Untitled Document
April 18, 2024 [GMT]
கோரிக்கையை அரசு ஏற்றதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார் அன்னா ஹசாரே!
[Wednesday 2019-02-06 08:00]

தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடை நான்கரை கிலோ குறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.


விவசாயிகளின் வருமானம் மற்றும் கடன் குறித்து மத்திய அரசு ஆய்வு!
[Wednesday 2019-02-06 08:00]

நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. விவசாயிகளின் வருமானம், 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதுபற்றி மத்திய வேளாண்துறை இணை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பாராளுமன்ற மக்களவையில் எழுத்துமூலம் கூறியதாவது:- தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, இந்த ஆண்டு 77-வது சுற்று ஆய்வு நடத்த உள்ளது. அப்போது, விவசாய குடும்பங்களின் நிலை பற்றியும் ஆய்வு நடத்தப்படும்.


"ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி" - தர்ணா போராட்டத்தை கைவிட்ட மம்தா.
[Wednesday 2019-02-06 08:00]

தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட மம்தா, "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் தார்மீக வெற்றியாகும், நாங்கள் நீதித்துறைக்கு மதிப்பளிக்கிறோம், ராஜீவ் குமார் ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இல்லை என்று கூறவில்லை" என்றார். ''இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி'' என்று மம்தா பானர்ஜி கூறினார். சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஞாயிறு மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.


"இலஞ்சம் பெறமாட்டேனென தாயிடம் சத்தியம் செய்துள்ளேன்": மோடி
[Tuesday 2019-02-05 18:00]

எந்த தொழில் செய்தாலும் யாரிடமும் இலஞ்சம் பெறக்கூடாதென எனது தாய் சத்தியம் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடியின் வாழ்க்கை வரலாறு கூறும் ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்திலிருந்து ஏதாவது ஒரு பகுதி ஒவ்வொரு வாரமும் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனது தாய் குறித்து மோடி தெரிவித்துள்ள கருத்து ஐந்தாவது வார தொடராக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகியுள்ளது. அதிலேயே மேற்கண்டவாறு மோடி குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,


7வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்- அன்னா ஹசாரே!
[Tuesday 2019-02-05 18:00]

தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். நேற்றைய நிலவரப்படி அன்னா ஹசாரே மிகவும் சோர்வாக காணப்பட்டார். அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடை நான்கரை கிலோ குறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.


"மோடி அரசு வெற்றி பெற என்னை பயன்படுத்திக்கொண்டது" - அன்னா ஹசாரே குற்றச்சாட்டு!
[Tuesday 2019-02-05 18:00]

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் அன்னா ஹசாரே கடந்த 30-ந்தேதி போராட்டத்தை தொடங்கினார். அவர் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிலையில் 2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக் கொண்டது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார்.


மம்தா பானர்ஜி தர்ணா- காவல் ஆணையர் சிபிஐக்கு ஒத்துழைக்க நீதிமன்றம் உத்தரவு!
[Tuesday 2019-02-05 18:00]

கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ விசாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், காவல் ஆணையர் சிபிஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. ராஜீவ் குமார் சிபிஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ஷிலாங்கில் உள்ள சிபிஐ அலவலகத்தில் அஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் காவல் ஆணையரை கைது செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


"உயிரே போனாலும் மத்திய அரசுடன் சமரசம் செய்ய மாட்டேன்"
[Tuesday 2019-02-05 08:00]

உயிரை விடக்கூட தயாராக இருக்கிறேனே அன்றி மத்திய அரசுடன் சமரசம் செய்ய மாட்டேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெரிவித்துள்ளார். மம்தா நேற்றிரவு முதல் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சினை நாடாளுமன்ற அவைகளையும் கடுமையாக பாதித்தது. சி.பி.ஐ. நடவடிக்கையை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு தேவேகவுடா ஆதரவு!
[Tuesday 2019-02-05 08:00]

மேற்கு வங்க மாநில உயர் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். அவர்கள் அரசியலமைப்பு சட்டங்களை மீறி, அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அவர்களை கைது செய்ய மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- மேற்கு வங்க உயர் போலீஸ் அதிகாரியை, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்ற விவகாரத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேர் எதிர் போட்டி ஏற்பட்டுள்ளது. இது அவசர கால பிரகடன நிலையை எனக்கு நினைவுபடுத்துகிறது.


விஜய் மல்லையாவை நாடுகடத்த பிரிட்டன் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி.
[Tuesday 2019-02-05 08:00]

இந்தியாவால் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி அளித்துள்ளார். இம்முடிவை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு செய்ய 14 நாள் அவகாசமும் இருக்கிறது. அவரை விசாரிக்க இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கிய இரண்டு மாதங்களுக்குபின் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிங் ஃபிஷர் நிறுவனத்தின் அதிபராக இருந்த மல்லையா , ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுடன் மார்ச் மாதம் 2016ஆம் தேதி இந்தியாவைவிட்டு வெளியேறினார். இந்தியாவைவிட்டு தப்பி வந்ததாக கூறப்படுவதை மறுத்த விஜய் மல்லையா , தனது கடன்களை தான் திருப்பி செலுத்தவதாகவும் கடந்த வருடம் ஜூலை மாதம் தெரிவித்தார். கிங் ஃபிஷன் பியர் மூலம் பெரும் பணம் சம்பாதித்த விஜய் மல்லையா, பின் கிரிக்கெட் மற்றும் ஃபார்முலா 1 ரேஸ் போட்டிகளிலும் கால் பதித்தார். அவரை கடனாளியாக மாற்றிய கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தை 2005ஆம் ஆண்டு நிறுவினார் விஜய் மல்லையா.


நாட்டில் மோசமான சூழலையை மம்தா பானர்ஜி தான் உருவாக்குகிறார் : தமிழிசை!
[Monday 2019-02-04 17:00]

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மிகவும் மோசமான ஒரு சூழலை நாட்டில் உருவாக்கியுள்ளதாக, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளார். மம்தா பானர்ஜி முன்னெடுத்துள்ள போராட்டம் குறித்து இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் தங்களது வழக்கிலிருந்து வெளியே வரவேண்டுமென்பதற்காகவே ஆட்சிக்கு வருவதற்கு எண்ணுகின்றார்களென தமிழிசை குற்றம் சுமத்தியுள்ளார்.


ராகுல் காந்தி பிரதமராக லல்லுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆதரவு!
[Monday 2019-02-04 17:00]

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி நடந்து வந்தாலும் அது முழுமையான வெற்றியை பெறவில்லை. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு மாற்றாக மாயாவதி- அகிலேஷ் யாதவ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதுபோன்ற நிலை பல மாநிலங்களில் நிலவுகிறது. மேலும் எதிர்க்கட்சி அணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராவதை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகவுடாவும் இதற்கு ஆதரவு தெரிவித்தார். மற்றபடி எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இதுசம்பந்தமாக எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் சாதித்து வந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள லல்லுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் இப்போது ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.


வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால்
[Monday 2019-02-04 17:00]

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேக்கான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். போராட்டத்தின் போது அன்னா ஹசாரே பேசியதாவது:- எனது உயிருக்கு எதுவும் நடந்தால் அதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. மோடி அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.


"சிறுத்தை குட்டியை பையில் வைத்து விமானத்தில் பயணம் செய்த பெண்" - சென்னையில் பிடிபட்டார்!
[Monday 2019-02-04 17:00]

தாய்லாந்திலிருந்து சென்னை வந்த பயணியின் பையில் சிறுத்தை குட்டி இருந்ததை அடுத்து சுங்க அதிகாரிகளால் அவர் தடுக்கப்பட்டார். அவரது பையில் பிறந்து ஒரு மாதமே ஆன சிறுத்தை குட்டி இருந்தது. வழக்கமாக அவரை சோதனை செய்யும் போது, அவரது பையிலிருந்து வித்தியாசமான ஒலி வருவதை அதிகாரிகள் கேட்டனர். இதனை அடுத்து அவரது பையை சோதனையிட்டபோது அதில் ஒரு கிலோ எடை உள்ள சிறுத்தை குட்டி இருந்தது. இவர் பாங்காக்கிலிருந்து சனிக்கிழமை இரவு சென்னை வந்திருக்கிறார். சர்வதேச கடத்தல்காரர்களுக்கும் இவருக்கும் தொடர்புள்ளதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


"பழிவாங்கும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபடுகிறது" - மம்தா குற்றச்சாட்டு.
[Monday 2019-02-04 08:00]

மேற்கு வங்காள மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


'எங்களை வெற்றிபெறச் செய்தால் அனைத்து விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்' - ராகுல் காந்தி!
[Monday 2019-02-04 08:00]

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர் முதல் முறையாக பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசு பிரதமர் மோடியை போலவே வெற்று வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை வெற்றிபெறச் செய்தால் விவசாயிகளின் துயரம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல பிரச்சினைகளை தீர்ப்போம். 2014 தேர்தலில் மோடி மிகப்பெரிய வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்தார். ஆனால் பிரதமரான பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் மாதத்துக்கு குறைந்தபட்ச வருவாயாக ரூ.10 ஆயிரம் கிடைக்க உத்தரவாதம் அளிக்கிறேன். மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு தினமும் ரூ.17 தருவதாக அறிவித்து அவர்களை இழிவுபடுத்தி உள்ளது. மோடி தனது தொழில் அதிபர் நண்பர்களான அனில் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடியும், நிரவ் மோடிக்கு ரூ.33 ஆயிரம் கோடியும், மெகுல் சோக்சிக்கு ரூ.30 ஆயிரம் கோடியும் கொடுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது உண்மையிலேயே அவர்களை இழிவுபடுத்துவதாகும். விவசாயிகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்து பெரிய வியாபாரிகளின் பாக்கெட்டுகளை நிரப்புவது தான் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பயிர் காப்பீட்டு திட்டத்தின் நோக்கம்.


"தர்ணா போராட்டத்தில் இறங்கிய மம்தா பானர்ஜி" - தலைவர்கள் ஆதரவு!
[Monday 2019-02-04 08:00]

கொல்கத்தாவில் பாஜக அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "நாட்டை காப்பாற்றும் வரை தனது தர்ணா தொடரும்" என தெரிவித்துள்ளார். சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மம்தா பானர்ஜியின் தர்ணாவுக்கு ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


"சொந்த தொகுதியை பாதுகாப்பது குறித்து மோடி சிந்திக்க வேண்டும்" - மம்தா பானர்ஜி!
[Sunday 2019-02-03 17:00]

மேற்கு வங்காளம் பற்றி கனவு காண்பதற்கு முன்னர் தனது சொந்த தொகுதியில் வெற்றி பெறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி சிந்திக்க வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்காளம் மீது பா.ஜ.க அதிக கவனம் செலுத்துமென மோடி அண்மையில் நடைபெற்ற இரு கூட்டங்களில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோடியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மம்தா பானர்ஜி நேற்று (சனிக்கிழமை) இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
[Sunday 2019-02-03 17:00]

காஷ்மீரில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்-மந்திரியாக இருந்த மெகபூபா முப்திக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பா.ஜனதா விலக்கிக் கொண்டது. அதைதொடர்ந்து காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சிக்கான ஆதரவை விலக்கி கொண்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் புறப்பட்டு சென்றார். காலை லடாக்கில் உள்ள லே நகரை சென்றடைந்தார். லே பகுதியில் அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ஜம்முவில் ரூ.35 கோடி மதிப்பிலான திட்டங்களையும், காஷ்மீரில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.


"6 ஆயிரம் ரூபாயின் அருமை ஏ.சி. அறைகளில் வாழ்பவர்களுக்கு தெரியாது" - பிரதமர் மோடி.
[Sunday 2019-02-03 17:00]

காஷ்மீர் மாநிலத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி லே பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்தைப்பற்றி குறிப்பிட்டு பேசிய மோடி, ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு திட்டத்தை நான் தொடங்கி வைத்தபோது என்னை பலர் கேலி செய்தனர். இப்போது, அந்த வங்கி கணக்குகள் விவசாயிகள் உதவித்தொகை பெறுவதற்காக பயன்படப் போகிறது. இனி நாட்டிலுள்ள விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக ரூ.75 ஆயிரம் கோடி போய் சேரும்.


'பிரியங்காவுக்கு எதிராக அவதூறு தெரிவித்தால் வழக்கு' - காங்கிரஸ் முடிவு!
[Sunday 2019-02-03 17:00]

பிரியங்காவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிப்பவர்கள் மீது வழக்கு தொடர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தேசிய மகளிர் அணி தலைவர் சுஷ்மிதா தேவ் கூறியதாவது:- உத்தரபிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் குறித்து அவதூறான கருத்துக்களை சில பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.


"மோடி அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்" - மோகன் பாகவத் அறிக்கை!
[Sunday 2019-02-03 07:00]

ராமர் கோயில் கட்ட மோடி அரசை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜின் அர்த் கும்பமேளாவில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,


ஜனவரி மாத வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது!
[Sunday 2019-02-03 07:00]

நாடு முழுவதும் ஒரே சீரான வரியை வசூலிக்கும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த முறையில் வசூலாகும் வரி வருவாய் குறித்து மாதந்தோறும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு 503 கோடி வரி வசூலானதாக மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மோதியின் நம்பிக்கை தரும் கதையை மீண்டும் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
[Sunday 2019-02-03 07:00]

பிரதமர் மோதி அரசாங்கத்தின் ஆறாவது பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக, தேர்தல் மூலம் அடுத்த அரசு தேர்ந்தெடுக்கப்படுவது வரையிலான காலத்துக்கு செலவு திட்டங்களை அமைத்துத் தருவதாக இருக்கவேண்டியது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. மே இறுதியில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோதி நிகழ்காலத்தின் அரசியல் உரையாடலை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவதோடு, அவரது அரசாங்கம் இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் வந்திருக்கக்கூடிய பெரிய அறிவிப்பு, இரண்டு ஹெக்டேருக்கு குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் புதிய திட்டம். இத்திட்டம் 120 மில்லியன் சிறிய மற்றும் நடுத்தர விவசாய குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஒரு இந்திய குடும்பத்தில் சராசரியாக 5 நபர்கள் என்றிருக்க, இத்திட்டம் 600 மில்லியன் தனிநபர்களுக்கு நன்மை பயக்கும், குறைந்தபட்சம் கருத்தளவில். இது பெருமளவிலான வாக்காளர் எண்ணிக்கை. தோராயமாக, இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு.


தெலுங்கானாவில் 466 சிறுமிகள் உட்பட, 2119 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
[Saturday 2019-02-02 17:00]

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தெலுங்கானாவில் 2119 குழந்தைகளை அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா அரசு, குழந்தை தொழிலாளர்களை மீட்கும் செயற்பாட்டுக்காக திடீர் சோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தி, தனி குழுவை அமைத்துள்ளது. இதில், 530 பொலிஸ் அதிகாரிகள், குழந்தை நலக் குழுக்கள் இணைந்துள்ளன. இக்குழு தெலுங்கானாவின் அனைத்து பகுதிகளிலும் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.


"அமெரிக்காவில் கடவுச் சீட்டு மோசடி" - இந்திய மாணவர்கள் கைது!
[Saturday 2019-02-02 17:00]

அமெரிக்காவில் கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட 130 பேரில், 129 பேர் இந்திய மாணவர்களென அந்நாட்டு குடிவரவு, சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள பார்ம்ங்டன் (Farmington) பல்கலைக்கழகத்திற்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, வேறு நாடுகளிலிருந்து சென்ற மாணவர்களே நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவர்கள் அனைவரும் குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்ட திட்டங்கள் எதனையும் கடைப்பிடிக்கவில்லை என்பது அவர்களின் கடவுச் சீட்டின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக சுங்க அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.


மணிப்பூரில் கடத்தப்பட்ட 101 பெண்கள் மீட்பு!
[Saturday 2019-02-02 17:00]

மணிப்பூரில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மோரே எல்லை வழியாக, பெண்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், நேற்று போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து எல்லைப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். மோரே எல்லையில் உள்ள ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் 40 பெண்கள் மீட்கப்பட்டனர். இம்பாலில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து 61 பெண்கள் மீட்கப்பட்டனர். ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இருமடங்காகுமா?
[Saturday 2019-02-02 17:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோதி 2016ஆம் ஆண்டு பேசியபோது. 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்றார். 2016 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கிறது. அண்மைய தரவுகள் எதுவும் இப்போது இல்லை. இந்த அரசாங்கம் விவசாயிகளின் வருவாயை பெருக்க சில திட்டங்கள் கொண்டு வந்திருந்தாலும், 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை பெருக்க வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள். கோபம் கொண்ட விவசாயிகள் தங்களின் பிரச்னைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர வீதிக்கு வந்து போராடுவது நரேந்திர மோதி அரசாங்கத்தில் தொடர் கதையாகி வருகிறது. கடந்தாண்டு டிசம்பரில் வெளியான தேர்தலில் சில மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் ஊரக பகுதிகளில் மோதி அரசு தன் செல்வாக்கை இழந்ததுதான் என சில ஊடகங்கள் கோடிட்டு காட்டின.

Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா