Untitled Document
April 18, 2024 [GMT]
பொங்கல் பரிசு பணத்தை தராததால் மனைவி வெட்டிக் கொலை.
[Sunday 2019-01-13 09:00]

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் ராமர் (வயது 70), இவரது மனைவி ராசாத்தி (65). இவர்கள் இருவருக்கம் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பணத்தை ராசாத்தி நேற்று வாங்கி வந்தார். அதில் பாதியை தனக்கு தர வேண்டும் என்று ராமர் கேட்டார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.


4 ஆண்டுகால ஆட்சியில் எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை - பிரதமர் மோடி பெருமிதம்!
[Sunday 2019-01-13 09:00]

மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் 2 நாள் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தனது அரசின் செயல் பாடுகளை அவர் பெருமிதத்துடன் எடுத்துரைத்ததுடன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். கட்சியை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது:- சர்தார் வல்லபாய் படேல் பிரதமராகி இருந்தால் நாட்டின் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும் என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதைப்போலவே 2004-ம் ஆண்டில் வாஜ்பாய் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், இந்தியா பல மைல்கற்களை எட்டியிருக்கும். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 10 ஆண்டுகளை வீணாக்கி விட்டது.


அதகளமாக தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பணிகள்!
[Sunday 2019-01-13 09:00]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு சோதனைகளுக்கு பிறகு 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஆகிய கிராமங்களில் வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.


மேலும் ஆந்திராவில் இருந்து 4 இளம்பெண்கள் சபரிமலை பயணம்.
[Saturday 2019-01-12 22:00]

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சபரிமலைக்கு செல்ல விரும்பும் இளம்பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறியது. கேரள அரசின் அறிவிப்பை தொடர்ந்து சபரிமலை சென்ற பெண்கள் பலரும் பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டக்காரர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 கேரள பெண்கள் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.


சபரிமலைக்கு சென்ற 2 கேரள பெண்களும் வீடு திரும்ப முடியாமல் தவிப்பு.
[Saturday 2019-01-12 22:00]

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல பல இளம்பெண்கள் முயன்றனர். சபரிமலை கோவில் ஆச்சாரப்படி இளம்பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை மீறி கடந்த 2-ந்தேதி கேரளாவின் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.


போலி என்கவுண்டரில் வாலிபர் சுட்டுக்கொலை! - மோடியை கொல்ல வந்ததாக பொய் குற்றச்சாட்டு.
[Saturday 2019-01-12 22:00]

பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போது என்கவுண்டர்கள் நடந்தன. குறிப்பாக 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை 5 ஆண்டு இடைவெளியில் 17 என்கவுண்டர்கள் நடந்தன. இவை அனைத்தும் போலி என்கவுண்டர்கள் என்றும் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எச்.எஸ்.பெடி தலைமையில் ஒரு நபர் கமி‌ஷன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் தனது 229 பக்க விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். மூடி சீல் வைக்கப்பட்ட அறிக்கை சுப்ரீம் கோர்ட்டின் தரை தளத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் வைக்கப்பட்டு இருந்தன.


"மோடிக்கு ஆங்கிலத்தில் ஒருவார்த்தை கூட பேச தெரியாது"- மம்தா பானர்ஜி கிண்டல்!
[Saturday 2019-01-12 22:00]

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக பெங்காலி மொழி இணையதளம் ஒன்றில் கூறப்பட்டு இருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டங்களில் பேசும்போது நிறைய பேசுகிறார். நிறைய வி‌ஷயங்களை தெரிந்தவர் போல சரளமாக உரையாடுகிறார். ஆனால் அவரால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாது. அவரது ஆங்கில பேச்சு முறையானதாக இருப்பது இல்லை.


"இந்தி தெரியாத காரணத்தால் தமிழக இளைஞருக்கு வெளிநாடு செல்ல தடை"!
[Saturday 2019-01-12 21:00]

"முயன்று பார்த்து தோற்றுவிட்ட இந்தி திணிப்பை மத்தியிலுள்ள அரசுகள் மீண்டும், மீண்டும் செய்தால் அது நாட்டில் பிளவுகளையே ஏற்படுத்தும்" என்று இந்தி மொழி தெரியாததால் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்ற ஒப்புதல் மறுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஆபிரகாம் சாமுவேல் பிபிசி தமிழுடனான பிரத்யேக பேட்டியின்போது தெரிவித்தார். கடந்த ஜனவரி 8ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த ஆபிரகாம் சாமுவேல் என்ற இளைஞர், "எனக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும், இந்தி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காக மும்பை சர்வதேச விமான நிலையத்தில் எனக்கு குடியேற்ற ஒப்புதல் வழங்குவதற்கு அதிகாரி ஒருவர் மறுப்புத் தெரிவித்துவிட்டார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்டோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.


பாலிவுட் நடிகர்கள் பிரதமர் மோதியை சந்தித்தது ஏன்?
[Saturday 2019-01-12 21:00]

பாலிவுட் நடிகர், நடிகைகளின் பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த புகைப்படம் ஒன்று வியாழக்கிழமை காலை சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. திரையுலக கலைஞர்கள் மட்டுமின்றி இந்த புகைப்படத்தை பிரதமர் மோதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதை சுமார் 22 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஆனால், இந்த புகைப்படத்தின் போலியான பிரதி ஒன்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த போலியான புகைப்படத்தில் சில திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் நெற்றியில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று எழுதியுள்ளனர். கடந்து செல்க இன்ஸ்டாகிராம் பதிவு இவரது narendramodiமுடிவு இன்ஸ்டாகிராம் பதிவின் இவரது narendramodi அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டுமென பிரதமர் மோதியின் முன்னிலையில், பாலிவுட் நடிகர்கள் கோரிக்கை வைத்ததாக ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் உள்ள பல குழுக்களில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.


நீதிபதி செல்லமேஸ்வர் கிராமத்தில் விவசாயம் செய்கிறார்.
[Saturday 2019-01-12 21:00]

இந்திய அரசு ஒழுங்காக செயல்படுகிறதா? அல்லது இந்திய உச்ச நீதிமன்றம் சரியான வேலைகளை செய்கிறதா? என்பது தனக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ இல்லாத இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் அமைதியான வாழ்க்கை நடத்தி வருவதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார். நான் சொல்வதெல்லாம் உண்மை என்றில்லை. ஆனால், தவறானதை சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமை. அதனைதான் நான் செய்தேன்


பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 % இட ஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் ஒப்புதல்.
[Saturday 2019-01-12 21:00]

இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான மசோதா கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவை ஆதரித்ததால், மொத்தம் வாக்கெடுப்பில் பங்கேற்ற 326 பேரில் 323 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மூவர் எதிர்த்து வாக்களித்தனர். மாநிலங்களவையில் இது தொடர்பாக புதன்கிழமை விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 149 பேரும், எதிராக ஏழு பேரும் வாக்களித்தனர்.


சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
[Saturday 2019-01-12 09:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மற்றும் கயல்விழி தம்பதிக்கு வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கயல்விழிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


காங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம்: ராகுல் ஆவேசம்!
[Saturday 2019-01-12 09:00]

காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோல்வியடையச் செய்ய சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கின்றன. இதற்காக இன்று (சனிக்கிழமை) அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளனர்.


'அதிமுக தோற்கும்' - அப்சரா ரெட்டி!
[Saturday 2019-01-12 09:00]

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் அணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அப்சரா ரெட்டி உடனான பிபிசி தமிழின் சிறப்பு நேர்காணல். அதிமுகவிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தது ஏன் என அவரிடம் பிபிசி தமிழ் செய்தியாளர் கிருத்திகா கேட்டபோது, "அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் என்ற முறையில், நான் குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமை ஆகிய விஷயங்களில் பணியாற்றி வந்தேன். அப்போதுதான் அம்மாவின் மரணம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, கட்சியில் பல்வேறு பிரச்சனைகளும், குழப்பங்களும் எழுந்தன.


சபரிமலை வன்முறை குறித்து கேரள ஆளுநரை சந்தித்து பினராயி விஜயன் விளக்கம்!
[Friday 2019-01-11 21:00]

சபரிமலை முழு அடைப்பு போராட்டத்தின் போது, நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவத்தை சந்தித்து விளக்கமளித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சு, கேரள ஆளுநர் சதாசிவத்திடம் அறிக்கையொன்றை கோரியுள்ளது. இந்நிலையிலேயே முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று (வியாழக்கிழமை) இரவு ஆளுநர் சதாசிவத்தை சந்தித்து சபரிமலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.


மம்தா பானர்ஜி கண்டனம் - பாஜக அரசு சிபிஐயை துஷ்பிரயோகம் செய்கிறது.
[Friday 2019-01-11 21:00]

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தால், அவர் மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நியமனக்குழு ஆலோசனை கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவானது. மேலும், அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.


16 வயது சிறுமியை கவுரவ கொலை செய்த பெற்றோர்.
[Friday 2019-01-11 21:00]

பீகார் மாநிலம் கயா மாவட்டம் பட்வா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த வாரம் திடீர் என்று காணாமல் போய்விட்டார். நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டனர். தலையை தேடியபோது அருகில் சற்று தொலைவில் வயலில் கிடந்ததை கண்டுபிடித்தனர். கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.


பிரசவத்தின்போது காலை பிடித்து மிக அழுத்தமாக இழுத்ததால் குழந்தையின் தலை துண்டிப்பு.
[Friday 2019-01-11 21:00]

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் ராம்காரை சேர்ந்தவர் திலோக்பதி. இவரது மனைவி தீக்ஷா கன்வர். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ராம்காரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். அந்த ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர் நிகில்சர்மா அப்போது வெளியே சென்றிருந்தார். பெண் நர்சுகளும் இல்லை. எனவே ஆண் நர்சுகள் அமிர்த்லால், ஜுன்ஜ்கார்சிங் ஆகியோர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் இருந்து முதலில் குழந்தையின் தலைதான் வருவது வழக்கம். ஆனால் இந்த பெண்ணுக்கு குழந்தையின் கால் முதலில் வெளிவந்தது. இதனால் பிரசவம் ஆவதில் சிரமம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு பிரசவம் பார்த்த 2 ஆண் நர்சுகளும் குழந்தையின் காலை பிடித்து இழுத்தனர்.


தேர்தலில் கூட்டணி வைப்பதற்கு திமுகவை மோடி அழைக்கவில்லை- தமிழிசை சவுந்தரராஜன்.
[Friday 2019-01-11 21:00]

தமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழியில் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், பழைய நண்பர்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இதனால் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என்றும், பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.


புதிய பதவியை ஏற்க மறுத்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி விலகல்.
[Friday 2019-01-11 21:00]

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர்மட்டக் குழு தம்மை நீக்கிய மறுநாளான இன்று, அலோக் வர்மா தனது புதிய பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார். அவர் தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று நியமனங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று, வியாழக்கிழமை, தெரிவித்திருந்தது. இந்த மாத இறுதியில் அவரது சிபிஐ இயக்குநர் பதவிக்காலம் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை செயலருக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இந்தியக் காவல் பணியில் (ஐ.பி.எஸ்) இருந்து அவர் ஜூலை 31, 2017 அன்றே ஓய்வு பெற்று விட்டதால், ஏற்கனவே பணி ஓய்வு வயதை அடைந்துள்ள தாம் புதிய பொறுப்பை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.


'சோனியா காந்தி' இரண்டாம் எலிசபத் ராணியைவிட பணக்காரரா?
[Friday 2019-01-11 21:00]

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாயா இரண்டாம் எலிசபத் ராணியைவிட சோனியா காந்தி பணக்காரர் என பிரபலமான நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்த கட்டுரையை பகிர்ந்திருந்தார். அவர், "காங்கிரஸின் எலிசபத், பிரிட்டன் ராணியை விட பணக்காரர். காங்கிரஸின் சுல்தான் (இளவரசர்), ஓமன் சுல்தானைவிட வளமானவர். அவர்களின் நூறு சதவிகித முறைகேடான சொத்துகளை பறிமுதல் செய்ய இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்" என்று ட்விட் செய்திருந்தார். பிரதமர் நரேந்திர மோதி அலுவலக ட்விட்டர் கணக்கை அந்த ட்வீட்டில் டேக் செய்திருந்தார். டெல்லி பா.ஜ.க சமூக ஊடக தலைவர் புனித் அகர்வாலாவும், இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்திருந்தார். அந்த ட்விட்டில் புனித், "எத்தனை சேனல்கள் இந்த விஷயத்தில் விவாதம் நடத்தும், முறைகேட்டை தவிர காங்கிரஸுக்கு வேறு எப்படி வருவாய் வந்திருக்க போகிறது?" என்று குறிப்பிட்டு இருந்தார்.


சிந்து சமவெளி காலத்து கல்லறைகளில் ஜோடி எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.
[Friday 2019-01-11 09:00]

சிந்து சமவெளி நகரத்தில் இரு அரிதான எலும்புக்கூடுகளைஇந்தியா மற்றும் தென் கொரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 2016ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர் - தற்போது ஹரியானாவில் உள்ள ரகிகர்ஹி என்ற கிராமத்தில் உள்ளது அந்த இடம். கடந்த இரண்டு ஆண்டுகளாக "காலவரிசை" மற்றும் அவர்களின் இறப்பிற்கு பின்னால் இருக்கும் சாத்தியமான காரணங்கள் குறித்து அவர்கள் ஆராய்ச்சி செய்து தற்போது அதன் கண்டுபிடிப்புகளை சர்வதேச சஞ்சிகை ஒன்றில் வெளியிட்டுள்ளனர். "அந்த ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் எதிரெதிரே நெருக்கமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் ஜோடியாக இருந்தார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும், இருவரும் ஒரே நேரத்தில் இறந்திருக்கக் கூடும். ஆனால், எப்படி இறந்தார்கள் என்பது மர்மமாக உள்ளது" என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவை தலைமை தாங்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வசந்த் ஷிண்டே.


இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் விமர்சனம் - "எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது"
[Friday 2019-01-11 09:00]

பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் கடந்த 8-ந் தேதி தாக்கல் செய்தார்.


பா.ஜ.க. வாஜ்பாய் வழியில் செயல்படும்
[Thursday 2019-01-10 21:00]

கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாய் வழியில் பா.ஜ.க. செயற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளார். தர்மபுரி மற்றும் கடலூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் இதில் பங்கேற்று உரையாடியிருந்தனர். இதன்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். அதன்படி தமிழக நிர்வாகி ஒருவர்,


'பொங்கல் பரிசு தடை' - தமிழக அரசு மனு தாக்கல்!
[Thursday 2019-01-10 21:00]

பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதார்களுக்கு 1000 ரூபாய் வழங்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வசதியானவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தரக்கூடாதென பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.


ஐந்தாவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு.
[Thursday 2019-01-10 21:00]

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் கடந்த பத்து நாட்களாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.


உத்தரபிரதேச மாநிலத்தில் கும்பமேளாவை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி.
[Thursday 2019-01-10 21:00]

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனா, கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது. வருகிற 14-ந்தேதி இந்த கும்பமேளா தொடங்க உள்ளது. 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் கும்பமேளா என்பதால், இந்த கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தினமும் ரெயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி அலகாபாத் ரெயில் நிலையம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேரை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ரெயில் நிலையங்களிலும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பா.ஜ.க கூட்டணி கலைகிறதா!
[Thursday 2019-01-10 21:00]

தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் முடிவுதான். 1998 மற்றும் 2004 என இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றி இருந்தது அந்த கூட்டணி. வாஜ்பேயியால் உருவாக்கப்பட்ட கூட்டணி அது. 2014 தேர்தலை எதிர்கொள்ள அந்த கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று நினைத்தது பா.ஜ.க. அதற்கான பணிகளை பா.ஜ.க வின் அப்போதைய தலைவர் ராஜ்நாத் சிங் மேற்கொண்டார். ஆனால், அந்த பணி அவ்வளவு எளிதானதாக இல்லை. மனம் தளராத ராஜ்நாத்சிங் அனைத்து கட்சிகளுடன் உறவை புதுபித்து கொண்டார். முன்பு கூட்டணியில் இருந்தவர்கள், விட்டு சென்றவர்கள், சிறு கட்சிகள் என அனைவருடன் இணக்கம் பாராட்டினார். இது பா.ஜ.கவுக்கு நல்விளைவுகளை தந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட கட்சிகள் பா.ஜ,க தலைமையை ஏற்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வந்தன. ஒரு ஸ்திரமான கூட்டணி அமையப்பெற்றது. இதற்கெல்லாம் காரணம் ஒற்றை மனிதர் - ராஜ்நாத் சிங்.

Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா