Untitled Document
November 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அப்சல் குரு தூக்கிலிடப்படும் தகவல் - மனைவிக்கு அனுப்பிய விரைவு தபால் நேற்றே சென்றது!
[Tuesday 2013-02-12 07:00]

அப்சல் குரு தூக்கிலிடப்படும் தகவல் பற்றி அவரது மனைவிக்கு விரைவு தபால் மூலம் மத்திய அரசு அனுப்பிய கடிதம் நேற்று சென்றடைந்தது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்படும் தகவலை அவரது குடும்பத்தினருக்கு விரைவு தபால் மூலம் தெரியபடுத்தி விட்டதாக மத்திய அரசு கூறியது. ஆனால், அப்சல் குருவின் தூக்கு தண்டனையை டி.வி. சேனல் மூலமாகத்தான் அறிந்தோம் என அப்சல் குருவின் குடும்பத்தினர் கூறினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு அனுப்பிய கடிதம், அப்சல் குருவின் மனைவியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.


ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணமானார் Top News Top News
[Tuesday 2013-02-12 07:00]

காதலிக்க மறுத்ததால், ஆசிட் வீச்சுக்கு உள்ளான காரைக்காலைச் சேர்ந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரைக்காலைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி. இவரை சுரேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது கடந்த நவம்பர் 14ம் தேதி சுரேஷ் ஆசிட் வீசினார். இதில் முகம் மற்றும் உடலெங்கும் வெந்த நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் வினோதினி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோதினி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு எப்போது தண்டனை வழங்குவீர்கள்? - ஜம்மு காஷ்மீர் முதல்வர் கொதிப்பு Top News
[Monday 2013-02-11 18:00]

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை சம்பவங்களில் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல் குருவை தூக்கிலிட்டிருக்கிறார்களே என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கொந்தளித்திருக்கிறார். அப்சல்குரு தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இது போன்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளித்துவிடும். இதனால் பெரும்பான்மையான காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வாய்ப்பு அதிகரித்துள்ளது.


கச்சதீவு செல்லும் பக்தர்கள் என்ற போர்வையில் ஊடுருவல் நிகழலாம் - உளவுப்பிரிவு எச்சரிக்கை!
[Monday 2013-02-11 18:00]

கச்சத்தீவு ஆலய விழாவிற்கு செல்லும் பக்தர்கள் போர்வையில், தீவிரவாதிகள் ஊடுருவல் நடக்கலாம், என்ற தகவலால் எச்சரிக்கையாக இருக்க கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய விழாவிற்கு, பிப்.,23ல் ராமேஸ்வரத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட படகுகளில் பக்தர்கள் செல்ல உள்ளனர். பாஸ்போர்ட் இல்லாமல் சென்று வரலாம் என்பதால் பக்தர்கள் போர்வையில் தீவிரவாதிகள், இலங்கைக்கு திருட்டுதனமாக சென்று திரும்ப நினைக்கும் அகதிகளும் செல்ல முயற்சிக்கலாம் என்பதால், கியூ, உளவு பிரிவுகள், மற்றும் கஸ்டம்ஸ், இந்திய கடற்படையினர், பக்தர்களை தீவிரமாக கண்காணித்து அனுப்ப வேண்டும், என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கையில் சீனிவாச கல்யாணம் - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ராஜபக்ச கோரிக்கை!
[Monday 2013-02-11 18:00]

இலங்கையில் சீனிவாச கல்யாணம் நடத்த வேண்டும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகளை சந்தித்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் திருப்பதி சென்றிருந்தபோதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அவரின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், அதற்கான தேதியை, விரைவில் அறிவிப்பதாக கூறினர்.


அலகாபாத் கும்பமேளாவில் இதுவரை 3 இலட்சம் பேரைக் காணவில்லை!
[Monday 2013-02-11 17:00]

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் காணாமல் போயிருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா தற்போது அலகாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான சாதுக்களும் பல லட்சம் பக்தர்களும் கலந்து கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் கோடிக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர்.


ராஜிவ்காந்தி கொலை விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை! - சிபிஐ அதிகாரி ரகோத்தமன்
[Monday 2013-02-11 17:00]

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை என்று அக்கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் தெரிவித்திருக்கிறார். அப்சல் குருவைத் தூக்கிலிட்ட நிலையில் ராஜிவ் மற்றும் பியாந்த்சிங் கொலையாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லையே என்று ஒருதரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்கள் பலவும் பல கோணங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.


இலங்கை சிறையில் வாடும், 27 தமிழர்கள் - முகவரியை, மத்திய அரசுக்கு அனுப்பாமல், தமிழக அரசு இழுத்தடிப்பு!
[Monday 2013-02-11 08:00]

இலங்கை சிறையில் வாடும், 27 தமிழர்களை, தமிழகம் கொண்டு வர, அவர்களின் முகவரியை, மத்திய அரசுக்கு அனுப்பாமல், தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது.இலங்கை, கொழும்பு சிறையில், தமிழகத்தை சேர்ந்த, 27 பேரும், கேரளாவை சேர்ந்த ஆறு பேரும், என, 33 பேர் உள்ளனர். இவர்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அவர்களில், சுந்தரம் என்பவர், கேரளாவின், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர், தவறுதலாக, தமிழகத்தை சேர்ந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


அலகாபாத் கும்பமேளாவில் திரண்ட 3 கோடி மக்கள் - நெரிசலில் 36 பேர் பலி!
[Monday 2013-02-11 08:00]

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்ப தயாராகி கொண்டிருந்த நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை இடிந்து விழுந்தது. இதனையடுத்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியாயினர் பலர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்ப்பட்டுள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உ.பி., மாநிலம் அலகாபாத்தில், தை அமாவாசை புனித நீராடலில், 3 கோடி மக்கள் பங்கேற்றனர். அதிகாலையில், ஆயிரக்கணக்கான நாகா சாதுக்கள், கங்கையில் நீராடி அணிவகுப்பாக நடந்து சென்ற காட்சி, மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.


இலங்கைக்கு எதிரான அடுத்த தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்க தயங்காது! - நாராயணசாமி
[Monday 2013-02-11 08:00]

இலங்கை பிரச்னையை மத்திய அரசு நாசூக்காக கையாள வேண்டி உள்ளது. என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார். விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ரூ.500 கோடியில் வீடுகள் கட்டுவது, சாலைகள் அமைப்பது போன்ற திட்டங்களை நடத்தி கொண்டு இருக்கிறோம். இன்னும் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்த இருக்கிறோம். மாநில அரசு கூறுவதுபோல், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதித்து அவர்களை விரோதித்து கொண்டால், அங்குள்ள தமிழர்களுக்கு நம்மால் உதவி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.


கசாப், அப்சல் குரு வரிசையில் அடுத்த தூக்கு ராஜோனாவுக்கு?
[Monday 2013-02-11 07:00]

அஜ்மல் கசாப், அப்சல் குரு வரிசையில் அடுத்ததாக, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் படுகொலை வழக்கில் சிக்கிய தீவிரவாதி பல்வந்த் சிங் ராஜோனாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தூக்கு தண்டனை கைதிகளில் மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப், நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டு விட்டனர்.இந்த வரிசையில் அடுத்ததாக இருக்கும் நபர் பல்வந்த் சிங் ராஜோனா. பாபர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி.


ராஜபக்சவுக்கு இந்திய அரசு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கவில்லை! - மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
[Sunday 2013-02-10 18:00]

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு இந்திய அரசு சார்பில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். முன்னாள் மேயர் எம்.ராதாகிருஷ்ண பிள்ளை நூற்றாண்டு விழா வேப்பேரி பெரியார் திடலில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்த ஜி.கே. வாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-


ஊடகங்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் காஷ்மீர் - இன்றும் ஊரடங்கு நீடிப்பு!
[Sunday 2013-02-10 18:00]

பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணியளவில் டில்லி திகார் சிறையில் அப்சல் குரு தூககிலிடப்பட்டார். இதையடுத்து அவரது சொந்த மாநிலமான காஷ்மீரில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இன்று பதட்டம் நீடிப்பதால் இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று நடந்த வன்முறையில் 36 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு இன்று நீட்டிக்கப்பட்டது.


முதலில் படித்து பணியில் சேருங்கள், அதன்பிறகு காதல் வந்தால் காதலியுங்கள்! - ராமதாஸ் அறிவுரை
[Sunday 2013-02-10 18:00]

திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.தென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி பாமக சார்பில் அடையாறில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான். பா.ம.க.வை தவிர வேறு எந்த கட்சியும் வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. இதனால்தான் பாமகவை பற்றி மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எனவேதான் எங்களால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையில் புதிய அரசியலைப் பற்றி பேசுகிறோம்.


பத்திரிகையாளரை உதைப்பேன் என்று மிரட்டிய மம்தா!
[Sunday 2013-02-10 18:00]

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அண்மைக்காலமாக அடிக்கிற பேச்சுகளாலேயே சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். பிரதமர் மன்மோகன்சிங்கை அடித்தா மாநிலத்துக்கு நிதி கேட்க முடியும் கேட்டு அதிர வைத்தார். சில நாட்களுக்கு முன்பு தமது பாதுகாவலரை உங்களையெல்லாம் சாட்டையால அடிச்சாத்தான் திருந்துவீங்க என்று கூறி சர்ச்சையை உருவாக்கினார், இந்த சர்ச்சை அடங்குவதற்குள் கொல்கத்தா கண்காட்சி ஒன்றில் மமதா பானர்ஜி கலந்து கொண்டார். அவரை வளைத்து வளைத்து பத்திரிகை புகைப்படக்காரர்கள் படமெடுத்தனர். ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன மமதா, உங்களுக்கெல்லாம் உதை விழும் என்று பகிரங்கமாக எச்சரிக்க அனைவரும் அப்படியே ஆடிப் போய்விட்டனர்.


கச்சத்தீவு விழாவுக்குச் செல்லும் தமிழக பக்தர்கள் 5,000 ரூபா மட்டும் கொண்டு செல்ல அனுமதி!
[Sunday 2013-02-10 08:00]

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவுக்குச் செல்லும், தமிழக பக்தர்கள், 5,000 ரூபாய் மட்டும் கொண்டு செல்ல, அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது.கச்சச்தீவு அந்தோணியார் ஆலய விழா, இம்மாதம், 23, 24ல் நடக்கிறது. ராமநாதபுரம், சிவகங்கை தவிர, பிற மாவட்ட பக்தர்கள், விழாவில் பங்கேற்க, போலீசாரிடம் என்.ஓ.சி., சான்று பெற வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதனால், வெளி மாவட்ட பக்தர்கள் பங்கேற்பதில், சிக்கல் எழுந்துள்ளதால், தற்போது இந்த புதிய விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.


தி.மு.க.உறுதி காட்டியிருந்தால், ராஜபக்ச பயணம் ரத்தாகியிருக்கும் - கட்சித் தலைவர்கள் கருத்து!
[Sunday 2013-02-10 08:00]

தமிழக அரசியலையும், இலங்கை விவகாரத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. தற்போது, ராஜபக்ச வருகையால், மீண்டும், தமிழக அரசியல் களம் பரபரப்பானது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில், டில்லியிலும், திருப்பதியிலும் போராட்டங்கள், சென்னையில், இலங்கை துணை தூதரகம் முற்றுகை, கொடும்பாவி எரிப்பு, இலங்கை வங்கி மீது தாக்குதல் என, எதிர்ப்பு குரல் பலமாக ஒலித்தது. இதில், இலங்கை விவகாரத்திற்காக, தி.மு.க., ஆரம்பித்த, "டெசோ' அமைப்பும், கருணாநிதி தலைமையில், கறுப்புச்சட்டை அணிந்து, ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.


பாதுகாப்புத் தடைகளை மீறி ராஜபக்சவுக்கு கறுப்புக்கொடி காட்டிய மதிமுக தொண்டர்கள் - பொலிசார் அதிர்ச்சி!
[Sunday 2013-02-10 08:00]

திருப்பதியில் பலத்த பாதுகாப்புக்கிடையிலும் ராஜபக்சவுக்கு மதிமுக தொண்டர்கள் கறுப்புக்கொடி காட்டினர். இலங்கை அதிபர் ராஜபக்ச நேற்றுக் காலை தரிசனம் முடித்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டார். திருமலையிலிருந்து இறங்கி அலிபிரியை கடந்த பிறகு கபிலர் தீர்த்தம் வளைவை அடுத்துள்ள பெட்ரோல் நிலையம் அருகில் காத்திருந்த மதிமுக தொண்டர்கள் சிலர் பாதுகாப்பு வாகனம் வரும்போது கறுப்புக்கொடிக் காட்டினர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீஸார் அவர்களின் கறுப்புக்கொடிகளை பிடுங்கிக் கொண்டனர். உடனே தொண்டர்கள் கட்சிக்கொடியை ஏந்தியவாறு கோஷமிட்டனர். போலீஸார் தடியடி நடத்தியதில் அனைவரும் சிதறி ஓடினர்.


தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டி இருந் தால் பெங்களூரில் குடியேறியிருப்பேன்! - கமல் பேட்டி
[Sunday 2013-02-10 08:00]

விஸ்வரூபம் பட பிரச்னையால் நான் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டி இருந் தால் பெங்களூருக்கு குடி வந்திருப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். கர்நாடகாவில் விஸ்வரூபம் 45 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தை விளம்பர படுத்த பெங்களூர் ரேணுகாம்பா தியேட்டருக்கு கமல்ஹாசன் நேற்று வந்தார். ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார். பின்னர் நிருபர்களுக்கு அவரளித்த பேட்டி:


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - புதுவையில் சீமான் உண்ணாவிரதம்!
[Saturday 2013-02-09 17:00]

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் புதுவையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கு புதுவை போலீசார் அனுமதி மறுத்தனர்.இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வேண்டி நாம் தமிழர் கட்சியினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 4-ந் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சியினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.


அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்து ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு - வன்முறைகளில் பலர் காயம்!
[Saturday 2013-02-09 17:00]

நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து இன்று திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இதையடுத்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. கேபிள் டி.வி., எஸ்எம்.எஸ்., மற்றும் சமூக வலைத்தளங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தடை செய்யப்பட்டிருந்தது.


பதற்றமின்றி அமைதியாக தூக்குமேடைக்குச் சென்ற அப்சல் குரு!
[Saturday 2013-02-09 17:00]

பயங்கரவாதி அப்சல் குருவிடம், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள செய்தியை தெரிவித்தவுடன் அவன், எவ்வித பதட்டமும் அடையாமல், ‌‌‌யாருடனும் பேசாமல், மிகவும் அமைதியாக இருந்ததாக திகார் சிறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை நிறைகவேற்றப்பட உள்ள செய்தி, அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. அந்த இறுதி நிமிடங்களில், மிகவும் அமைதியாக காணப்பட்ட அப்சல், எவ்வித சலனமும் செய்யாமல் தூக்கு மேடை நோக்கி மெதுவாக நடந்து சென்றதாக அவர் கூறினார்.


திண்டிவனத்தில் தண்டவாளம் தகர்ப்பு - ராஜபக்சவுக்கு எதிர்ப்பா?
[Saturday 2013-02-09 17:00]

திண்டிவனம் அருகே தண்டவாளம் உடைந்து கிடந்தது. வெடி வைத்து தகர்க்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை சேது எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. காலை 7.30 மணியளவில் திண்டிவனம் அடுத்த மேல்பேட்டையை கடந்தபோது, தண்டவாளத்தில் வழக்கத்துக்கு மாறாக பயங்கர சத்தம் கேட்டது. ரயிலும் பயங்கரமாக குலுங்கியது.


இனப்படுகொலை நடந்தபோது தடுக்காத கருணாநிதி ராஜபக்சவை எதிர்ப்பது போல நாடகம் போடுகிறார்! - வைகோ குற்றச்சாட்டு
[Saturday 2013-02-09 16:00]

இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது அதை தடுக்காமல் இன்று ராஜபக்சவை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கருணாநிதி நாடகம் போடுகிறார் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ, நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என்று கூறினார்.


வேலூர் தங்கக் கோவிலில் 70 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட சுவர்ணலட்சுமி விக்கிரகம்!
[Saturday 2013-02-09 09:00]

வேலூர் தங்க கோவிலில், 21 கோடி ரூபாயில், 70 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட, ஸ்ரீ சுவர்ண லட்சுமி விக்ரகம் கண் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.வேலூர் நாராயணி பீடத்தில் சக்தி அம்மா நிருபர்களிடம் கூறியதாவது: 21 கோடி ரூபாய் மதிப்பில், 70 கிலோ தங்கத்தால், மகாலட்சுமியின் திரு உருவத்தை தங்க விக்கிரமாக செய்து, தங்க கோவிலில் பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம்.சிலை இரண்டரை அடி உயரம், 70 கிலோ எடை கொண்டது. நான்கு கைகளுடன் தாமரை மலர்கள் மேல் பத்மானசத்துடன், இரண்டு கைகளில் தாமரை புஷ்பங்கள், இரண்டு கைகளில் அபய கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.


ஆங்கிலம் தெரியாத ஸ்டாலின், வெள்ளைக்காரர்களுடன் எப்படி பேச முடியும்? - சட்டசபையில் சரத்குமார் கேள்வி
[Saturday 2013-02-09 09:00]

ஆங்கிலம் தெரியாத ஸ்டாலின், வெள்ளைக்காரர்களுடன் எப்படி பேச முடியும்?'' என, சட்டசபையில், சமத்துவ மக்கள் கட்சி, எம்.எல்.ஏ., சரத்குமார், கிண்டலடித்தார்.கவர்னர் உரை மீதான விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து, விவசாயிகளுக்கு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை பாராட்டி பேசினர்.அப்போது, சமத்துவ மக்கள் கட்சி, எம்.எல்.ஏ., சரத்குமார்பேசியதாவது:


போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க இந்தியா வலியுறுத்த வேண்டும்! - ஜெயலலிதா
[Saturday 2013-02-09 09:00]

இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சட்டசபையில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பாக, ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை.


நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்!
[Saturday 2013-02-09 09:00]

2001ம் ஆண்டு இந்திய பார்லிமென்ட் கட்டிடம் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்சல்குருவுக்கு இன்றுகாலை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது பார்லிமென்ட் கட்டிட தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவரது கருணை மனுவை கடந்த சில நாட்களுக்கு முன் நிராகரித்ததை அடுத்து டில்லி திகார் சிறையில் இன்று காலை அவர் தூக்கிலிடப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா