Untitled Document
April 18, 2024 [GMT]
"மாதந்தோறும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டம்" - இஸ்ரோ விஞ்ஞானிகள்!
[Saturday 2019-04-06 08:00]

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ‘ககன்யான்’ திட்டம் மூலம் 2021-ம் ஆண்டில் விண்வெளி ஆய்வுக்காக விஞ்ஞானிகளை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது. மேலும் பூமி கண்காணிப்பு, காலநிலையை முன்கூட்டி அறிந்து கொள்வது, தொலைதொடர்பு வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தி அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பாதுகாப்புக்கான செயற்கைகோள்களை அதிக அளவு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.


"இந்திய பத்திரிகையாளர் ஸ்ரீனிபாபு கெடேலாவுக்கு 346 கோடி அபராதம்" – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
[Saturday 2019-04-06 08:00]

பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் பல லட்சம் பணம் வசூலித்த இந்திய பத்திரிகையாளருக்கு சுமார் 346 கோடி ரூபாய் (50 million) அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஸ்ரீனிபாபு கெடேலா அமெரிக்காவில் OMICS, iMEDPub மற்றும் கான்பரன்ஸ் சீரிஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவர், தனது நிறுவனம் மூலம் வெளியாகும் ஆய்வு கட்டுரைகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்கள் திருத்தம் செய்வதோடு, பலர் பார்வையிட்டு கருத்து தெரிவிப்பர் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.


"பாகிஸ்தானின் போர் விமானம் வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது" - இந்திய விமானப்படை!
[Saturday 2019-04-06 08:00]

பாகிஸ்தானின் போர் விமானம் எப்.16 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 27ம் தேதி காஷ்மீரின் நவ்சேரா பகுதியில் பாகிஸ்தானின் 11 எப் 16 ரக போர் விமானங்கள், 13 ஜே.எப்.17 ரக விமானங்கள், மற்றும் மிராஜ் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகள் மீது குண்டு வீசுவதற்காக எல்லைத் தாண்டி வந்தன. இந்திய விமானப்படையினர் மிக் 21 பைசன் விமானங்கள் மூலம் அவற்றை எதிர்கொண்டு விரட்டியடித்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், எப் 16 விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினார். ஆனால் எப்.16 விமானங்களைப் பயன்படுத்தவே இல்லை என்று பாகிஸ்தான் மழுப்பி வருகிறது. எப்.16 விமானம் புறப்பட்ட இடத்திற்கு திரும்பவே இல்லை என்பதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறுகின்றனர். விமானம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் விழுந்து விட்டதால் நேரடியாக ஆதாரம் காண்பிக்க முடியாத போதும் இதர ஆதாரங்கள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்.16 தான் என்பதை நிரூபிக்க இந்திய விமானப் படையினரிடம் போதுமான ஆதாரம் இருப்பதாக கூறப்படுகிறது.ராடார் கருவிகளில் பதிவான சமிக்ஞைகள், எப் 16 மாயமான போது கண்காணிப்புத் திரையில் இருந்து அது காணாமல் போன குறியீடுகள், மின்னணு கையெழுத்துகள், இரண்டு பாராசூட்டுகளில் விமானிகள் குதித்து உயிர்தப்பியதை நேரில் கண்ட சாட்சிகள் என ஆதாரங்களை இந்திய விமானப்படை திரட்டியுள்ளது.


தமிழக மீனவர்கள் 18 பேர் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் கைது!
[Friday 2019-04-05 16:00]

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி, இலங்கை கடற்படையால் நடுக்கடலில் புதுச்சேரி மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி மீனவர்கள் 3 படகுகளில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 18 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களின் மூன்று படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.


"கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட இந்தியா அவமானத்தால் தலைகுனியவில்லை" – பிரதமர் மோடி.
[Friday 2019-04-05 16:00]

கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட இந்தியா அவமானத்தால் தலைகுனிய தாம் அனுமதித்ததில்லை என்றும், வலுவான அரசு இருக்க வேண்டியது ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியம் என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறினார். உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகாவில் ((Amroha)), பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என அப்போது அவர் குற்றம்சாட்டினார். தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்த பிறகு பதிலடி கொடுக்க வேண்டுமா அல்லது அமைதி காக்க வேண்டுமா என கூட்டத்தினரைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய மோடி, தீவிரவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.


அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி கைது!
[Friday 2019-04-05 16:00]

சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி சூரியின் மகன் ஜீசஸ்(வயது 32). இவன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகி உள்ளன. ரவுடியான ஜீசஸ் தனது பிறந்தநாளை சக ரவுடிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் கொண்டாடினான். அப்போது, பிரமாண்டமான கேக்கை சுமார் 2 அடி நீளமுள்ள அரிவாளால் வெட்டி ஜீசஸ் தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.


நூதனமாக ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த நபர்! Top News
[Friday 2019-04-05 16:00]

பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, தேர்தல் முறைகேடுகள் நடப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படையினரும் , காவல் துறையினரும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பணப்பட்டுவாடாவினை ஒழிக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு நின்றுக் கொண்டிருந்த பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.


பழைய கடனை திருப்பி செலுத்தாததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்!
[Friday 2019-04-05 16:00]

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன. இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது. அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. நேற்றைய நிலவரப்படி இந்நிறுவனத்தின் 16 வழித்தடங்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.


மோடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய காங்கிரஸ் முடிவு!
[Friday 2019-04-05 08:00]

அருணாசலபிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி பீமா காண்டு வாகன அணிவகுப்பில் சென்ற ஒரு காரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் 2 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் தங்கள் உறவினர்கள் ஒரு வேலைக்காக இந்த பணத்தை கொடுத்ததாக கூறியுள்ளனர். பா.ஜனதா தலைவரின் உறவினர்கள் கொடுத்த பணம் என்றால், நள்ளிரவில் அந்த பணத்தை முதல்-மந்திரியின் வாகன அணிவகுப்பில் எடுத்துச்சென்றது ஏன்? மறுநாள் (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய இருந்த இடத்துக்கு முதல்-மந்திரியின் வாகன அணிவகுப்பு சென்றுள்ளது. எனவே இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவே அந்த இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


"பிரசவத்தின் போது தாயின் உயிருக்கு ஆபத்து எனில் 4 மாத கருவைக் நீதிமன்ற அனுமதியின்றி கலைக்கலாம்" – உயர்நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2019-04-05 08:00]

தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கருவை நீதிமன்ற அனுமதியின்றி மருத்துவர் கலைக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க நீதிமன்றத்தின் அனுமதி அவசியமாகும். கருக்கலைப்புக்காக உயர்நீதிமன்றத்தின் அனுமதியை நாடி பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு தொடர்ந்து வருவதாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது. தாயின் உயிருக்கு உடனடி ஆபத்து ஏற்படும் என்றாலோ, அல்லது குழந்தை அசாதாரண நிலையில் பிறக்கும் என்றாலோ நீதிமன்ற அனுமதியின்றி பதிவு செய்த மருத்துவரே கருவைக் கலைக்கலாம் என மும்பை உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.


மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக 43 சதவீதம் பேர் ஆதரவு!
[Friday 2019-04-05 08:00]

பாலகோட் தீவிரவாத முகாம் மீது தாக்குதல்,விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களால் மோடிக்கு செல்வாக்கு கூடியிருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. ஜனவரி 7ம் தேதிக்கும் பிப்ரவரி 26ம் தேதிக்கும் இடையே வெளியான அறிவிப்புகளால் தேர்தல் நேரத்தில் மோடிக்கும் பாஜக அரசுக்கும் சாதகமான பலன்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.


"மோடி மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கும்" - மம்தா ஆவேசம்!
[Friday 2019-04-05 08:00]

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கூச்பேஹார் மாவட்டத்தில் உள்ள மாதாபங்காவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று உரையாற்றினார்.


பிரதமர் மோடிக்கு உயர்ந்த குடிமகனுக்கான விருது வழங்குகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!
[Thursday 2019-04-04 17:00]

ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது. அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த குடிமகனுக்கான விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் உறவுகளை பராமரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை அநாட்டு அரசு பாராட்டியுள்ளது.


கூகுள் தளங்களில் அதிக விளம்பரம் செய்த பட்டியலில் பாஜக முதலிடம்...
[Thursday 2019-04-04 17:00]

கூகுள் தளங்களில் அதிக தேர்தல் விளம்பரங்கள் செய்த கட்சிகளின் பட்டியலில் பா.ஜ.க. முதலிடம் பிடித்துள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை கூகுளில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவுக்கு 831 தேர்தல் விளம்பரங்களை அரசியல் கட்சிகள் செய்துள்ளன. இதில் பாஜக, 554 விளம்பரங்கள் செய்து ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாக கூகுள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது கூகுளில் செய்யப்பட்ட மொத்த தேர்தல் விளம்பரங்களில் 32 விழுக்காடு ஆகும்.


நரேந்திர மோடியை “காலாவதியான மோடி” எனக் குறிப்பிட்ட மம்தா பானர்ஜி!
[Thursday 2019-04-04 17:00]

பிரதமர் மோடியை “காலாவதியான மோடி” என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வேகத்தடை என்று குறிப்பிட்டிருந்தார்.


"தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு"- இலங்கை அட்டூழியம்!
[Thursday 2019-04-04 17:00]

கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மீனவர்களின் படகுகள் உடைந்து சேதமாகின. இதனால் பெரும்பாலான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடந்த 4 மாதங்களாக முடங்கி கிடந்தனர். சில மீனவர்கள் சேதமான படகை சீரமைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் கோடியக் கரையில் தங்கி மீன்பிடித்து வந்தனர். சீசன் முடிந்ததால் பல மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். தற்போது கோடியக்கரையில் பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை ஆகிய இடங்களை சேர்ந்த மீனவர்கள் மட்டும் தங்கியிருந்து மீன்பிடித்து வருகின்றனர்.


காதலிக்க மறுத்த இளம்பெணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற வாலிபர்!
[Thursday 2019-04-04 16:00]

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது சியாரம். இந்த பகுதியை சேர்ந்தவர் நீது (வயது 22). அதே பகுதியில் உள்ள வடக்கேகோட்டையை சேர்ந்தவர் நிதிஷ் (24). நீனுவை பல நாட்கள் பின் தொடர்ந்த நிதிஷ் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தினார். ஆனால் நீது மறுத்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு இளம்பெண்ணின் வீட்டிற்கு நிதிஷ் சென்றார். அப்போது பெண்ணின் பெற்றோரும் இருந்தனர். நீதுவை தனியே அழைத்த நிதிஷ் தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தினார். காதலிக்க முடியவே முடியாது என்று இளம்பெண் தீர்மானமாக கூறினார்.


கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
[Thursday 2019-04-04 07:00]

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடிக்கபட்ட 11 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த அருளப்பர், பால்ராஜ், செல்வம் உள்ளிட்ட 11 மீனவர்கள், கடந்த மாதம் 24ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.


மதுரையில் தேர்தல் பறக்கும் படையால் நடத்தப்பட்ட சோதனையில் 47 கிலோ தங்கம் சிக்கியது!
[Thursday 2019-04-04 07:00]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வண்ணம் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை மதுரை அய்யர்பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகள் இருந்தன. உடனே அதிகாரிகள் அதனை எடை போட்டு பார்த்தனர். அதில் 47 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள நகை கடைகளுக்கு தங்கம் கொண்டு செல்வது தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் வேனுடன் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


"காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய்களால் நிரம்பியது" - மோடி விளாசல்!
[Thursday 2019-04-04 07:00]

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் நேற்றுமுன்தினம் வெளியிட்டனர். இதில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரப்படும் என்பவை உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, அருணாசல பிரதேச மாநிலம், பசிகாட் நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.


10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை- குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ரத்து!
[Thursday 2019-04-04 07:00]

தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின் மற்றும் குமரேசன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தண்டனை வழங்கப்பட்டது. அதில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


"செல்வந்தர்களின் பணத்தை எடுத்து ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்துவோம்" - ராகுல் காந்தி பேச்சு.
[Thursday 2019-04-04 07:00]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலம் லாகிம்பூர் பாராளுமன்ற தொகுதி, போகாகாட் நகர் மற்றும் நாகாலாந்து மாநிலம் திமாபூர் ஆகிய இடங்களில் நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தில் இருந்து அனைத்து பணத்தையும் எடுத்துவிட்டார். சாதாரண மக்களிடம் இருந்து எடுத்த பணத்தை சிலரின் வங்கி கணக்கில் செலுத்திவிட்டார். இதன்மூலம் அவர் பொருளாதாரத்தில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்திவிட்டார். மக்களின் பணப்புழக்கம் நின்றுவிட்டது. காங்கிரஸ் அறிவித்துள்ள குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தில் பணம் செலுத்தப்படுவதன் மூலம் இந்த தேக்கநிலை சீரடையும். இதன்மூலம் மக்களின் கைகளில் பணம் புழங்குவது உறுதி செய்யப்படும். மக்களின் கணக்கில் பணம் போடப்படும் என்று கூறிய மோடி சில பணக்கார வர்த்தகர்களின் பாக்கெட்டுகளில் அந்த பணத்தை போட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கடந்த 4 ஆண்டுகளாக அந்த திருட்டு பணக்கார வர்த்தகர்களுக்கு சென்ற பணத்தை எடுத்து இந்த திட்டத்தின் மூலம் ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்துவோம். அந்த பணத்தில் ஒருவேளை அவர்கள் புதிய ஆடைகள் வாங்கலாம். இதனால் ஆடைகளுக்கு தேவை அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதன்மூலம் பொருளாதாரத்தில் மீண்டும் பணப்புழக்கம் ஏற்படும்.


இந்தியாவுடனான ரூ.16,300 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல்!
[Wednesday 2019-04-03 17:00]

ஏறத்தாழ 16 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பில், எம்எச் 60 ரகத்தை சேர்ந்த 24 ரோமியோ சீஹாக் என்ற பல்முனைப் பயன்பாடுகளை கொண்ட ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்டின் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்க இருக்கிறது. இந்தியாவின் கடல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும். குறிப்பாக நீர்மூழ்கி கப்பல்கள் எதிர்ப்பு திட்டங்களில் இவை செயல்படுத்தப்படும்.


பப்ஜி விளையாட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!
[Wednesday 2019-04-03 17:00]

பப்ஜி விளையாட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஐதாரபாத்தில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்த சிறுவன் கல்லக்குரி சம்பசிவா, ஆண்டு இறுதி தேர்வுக்கு தன்னை தயார் செய்யாமல் செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்துள்ளான்.


"ரஃபேல் பேரம் தொடர்பான புத்தகம்" - 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை!
[Wednesday 2019-04-03 17:00]

தேர்தல் பணியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட, ரஃபேல் பேரம் தொடர்பான புத்தகம் 8 ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாகவும் இணைய தளத்திலிருந்து பல ஆயிரம் தடவைகள் டவுன் லோடு செய்யப்பட்டிருப்பதாகவும் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் தெரிவித்துள்ளது. பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் செவ்வாய்க் கிழமையன்று 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' என்ற தலைப்பில் எஸ். விஜயன் என்பவர் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக பாரதி புத்தகாலயம் அறிவித்திருந்தது. ஆனால், துவக்கம் முதலே இந்தப் புத்தக வெளியீட்டில் தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகி நாகராஜ் பிபிசியிடம் தெரிவித்தார். "முதலில் ஆழ்வார்பேட்டையில் ஒரு ஹாலில் வெளியிடுவதாக தீர்மானித்திருந்தோம். ஆனால், அங்கு சென்று சிலர் கேள்வியெழுப்பியதால் அவர்கள் இடம் தர மறுத்துவிட்டனர். இதற்குப் பிறகு வேறொரு ஹாலில் வெளியிட தீர்மானித்தோம். அங்கும் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டன. இதையடுத்து எங்கள் கடையிலேயே வெளியீட்டு விழாவை நடத்தத் தீர்மானித்தோம். இந்த நிலையில் காலை 11 மணியளவில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்தவர் எனக் கூறிக் கொண்டு எஸ். கணேஷ் என்பவர் காவல்துறையினருடன் வந்தார்.


"ஜாதி, மதங்களால் அரசியல் கட்சிகள் மக்களை பிளவுபடுத்தி உள்ளது"- சீமான் ஆவேசம்!
[Wednesday 2019-04-03 17:00]

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நாம் தமிழர் கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:- மாட்டுக்கே நீதி வழங்கிய மனுநீதி சோழன் வாழ்ந்த தமிழகத்தில் தற்போது அநீதி நடக்கிறது. சமூகம் சீர்கெட்டு கிடக்கிறது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. நன்னெறி கல்வி இல்லாததுதான் இதுபோன்ற சூழலுக்கு காரணமாக உள்ளது. மாணவர்களுக்கு நீதி, ஒழுக்கம் போன்றவற்றை கற்றுத்தரவேண்டும். பெண்களை போற்றவேண்டும். பெண்களுக்கு மதிப்பு அளிக்காத இடம் முன்னேறாது. நாம் தமிழர் கட்சி தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 20 பெண்களை போட்டியிட வைத்துள்ளது. கல்வி தனியார் மயமாக உள்ளது. மருத்துவம் வியாபாரமாக உள்ளது. அரசு பள்ளியும், அரசு மருத்துவமனையும் இருக்கிறது. ஆனால், தரமில்லை. அரசு பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்கவைப்பதில்லை. ஏனென்றால், அரசு பள்ளியில் தரமில்லாத நிலை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் அரசியல் தலைவர்கள் சிகிச்சை பெறசெல்வதில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாறும். நாம் தமிழர் கட்சி வாக்காளர்களுக்கு பணம் தருவதில்லை. உயர்ந்த கொள்கைகளை கொண்டுள்ளது.


நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்!
[Wednesday 2019-04-03 17:00]

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் காட்வின் வேத நாயகம் ராஜ்குமார் (வயது 45). இவர் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை நீச்சல், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க வைத்து உற்சாகப்படுத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான நீச்சல்குளத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடந்தன. இதில் இந்தப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்குசாமி (9-ம் வகுப்பு), தீபன்ராஜ் (10-ம் வகுப்பு), முத்து கணபதி (பிளஸ்-1), முகேஷ்குமார் (பிளஸ்-2) ஆகியோர் 2 பிரிவுகளில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றனர். முன்னதாக இந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர் காட்வின், போட்டியில் பதக்கம் பெற்றால் விமானத்தில் அழைத்துச் செல்வதாக உறுதி கூறியிருந்தார்.


400க்கும் மேற்பட்ட இந்தியர்களை விடுதலை செய்ய பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்!
[Wednesday 2019-04-03 08:00]

தண்டனைக் காலம் முடிந்த பிறகும் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 10 கைதிகள், 385 மீனவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா