Untitled Document
March 29, 2024 [GMT]
திருமணம் செய்வதாக கூறி மாணவியை கற்பழித்த ராணுவ வீரர்!
[Monday 2019-04-22 08:00]

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்த ராணுவ வீரர் உடந்தையாக இருந்த உறவினர்கள் நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் 19 வயது கல்லுாரி மாணவி. ஆலப்பட்டியை சேர்ந்தவன் காந்தி 25. ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வருகிறான். இருவரும் காதலித்து வந்தனர்.


"இலங்கை தொடர் குண்டுவெடிப்பு" - மோடி கடும் கண்டனம்.
[Monday 2019-04-22 08:00]

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என பல இடங்களில் நேற்று காலையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஈஸ்டர் பெருவிழா வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் உள்பட ஏராளமானோர் இதில் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். தெற்கு ஆசியாவையே உலுக்கி உள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த சம்பவத்துக்கு இந்தியாவும் கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக இந்த பயங்கரவாத சம்பவத்தை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் நடந்துள்ள பயங்கரமான குண்டுவெடிப்புகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிராந்தியத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்துக்கு இடமில்லை. இந்த துயரமான நேரத்தில் இலங்கை மக்களுக்கு இந்தியா துணையாக இருக்கும். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரை சுற்றியே எனது எண்ணம் எல்லாம் இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.


'ஜாலியன்வாலா பாக் படுகொலை' சம்மந்தப்பட்ட ஆவணங்கள் பாகிஸ்தானில் வெளியீடு!
[Monday 2019-04-22 08:00]

1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது. பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக் காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர். 10 நிமிட நேரம் 1,650 ரவுண்டுகள் சுட்டப்பிறகுதான் பீரங்கிகள் ஓய்ந்தன. ‘‘சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும்வரை சுட்டேன்’’ என்று கொக்கரித்தான் பிரிகேடியர் ஜெனரல் டயர். இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர்இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.


நாங்கள் அணுகுண்டு வைத்திருப்பது தீபாவளி கொண்டாடவா? - பாகிஸ்தானுக்கு மோடி கேள்வி.
[Monday 2019-04-22 08:00]

ராஜஸ்தான் மாநிலம், பார்மெர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த 1971-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது நம்மிடம் சரணடைந்த 90 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை வைத்தே காஷ்மீர் பிரச்சனையை அன்றைய மத்திய அரசு தீர்த்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் அரசு அந்த வாய்ப்பை தவற விட்டது. பாகிஸ்தானின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்ற கொள்கையை எங்கள் அரசு முன்னெடுத்துள்ளது. 'எங்களிடம் அணுகுண்டு பொத்தான் உள்ளது.


இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்!
[Sunday 2019-04-21 17:00]

இலங்கையில் கொழும்புவில் தேவாலயங்கள், விடுதிகளில் தொடர்ந்து 6 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து 185 பேர் பலியாகி உள்ள் நிலையில் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொழும்பு அருகே தெகிவளையில் தங்கும் விடுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையின் தெமட்டகொடையில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டும் வெடித்தது. கொழும்புவில் ஏற்கனவே தேவாலயங்கள் உள்பட 7 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஈஸ்டர் நாளன்று தொடர் குண்டு வெடிப்புகள் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 185-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


"பிரதமர் பதவி போனாலும் பயங்கரவாதிகளை ஒழிக்காமல் விடமாட்டேன்" - மோடி ஆவேசம்!
[Sunday 2019-04-21 17:00]

பாராளுமன்ற தேர்தலையொட்டி குஜராத் மாநிலம், பட்டான் நகரில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். நான் இந்த மண்ணின் மைந்தன். இங்குள்ள 26 பாராளுமன்ற தொகுதிகளிலும் எங்களை வெற்றிபெற வைக்க வேண்டியது எனது மாநில மக்களின் கடமை. அப்படி செய்தால் மீண்டும் எனது ஆட்சி அமையும். ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்றால்இது ஏன் நடந்தது? என்று தொலைக்காட்சிகளில் மே மாதம் 23-ம் தேதி விவாதமேடை நடத்தப்படும்.


திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி மர்ம மரணம்!
[Sunday 2019-04-21 17:00]

பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். தனியார் பஸ் கண்டக்டர். இவரது மகள் ஜெயசூர்யா (வயது23). இவர் பி.காம் படித்துள்ளார். இவருக்கும், வண்ணார்பேட்டை கம்பராமாயணம் தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முத்துக்குமார் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் போலீஸ்காரராக பணி புரிந்தார். திருமணத்திற்கு பின் தற்போது நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முகாம் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஜெயசூர்யா வழக்கம் போல் அறைக்கு படுக்க சென்றார். இன்று காலை அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணவரின் குடும்பத்தினர் அறையின் உள்ளே பார்த்தனர். அங்கு ஜெயசூர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அதுபற்றி பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.


பயணசீட்டு பரிசோதகரை பிளேடால் தாக்கிய தமிழர்கள்!
[Sunday 2019-04-21 17:00]

திருப்பதியில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததால் வசைபாடிய ரயில் டிக்கெட் பரிசோதகரை, பிளேடால் தாக்கியதாக அரக்கோணத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் நின்றது. உமாமகேஸ்வரன் என்ற டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார்.


"எங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு" - பிரதமர் மோடி ஆவேசம்!
[Sunday 2019-04-21 08:00]

பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தின் அராரியா பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதம்ர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போது தேசநலனையும், காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலையும் பின்பற்றுகின்றன.


வீரதீர சாகசத்துக்கான 'விர் சக்ரா' விருதுக்கு அபிநந்தன் பெயர் பரிந்துரை!
[Sunday 2019-04-21 08:00]

இந்திய முப்படைகளில் போர்க் காலங்களில் வீரதீர சாகசங்களை புரியும் மாவீரர்களுக்கு ‘பரம் விர் சக்ரா’, ‘மஹா விர் சக்ரா’ மற்றும் 'விர் சக்ரா’ ஆகிய மூன்று மிகப்பெரிய விருதுகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்தவந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டிச் சென்று அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து பிடிபட்டு பின்னர் இந்திய அரசின் பெருமுயற்சியால் மீட்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பெயரை ‘விர் சக்ரா’ விருதுக்கு பரிந்துரைக்க இந்திய விமானப்படை தீர்மானித்துள்ளது.


மது அருந்த பணம் தர மறுத்ததால் மனைவியை எரித்துக் கொன்று கணவன் தூக்குப்போட்டு தற்கொலை!
[Sunday 2019-04-21 08:00]

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒலக்காசி ரோடு இந்திராநகரை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 42). இவரது மனைவி கனிமொழி (37). கனிமொழி நெசவு தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். மதிவாணன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மதிவாணன் தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, ஆத்திரம் அடைந்த மதிவாணன் கனிமொழி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.


பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட விமானப்படை வீரர் அபிநந்தன் பணியிட மாற்றம்!
[Sunday 2019-04-21 08:00]

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது. இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் முடிந்ததையடுத்து அவருக்கு ஒருமாதம் விடுமுறை அளிக்கப்பட்டது.


தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்!
[Saturday 2019-04-20 17:00]

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறைக் கால அவசர அமர்வு இன்று கூடியது. அப்போது, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து பேசினார். அவர் கூறியதாவது:- உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இளநிலை பெண் உதவியாளர் என் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. 20 ஆண்டு கால சுயநலமில்லா சேவையில், என் மீது கூறப்படும் இந்த புகார்கள் நம்ப முடியாதவை. இதன்மூலம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


கர்நாடகாவில் முதியவர் மரணத்தில் அழுதவர்களை சமாதானப்படுத்திய குரங்கு! Top News
[Saturday 2019-04-20 17:00]

கர்நாடகாவில் முதியவரின் இறப்பின்போது கதறி அழுதவர்களை குரங்கு ஒன்று கட்டியணைத்து சமாதானம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. நார்கண்ட் ((Nargund) என்ற இடத்தைச் சேர்ந்த தேவேந்திரப்பா கம்மார் (Devendrappa Kammar) என்ற முதியவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.


வீடு வாசலில் உறங்கிக்கொண்டிருந்தவர்களை மிதித்து கொன்ற யானை!
[Saturday 2019-04-20 17:00]

ஒடிசா மாநிலம் ஆங்குல் மாவட்டத்தில் மதம் பிடித்த யானை தாக்கியதில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். வெறிபிடித்து ஓடிய அந்த யானை வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை மிதித்துக் கொன்றது. உயிரிழந்த காலியா மற்றும் அவர் குடும்பத்தினர் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி!
[Saturday 2019-04-20 17:00]

தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள கோம்பை அமுல்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பழனியம்மாள் (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனியம்மாளும், அவரது தாய் முத்தம்மாள் (60) என்பவரும் தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். நேற்று இரவு பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளை மணிகண்டன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். இது குறித்து கோம்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கொலை செய்யப்பட்ட பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளின் உடல்களை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


கைதியின் முதுகில் கம்பியை பழுக்க காய்ச்சி ‘ஓம்’ என்று எழுதிய சிறை கண்காணிப்பாளர்!
[Saturday 2019-04-20 17:00]

டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதி ஒருவர், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 2 நாட்களாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டதுடன், அவரது முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதி உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகான் இந்த செயலை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதி, தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.


ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் விரக்தியில் மனைவியை கொன்ற கணவன்!
[Saturday 2019-04-20 08:00]

காவல்துறையினரையே திகைப்பில் ஆழ்த்திய கொடூரமான சம்பவம் ஒன்று பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது. ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் விரக்தியடைந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓரறையில் அடைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் பஞ்சாப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஓர் ஆண் குழந்தையை கூட பெற்று தரவில்லை என்ற காரணத்தினால் அவர் மனைவியை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மனைவியை கொன்ற அந்த நபர் பிறகு தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சி செய்துள்ளார். இவர்களது மூத்த மகளுக்கு 14 வயதும், இளைய மகளுக்கு நான்கு மாதமும், மற்ற குழந்தைகளுக்கு முறையே 12, 10 மற்றும் எட்டு வயதாகிறது. இந்த சம்பவம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகர் சண்டிகரிலிருந்து சுமார் 81 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனந்த்பூர் சாஹிப் என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது. "ஆண் குழந்தை பிறக்காததை மையமாக கொண்ட குடும்ப வன்முறைகள் நடப்பது பஞ்சாப்பில் அரிதான ஒன்றல்ல," என்று கூறுகிறார் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி குர்ஜித் சிங். "இந்த சம்பவம் மிகவும் மோசமானது. தங்களது தாயை இழந்த அதிர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் எங்களை அப்பாவித்தனமாக பார்த்தன. அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.


"பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு பிணை இன்றி ரூ.50 லட்சம் கடன்" - மோடி உறுதி!
[Saturday 2019-04-20 08:00]

டெல்லியில் நேற்று நடந்த வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- வர்த்தகர்கள், வியாபாரிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. உங்களின் பங்களிப்பு இல்லை என்றால் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு அதிகரித்து இருக்காது. கடந்த 5 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் வியாபாரிகளுக்கு கடன் பெறுவதற்கான வசதிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது. உங்களின் ஓய்வு இல்லாத உழைப்பு என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும். வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படும். கடன் அட்டையும் அளிக்க இருக்கிறோம். சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.


‘சர்கார்’ பட பாணியில் மேலும் பல இடங்களில் ஓட்டுப்போட்ட வாக்காளர்கள்!
[Saturday 2019-04-20 08:00]

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘சர்கார்’ படத்தில் தன்னுடைய ஓட்டை இன்னொருவர் போட்டு விட்டார் என்று வாதாடி ஜெயிப்பது போன்று கதை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் கூறப்பட்ட 49பி என்ற சட்டப்படி நமது ஓட்டை இன்னொருவர் போட்டுவிட்டாலும் கூட 17 பி படிவம் மூலம் நாம் நமது வாக்கை அளிக்கலாம். இந்த பட காட்சிகளையும் வசனங்களையும் பயன்படுத்தி தேர்தல் ஆணையம் விளம்பரங்கள் வெளியிட்டது. இது நேற்றைய தேர்தலில் எதிரொலித்தது. கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் சினிமா பாணியில் நேற்று பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். சென்னை, தாம்பரத்தை அடுத்த முடிச்சூரைச் சேர்ந்தவர், கோபிநாத், தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர். நேற்று காலை 11 மணிக்கு, முடிச்சூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, ஓட்டளிக்க வந்தார். அவரது ஓட்டு, ஏற்கனவே, பதிவானதாக, ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த கோபிநாத், ஓட்டுச்சாவடி ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு, டெண்டர் ஓட்டு எனப்படும், ஆய்விற்குரிய ஓட்டு பதிய அனுமதிக்குமாறு, ஓட்டுச்சாவடி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து சர்கார் பட பாணியில், ‘49 பி’ விதியின்படி, ‘17 பி’ படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டு, ‘17 ஏ’ படிவத்தில், அவரது ஓட்டை, கோபி நாத் பதிவு செய்தார்.


வேலையின்றி தவித்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 500 பேருக்கு வேலை வழங்கிய 'ஸ்பைஸ் ஜெட்'.
[Saturday 2019-04-20 08:00]

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் முற்றிலுமாக முடங்கிப்போன ஜெட் ஏர்வேஸ் விமானச்சேவை நிறுவனத்தை சேர்ந்த விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்ததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போனது. இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டை பிடிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய விமானங்கள் வாங்கவும், வெளிநாடுகளில் இருந்து பல விமானங்களை வாடகைக்கு பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சிறுவனுடன் தொலைபேசியில் பேசி அதிர்ச்சியளித்த ராகுல் காந்தி!
[Friday 2019-04-19 16:00]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை வயநாடு மற்றும் அமேதி என இரு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த 17-ம் தேதி கேரளாவின் கண்ணூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் ராகுல் காந்தி. அப்பகுதியில் வசிக்கும் நந்தன் என்னும் ஏழு வயது சிறுவன் ராகுல் காந்தியை பார்க்க விரும்பியுள்ளான். ராகுல் காந்தியின் ரசிகனாக கூறப்படும் அந்த சிறுவன் காலை 5 மணி முதலே ராகுல் காந்தியை பார்க்க காத்திருந்துள்ளான். தனது பெற்றோருடன் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த சிறுவனால் கடைசியில் ராகுல் காந்தியை பார்க்க முடியாமல் போனது. ’எனக்கு மிகவும் பிடித்தவர்’ என்ற பதாகை உடன் காத்திருந்த சிறுவனுக்கு ஏமாற்றமாகியுள்ளது.


இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள்!
[Friday 2019-04-19 16:00]

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கந்தர்வாலி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு தனியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்கள், அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அந்தப் பெண் கூறிய இடத்திற்குச் செல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர்.


பா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் தனது விரலை துண்டித்த வாக்காளர்!
[Friday 2019-04-19 16:00]

உத்தரபிரதேசம் மாநிலம் ஷிகர்பூரை அடுத்த அப்துல்லாபூர் ஹூல சேன் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன்குமார் (25). இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர். நேற்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் பவன்குமாரின் ஊர் அடங்கிய புலந்த்சாகர் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஓட்டு போட பவன்குமார் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார். அப்போது சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சி வேட்பாளர் யோகேஷ் வர்மாவின் சின்னத்தை அழுத்துவதற்கு பதிலாக பா.ஜனதாவின் தாமரை சின்னத்தை அழுத்தி விட்டார்.


சர்கார் பட பாணியில் கள்ள ஓட்டு போடப்பட்ட தனது ஓட்டை திரும்ப பெற்ற நெல்லை வாக்காளர்!
[Friday 2019-04-19 16:00]

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால், 49 பி தேர்தல் விதிப்படி, தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.


12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
[Friday 2019-04-19 08:00]

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கு குறுந்தகவல்கள் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 19-ம் தேதியுடன் முடிந்தன. இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29-ல் தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.


மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணி இடை நீக்கம்!
[Friday 2019-04-19 08:00]

ஒடிசா மாநிலத்தில் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி பயன்படுத்திய ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தின் சம்பல்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடிஹெலிகாப்டரில் சென்றார். அங்கு அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரி முகமது மோஷின் சோதனை நடத்தினார்.


பாகிஸ்தான் எல்லைத் தாண்டிய வர்த்தகத்திற்கு இந்தியா தடை!
[Friday 2019-04-19 08:00]

பாகிஸ்தானுடன் எல்லைத் தாண்டிய வர்த்தகத்திற்கு இந்தியா தடை அறிவித்துள்ளது. எல்லைத் தாண்டி செல்லும் சரக்கு வாகனங்களில் ஆயுதங்கள், போதைப் பொருள், கள்ளநோட்டுகள் போன்றவை இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து சரக்குப் போக்குவரத்துக்கும் எல்லையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.எல்லையின் இருதரப்பில் வாழும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா