Untitled Document
April 19, 2024 [GMT]
"மோடி அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்" - மோகன் பாகவத் அறிக்கை!
[Sunday 2019-02-03 07:00]

ராமர் கோயில் கட்ட மோடி அரசை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜின் அர்த் கும்பமேளாவில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,


ஜனவரி மாத வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது!
[Sunday 2019-02-03 07:00]

நாடு முழுவதும் ஒரே சீரான வரியை வசூலிக்கும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த முறையில் வசூலாகும் வரி வருவாய் குறித்து மாதந்தோறும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு 503 கோடி வரி வசூலானதாக மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மோதியின் நம்பிக்கை தரும் கதையை மீண்டும் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
[Sunday 2019-02-03 07:00]

பிரதமர் மோதி அரசாங்கத்தின் ஆறாவது பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக, தேர்தல் மூலம் அடுத்த அரசு தேர்ந்தெடுக்கப்படுவது வரையிலான காலத்துக்கு செலவு திட்டங்களை அமைத்துத் தருவதாக இருக்கவேண்டியது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. மே இறுதியில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோதி நிகழ்காலத்தின் அரசியல் உரையாடலை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவதோடு, அவரது அரசாங்கம் இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் வந்திருக்கக்கூடிய பெரிய அறிவிப்பு, இரண்டு ஹெக்டேருக்கு குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் புதிய திட்டம். இத்திட்டம் 120 மில்லியன் சிறிய மற்றும் நடுத்தர விவசாய குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஒரு இந்திய குடும்பத்தில் சராசரியாக 5 நபர்கள் என்றிருக்க, இத்திட்டம் 600 மில்லியன் தனிநபர்களுக்கு நன்மை பயக்கும், குறைந்தபட்சம் கருத்தளவில். இது பெருமளவிலான வாக்காளர் எண்ணிக்கை. தோராயமாக, இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு.


தெலுங்கானாவில் 466 சிறுமிகள் உட்பட, 2119 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
[Saturday 2019-02-02 17:00]

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தெலுங்கானாவில் 2119 குழந்தைகளை அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா அரசு, குழந்தை தொழிலாளர்களை மீட்கும் செயற்பாட்டுக்காக திடீர் சோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தி, தனி குழுவை அமைத்துள்ளது. இதில், 530 பொலிஸ் அதிகாரிகள், குழந்தை நலக் குழுக்கள் இணைந்துள்ளன. இக்குழு தெலுங்கானாவின் அனைத்து பகுதிகளிலும் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.


"அமெரிக்காவில் கடவுச் சீட்டு மோசடி" - இந்திய மாணவர்கள் கைது!
[Saturday 2019-02-02 17:00]

அமெரிக்காவில் கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட 130 பேரில், 129 பேர் இந்திய மாணவர்களென அந்நாட்டு குடிவரவு, சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள பார்ம்ங்டன் (Farmington) பல்கலைக்கழகத்திற்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, வேறு நாடுகளிலிருந்து சென்ற மாணவர்களே நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவர்கள் அனைவரும் குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்ட திட்டங்கள் எதனையும் கடைப்பிடிக்கவில்லை என்பது அவர்களின் கடவுச் சீட்டின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக சுங்க அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.


மணிப்பூரில் கடத்தப்பட்ட 101 பெண்கள் மீட்பு!
[Saturday 2019-02-02 17:00]

மணிப்பூரில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மோரே எல்லை வழியாக, பெண்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், நேற்று போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து எல்லைப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். மோரே எல்லையில் உள்ள ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் 40 பெண்கள் மீட்கப்பட்டனர். இம்பாலில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து 61 பெண்கள் மீட்கப்பட்டனர். ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இருமடங்காகுமா?
[Saturday 2019-02-02 17:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோதி 2016ஆம் ஆண்டு பேசியபோது. 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்றார். 2016 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கிறது. அண்மைய தரவுகள் எதுவும் இப்போது இல்லை. இந்த அரசாங்கம் விவசாயிகளின் வருவாயை பெருக்க சில திட்டங்கள் கொண்டு வந்திருந்தாலும், 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை பெருக்க வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள். கோபம் கொண்ட விவசாயிகள் தங்களின் பிரச்னைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர வீதிக்கு வந்து போராடுவது நரேந்திர மோதி அரசாங்கத்தில் தொடர் கதையாகி வருகிறது. கடந்தாண்டு டிசம்பரில் வெளியான தேர்தலில் சில மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் ஊரக பகுதிகளில் மோதி அரசு தன் செல்வாக்கை இழந்ததுதான் என சில ஊடகங்கள் கோடிட்டு காட்டின.


"பிரதமர் பதவி" என்பது தமிழருக்கு எட்டாத தூரம்...
[Saturday 2019-02-02 17:00]

தென் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர் கூட, இந்தியாவின் பிரதமர் ஆக முடியாமல் போனதற்கு பல காரணங்கள் நிலவுகின்றன. அதற்கான பின்னணியில் அமைந்த அடிப்படை காரணங்களை இந்த கட்டுரை அலசுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அமலுக்கு வந்த ஜனநாயக கட்டமைப்பில், இந்திய பிரதமர் ஆகும் வாய்ப்புக்கு சில நடைமுறைகள் வகுக்கப்பட்டன. இந்தியாவை பொருத்தவரை, மாநில அளவில் இயங்கும் கட்சிகள், தேசிய அளவில் இயங்கும் கட்சிகள் உள்ளன. இதில், தேசிய கட்சிகள் தனித்தோ அல்லது மாநில அளவிலான கட்சிகளின் துணையுடனோ மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை சூழ்நிலையின் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். அந்த வகையில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947 முதல் 1964-ஆம் ஆண்டுவரை பிரதமராக நீடித்த ஜவஹர்லால் நேரு தொடங்கி 1966 முதல் 1977-ஆம் ஆண்டுவரை பிரதமராக நீடித்த இந்திரா காந்தி வரை என காங்கிரஸ் தலைமையிலான ஒற்றை தேசிய கட்சியின் ஆட்சி நாட்டில் நடைபெற்றது. இடையில் குல்ஸாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, மீண்டும் குல்ஸாரி லால் நந்தா ஆகியோர் இந்திய பிரதமராக சிறிது காலம் ஆட்சியில் இருந்தார்கள். இந்திரா காந்திக்குப் பிறகு, மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியும் அவரைத் தொடர்ந்து செளத்ரி சரண் சிங் தலைமையிலும் ஜனதா கட்சி மதசார்பற்ற அணி தலைமையிலும் ஆட்சி நடைபெற்றது. பிறகு மீண்டும் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 1980 முதல் 1984-ஆம் ஆண்டு வரை ஆட்சி நடைபெற்றது.


தோல்விகளை மூடி மறைக்கவே 'இடைக்கால வரவு செலவுத்திட்டம்'!
[Saturday 2019-02-02 08:00]

அரசாங்கத்தின் மகத்தான தோல்விகளை மூடிமறைக்கவும் நடைபெறவுள்ள தேர்தலை மனதில்கொண்டும் இடைக்கால வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,


கடனை திருப்பி செலுத்த முடியாததால் அனில் அம்பானி நிறுவனம் முடக்கப்படுகிறது!
[Saturday 2019-02-02 08:00]

அம்பானி சகோதரர்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ். இந்த நிறுவனம், தன்னை திவால் ஆனதாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, கம்பெனிக்கு சொந்தமான சொத்துகளை விற்க கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி முடிவு செய்யப்பட்டது. 18 மாதங்கள் ஆன பிறகும், சொத்துகளை விற்க முடியவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்களுக்கு சிறிதளவு கூட திருப்பி செலுத்த முடியவில்லை.


இடைக்கால பட்ஜெட் குறித்து நரேந்திர மோதி அறிக்கை!
[Saturday 2019-02-02 08:00]

நடுத்தர வர்க்கத்துக்கு பெரும் பயன் அளிப்பதாக 2019 இடைக்கால பட்ஜெட் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த இடைக்கால பட்ஜெட் வெறும் ட்ரைலர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "நடுத்தர வர்க்கத்தினர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளில் இருந்து, தொழில் முனைவோரின் மேம்பாடு வரை அனைவருக்கும் இந்த பட்ஜெட் ஏதுவாக இருக்கிறது" என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார். நடுத்தர மற்றும் 'மேல்' நடுத்தர வர்க்கத்தினர் நேர்மையாக வரி செலுத்தியதால்தான், ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். "இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து, விவசாயிகளை பலப்படுத்தி, தொழிலாளர்களுக்கு மதிப்பளித்து, நடுத்தர வர்க்கத்தின் கனவுகளுக்கு உதவி, வணிகத்தை பெருக்கி, நாட்டின் உள்கட்டமைப்பினை விரைவாக மேம்படுத்த உதவுவதோடு, புதிய இந்தியாவின் கனவுகளை நினைவாக்க சக்தியளிக்கும்" என்றும் பிரதமர் தெரிவித்தார்.


'அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவை இணைக்க கூடாது': சீனா கடும் எதிர்ப்பு!
[Friday 2019-02-01 17:00]

என்.எஸ்.ஜி நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைப்பதற்கு சீனா தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லையென வலியுறுத்தியே சீனா குறித்த எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு இந்தியா கோரி வருகின்றது. இந்நிலையிலேயே அணு ஆயுத ஒழிப்பு, அணு ஆயுத பரவல் தடுப்பு, அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐ.நா பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பு நாடுகள் சீனத் தலைநகர் பீஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தின.


இளம்பெண்ணை சுட்டுக்கொன்று வீடியோ வெளியிட்ட பயங்கரவாதிகள்!
[Friday 2019-02-01 17:00]

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட டங்கேர்போரா பகுதியை சேர்ந்தவர் ஜீனத் உல் இஸ்லாம். கடந்த மாதம் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஜீனத் உல் இஸ்லாமின் உறவினரான முனீர் அஹமது டார் என்பவரின் மகள் இஷ்ரத் முனீர்(25) என்ற பெண்ணை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.


பட்ஜெட் 2019 பற்றி நிதியமைச்சர் பியூஷ் கோயல் உரையின் முக்கிய அம்சங்கள்.
[Friday 2019-02-01 17:00]

வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு பதிலாக பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதுதான். ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை. மாத ஊதியம் பெறுபவர்களுக்கான ஸ்டாண்டார்டு டிடக்ஷன் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை.
[Friday 2019-02-01 17:00]

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பியூஷ் கோயல். 2018 ஆம் ஆண்டு பட்ஜெட் போது வரிவிலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட நடுத்தர வர்க்க எதிர்பார்ப்புகள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத் தளத்தில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. அது குறித்த மீம்கள் அதிகளவில் பகிரப்பட்டன. வருங்கால வைப்பு நிதி, மூலதனம், குறிப்பிட்ட சேமிப்புகள் உள்ளவர்கள் நடைமுறையில் 6.5 லட்சம் வருமானம் வரையில்கூட வருமான வரி செலுத்தவேண்டியிருக்காது என்று அமைச்சர் தெரிவித்தார். இதைவிடவும் கூடுதல் வருமானம் உள்ளவர்கள், வீட்டுக்கடன், கல்விக் கடன் ஆகியவற்றை செலுத்தினால் அவர்களும் வரிசெலுத்தும் நிலை ஏற்படாது என்றும் கோயல் கூறினார்.


2-வது நாளாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம்!
[Friday 2019-02-01 08:00]

அரசு பணியாளர்கள் மீதான ஊழலை ஒழிக்க மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலங்களில் லோக் அயுக்தா சட்டம் 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த சட்டம் மத்தியிலும், பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் மத்தியில் லோக்பால் மற்றும் மராட்டியத்தில் லோக்அயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று முன்தினம் காந்தியவாதி அன்னா ஹசாரே தனது சொந்த கிராமமான அமகத் நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். நேற்று 2-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.


"இந்திய-இத்தாலிய" கலப்பினம் தான் ராகுல் காந்தி: அனந்தகுமார் ஹெக்டே!
[Friday 2019-02-01 08:00]

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை மந்திரியாக இருப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. கர்நாடகத்தை சேர்ந்த இவர் அரசியலமைப்பை மாற்றுவோம் என்றும், அதை மாற்றுவதற்கு என்றே நாங்கள் இங்கே வந்துள்ளோம் என்றும் கூறினார். இது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எழுத்தாளர்களுக்கு தந்தை யார் என தெரியாது என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்து பெண்ணை தொட்டால், கையை வெட்டுங்கள் என்று கூறி புதிய சர்ச்சையில் சிக்கினார். இதனை விமர்சித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவை பற்றி நீங்கள் முஸ்லிம் பெண்ணின் பின்னால் ஓடியவர் என்பது மட்டுமே எனக்கு தெரியும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.


"இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக வெளியான அறிக்கை சரிபார்க்கப்படவில்லை" - மத்திய அரசு.
[Friday 2019-02-01 08:00]

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள அறிக்கை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது ஒரு வரைவு அறிக்கைதான் என்றும், முழுமையாக இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்றும் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தியாவின் வேலையின்மை விகிதம், 1970களில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக, அரசு வேலைவாய்ப்பு அறிக்கை ஒன்று வெளியாளது. வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் 6.1 சதவீதமாக இருப்பதாக இது காட்டுகிறது. தேசிய புள்ளியியல் கமிஷனாலும் இந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் நாளிதழ் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டது.


"காந்தியின் உப்பு சத்தியாகிரக நினைவகம்" - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
[Thursday 2019-01-31 17:00]

மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினத்தில், காந்தியின் உப்பு சத்தியாகிரக நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மகாத்மா காந்தி சொந்தமாக உப்பு தயாரித்ததை நினைவுகூரும் வகையில், குஜராத் தண்டியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அருங்காட்சியகத்தை நேற்று (புதன்கிழமை) திறந்து வைத்தார். குஜராத், தண்டிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி உப்பு சத்தியாகிரக அருங்காட்சியகத்தை ஆரம்பித்து வைக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார்.


ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் நாடு கடத்தப்பட்ட ராஜீவ் சக்சேனா கைது!
[Thursday 2019-01-31 17:00]

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த டுபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் எனப்படும் குறித்த வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் அவரை அமலாக்கத்துறை இன்று (வியாழக்கிழமை) கைது செய்துள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகொப்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் 450 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.


"கேரளாவில் மதுபான விலை உயருகிறது"- கூடுதல் வரி விதிப்பு!
[Thursday 2019-01-31 17:00]

கேரள சட்டசபையில் இன்று நிதி மந்திரி தாமஸ் ஐசக், 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மேலும் 195 பொறியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வனத்துறை மற்றும் வனத்துறை சார்ந்த திட்டங்களுக்காக ரூ.208 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை வளர்ச்சிக் கழகத்திற்கு ரூ.8 கோடி, உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.32 கோடி, மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்கு ரூ.788 கோடி, மலபார் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.35 கோடி, கோச்சி புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.15 கோடி, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ரூ.49 கோடி, தேவசம் போர்டுகளுக்கு ரூ.100 கோடி, மாற்றுத்திறனாளிகள் பென்சன் திட்டத்திற்காக ரூ.500 கோடி, சிறப்பு குழந்தைகள் நலனுக்காக ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தை குறி வைக்கும் 'மோடி'.
[Thursday 2019-01-31 17:00]

பாராளுமன்ற தேர்தலுக்கு 534 தொகுதிகளிலும் உள்ள தொண்டர்களை தயார்படுத்தும் நடவடிக்கையை ஆளும் பா.ஜனதா கட்சி தொடங்கி உள்ளது. தொகுதி பங்கீடு நடத்தி முடிக்கப்பட்டதும், பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எத்தகைய தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும், வாக்காளர்களிடம் பிரதமர் மோடியின் 5 ஆண்டு சாதனைகளை எவ்வாறு பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்பன போன்றவற்றில் பா.ஜனதாவின் ஒவ்வொரு அடித்தள தொண்டனுக்கும் பயிற்சி அளிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக இந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள், பா.ஜனதா நிர்வாகிகள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு பா.ஜனதா தொண்டர்களை உற்சாகப்படுத்த உள்ளனர்.


"இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத வன்முறைக்கு சாத்தியம் அதிகம்": அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை!
[Thursday 2019-01-31 17:00]

இந்திய மக்களவை தேர்தலின்போது, பிரதமர் மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்ந்து ஹிந்து தேசியவாத கருத்துகளை வலியுறுத்தினால் வகுப்புவாத வன்முறைகளுக்கான சாத்தியம் அதிகம் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரித்துள்ளது. உலகளாவிய அச்சுறுத்தல்களின் மதிப்பீடு தொடர்பாக, அமெரிக்க உளவு அமைப்பான தேசிய உளவுப் பிரிவின் இயக்குநர் டேனியல் ஆர்.கோட்ஸ் தயாரித்த அறிக்கை, அமெரிக்க செனட் சபையின் உளவு பிரிவுக்கான குழுவிடம் ஜனவரி 29-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெற்காசியாவில் நிலவும் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தொடர்புடைய விவரங்களும், அந்த நாடுகள் எதிர்கொள்ளும் சாத்தியம் மிகுந்த அச்சுறுத்தல்கள் குறித்தும் அமெரிக்க உளவு அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் தொடர்ச்சியாக நடந்து வரும் அணு ஆயுத திட்டங்களால் தெற்காசியாவில் அணு பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தேசிய உளவுப் பிரிவின் இயக்குநர் டேனியல் ஆர்.கோட்ஸ் மேலும், புதிய வகை அணு ஆயுதங்களின் அறிமுகம், இந்த பிராந்தியத்தில் புதிய வடிவிலான ஆபத்துகளை தீவிரமாக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


"ரபேல் ஊழல் மூலம் இந்திய விமானப்படையை பிரதமர் மோடி விற்று விட்டார்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
[Thursday 2019-01-31 06:00]

நாடு தழுவிய அளவிலான காங்கிரஸ் இளைஞர் அணியினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீடியோ கான்பிரன்சிங் முறையில் இன்று பங்கேற்று பேசினார்.


"எங்கள் சாதனைகளை வேறு அரசு செய்ய 25 ஆண்டுகள் தேவை" - மோடி பெருமிதம்.
[Thursday 2019-01-31 06:00]

குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள விமான நிலையத்தை ரூ. 354 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்காகவும், புதிய முனையம் கட்டுவதற்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த 25 ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், பாஜக அரசு 4 ஆண்டுகளில் இதனை செய்து முடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தொங்கு பாராளுமன்றங்கள் அமைந்ததால் கொள்கை ரீதியாக தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் முந்தைய அரசுகள் திணறி வந்தன. மக்கள் எங்களை முழுமையான மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர வைத்ததால் நாங்கள் பல காரியங்களை நிறைவேற்ற முடிந்தது. மத்தியில் மற்றொரு முழு பெரும்பான்மையான அரசு அமைய வேண்டும். அத்தகைய அரசால் மட்டுமே கடுமையான மற்றும் வலுவான முடிவுகளை எடுக்க முடியும்.


நிதி வழங்கிய மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு.
[Thursday 2019-01-31 06:00]

ஓய்வூதியப் பணத்தில் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயை, தலைநகரை உருவாக்குவதற்காக வழங்கிய மூதாட்டியின் காலில் விழுந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு வணங்கினார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அனந்தபூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுகதிரியில் உள்ள செர்லோபள்ளி அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீரை திறந்து வைத்து உரையாற்றினார். அந்தவேளையில் மேடைக்கு வந்த 87 வயது மதிக்கத்தக்க மூதாட்டி முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்தார்.


"பெற்றோர்களின் இலட்சியங்களை பிள்ளைகளுக்கு திணிக்க கூடாது" - பிரதமர் மோடி
[Wednesday 2019-01-30 17:00]

பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத இலட்சியங்களை பிள்ளைகளின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள நினைக்ககூடாதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி, தல்கோடரா உள்ளக அரங்கில் மாணவர்களுடன் பிரதமர் மோடி, நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,


பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியாவில் தொடரும்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!
[Wednesday 2019-01-30 17:00]

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடு தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டான் கோட்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா