Untitled Document
January 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழன் உலகத்துக்கே சோறு போட்டவன்: - இயக்குனர் கௌதமன்
[Tuesday 2017-01-17 18:00]

ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி அவனியாபுரத்தில் நடந்த அறவழிப் போராட்டத்தின் போது பொலிசார் தடியடி நடத்தினர். அப்போது இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.தன்னை கொலை செய்த சதி நடந்ததாகவும், தமிழனே தமிழனை அடிக்கலாமா எனவும் கௌதமன் கேள்வி எழுப்பினார்.


மத்திய பிரதேசத்தில் 5 கிலோ எடை கொண்ட சிறுமியின் வயிற்றில் 9 கிலோ எடை கொண்ட கட்டி!
[Tuesday 2017-01-17 18:00]

மத்திய பிரதேசத்தில் 5 கிலோ எடை கொண்ட சிறுமியின் வயிற்றில் 9 கிலோ எடை கொண்ட கட்டி இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.Mahfuz Khan மற்றும் Madina தம்பதியினரின் 2 வயது மகள் Sohana. இக்குழந்தை Wilms Tumour கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. Wilms Tumour என்பது சிறுவயது குழந்தைகளை தாக்ககூடிய ஒருவகை சிறுநீரக புற்றுநோய் ஆகும். இந்த குழந்தையின் எடை 5 கிலோ ஆகும். ஆனால் வயிற்றில் படர்ந்திருக்கும் இந்த கட்டியின் எடையானது 9 கிலோ ஆகும். இதனால், இந்த குழந்தையால் எழுந்து நடக்கவோ, உட்காரவோ முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த கட்டியால் இக்குழந்தையின் உடலில் வலி ஏற்பட்டுள்ளது.


ஜல்லிக்கட்டு தடை என்பது எமது பண்பாட்டு மீது தொடுக்கப்பட்ட போர்: - சீமான்
[Tuesday 2017-01-17 18:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன, இதற்கு பல்வேறு பிரபலங்களும் தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் அமீர் அலங்காநல்லூர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது சீமான் பேசுகையில், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவது சர்வாதிகாரம், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையிலிருந்து அரசு விலகி நிற்கிறது.


அதிமுக தொண்டர்கள் பலர் தனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்: - ஜெ.தீபா
[Tuesday 2017-01-17 18:00]

மறைந்த தமிழக முன்னாள முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அதிரடி முடிவெடுத்துள்ளார்.எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாளான இன்று எம்ஜிஆர் சிலை மற்றும் சமாதிக்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்திய ஜெ.தீபா, தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது, தனது அடுத்த அறிவிப்பை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் திகதி தெரிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று தனது அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்பது தனது ஆசை என தெரிவித்துள்ளார்.


பன்னீர் செல்வம் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான சிறப்பான ஆட்சி: - சசிகலாவின் கணவர் நடராஜன்
[Tuesday 2017-01-17 18:00]

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழர் கலை இலக்கிய பொங்கல் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுகவை உடைக்க பாஜக கட்சி முயற்சி செய்து வருகிறார். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.தமிழகத்தில் அவர்களால் கால் ஊன்ற முடியாது. அப்படி எங்களை அழிக்க நினைக்கும் பாஜகவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.தற்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் அவரை மாற்ற வேண்டியது அவசியம் இல்லை.சசிகலாவை முதல்வராக்குவது குறித்து கட்சி எம்எல்ஏக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.


எம்ஜிஆரின் 100-ஆவது பிறந்த நாள்: - மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தீபா!
[Tuesday 2017-01-17 11:00]

எம்ஜிஆரின் 100-ஆவது பிறந்த நாள் விழா இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, அவரது நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தீபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதட்டம் நிலவியது. அதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 100-ஆவது பிறந்த நாள் இன்று செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் தீபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் பாதுகாக்கத் துடித்தவர் எம்ஜிஆர்: - வைகோ
[Tuesday 2017-01-17 09:00]

திமுக தலைவர் கருணாநிதியின் பக்தன் என்பதால் கண்மூடித்தனமாக எம்ஜிஆரை எதிர்த்தேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: என் மடியில் விழுந்தது ஒரு கனி (எம்ஜிஆர்). அதனை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன் என்று 1967-இல் விருகம்பாக்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணாவால் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். அந்தத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு எம்ஜிஆர் பிரசாரமும் வழிகோலியது.அண்ணாவின் மறைவுக்குப் பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தபோது கருணாநிதிக்கு எம்ஜிஆர் தனது முழு ஆதரவையும் தந்தார்.


அலங்காநல்லூரில் பொது மக்கள் சாலை மறியல்: - தொடரும் போராட்டம்
[Tuesday 2017-01-17 09:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி கைதானவர்களை விடுவிக்கக் கோரி, அலங்காநல்லூரில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.அலங்காநல்லூரில் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டத்தால் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடுக்கு தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அணி? - அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு
[Tuesday 2017-01-17 09:00]

முதல்வர் பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவரை வாழ்த்து பேசிய விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 14 ஆம் திகதி பன்னீர் செல்வம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சசிகலா மாலை வரை பிறந்த நாள் வாழ்த்து சொல்லாமல் இருந்தார்.பிரதமர் மோடி, கவர்னர் வித்யாசாகர் ராவ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்த தகவல் வெளியான பிறகுதான் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தநிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் பேசிய கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொங்கல் தினத்தில் பிறக்கும் பெருமை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதிலும் பொங்கல் பிறந்த நாளில் பிறந்து முதல்வராகும் பெருமை பன்னீர்செல்வத்துக்கு கிடைத்துள்ளது.


இளைஞர்கள் தங்கள் உரிமையைப் பாதுகாக்க தன்னெழுச்சியுடன் போராட்டத்திற்குத் திரண்டுள்ளனர்: - சீமான்
[Tuesday 2017-01-17 09:00]

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் கையாலாகாத்தனத்தை இளைஞர்கள் நம்பவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழ் மக்க்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டி இளைஞர்களும் பொதுமக்களும் திங்கட்கிழமை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இப்போராட்டம் இரவிலும் விடிய விடிய தொடர்கிறது.


விலங்குகள் நலவாரியத்தை மத்திய அரசு கலைக்க வேண்டும்: - ஸ்டாலின்
[Monday 2017-01-16 18:00]

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தேச துரோக சக்தியாக செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஓ பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். மேலும் தற்போதைய விலங்குகள் நலவாரியத்தை மத்திய அரசு கலைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் விலங்குகள் நலவாரியத்தை புதிதாக அமைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் அலங்காநல்லூரை தனித்தீவாக்கி கொடூரமான முறையில் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.


நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகளை கற்பழித்த கொடூரன்: -சிக்கியது எப்படி? - அதிர வைக்கும் பிண்ணனி
[Monday 2017-01-16 17:00]

டெல்லியில் காமக்கொடூரன் ஒருவன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்திய தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் நாடே அதிர்ச்சியுறும் வகையில் ஒருவன் 14 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மாணவிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவன் சுனில் ரஸ்தோகி. இவன் 12 வயதிலேயே 1990ம் ஆண்டு டெல்லிக்கு பிழைப்பு தேடி வந்தான். தற்போது 38 வயதாகும் அவனுக்கு திருமணமாகி மனைவியும், 3 மகள்கள், 2 மகன்களும் உள்ளனர்.


சரத்குமாருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டம்!
[Monday 2017-01-16 14:00]

நடிகர் ரஜினிகாந்த் குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் பேசியது அவரது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், ரஜினிகாந்துக்கு தமிழக அரசியல் பற்றி பேச தகுதி இல்லை என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக எதிர்ப்பேன் என கூறியிருந்தார்.


எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக என்றும் நிலைக்க வேண்டும்: - எம்.ஜி.ஆர் வளப்பு மகள் சுதா
[Monday 2017-01-16 14:00]

அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜய்குமார் ஆவார்.ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்ட இல்லத்தில் இவர் வசித்து வருகிறார். நாளை எம்.ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி அங்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எம்ஜிஆரின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.அதிமுக தலைமை சசிகலாவுக்கு போனது சுதாவுக்கு பிடிக்கவில்லை எனவும் அதை அவர் எதிர்ப்பார் எனவும் கூறப்பட்டது.


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் பிரம்மாண்ட பேரணி: - பிரபல நடிகர் கைது
[Monday 2017-01-16 13:00]

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.இதில் இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.மக்கள் திரண்டு வருவதால் ஆயிரக்கணக்கில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்,


மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு? - கழுத்தை அறுத்து கொன்ற கணவன்
[Monday 2017-01-16 13:00]

தமிழகத்தின் ஆம்பூரில் மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த கணவன், கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆம்பூர் ஏ.கஸ்பா நெசவுக்காரத் தெருவை சேர்ந்தவர் மஞ்சுநாதன், இவரது மனைவி இந்துமதி, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.மஞ்சுநாதன் சாராயம் காய்ச்சி விற்று வந்துள்ளார், இதை பொலிசிடம் மூதாட்டி ஒருவர் காட்டிக் கொடுக்கவே பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தற்போது ஜாமீனில் வெளியே வந்த மஞ்சுநாதனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது, ஆத்திரத்தில் மஞ்சுநாதன் இந்துமதியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.


மாணவியை நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய ஆசிரியர்!
[Monday 2017-01-16 13:00]

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது.அங்கு ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் அவர் வகுப்பின் ஆசிரியர் கடந்த ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அவரின் உடைகளை கழட்டி விட்டு தன் முன்னர் குளிக்க வற்புறுத்தியுள்ளார்.இதை யாரிடமும் சொல்ல கூடாது எனவும் அவரை மிரட்டியுள்ளார். பொருத்து பார்த்த அந்த சிறுமி பின்னர் இந்த விடயத்தை அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார்.


நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல: - கண்ணீருடன் த்ரிஷா!
[Monday 2017-01-16 13:00]

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பின் உறுப்பினர் என்பதால் நடிகை த்ரிஷாவுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.சமூகவலைத்தளங்களிலும் மிக கீழ்த்தரமாக த்ரிஷாவை விமர்சித்தனர், இவருடைய டுவிட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக டுவிட் செய்யப்பட்டிருந்தது. இதனால் மனம்நொந்து போன த்ரிஷா டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.இந்நிலையில் த்ரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரமாக நான் செய்யாத தவறுக்காக ஜல்லிக்கட்டு விஷயத்தில் என்னை மனம் நொந்து போகும் வகையில் விமரிசித்தும் கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.


எம்.ஜி.ஆர் கார்டனை கைப்பற்றும் முயற்சியில் இறங்கிய சசிகலா!
[Monday 2017-01-16 11:00]

அதிமுக கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நாளை தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிவிட்ட சசிகலா, ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் கார்டனை கைப்பற்றியுள்ளார்.அடுத்து எம்.ஜி.ஆரின் குடும்பத்தாரையும், அவர் ஆதரவாளர்களையும் தன்வசப்படுத்த நாளை ராமாவரத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் அவரது உருவ சிலையை சசிகலா திறந்து வைக்கவுள்ளார்.சசிகலா அதிமுகவின் தலைமை இடத்தை கைப்பற்றியது எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா, அவரது தம்பி தீபன் ஆகிய குடும்ப உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை.


மீண்டும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை புறக்கணித்த சசிகலா!
[Monday 2017-01-16 11:00]

பிரதமர் மோடி மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் சசிகலா வாழ்த்தேதும் தெரிவிக்காமல் மீண்டும் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவைவிட முதல்வர் பன்னீர்செல்வம் நான்கு வயது மூத்தவர். சசிகலாவுக்கு 62 வயதும் பன்னீர்செல்வத்துக்கு 66 வயதும் ஆகிறது. பொங்கல் பண்டிகையான நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தின் பிறந்த நாள். பொங்கல் பண்டிகையோடு இணைந்து பன்னீரின் பிறந்த நாள் வருவதால், அதை குடும்பசகிதம் சிறப்பாகக் கொண்டாடுவது பன்னீர்செல்வம் குடும்பத்தினரின் வழக்கம்.


தீபா பேரவை இயக்கத்தில் இணைகிறார் நடிகர் ஆனந்த்ராஜ்?
[Sunday 2017-01-15 17:00]

பிரபல நடிகரான ஆனந்த்ராஜ் அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவர்.ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக-வின் நடவடிக்கைகளால் மனம் நொந்து போனவர் அக்கட்சியிலிருந்து விலகினார்.இந்நிலையில் இவரை சந்தித்த தீபா பேரவை இயக்கத்தினர், தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பீகாரில் படகு விபத்து: - பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
[Sunday 2017-01-15 17:00]

பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகே கங்கை நதியில் நேற்று இரவு நடந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகே கங்கை நதியில் நேற்று மாலை படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 21 பேர் மரணம் அடைந்தனர். குறிப்பிட்ட படகில் சுமார் 40 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகர சங்கராந்தி விழாவை கொண்டாடி விட்டு அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட காலணிகள்: - சீண்டும் அமேசான் இணையதளம்!
[Sunday 2017-01-15 17:00]

இணையவழி பொருட்கள் விற்பனை தளமான அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இணையதளத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.அமேசான் நிறுவனம் இணையவழியாக பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் இணைய தளங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இணையதளத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவமானது இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.


ஆறு ஆண்டுகளாக பெற்ற மகளை சீரழித்த தந்தை!
[Sunday 2017-01-15 17:00]

இந்தியாவில் பெற்ற மகளையே கடந்த ஆறு ஆண்டுகளாக தந்தை ஒருவர் சீரழித்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியாவின் புனே காலேவாடி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் தன்னுடைய தந்தை கடந்த ஆறு வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும், இதை தெரிந்து கொண்டே தாய் மௌனம் காப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், தினமும் தந்தை அடித்து சித்ரவதை செய்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


தமிழகத்தில் இன்று மாட்டுப் பொங்கல்!
[Sunday 2017-01-15 09:00]

தமிழகத்தில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் தமிழகமெங்கும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், இந்த பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து இன்றைய பொங்கல் விழா கொண்டாடப்படுவது தமிழர்களின் மரபு. மாடு வளர்ப்போர் இன்று, மாடுகள் அணிந்திருக்கும் கயிறுகளை மாற்றி, கழுத்து மற்றும் கொம்புகளில் சலங்கை அணிவித்து கோயில்களுக்கு அழைத்துச் சென்று வழிபடுவர்.


சோவின் மறைவு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பாகவே கருதுகிறேன்: - நரேந்திர மோடி
[Sunday 2017-01-15 09:00]

சோ.ராமசாமியால் தொடங்கப்பட்ட துக்ளக் இதழின் 47-வது ஆண்டு நிறைவு விழா இன்று சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கானொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறிய மோடி, 'சோவின் மறைவு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பாகவே கருதுகிறேன். சோவை தவிர்த்துவிட்டு இந்திய அரசியலை யாராலும் எழுதிவிட முடியாது. அவரது மிகப் பெரிய வெற்றியாக நான் கருதுவது, துக்ளக் இதழ் மூலம், அனைத்து வித பிரிவினை சக்திகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.


அறிவோ அழகோ இல்லாவிட்டாலும் எனக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுத்தனர்: - ரஜினி
[Sunday 2017-01-15 09:00]

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.துக்ளக் பத்திரிக்கையின் 47-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், சோ உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மட்டுமின்றி ஜெயலலிதாவிற்கும் சோ ராமசாமிக்கும் இடையேயான நட்பை பற்றி பேசினார்.மேலும் பேசிய அவர், சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு மிகவும் சிறந்த ஆலோசகர்கள் கிடைத்தார்கள். பெரிய அறிவோ, அழகோ இல்லாவிட்டாலும் எனக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுத்தனர்.


செல்பியால் நீரில் மூழ்கிய பள்ளி மாணவி!
[Sunday 2017-01-15 09:00]

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சுற்றுலாவுக்காக ருத்ராபிராய்க் மாவட்டத்துக்கு வந்தனர். அங்கு உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள் பின்னர் அருகிலிருந்த புனித நதியான அலக்நந்தா ஆற்றங்கரை ஓரமுள்ள ஒரு குகை பகுதிக்கு சென்றனர்.அப்போது, அங்கிருந்த ஆஷ்னா என்னும் மாணவி அந்த ஆற்றின் கரையோரம் நின்று கொண்டு தனது செல்போனில் செல்பி எடுத்து கொண்டிருந்தார்.அப்போது அங்கிருந்த தண்ணீரில் வழுக்கி ஆற்றின் உள்ளே ஆஷ்னா விழுந்துள்ளார்.

NIRO-DANCE-100213
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
AIRCOMPLUS2014-02-10-14
Tharsi-home-15-10-2016
<b> 15-01-2017 அன்று ஃபான் ஃஅம் மையத்தில்  நடைபெற்ற முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களது பொதுக் கூட்ட  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 15-01-2017 அன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா(Puthinamphotos.com)
<b> 14-01-2017 அன்று ரொரன்டோவில் கனேடிய தமிழர் பேரவை (CTC) நடாத்திய பொங்கல் விழா விருந்து நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா (Puthinamphotos.com)