Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியாவில் இப்படியும் ஒரு முதல்வர்!
[Sunday 2013-01-27 08:00]

திரிபுரா மாநிலத்தில் 1998-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து முதல்- மந்திரியாக இருந்து வருபவர் மாணிக்சர்கார். மார்க்கிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் உயர் மட்டக்குழு உறுப்பினரான அவர் 3-வது முறையாக முதல்- மந்திரியாக பொறுப்பு வகித்து வருகிறார். 64 வயதான மாணிக்சர்கார் இந்தியாவின் ஏழ்மையான முதல்- மந்திரி ஆவார். குர்தா மற்றும் பைஜாமா உடையில் எப்போதுமே எளிமையாக இருப்பார். கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அவர் கையில் இருந்த பணம் ரூ.1080 ஆகும்.


திமுக எம்.பி சிவாவின் மகள் திருமணத்தில் கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு?
[Sunday 2013-01-27 08:00]

தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், திருச்சியில் நடக்கும் அக்கட்சி எம்.பி., மகள் திருமணத்திற்கான அழைப்பிதழ், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திடம் நேரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு நடக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வை துவங்குவதற்கு முன், 2004ம் ஆண்டு, பிப்., மாதம், 4ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்தித்து பேசினார். கட்சி ஆரம்பித்த பிறகு, 2006ம் ஆண்டு, சட்டசபை, தேர்தலில் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார்.அந்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக, விஜயகாந்த் தீவிர பிரசாரம் செய்தாலும், அக்கட்சியே ஆட்சியை கைப்பற்றியது.


"பிற்படுத்தப்பட்டவர்களே ஊழல் பேர்வழிகள்" - விமர்சகர் பேச்சால் இலக்கிய விழாவில் மோதல்!
[Sunday 2013-01-27 08:00]

ஊழல் பேர்வழிகளில் பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி, எஸ்.டியினர் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்த கருத்தால் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் மோதல் ஏற்பட்டது.ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இலக்கிய விழா நடைபெறுகிறது. இதில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட அரசியல் விமர்சகர் ஆஷிஷ் நந்தியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பேசுகையில், ஊழல் பேர்வழிகளில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி, எஸ்.டி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.


லோக்சபா தேர்தலில் மண் கவ்வும் காங்கிரஸ் - கருத்துக்கணிப்பில் தகவல்!
[Saturday 2013-01-26 18:00]

எதிர்வரும் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியடையும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பிரபல ஆங்கில நாளேடு ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், 2014 லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, 152 முதல் 162 இடங்களை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 198 முதல் 208 இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.


மத்திய அரசைக் கண்டித்து பத்மபூஷன் விருதை நிராகரித்தார் பிரபல பாடகி எஸ்.ஜானகி!
[Saturday 2013-01-26 18:00]

மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகள் பெரும்பாலும் வட இந்திய கலைஞர்களுக்கே அதிகம் வழங்கப்பட்டதைக் கண்டித்து தமக்கு வழங்கப்படும் பத்மபூஷன் விருதை வாங்கப் போவதில்லை என்று பிரபல பாடகி எஸ். ஜானகி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த எஸ். ஜானகி, பத்ம விருதுகளுக்குப் பெரும்பாலும் வட இந்தியக் கலைஞர்களே பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. இதனால் எனக்குக் கொடுக்கப்பட பத்ம்பூஷன் விருதை வாங்க மாட்டேன் என்றார் அவர்.


ஆந்திராவில் ஆயுதம் ஏந்தும் செம்புலிகள்!
[Saturday 2013-01-26 18:00]

ஆந்திராவில் வரலாறு திரும்புகிறது... 1940களின் இறுதியில் இந்தியாவையே அதிர வைத்தது தெலுங்கானா விவசாயிகளின் ஆயுத முனையிலான வர்க்கப் போராட்டம்.. இப்போது அதே தெலுங்கானா பிரதேசம் "தனி மாநில" கோரிக்கைக்காக ஆயுதமேந்தப் போவதாக பிரகடனம் செய்திருக்கிறது.தெலுங்கானா யுவசேனா மற்றும் தெலுங்கானா செம்புலிகள் ஆகியவற்றின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், தெலுங்கானாவை எதிர்ப்போர் அழித்தொழிக்கப்படுவர்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "ஆந்திர அரசே விலகிக் கொள்.. தெலுங்கானாவே எங்களது இலக்கு" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


விஸ்வரூபம் சர்ச்சையால் பத்ம விருது பட்டியலில் இருந்து கமல் நீக்கம்?
[Saturday 2013-01-26 18:00]

மத்திய அரசின் உயரிய விருதான பத்பூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது. விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் யோசிக்க வைத்துள்ளன.


வெளிநாட்டுத் தூதர்களைச் சந்திக்க புதுடெல்லி செல்கிறது டெசோ தலைவர்களின் குழு!
[Saturday 2013-01-26 18:00]

இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி ஈழத்தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டு சமத்துவம், அமைதி நிறைந்த வாழ்வு மேற்கொள்ள இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐ.நா. சபை தீவிர அழுத்தம் தரவேண்டும் என்று வற்புறுத்துவதற்காக, ஐ.நா. சபையை வலியுறுத்தும் வகையில் அதன் உறுப்பு நாடுகளை வற்புறுத்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு முடிவு செய்துள்ளது.


ராஜபக்ச இந்தியா வந்தால் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிடுவோம்! - வைகோ எச்சரிக்கை
[Saturday 2013-01-26 18:00]

இலங்கை அதிபர் ராஜபக்ச இனிமேல் இந்தியாவுக்கு வந்தால் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். நாகை மாவட்டம் மயிலாடு துறையில் ம.தி.மு.க. சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:


விஸ்வரூபம் படப் பிரச்சினை - திரைப்படத் தணிக்கைக் குழுவைச் சீரமைக்க வேண்டும்! - தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!
[Saturday 2013-01-26 12:00]

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் சமூகச் சிக்கலாக இப்போது உருமாறியிருக்கிறது. படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இசுலாமிய அமைப்புகளும், படத்தை அனுமதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் போன்ற திரைப்படக் கலைஞர்களும் பேசி வருகின்றனர். இதனால் தமிழ்ச் சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தக்கூடிய ஆபத்து உருவாகியிருக்கிறது. எனவே, தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினையில் சுமூகமாகத் தீர்வு காண வேண்டும்.


போர்ப்ஸ் வெளியிட்ட புகழ்பெற்ற 100 இந்தியர்களின் பட்டியல் - முதலிடத்தில் ஷாருக்கான்!
[Saturday 2013-01-26 09:00]

அதிக சம்பாத்தியம், அதிக புகழ்பெற்ற, 100 இந்தியர்கள் பட்டியலில், பாலிவுட் நடிகர், ஷாருக் கான் முதலிடம் பிடித்துள்ளார்.அமெரிக்காவின் பிரபல, "போர்ப்ஸ்' பத்திரிகை, 2011, அக்டோபர் முதல், 2012 செப்டம்பர் வரை, அதிக சம்பளம், அதிக புகழ் பெற்ற இந்தியர்கள், 100 பேர் பட்டியலை தயாரித்துள்ளது.சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், "டிவி' பிரபலங்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், மாடலிங் துறை பிரபலங்கள், காமெடி நடிகர்கள் என, எட்டு பிரிவுகளில் பிரபலங்கள் பட்டியலிடப்பட்டிருந்தனர்.அதில், 203 கோடி ரூபாய் சம்பளம் பெற்று, பிறரை விட அதிக புகழையும் பெற்றுள்ள, பாலிவுட் நடிகர், ஷாருக் கான் முதலிடத்தை பிடித்துள்ளார்.


யாருடன் கூட்டணி? -பொதுக்குழுவில் பிடிகொடுக்காமல் நழுவினார் விஜயகாந்த்!
[Saturday 2013-01-26 09:00]

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, "கல்தா' கொடுக்கப்பட்ட, தே.மு.தி.க., லோக்சபா தேர்தலில், யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு, அக்கட்சியின் பொதுக்குழுவில் விடை கிடைக்கவில்லை. "தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, நேரம் வரும்போது அறிவிப்பேன்' என, விஜயகாந்த், "சஸ்பென்ஸ்' வைத்ததால், நிர்வாகிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த, தே.மு.தி.க., கடந்த ஆண்டு, கூட்டணியிலிருந்து கழட்டி விடப்பட்டது. அக்கட்சியை சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சி ஆதரவு நிலை எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.


பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு இந்தியா அனுமதி மறுப்பு!
[Saturday 2013-01-26 09:00]

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவருக்கு, இந்தியா வர, மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.பாகிஸ்தான் தூதரக ஊடக துறை தலைவர், வர்த்தக துறை அதிகாரி மற்றும் இருவர், இந்தியா வர, வெளியுறவு துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.இது குறித்து, வெளியுறவு துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் நேற்று கூறியதாவது:


இலங்கை விடயத்தில் சந்தேகப்படும் படியாகவே நடந்து கொள்கிறது இந்திய அரசு! - கருணாநிதி அறிக்கை
[Saturday 2013-01-26 08:00]

நடுநிலை நாடுகளில் ஒன்று இந்தியா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, இலங்கை விடயத்தில் விட்டுக் கொடுத்துப் போகிறதோ என்று சிலர் சந்தேகம் கொள்ளக் கூடிய அளவில் தான் இந்திய அரசு செயல்படுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


சீக்கியருக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டதாக, மத்திய அமைச்சர் கமல்நாத் மீது சுவிசில் கிரிமினல் புகார்!
[Friday 2013-01-25 19:00]

சீக்கியருக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டதாக, மத்திய அமைச்சர் கமல்நாத் மீது சுவிட்சர்லாந்தில் கிரிமினல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1984ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின், இந்தியாவில் சீக்கியர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். சீக்கியர்களுக்கு எதிராக திட்டமிட்டு கலவரம் தூண்டி விடப்பட்டது. இதில் தற்போது மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் கமல்நாத்துக்கு தொடர்பு உள்ளது என்று சீக்கியர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.


மகளின் சாவுக்கு காரணமான குற்றவாளிகள் அனைவருக்கும் மரணதண்டனை- தில்லி மாணவியின் குடும்பத்தினர் விருப்பம்!
[Friday 2013-01-25 19:00]

தங்கள் குடும்ப பெண்ணின் சாவுக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தில்லி மாணவி குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பாலியல் பலாத்காரம் தொடர்பாக அரசு அமைத்த நீதிபதி வர்மா குழு, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.


பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையைப் பரிந்துரை செய்யாத வர்மா குழுவுக்கு கருணாநிதி பாராட்டு!
[Friday 2013-01-25 19:00]

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து அவசர அவசியத்தை கருதி, விரிவாக பரிசீலனை செய்து, மிக பெரிய அறிக்கை ஒன்றினை அளித்த நீதிபதி ஜே.எஸ். வர்மா குழுவுக்குதிமுக தலைவர் கருணாநிதி பாராட்டுத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து அவசர அவசியத்தை கருதி, விரிவாக பரிசீலனை செய்து, மிக பெரிய அறிக்கை ஒன்றினை நீதிபதி ஜே.எஸ். வர்மா குழு மத்திய அரசிடம் அளித்திருப்பதே பாராட்டத்தக்கதாகும்.


இந்தியாவிலேயே குண்டர்களின் நகரம் கொச்சி!
[Friday 2013-01-25 19:00]

இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களிலேயே கொச்சியில்தான் குண்டர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். நாட்டின் 11 முக்கிய பெரிய நகரங்களில் உடல் பருமனாக உள்ளவர்கள் பற்றி பிரபல சந்தை ஆய்வு ஆலோசனை நிறுவனமான ஏ.சி.நீலசன், ஆய்வு நடத்தியுள்ளது. பெங்களூர், சென்னை, ஐதராபாத், டெல்லி, லூதியானா, ஜெய்ப்பூர், மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


விஸ்வரூபம் விவகாரம் - நீதிபதி நாளை படத்தை பார்த்து விட்டு 28ம் திகதி தீர்ப்பு!
[Friday 2013-01-25 06:00]

தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் படம் திரையிட 15 நாட்களுக்கு தடை விதித்து,தமிழக அரசு சார்பில் தியேட்டர்களுக்கு போலீஸ் கமிஷனரும், மாவட்ட கலெக்டரும் உத்தரவிட்டதற்கு எதிராக, ராஜ்கமல் நிறுவனத்தின் பார்ட்னர் சந்திரஹாசன் உயர் நீதிமன்றத்தில் ஒரு அவசர மனு தாக்கல் செய்தார். இது நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்பு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை 3 மணி நேரம் நடந்தது. இதன்பிறகு நீதிபதி அளித்த உத்தரவு:


கூடங்குளத்தில் அணுக்கதிர்வீச்சுக்கு 40 பேர் பலியா?
[Friday 2013-01-25 06:00]

கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசிவு எதுவும் ஏற்படவில்லை என்று அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டு 40 பேர் உயிரிழந்ததாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது. அந்த வகையில் எவ்வித சம்பவங்களும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்படவில்லை.


1996இல் அணுகுண்டுச் சோதனையை இடைநிறுத்தினார் நரசிம்மராவ்! - அப்துல் கலாம் தகவல்
[Friday 2013-01-25 05:00]

1996-ம் ஆண்டின் ‌தேர்தல் முடிவுக்கு இரண்டு நாட்கள் முன்பாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அணுசோதனை நடத்த திட்டமிட்டிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார். புதுடில்லியில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு துறை ‌செயலகம் சார்பில் நடை‌பெற்ற 7-வது ஆர்.என் காவோ நினைவு தின உரையின் போது, காலம் கூறியதாவது:


"அணு ஆயுதப் போருக்குத் தயாராகுங்கள்,வீடுகளில் பங்கர்களை அமையுங்கள்" - காஷ்மீர் செய்தித்தாள் விளம்பரத்தால் பரபரப்பு!
[Friday 2013-01-25 05:00]

அணு ஆயுதப் போருக்குத் தயாராகுங்கள். அதற்கேற்ற வகையில் வீடுகளில் பங்கர்களை அமையுங்கள் என்று ஒரு காஷ்மீர் செய்தித் தாளில் வெளியான விளம்பரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதட்டமான சூழல், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விளம்பரத்தை பேரிடர் தவிர்ப்புப் பிரிவு வெளியிட்டுள்ளது.


டெல்லி அல்லது மும்பையில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட கூடும் - உளவுத்துறை உசார் நிலையில்
[Thursday 2013-01-24 20:00]

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி தூக்கில் போடப்பட்டார். இது பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அஜ்மல் கசாப் மரணத்துக்கு பழிக்குப்பழி வாங்கப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். டெல்லி அல்லது மும்பையில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட கூடும் என்று உளவுத்துறை மத்திய உள்துறையை உஷார்படுத்தியுள்ளது.


விஸ்வரூபத்துக்குத் தடை விதித்தது பண்பாட்டுப் பயங்கரவாதம் - நீதிமன்றில் கமல் வழக்கு!
[Thursday 2013-01-24 20:00]

நடிகர் கமல்ஹாசன் பண்பாட்டு பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்றும் தனது விஸ்வரூபம் திரைப்படத்தினை வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை சட்டபூர்வமாக எதிர்கொள்ளவிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இஸ்லாமியர்களை விஸ்வரூபம் திரைப்படம் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி அதற்குத் தடைவிதிக்க வேண்டுமென்று கோரி முஸ்லீம் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கவிருப்பதாக அறிவித்ததன் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கினைக் காரணம் காட்டி, நாளை வெளியாகவிருந்த அத்திரைப்படத்திற்கு இருவாரத்தடை விதித்திருக்கிறது.


திருச்சியில் சேட்டிலைட் போன் வைத்திருந்த இலங்கை தமிழர் கைது!
[Thursday 2013-01-24 08:00]

திருச்சியில் சேட்டிலைட் போன் வைத்திருந்த இலங்கை தமிழரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். திருச்சி அடுத்த துவாக்குடி அருகே உள்ள தேனீர்பட்டியில் வசிப்பவர் ராமச்சந்திரன் (40). இலங்கைத் தமிழரான இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக கேரள வைத்தியத்திற்கு தமிழகம் வந்த ராமச்சந்திரன், தனது உறவினர்கள் சிலர் திருச்சியில் இருப்பதால் இங்கேயே வீடு கட்டி தங்கியுள்ளார். அவ்வப்போது ராமச்சந்திரன் ஆஸ்திரேலியா சென்று வருவது வழக்கம்.


கைது செய்து இழுத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி, கருணாநிதியின் சம்பந்தியானார்!
[Thursday 2013-01-24 08:00]

என் குடும்பத்தில், சம்பந்தம் எடுத்துள்ளதால், போலீஸ் அதிகாரி சண்முகராஜேஸ்வரனுக்கு, என்ன விளைவு ஏற்படுமோ...'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். கருணாநிதி கொள்ளு பேத்தியும், சினிமா நடிகராக இருந்த, மு.க.முத்து-சிவகாம சுந்தரியின் பேத்தியும், தொழில் அதிபர் ரங்கநாதன், தேன்மொழி மகளுமான அமுதவல்லிக்கும், திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் மகன் சித்தார்த்க்கும், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று திருமணம் நடந்தது.


பாதுகாப்பு அமைச்சர் அந்தோனிக்கு வைகோ கண்டனம்!
[Thursday 2013-01-24 08:00]

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி அளிப்போம் என்ற கூறியுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் ஈழத்தில் இன்றும் இலங்கை ராணுவம் கொடுமைகளைச் செய்து வருகிறது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்போம் என்று அந்தோனி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று வைகோ தெரிவித்துள்ளார்.


இலங்கையில் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை! - பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி
[Thursday 2013-01-24 08:00]

இலங்கையில் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் இப்போது இந்தியாவில் சுற்றுப்பணயணம் மேற்கொண்டுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை. அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகாரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை'' என்று தெரிவித்திருந்தார்.

Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா