்கள் இதுகுறித்து வனவிலங்கு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


தன் சொத்துக்களுக்கு வாரிசு யாரையும் நியமிக்காத ஜெயலலிதா!
[Monday 2017-04-17 18:00]

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் சொத்துக்களுக்கு வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை என்ற விடயம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பலரும் அறியாத தகவல்களை சமூக ஆர்வலரான பாஸ்கர் என்பவர் வெளியிடுவது வழக்கமாகும்.இதன் மூலம் மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு யார் வாரிசு என்ற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள தகவல் அறியும் உரிமை சட்டம், ஜெயலலிதா இதுவரை யாரையும் தன் வாரிசுதாரர் எனக் குறிப்பிடவில்லை.


தமிழீழ விடுதலைபுலிகளுக்கு ஆதரவான கருத்து: - நீதிமன்ற வாசலில் கண் கலங்கிய வைகோ
[Monday 2017-04-17 18:00]

தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வருகிற 27 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் “குற்றம் சாட்டுகிறேன்” என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.விழாவில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது.


11 வயதில் பிளஸ்-2 இல் தேறி சாதனை படைத்த சிறுவன்!
[Monday 2017-04-17 08:00]

ஐதராபாத்தை சேர்ந்தவன் சிறுவன் அகஸ்தியா ஜெயிஸ்வால். 11 வயதே ஆன இவன் யூசுப்குடா செயின்ட் மேரீஸ் ஜூனியர் கல்லூரியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதி இருந்தான்.நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அவன் 63 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான்.இவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2015-ம் ஆண்டு தனது 9 வயதில் தேறி சாதனை படைத்தான்.


ராஜஸ்தானில் 114 டிகிரி வெப்பம் பதிவு: - வட மாநிலங்களை கொளுத்தும் வெயில்
[Monday 2017-04-17 08:00]

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், ஈரோடு,கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் கொளுத்திவருகிறது.ஆனால், வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு நிலைமை சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 110 டிகிரி வரை வெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் 107 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.


புழல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்ற இயக்குனர் கெளதமன்!
[Monday 2017-04-17 08:00]

தமிழகத்தின் சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த பிரபல இயக்குனர் கெளதமன் உட்பட ஆறுபேர் தங்களது உண்ணாவிரத போரட்டத்தை வாபஸ் பெற்றனர். டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு கடந்த வியாழக்கிழமை பூட்டு போடும் போராட்டத்தை இயக்குநர் கௌதமன் தலைமையில் இளைஞர்களும், மாணவர்களும் நடத்தினர். இதனால் முக்கிய பாலமான அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்: - உதவ மறுக்கும் உறவுகள்
[Sunday 2017-04-16 17:00]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ ரீதியாக உதவிகளை ரத்த உறவுகள் செய்ய மறுத்துவருவதால் அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.விஜயகாந்த் அண்மையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை பல நாட்களாக நீடித்தது.


நான்கு மாதங்களாக பல்வேறு நபர்களால் கற்பழிக்கப்பட்ட 15 வயது சிறுமி!
[Sunday 2017-04-16 16:00]

இந்தியாவில் 15 வயது சிறுமி 4 மாதங்களாக பல்வேறு நபர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15 வயது சிறுமி ஒருவருக்கு அவர் பெற்றோர் அவரை விட பல வயது மூத்தவரை திருமணம் செய்து கொள்ள கட்டாயபடுத்தியுள்ளனர்.இதனால் அவர் வீட்டிலிருந்து தப்பி டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். அங்கு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் Armaan மற்றும் அவர் மனைவி Haseenaவிடம் சிறுமி சிக்கியுள்ளார்.சிறுமியை கடத்தி சென்ற Armaan அவரை 15 நாட்கள் கற்பழித்துள்ளார். பின்னர் Pappu Yadav என்பவரிடம் 70,000 ரூபாய்க்கு சிறுமியை Armaan விற்றுள்ளார்.


மும்பை சென்னை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
[Sunday 2017-04-16 16:00]

மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய மூன்று விமான நிலையங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து புறப்படும் விமானத்தை கடத்தி தகர்ப்பதாக மிரட்டல் வந்துள்ளதால் மூன்று விமான நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய மூன்று விமான நிலையங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து புறப்படும் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த உள்ளனர்.மேலும் அதனை நடுவானில் வெடிக்க வைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். முடிந்தால் காப்பாற்றி கொள்ளுங்கள்” என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளான்.


அதிமுக பொதுசெயலாளராகிறார் பன்னீர்செல்வம்: - தினகரனை வெளியேற்றும் முயற்சி தீவிரம்
[Sunday 2017-04-16 16:00]

அதிமுகவின் இரு அணிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய ஐவர் குழு தீவிர முயற்சியை தொடங்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.ஐவர் குழுவின் இந்த நடவடிக்கையை அடுத்து தினகரன் எந்நேரமும் கட்சியை விட்டு வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற அதிமுகவின் இரு அணிகளையும் ஒருங்கிணைப்பதை தவிர வேறு வழி இல்லை என்று சசிகலா ஆதரவு அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் கருத்தில் கொண்டுள்ளனர்.


எனக்கும் எனது மனைவிக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை: - ஜெ. தீபாவின் கணவர் மாதவன் பேட்டி
[Sunday 2017-04-16 08:00]

எனக்கும் எனது மனைவிக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை என ஜெ. தீபாவின் கணவர் மாதவன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.எம்ஜிஆர் அம்மா தீபா என்ற பேரவை தொடங்கிய தீபா, ஆர்கே நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதாக அறிவித்தார்.இந்நிலையில், பேரவைக்குள் ஏற்பட்ட பதவி பிரச்சனையால், மாதவன் தீபாவை விட்டு பிரிந்துசென்றுவிட்டதாகவும், இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா