Untitled Document
March 28, 2024 [GMT]
பாகிஸ்தான் கைதியை அடித்துக் கொன்ற இந்திய சிறைக் கைதிகள்!
[Thursday 2019-02-21 08:00]

பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக காவல்துறை கூறுகிறது. ஜெய்பூர் மூத்த காவல் அதிகாரி லக்ஸ்மன் கௌடு சிறைக்கு வெளியில் கூடிய பத்திரிகையாளர்களிடம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். தொடக்கத்தில் தொலைக்காட்சியின் ஒலி தொடர்பாக சர்ச்சை எழுந்து, பின்னர் இது கொலையில் முடிந்துள்ளது என்று கௌடு தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்த சம்பவம் பற்றிய தகவல் வெளியானவுடன், காவல்துறை விரைவாக செயல்பட்டது. டி.ஜி.பி என்.ஆர்.கே ரெட்டி உள்பட மூத்த அதிகாரிகள் சட்டவியல் ஆய்வு குழுவினருடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவம் பற்றிய சரியான விவரங்கள் வெளிவரும் வகையில், விசாரணை நடைபெற்று வருவதாக கௌடு கூறியுள்ளார்.


காதலியின் முத்தத்திற்காக பர்தா அணிந்து சுற்றிய காதலன்!
[Thursday 2019-02-21 08:00]

சென்னையில் காதலி முத்தம் தருவதாக கூறியதால், பர்தா அணிந்தவாறு சுற்றித்திரிந்த மாணவரை, திருடன் என்று நினைத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "சென்னை பட்டாபிராமை சேர்ந்தவர் சக்திவேல். ஐ.டி.ஐ. மாணவரான இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். கடந்த 14-ந் தேதி காதலர் தினத்தன்று, சக்திவேல் மெரினா கடற்கரையில் காதலியை சந்தித்தார். அப்போது காதலியிடம் அன்பான முத்தம் ஒன்றை காதலர் தின பரிசாக கேட்டார். முத்தம் கொடுப்பதற்கு, சக்திவேலின் காதலி நிபந்தனை விதித்தார். பர்தா அணிந்து பெண் வேடம் போட்டு ராயப்பேட்டையில் இருந்து மெரினா கடற்கரை வரை நடந்து வந்தால் முத்தம் தருவதாக காதலி சொன்னார். இந்த நிபந்தனைக்கு சக்திவேல் ஒப்புக்கொண்டார். காதலியின் நிபந்தனையை சக்திவேல் நிறைவேற்ற முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை, ராயப்பேட்டையில் உள்ள தனது காதலியின் வீட்டின் அருகில் இருந்து, பர்தா அணிந்து பெண் வேடம் தரித்து சக்திவேல் மெரினா நோக்கி நடந்து சென்றார். மெரினாவில் அவரது காதலி காத்திருந்தார்.


'இந்தியா - சவுதி' நாடுகளுக்கு இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
[Wednesday 2019-02-20 17:00]

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசருக்கு பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியினால் வரவேற்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, சவுதி இளவரசர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.


காஷ்மீருக்கு மற்றுமொரு தற்கொலைப்படை தாக்குதல் எச்சரிக்கை!
[Wednesday 2019-02-20 17:00]

காஷ்மீரில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படும் என ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் அண்மையில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பும் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ரியாஸ் நைகூ வெளியிட்டுள்ள குரல் ஒலிப்பதிவு ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த குரல்பதிவில்,


பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் - சவுதி இளவரசர் அறிவிப்பு!
[Wednesday 2019-02-20 17:00]

சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பில் சல்மான் இருநாள் அரசுமுறை பயணமாக நேற்றிரவு டெல்லி வந்தார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் முப்படையினரின் அணிவகுப்புடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் சவுதி இளவரசர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதனைதொடர்ந்து, இருநாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா-சவுதி அரேபியா இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சுற்றுலா, ஒளிபரப்பு உள்ளிட்ட 5 துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்த ஒப்பந்தத்தையடுத்து, சவுதி இளவரசரும் பிரதமர் மோடியும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். புல்வாமா தாக்குதலை சுட்டிக்காட்டி பேசிய மோடி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.


அனில் அம்பானிக்கு '450 கோடி ருபாய்' அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
[Wednesday 2019-02-20 17:00]

ஸ்வீடனில் தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம்தான் எரிக்சன். அந்நிறுவனத்திடமிருந்து சாதனங்களை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை திருப்பிச் செலுத்த தவறிவிட்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம். இதன் காரணமாக அனில் அம்பானி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது எரிக்சன் நிறுவனம். இறுதியாக, செட்டில்மென்ட் தீர்வு மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனிடமிருந்து 550 கோடி ரூபாய் பணத்தை பெற சம்மதித்தது. அதனை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பணத்தை செலுத்ததால் உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது எரிக்சன் நிறுவனம்.


"சவுதி இளவரசர் டெல்லி வந்தார்" - பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!
[Wednesday 2019-02-20 08:00]

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசுமுறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் இரண்டு நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் இன்று இரவு சுமார் 9 ம்ணியளவில் டெல்லி வந்து சேர்ந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார். மேலும், வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.


பாகிஸ்தான் எல்லையில் இருந்து கேஸ் சிலிண்டருக்குள் 'ஆர்.டி.எக்ஸ்' கடத்தல்: அதிர்ச்சி தகவல்.
[Wednesday 2019-02-20 08:00]

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத பயிற்சி முகாம்களில் இருந்து வாங்கப்பட்ட 80 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை கேஸ் சிலிண்டருக்குள்ளும், நிலக்கரி சாக்குப்பைகளிலும் வைத்து தீவிரவாதிகள் இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.


"மீண்டும் எங்களை தேர்ந்தெடுத்தால் வளர்ச்சிப்பணிகள் தொடரும்" - பிரதமர் மோடி உறுதி!
[Wednesday 2019-02-20 08:00]

பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதிக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக நேற்று சென்றார். அங்கு அவர் 15, 16-ம் நூற்றாண்டில் பிரபலமாக விளங்கிய பக்தி இயக்கத்தை சேர்ந்த குரு ரவிதாஸ் பிறப்பிட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டிலேயே முதன்முதலாக டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றி இயக்கப்படுகிற ரெயிலை அவர் பச்சைக்கொடியசைத்து தொடங்கியும் வைத்தார். இதையொட்டி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நடந்த இந்த விழாவிலும், தொடர்ந்து ஒரு பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் இங்கு வந்தேன். குருவின் ஆசிகளைப் பெற்றேன். நாம் அனைவரும் குரு ரவிதாஸ் காட்டிய பாதையை பின்பற்றினால், நமது சமூகத்தில் பெருமளவுக்கு ஊழல் இருக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நடக்காமல் போய் விட்டது. குரு ரவிதாஸ், சாதியின் அடிப்படையில் எந்த விதமான பாகுபாடும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். சாதிய பாகுபாடு இருக்கிறவரையில், மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாது. சமூக நல்லிணக்கம் சாத்தியப்படாது. சமத்துவம் உறுதி செய்ய முடியாது.


காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனத்திடம் '20 கோடி' லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள்.
[Wednesday 2019-02-20 08:00]

தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் வெவ்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்ட தங்களது நிறுவனத்தின் கட்டடங்களுக்கு பல்வேறு அனுமதிகளை பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட், அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புனே நகரங்களில் 2012 முதல் 2016 -ம் ஆண்டு வரையிலான காலத்தில் தங்களது நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்த லஞ்ச பணப்பரிமாற்றம் குறித்து அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பிடம் காக்னிசன்ட் நிறுவனம் தானே முன்வந்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில், அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக காக்னிசன்ட் நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 178 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


புல்வாமா தாக்குதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- மம்தா பானர்ஜி.
[Tuesday 2019-02-19 17:00]

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் புல்வாமாவில் மத்திய படை மீது கடந்த 14-ந்தேதி தாக்குதல் நடந்திருக்கிறது. உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தும் அதை முறையாக தடுக்காமல் இருந்துள்ளனர். ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் அதுவும் பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் தாக்குதல் நடந்திருக்கிறது. நான் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் எனக்கு இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீது ஏன் முன்கூட்டியே கடும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன்? இதற்கு பதில் சொல்ல வேண்டும்.


"சாகச ஒத்திகையின்போது நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானப்படை விமானங்கள்" - ஒரு பைலட் பலி!
[Tuesday 2019-02-19 17:00]

பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்க உள்ளது. 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. விமானத் தொழில் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொழிலை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இந்த கண்காட்சியில், பல்வேறு வகையான விமானங்களின் தொழில்நுட்ப சாகசம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், எலஹங்கா தளத்தில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற சூரிய கிரண் பிரிவைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் பயிற்சியின்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து தீப்பிடித்தன. இரண்டு விமானங்களும் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தெரிகிறது.


குஜராத்தை தாக்க பயங்கரவாதிகள் ஊடுருவல்?- மாநிலம் முழுவதும் பாதுகாப்பு!
[Tuesday 2019-02-19 17:00]

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ரஷித் என்ற கம்ரன் நேற்று காஷ்மீரில் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தீவிரவாதி கம்ரன் தலைமையில் 21 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியது தெரிய வந்தது. அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சென்றதாக உளவுத்துறை தற்போது கண்டுபிடித்துள்ளது. அதில் ஒரு பிரிவினர் குஜராத் மாநிலத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மாநில உளவுத்துறையும் எச்சரித்துள்ளது.


"48 மணி நேரத்திற்குள் அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும்"- பிகானர் கலெக்டர் அதிரடி!
[Tuesday 2019-02-19 17:00]

காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். பல்வேறு நாடுகளின் தலைவரும், அமைப்புகளும் இந்த கோர தாக்குதலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். தாக்குதலைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானர் கலெக்டர் குமார் பால் கவுதம், அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பிகானர் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் 2019 : அதிமுக கூட்டணியில் பாமகவுடன் பாஜகவும் அதிகாரபூர்வமாக இணைந்தது!
[Tuesday 2019-02-19 17:00]

இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற சந்திப்பில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இந்த சந்திப்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் பாஜக தரப்பில் முரளிதர்ராவ், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக - பாஜக இடையே மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கும் பாஜக ஆதரவை தெரிவிக்கும்'' என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ''இந்த சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறோம். நாற்பதும் நமக்கே'' என பியூஷ் கோயல் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் '16 கோடி' பேர் மது குடிக்கிறார்கள் - ஆய்வில் தகவல்!
[Tuesday 2019-02-19 08:00]

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிலையத்துடன் இணைந்து


"புல்வாமா தாக்குதலில் அதிநவீன தொழில்நுட்பம்!" - வெளிவராத தகவல்.
[Tuesday 2019-02-19 08:00]

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் இந்தியப் படைகளை தாக்குவதற்காக பயங்கரவாதிகள் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு ஒய்எஸ்எம்எஸ் என்ற அதிநவீன மென்பொருள் மூலமாகவோ அல்லது அதுபோன்ற மொபைல் செயலி மூலமோ பயங்கரவாதிகள் தகவல் தொடர்பில் இருந்திருக்கலாம் எனப் பாதுகாப்புத் துறையினரும், உளவுத் துறையினரும் யூகித்துள்ளனர். உளவுத் துறையினரின் தீவிர ஆய்வுக்குப் பின் சிக்கிய ஒரு ஒய்எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி அடிப்படையில் அவர்கள் இத்தகைய நவீன நுட்பங்களை பயன்படுத்தியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: இந்திய ராணுவத்தின் அடுத்த வேட்டை யார்?...
[Tuesday 2019-02-19 08:00]

காஷ்மீரில் இந்திய துணை ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு காரணமாவர்கள் தொடர்பில் தகவல் வெளியான நிலையில் அவர்களை வேட்டையாடும் பணி தீரவம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் முக்கிய நபரான காஸி பாகிஸ்தானில் உள்ள கைபர் பகுதியை சேர்ந்தவன். அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கானும் அதே பகுதியை சேர்ந்தவர் தான். காஸிக்கும் லஷ்கர் இ தொய்பா இயக்க தலைவர் ஹபீஸ் சயீதுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. காஸிக்கு வெடிகுண்டு செய்யும் பயிற்சியை குஹாஷியே அளித்துள்ளான். பாகிஸ்தான் பழங்குடி பகுதிகளில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய அனுபவம் உள்ளவன்.


சவுதி இளவரசர் 'முகமது பின் சல்மான்' இன்று இந்தியா வருகை!
[Tuesday 2019-02-19 08:00]

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு, 2 நாள் பயணமாக சல்மான் இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.


உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய அணி வீரர் முகமது ஷமியின் நிதியுதவி!
[Tuesday 2019-02-19 07:00]

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளார். தீவிரவாத கொடூர தாக்குதலில் உயிரிழந்த ஒவ்வொரு சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அறிவித்துள்ளார்.


நகைக்காக நடிகையை கொலை செய்த காதலன்:
[Tuesday 2019-02-19 07:00]

சென்னை கொளத்தூரில் கடந்த 12 ஆம் திகதி நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். யாஷிகா இறந்துபோவதற்கு முன்னர் தனது தாய்க்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார். அதில், தன்னை நம்பி வந்த என்னை ஏமாற்றிவிட்டார், நான் இறந்தபிறகு எனது காதலன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.


13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் சிக்கினர் !
[Monday 2019-02-18 19:00]

13 வயது சிறுமியை மதுபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நடந்ததை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற அந்த சிறுமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பலரையும் அதிர்ச்சியடைய வைத்த இந்த சம்பவத்தின் முழுப் பின்னணி என்ன?


புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி ராணுவத்தினரால் சுட்டுக்கொலை!
[Monday 2019-02-18 17:00]

காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டம் போர்க்களம் போல் மாறி உள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கம் இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து வந்தது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அவற்றை முறியடித்த நிலையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்தின் மூலம் இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் கோழைத்தனமாக செய்து உள்ளனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிறகு மீண்டும் கைவரிசை காட்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை உளவுத்துறை கண்டறிந்து எச்சரித்தது. இதைத் தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தை


தாக்குதலுக்கு முன் பயங்கரவாதி 'ஆதில்' நெடுஞ்சாலையில் 3 முறை கார் ஓட்டி ஒத்திகை - அதிர்ச்சி தகவல்!
[Monday 2019-02-18 17:00]

புல்வாமா நகரில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலை நடத்தியவன் பெயர் ஆதில் அகமதுதார். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவனை மிகவும் திட்டமிட்டு ஜெய்ஷ்-இ- முகமது தலைவன் மசூத் அசார் தேர்வு செய்து இருந்தான். பாகிஸ்தான் உள்பட வெளிநாட்டு பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசுக்கு குறிப்பாக இம்ரான் கானுக்கு நெருக்கடி வரும் என்பதால் காஷ்மீரைச் சேர்ந்த ஆதிலை தேர்வு செய்துள்ளனர். இவன் சிறு வயதிலேயே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டான். முதலில் இவன் ஜாகீர் மூஷா என்பவன் நடத்திய அன்சார் காஸ்வத் உல் ஹிந்த் என்ற இயக்கத்தில் இருந்தான். ஆனால் அந்த இயக்கத்துக்கு காஷ்மீர் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த இயக்கம் அல் கொய்தா இயக்கத்தின் ஒரு பிரிவாக காஷ்மீரில் இயங்கி வந்தது. ஆனால் இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி விட்டனர். 4 பேர் மட்டுமே மிஞ்சி இருந்தனர்.


பயங்கரவாதத்துக்கு எதிராக பிரதமர் மோடி மற்றும் அர்ஜென்டினா அதிபர் கூட்டுப் பிரகடனம்.
[Monday 2019-02-18 17:00]

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிகியோ மக்ரி டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். பின்னர், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இருநாடுகளுக்கும் இடையில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, அணுஎரிசக்தி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பின்னர், இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது பேசிய மோடி,


'ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தடை' - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
[Monday 2019-02-18 17:00]

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழக அரசின் முடிவை மீறி வேதாந்தா நிறுவனம் தனது ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முந்தைய உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் தொடர்பான மற்றனைத்து விவகாரங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் அரசியலமைப்பு நீதிமன்றங்களிலே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், இனி ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலேயே மேல்முறையீடு செய்ய முடியும்" என்றும் தெரிவித்தார். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராம்நாத் இந்த தீர்ப்பு குறித்து கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, நாங்கள் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவசர வழக்காக எடுக்க செய்வோம்" என்றார். பல நாட்களாக, ஆலை இயங்காததால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இயந்திரங்கள் பழுதாகியுள்ளன. அதுதான் எங்களை மேலும் வருத்தப்பட வைத்துள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.


'இந்தியாவிடம் தாக்குதலுக்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும்' - பாகிஸ்தான் சவால்!
[Monday 2019-02-18 08:00]

ஜெய்ஷே முகமது பயங்கரவாத இயக்கத்தை 2002ம் ஆண்டு முதல் தடை செய்திருப்பதாகவும், அந்த இயக்கத்தின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. புல்வாமாவில் 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரின் உயிரைப் பறித்த கொடிய தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, ஜெய்ஷே முகமது போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு, இந்தியாவிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் என்று சவால் விடுத்துள்ளது. ஜெய்ஷே முகமது இயக்கத்தை 2002ம் ஆண்டு முதல் தடை செய்திருப்பதாகவும், அந்த இயக்கத்தின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுதத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா தனது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் மீது பழியைப் போடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.


"காங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது": பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா
[Monday 2019-02-18 08:00]

குடும்ப அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியால், நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா