Untitled Document
May 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயில் என்னிடம் உள்ளது: - அண்ணன் மகன் தீபக் தகவல்
[Tuesday 2017-05-09 18:00]

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அவரின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போதே தீபக் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.தீபக் கூறியதாவது, மறைந்த என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என்னிடமே உள்ளது.


இலக்கை அடைந்த தமிழ் விக்கிபீடியா: - அடுத்த இலக்கு 10 லட்சம் கட்டுரைகள்!
[Tuesday 2017-05-09 08:00]

தமிழ் விக்கிப்பீடியா' தன்னுடைய நெடுநாள் இலக்கான ஒரு லட்சம் கட்டுரைகளை எட்டிப் பிடித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்குவது 'விக்கிப்பீடியா' தளம். இதன் தமிழ் மொழி பக்கம் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ஒரு லட்சம் கட்டுரைகளை இலக்காகக்கொண்டு இயங்கியது. இன்று அது தன் இலக்கான ஒரு லட்சம் கட்டுரைகளை அடைந்துள்ளது.


பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகள் சென்னையில் மீட்பு!
[Tuesday 2017-05-09 08:00]

சில மாதங்களுக்கு முன்பு, சென்னை வால்டாக்ஸ் சாலை நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத ஆண்குழந்தை மற்றும் 9 மாத பெண் குழந்தை இருவரையும் காரில் வந்த கும்பல் தூக்கிச்சென்றது. இதையடுத்து, எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்குத் தொடர்ந்தார்.


சிறையில் இருக்கும் வைகோவை சந்தித்த திருமாவளவன்!
[Monday 2017-05-08 18:00]

தேச துரோக வழக்கில் கைதாகி கடந்த ஒரு மாதமாக சிறையில் இருக்கும் வைகோவை, தொல் திருமாவளவன் இன்று சந்தித்து பேசியுள்ளார்.விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யபட்டு ஒரு மாதமாக புழல் சிறையில் அடைக்கபட்டுள்ளார்.


கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளதாக சரத்குமார் மற்றும் ராதிகா மீது பொலிசில் புகார்!
[Monday 2017-05-08 18:00]

சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் 3.85 கோடி பண மோசடி செய்துள்ளதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரும், அவர் மனைவி ராதிகாவும் 3.85 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த வருண் மணியன் என்பவர் பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


சமையல் அறையில் முடங்கும் அறிவியல்?
[Monday 2017-05-08 08:00]

அறிவியல் துறையில் நுண்ணுயிரியில்(microbiology)பிரிவில் பெரும் சாதனையாளராக விரும்பியவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சசிதாரா(40).நுண்ணுயிரியில் பிரிவில் பட்டப்படிப்பு முடித்து முனைவர் பட்டம் பெற, காட்டில் வளரும் காளான் வகையைக் குறைந்த செலவில் எளிய முறையில் வீடுகளில் பயிர்செய்வது பற்றி நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.


அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!
[Monday 2017-05-08 07:00]

சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் ஐந்து பேர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெற்கு சிவன் கோவில் தெருவில் மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நேர்ந்துள்ளது. புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு தான் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி!
[Monday 2017-05-08 07:00]

பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஜேசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மான் சிங் (57). இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சந்திரா பாய் (35). அவரும் கணவர் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.சம்பங்கிராம்நகரைச் சேர்ந்த அசோக் (37) அவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.


கணவன் கண் முன்னே மனைவிக்கு நடந்த கொடூரம்: - 8 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்
[Sunday 2017-05-07 16:00]

ராஜஸ்தான் மாநிலம் தலான் நகரின் கோகன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண். இவர் தனது கணவருடன் ஜெய்ப்பூர் சென்று விட்டு சொந்த ஊருக்கு ரெயிலில் திரும்பிக் கொண்டு இருந்தார். அவுரையா என்ற இடத்தில் ரெயில் நள்ளிரவில் நின்றது. அங்கிருந்து பஸ் மூலம் கணவன்- மனைவி சொந்த ஊர் செல்ல வேண்டும்.


கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் ஒன்றரை வயது குழந்தை!
[Sunday 2017-05-07 16:00]

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 'சனுஷ் சூர்யா தேவ்' என்கிற ஒன்றரை வயதுக் குழந்தை, கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கிறது. பால்மணம் மறா அந்தக் குழந்தையின் கிரிக்கெட் முயற்சியை கின்னஸ் சாதனைக்கு முயற்சித்து வருகின்றனர் பெற்றோர் முருகன் ராஜ் - சுபத்ரா. இதுகுறித்து அவர்களிடம் பேசியபோது...


தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி: - கனவு கண்டதால் எடுத்த விபரீத முடிவு
[Sunday 2017-05-07 16:00]

தற்கொலை செய்வது போல கனவு தொடர்ந்து வந்தததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டின் சென்னை நகரின் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் மனைவி சரஸ்வதி.இவர்களுக்கு துர்கா (16) என்னும் மகள் உள்ளார். துர்கா அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார்.


தாயகம் செல்ல விரும்பும் இலங்கை அகதிகள்!
[Sunday 2017-05-07 08:00]

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியபோது அங்கிருந்த ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு சென்றனர்.தமிழகத்தில், 119 முகாம்களில், 67 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். மேலும் பொலிசார் அனுமதியுடன் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து 5,000 பேர் தங்கள் தாய்நாட்டிற்கு சென்றனர்.


சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
[Sunday 2017-05-07 08:00]

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தை தகர்க்க போவதாக நடராஜர் கோயில் செயலாளருக்கு அனுப்பப்பட்ட அனாமதேய கடிதம் ஒன்று சிதம்பரம் நகர போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதேபோல் சிதம்பரம் கீழவீதியில் உள்ள பாஜக பிரமுகரும், கோயில் தீட்சிதருமான வெங்கடேச தீட்சிதருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு கடிதம் கடந்த வாரத்தில் வந்துள்ளது. இந்த 2 கடிதத்திலும் ஒரே கையெழுத்து இருந்துள்ளது.


இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்தி கூர்மையுள்ள இந்திய வம்சாவளி சிறுமி!
[Sunday 2017-05-07 08:00]

விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி சிறுமியை பிரித்தானியா மென்சா சங்க தங்கள் சங்கத்தில் சேரும் படி அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவை சேர்ந்தவர் டாக்டர் சுராஜ்குமார் பவார். இவரது மகளான ராஜ்கவுரி(12)அல்டிரின்சம் பகுதியில் உள்ள இலக்கண பள்ளியில் படித்து வருகிறார்.இவர் பிரித்தானியா மென்சா நடத்திய ஐக்கியூ தேர்வில் கடந்த மாதம் கலந்து கொண்டார்.


தமிழ்நாட்டு கடல் எல்லைக்குள் சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? - இலங்கை கடற்படை விளக்கம்
[Saturday 2017-05-06 17:00]

இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் இன்று காலை விரட்டியடிக்கப்பட்டது. தற்போது இதற்கான காரணத்தை இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.


விருப்பத்தின் பேரில் விபச்சாரம் செய்தால் தவறில்லை: -குஜராத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை கருத்து
[Saturday 2017-05-06 17:00]

தெரிந்தே விபச்சாரம் செய்தால் தவறேதும் இல்லை என்று குஜராத் உயர்நீதிமன்றம் புதுமையான உத்தரவை வெளியிட்டுள்ளது. வலுக்கட்டாயமாக இல்லாமல் தெரிந்தே ஒருவர் விபச்சார தொழில் செய்யும்போது அதனை குற்றம் எனக் கருத முடியாது என்றும், பாலியல் தொழிலாளர்கள் விருப்பப்படி செயல்பட்டால் அவர்களை தண்டிக்க முடியாது என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் இதுபற்றிய உத்தரவில் விளக்கமளித்துள்ளது.


கணவனை துப்பாக்கியால் சுட்ட மனைவி: - குடிபோதையால் நடந்த விபரீதம்
[Saturday 2017-05-06 17:00]

கணவனும், மனைவியும் ஒன்றாக மது அருந்திய நேரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கணவனை துப்பாக்கியால் சுட்ட மனைவியின் செயல் அதிர்ச்சிடைய வைத்துள்ளது.ஓசூரிலிருந்து பெங்களூருக்கு சாய்ராம் (53) என்னும் நபர் தனது மனைவி அம்சா (48) என்பவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.


ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய இதைச் செய்யுங்கள்: - கொந்தளித்த கருணாஸ்
[Saturday 2017-05-06 13:00]

பன்னீர்செல்வம் அணி, பழனிசாமி அணி எனப் பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் முயற்சியில், இரு தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, இரண்டாம் கட்டத் தலைவர்கள் மாறி மாறி கருத்துக்களைத் தெரிவித்துவருவதால், இணைவதில் இழுபறி நீடித்துவருகிறது.


இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பல்: - பாதுகாப்பு படையினரால் விரட்டியடிப்பு
[Saturday 2017-05-06 13:00]

இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பலை கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கச்சத்தீவு பகுதியில் சீனா கடற்படை முகாமிட்டு இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் இந்திய எல்லைக்குள் சீன கப்பல் ஒன்று நுழைய முயற்சி செய்துள்ளது. தொடர்ந்து கப்பலை நோக்கி இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.


நடிகை குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம நபர் மிரடடல்!
[Saturday 2017-05-06 08:00]

நடிகை குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம நபர் போன் செய்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.பிரபல நடிகை குஷ்பு சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இதனிடையில், நேற்று இரவு தேனாம்பேட்டை பிரிவு 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு மர்ம போன்கால் ஒன்று வந்தது.அதில் பேசிய நபர் நடிகை குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார்.


அரசு பேருந்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த பெண்ணை செல்போனில் படமெடுத்த கொடூரம்!
[Saturday 2017-05-06 08:00]

தமிழகத்தில் சாலையை கடக்க முயன்ற போது அரசு பேருந்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றாமல் செல்போனில் மக்கள் பதிவு செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் வத்தலக்குண்டு அண்ணாநகரை சேர்ந்தவர் எஸ்தர்(வயது 55), கணவர் இறந்துவிட்ட நிலையில் ஊர் ஊராக சென்று மதபோதனை செய்து வந்தார்.


இந்தியாவிலிருந்து வெளியேறிய கறுப்புப் பணம் இத்தனை லட்சம் கோடியா? - அதிரவைக்கும் தகவல்
[Friday 2017-05-05 18:00]

இந்தியாவில் இருந்து 2014-ம் ஆண்டிலேயே 1.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக குளோபல் ஃபைனான்ஸ் இன்டகிரிட்டி (ஜி.எஃப்.ஐ) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.


நிர்பயா வழக்கில் 4 பேரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
[Friday 2017-05-05 16:00]

மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.


தொலைக்காட்சியில் அப்பல்லோ வீடியோவை ஒளிபரப்ப சசிகலா முடிவு!
[Friday 2017-05-05 16:00]

ஓபிஎஸ் அணி தன்னை கொலைக்காரியாக சித்தரித்து வருவதற்கு பதிலடியாக அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்த வீடியோவை சசிகலா வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த பின்னர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மரணமடைந்தார்.


மினரல் வாட்டர் கேனை கொண்டு சிறுநீர் கழிப்பிடம் உருவாக்கிய தமிழர்கள்: - குவியும் பாராட்டுக்கள்
[Friday 2017-05-05 15:00]

தமிழ்நாட்டில் காலி வாட்டர் கேனை வைத்து சிறுநீர் கழிக்கும் யூரின் பேஷனை அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 97 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இங்குள்ள சிறுநீர் கழிப்பறை மாணவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்துள்ளது.


பாகிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொள்ள தயாராகி வரும் இந்திய ராணுவத்தினர்: - எல்லையோர மக்களுக்கு எச்சரிக்கை
[Friday 2017-05-05 15:00]

பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொள்ள இந்திய ராணுவத்தினர் தயாராகி வரும் நிலையில், எந்நேரத்திலும் ராணுவத்தினர் இத்தாக்குதலை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காஷ்மீரில் இந்தியா–பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைகளை குறிவைத்து தானியங்கி ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளால் தாக்குதல் நடத்தி வருகிறது.


நடுரோட்டில் இளம்பெண்ணிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை!
[Friday 2017-05-05 07:00]

மும்பையில் நடுரோட்டில் இளம்பெண்ணிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மும்பையை சேர்ந்த ஆகாஷ் கட்சே(22) என்ற இளைஞர் கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பெயர் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் மாணவி கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது, ஆகாஷ் அந்த மாணவியின் கையை பிடித்து நடுரோட்டில் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.


பாம்பன் தூக்குபாலத்தை கடக்க முயன்ற கப்பல் கரை தட்டியது: -மீனவர்களின் உதவியால் தப்பியது இரயில் பாலம்
[Thursday 2017-05-04 16:00]

தூக்குபாலத்தை கடக்க முயன்ற கப்பல் தரை தட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது மீனவர்களின் உதவியால் ரயில் பாலம் தப்பியது.கோவா துறைமுகத்திலிருந்து புதிய கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக கடந்து செல்ல நேற்றுமுன்தினம் பாம்பன் துறைமுகத்திற்கு வந்தன.

SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா