Untitled Document
March 28, 2024 [GMT]
மோடி அரசை எதிர்த்து மீண்டும் தர்ணாவில் இறங்கிய மம்தா!
[Saturday 2019-02-09 17:00]

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் மோசடியில் தொடர்புடைய போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரை விசாரிக்க சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்ததற்கு அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு அரசியல் சட்டத்தை அழிப்பதாக கூறி அவர் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமார் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு மம்தா பானர்ஜி அதை ஏற்பதாக கூறினார். என்றாலும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரியும் டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி அடுத்த வாரம் மம்தா பானர்ஜி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளார். அடுத்த வாரம் புதன்கிழமை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. அந்த சமயத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.


ஜம்முவில் நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டது!
[Saturday 2019-02-09 17:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதலே பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. கட்டிடங்களின் மேற்கூரை, வாகனங்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகின்றது. இதையடுத்து காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட நாட்டின் பிற மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக தொடர்ந்து 4வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் ரம்பால் மற்றும் பனிஹல் பகுதிகளுக்கு இடையே சுமார் 12 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவை சரிசெய்யும் பணியில் இயந்திரங்களுடன் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


குடும்ப தகராறில் உயர் மின் கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளி தற்கொலை!
[Saturday 2019-02-09 09:00]

ஆரணி அடுத்த ஏந்துவாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது32) கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (28). இவர்களுக்கு கிரிஜா (8). ஆரியா (6). என 2 மகள்கள் உள்ளனர். சென்னையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஊருக்கு வந்த அவர் திரும்பவும் சென்னைக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரமேஷ் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நெல்வாய்பாளையம் என்ற இடத்திற்கு சென்று அங்கு பயன்பாட்டிற்கு வராத 100 அடி உயர மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரது மனைவி கீதாவிற்கும் களம்பூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் உறவினர்கள் ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ரமேஷ் கீழே இறங்க மறுத்து விட்டார்.


ஊழல்களின் தலைவர் பிரதமர் மோடி - மம்தா கடும் தாக்கு!
[Saturday 2019-02-09 08:00]

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கி, இன்றுடன் நிறைவு பெற்றது. மாநாடு முடிந்ததும் முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு இந்தியாவை பற்றி தெரியாது. அவர் கோத்ரா மற்றும் பிற மோதல்களில் இருந்து வந்தவர். தேர்தலுக்கு முன்னால் அவரை சாய்வாலா என அழைத்தோம். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர் ரபேல் வாலா என அழைக்கப்பட உள்ளார். நாட்டின் மிகப்பெரிய ஊழலாக ரபேல் ஊழல் இருந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரசுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ரபேலின் மாஸ்டர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மாஸ்டர். பிரதமர் மோடி ஊழல்களின் மாஸ்டராக விளங்குகிறார்.


"சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளை விடமாட்டேன்" : பிரதமர் மோடி உறுதி!
[Saturday 2019-02-09 08:00]

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சூராபந்தரில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:- மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர்கள், அதே வன்முறை கலாசாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் மேற்கு வங்காள மண்ணை களங்கப்படுத்தி விட்டார்கள். அதனால் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்த மோசடியாளர்களை பாதுகாக்க ஒரு முதல்-மந்திரி தர்ணா போராட்டம் நடத்தியது, இதுவே முதல்முறை. ஆனால், இந்த காவலாளி (மோடி), சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளையோ, அவர்களை பாதுகாப்பவர்களையோ தப்ப விடமாட்டான். இவ்வாறு மோடி பேசினார்.


காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு தூண்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!
[Friday 2019-02-08 17:00]

காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி கொண்டுச்செல்வதற்கு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீர், உதாம்பூரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட இராணுவத்தின் மூத்த அதிகாரி லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,


மோடியின் ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!
[Friday 2019-02-08 17:00]

மோடி அரசாங்கத்திற்கு எதிராக, இந்திய தலைநகர் புதுடெல்லியில் மாணவர் அமைப்புக்களினால் மாபெரும் எதிர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சிறந்த கல்வியையும், வேலை வாய்ப்பினையும் வழங்கக் கோரி இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் அதிகரித்துள்ளன. அந்தவகையில், நேற்று (வியாழக்கிழமை) மோடி அரசாங்கத்திற்கு எதிராக, இந்திய தலைநகர் புதுடெல்லியில் மாணவர் அமைப்புக்களினால் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மாணவ அமைப்புக்கள் இணைந்து உருவாக்கிய


ஹெலிகாப்டர் ஊழல் தரகருக்கு விஜய் மல்லையாவுடன் தொடர்பு!
[Friday 2019-02-08 17:00]

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிநவீன அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்குவதற்கு இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் இடைத்தரகராக செயல்பட்டவர் என கூறப்படுகிற தீபக் தல்வார் துயாயில் இருந்து நாடு கடத்தி வரப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறார். நேற்று அவர் டெல்லி தனிக்கோர்ட்டில் நீதிபதி எஸ்.எஸ். மான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.


"ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது" : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
[Friday 2019-02-08 17:00]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி கூறுகையில்,


டெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு!
[Friday 2019-02-08 08:00]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார். வாக்காளர்களை சந்தித்து ஆதரவும் திரட்டினார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார். கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பிரியங்காவுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்தது.


மேடையில் என்னுடன் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? - மோடிக்கு ராகுல் சவால்!
[Friday 2019-02-08 08:00]

சிறுபான்மையினர் பிரிவினருக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமாக பிரதமர் மோடி இருந்து வருகிறார். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அனைத்து அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். தலையீடு உள்ளது. இந்த மாநிலங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், பல்வேறு அமைப்புகளை காப்பாற்றி உள்ளது. மேலும், பல்வேறு அமைப்புகளில் வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து நீக்கப்படுவார்கள்.


[Friday 2019-02-08 08:00]

பதினாறாவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இன்று, வியாழக்கிழமை, மாலை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றி வருகிறார். பிரதமர் மோதிக்கு முன் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, விவசாயிகளுக்காக இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை எதையும் செய்யவில்லை என்றும், அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்து தயாரிக்கப்பட்டது என்றும் விமர்சித்தார். தமது அரசு ஏழைகள் பிரச்சனைகள் மீது அக்கறை கொண்டுள்ள அரசு என்றும், நேர்மை மற்றும் வளர்ச்சிக்காக அறியப்பட்ட அரசு என்றும் மோதி அப்போது குறிப்பிட்டார். இந்திய மக்களுக்குப் பதில் சொல்ல தாங்கள் கடமைப்பட்டிருப்பதாகவும், தமது ஆட்சிக்காலத்தில் ஊழலற்ற ஆட்சியை வழங்கியதாகவும் நரேந்திர மோதி கூறினார். எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது இயல்பானதுதான் என்று குறிப்பிட்ட மோதி, ஆரோக்கியமான போட்டியை அவர்களிடம் எதிர்பார்ப்பதாகக் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது சாதனைகளுக்காக அறியப்பட்டது என்று கூறிய மோதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இளம் தலைமுறை தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.


இந்திய
[Thursday 2019-02-07 17:00]

இந்திய மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் (NCB) தமது முதலாவது இருதரப்பு அவசர சந்திப்பொன்றை புதுடில்லியில் மேற்கொண்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகம் அபே மற்றும் ரஷ்ய பணிப்பாளர் தரத்திலான மேஜர் ஜெனரல் ஸ்முரோவ் கிரில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது முக்கியமாக போதை பொருட்களைத் தடுக்கவும், போதை மருந்துகள் மற்றும் பிற மனோவியல் பொருட்களைக் கடத்துவதற்கான முக்கிய வழிகளை அடைக்கவும் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.


'பாராளுமன்ற தேர்தல்' - 10 மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்.
[Thursday 2019-02-07 17:00]

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் மோடி, அமித்ஷா இருவரும் வியூகங்களை வகுத்து கடந்த மாதமே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். மத்திய மந்திரிகளும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி பிரசாரத்தை தொடங்க உள்ளார். முதல் கட்டமாக 10 மாநிலங்களுக்கு செல்லும் வகையில் அவரது பிரசார பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி 5 நாட்களுக்குள் பிரதமர் மோடி 10 மாநிலங்களிலும் அதிரடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளான நாளை (8-ந்தேதி) அவர் சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு பிரதமர் மோடி நாளைதான் முதன் முதலாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார். அம்மாநிலத்தில் ராய்கர் நகரில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேச உள்ளார்.


"இளைஞர்களை கவரும் ராகுல்" - மீண்டும் தலைதூக்குமா காங்கிரஸ்?
[Thursday 2019-02-07 16:00]

தெற்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில், சில இளம் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீடு வீடாக சென்று, தங்கள் கட்சியில் மக்களை சேரும்படி அழைத்துக் கொண்டிருந்தனர். பாஜக அரசின் தோல்வியை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையாகும். கையில் காங்கிரஸ் கொடியும், தலையில் காந்தி தொப்பியும் அணிந்திருந்த பப்லு குப்தா, "பாஜகவின் பொய் வாக்குறுதிகளை வீடு வீடாக சென்று வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என்று எங்களுக்கு கூறப்பட்டுள்ளது" என்றார். அந்தக்குழுவின் தலைவரான சந்தீப் கண்ட்கே, "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-இல் இருக்கும் பணியாளர்கள் காசுக்காக வேலை பார்க்கிறவர்கள். அவர்களின் சமூக ஊடக பிரிவில் இருப்பவர்கள் காசு கொடுத்து ட்வீட் செய்கிறவர்கள். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நாங்கள் வீடு வீடாக சென்று உள்ளூர்வாசிகளிடம் இருந்து பணம் சேகரிக்கிறோம்" என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம் பாஜகவை வீழ்த்துவதே என்று கூறுகிறார் சந்தீப். "ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போன்ற பாஜகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு நினைவுப்படுத்தி வருகிறோம். பாஜகவுக்கு வாக்களித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இந்த முறை வாக்காளர்கள் தவறு செய்ய மாட்டார்கள்" என்றார்.


"மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.- வுடன் அ.தி.மு.க. கூட்டணி": பன்னீர் செல்வம்!
[Thursday 2019-02-07 08:00]

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, ஆளும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,


"மம்தாவால் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது"
[Thursday 2019-02-07 08:00]

பா.ஜ.க. நிர்வாகிகளை மாநிலத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கும் மம்தாவால் அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போதே பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


"தேசத்தை மீட்டெடுக்க இன்னொரு சுதந்திர போராட்டம் தேவை": ப.சிதம்பரம் உருக்கம்.
[Thursday 2019-02-07 08:00]

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், கடந்த ஆண்டு தான் எழுதிய கட்டுரைகளை புத்தகமாக தொகுத்துள்ளார்.


இந்தியா
[Wednesday 2019-02-06 17:00]

இந்தியாவிற்கும் மொனாக்கோவிற்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்பட்டுள்ளன. மொனாக்கோ இளவரசர் அல்பர்ட் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இந்தநிலையில் இந்திய தலைநகர் டெல்லியில் மொனாக்கோ இளவரசர் அல்பர்ட் இன்று(செவ்வாய்கிழமை) காலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்திருந்தாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை மொனாக்கோ இளவரசர் அல்பர்ட் சந்தித்துப் பேசினார்.


"மோடி அரசு விதிகளை மீறி செயல்படுகிறது" - மம்தா குற்றச்சாட்டு!
[Wednesday 2019-02-06 17:00]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் அரசியல் அமைப்பை மீறி செயற்பட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதாக மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக மேற்குவங்க மாநில முதல்வரினால் கடந்த மூன்று தினங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தொிவிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


கின்னஸ் சாதனை படைத்த 88 வயதான
[Wednesday 2019-02-06 17:00]

கேரளாவில் ஏராளமான யானைகள் கோவில்களிலும், தனியாராலும் வளர்க்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் யானை காப்பகங்கள் மாநிலம் முழுவதும் உள்ளது. இங்கும் பல யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள கோவில்களில் சாமி ஊர்வலத்தில் பங்கேற்க அந்த கோவில்களுக்கு யானைகளை பலரும் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். கேரளாவில் உள்ள மன்னர் குடும்பமான திருவிதாங்கூர் ராஜகுடும்பம் சார்பில் 1950-ம் ஆண்டு கோடநாடு யானை காப்பகத்தில் இருந்து ஒரு பெண் யானை குட்டி வாங்கப்பட்டது. அந்த யானை குட்டிக்கு தாட்சாயினி என்று பெயர் சூட்டி ஆற்றிங்கல் திருவாராட்டு காவுக்கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்தனர். அதன்பிறகு அந்த யானை 1960-ம் ஆண்டு செங்கல்லூர் மகாதேவர் கோவிலுக்கு வழங்கப்பட்டது. பிறகு அங்கேயே தேவசம்போர்டு பராமரிப்பில் யானை தாட்சாயினி இருந்து வந்தது.


"அயோத்தியில் இந்த ஆண்டு ராமர் கோவில் கட்டப்படும்" - பா.ஜ.க. பிரமுகர் கருத்து!
[Wednesday 2019-02-06 17:00]

உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்ற மேல்சபையில் பா.ஜ.க. உறுப்பினராக பதவி வகிப்பவர், புக்கால் நவாப். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் ராமருக்கு தங்கத்தால் கிரீடம் செய்வதற்கு 15 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக முன்னர் இவர் தெரிவித்திருந்தார். தனது நேர்த்திக்கடன் ஹனுமானால் பூர்த்தியானதற்கு நன்றி தெரிவிப்பதாக 30 கிலோ எடைகொண்ட பித்தளை மணியை ஹனுமான் கோவிலுக்கு புக்கால் நவாப் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.


கோரிக்கையை அரசு ஏற்றதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார் அன்னா ஹசாரே!
[Wednesday 2019-02-06 08:00]

தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடை நான்கரை கிலோ குறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.


விவசாயிகளின் வருமானம் மற்றும் கடன் குறித்து மத்திய அரசு ஆய்வு!
[Wednesday 2019-02-06 08:00]

நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. விவசாயிகளின் வருமானம், 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதுபற்றி மத்திய வேளாண்துறை இணை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பாராளுமன்ற மக்களவையில் எழுத்துமூலம் கூறியதாவது:- தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, இந்த ஆண்டு 77-வது சுற்று ஆய்வு நடத்த உள்ளது. அப்போது, விவசாய குடும்பங்களின் நிலை பற்றியும் ஆய்வு நடத்தப்படும்.


"ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி" - தர்ணா போராட்டத்தை கைவிட்ட மம்தா.
[Wednesday 2019-02-06 08:00]

தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட மம்தா, "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் தார்மீக வெற்றியாகும், நாங்கள் நீதித்துறைக்கு மதிப்பளிக்கிறோம், ராஜீவ் குமார் ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இல்லை என்று கூறவில்லை" என்றார். ''இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி'' என்று மம்தா பானர்ஜி கூறினார். சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஞாயிறு மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.


"இலஞ்சம் பெறமாட்டேனென தாயிடம் சத்தியம் செய்துள்ளேன்": மோடி
[Tuesday 2019-02-05 18:00]

எந்த தொழில் செய்தாலும் யாரிடமும் இலஞ்சம் பெறக்கூடாதென எனது தாய் சத்தியம் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடியின் வாழ்க்கை வரலாறு கூறும் ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்திலிருந்து ஏதாவது ஒரு பகுதி ஒவ்வொரு வாரமும் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனது தாய் குறித்து மோடி தெரிவித்துள்ள கருத்து ஐந்தாவது வார தொடராக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகியுள்ளது. அதிலேயே மேற்கண்டவாறு மோடி குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,


7வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்- அன்னா ஹசாரே!
[Tuesday 2019-02-05 18:00]

தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். நேற்றைய நிலவரப்படி அன்னா ஹசாரே மிகவும் சோர்வாக காணப்பட்டார். அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடை நான்கரை கிலோ குறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.


"மோடி அரசு வெற்றி பெற என்னை பயன்படுத்திக்கொண்டது" - அன்னா ஹசாரே குற்றச்சாட்டு!
[Tuesday 2019-02-05 18:00]

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் அன்னா ஹசாரே கடந்த 30-ந்தேதி போராட்டத்தை தொடங்கினார். அவர் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிலையில் 2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக் கொண்டது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார்.

 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா