Untitled Document
March 28, 2024 [GMT]
இளம் பெண்ணை கொலை செய்தது ஏன்? - கைதான பெண்கள் அதிர்ச்சி வாக்குமூலம்
[Friday 2018-11-09 17:00]

பாலியல் தொழில் போட்டி காரணமாக மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வியை ஆட்டோ டிரைவர்கள் மூலம் இரண்டு பெண்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரீனா நீச்சல் குளத்துக்குப்பின்புறத்தில் உள்ள கடற்கரை மணலில் கடந்த 4-ம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுகிடந்தார். அவரின் சடலம் அரைகுறையாக கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பசுபதி சம்பவ இடத்துக்குச் சென்று பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார்.


புவி வெப்பமயமாவதால் அழிவை தடுக்க வலியுறுத்தி கரூர் மாணவி 24 மணி நேரம் தியானம்!
[Friday 2018-11-09 12:00]

கரூர் மாணவி 24 மணிநேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார், கரூர் ராமேசுவரப்பட்டி ரவீந்திரன்சங்கீதா தம்பதியரின் மகள் ரக்ஷ்னா. 6ம் வகுப்பு படித்து வரும் இவர் புவி வெப்பமயமாதலால் உலக அழிவை தடுக்கும் கோரிக்கைக்காக நேற்று கரூர் வெண்ணைமலையில் 24 மணிநேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டார். பிற்பகல் 11 மணிக்கு தியானத்தை தொடங்கி இன்று 11 மணிவரை தியானம் இருக்கிறார். ஒன்னரை ஆண்டுகளில் இந்தியாவில் 135 கோடி மரங்களும், உலகில் 800 கோடி மரங்களும் உருவாக்குவதற்காக 2400 கோடி விதைப்பந்துகளை விமானம் மூலம் தூவ வேண்டும்.


சக ஆசிரியர் அளித்த செம்மீன் பிரியாணியை சாப்பிட்ட ஆசிரியை பலி!
[Friday 2018-11-09 12:00]

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பிந்து (வயது 40). இவர் மயநாட்டில் உள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணிபுரிந்தார். பிந்து மதியம் சக ஆசிரியை, ஆசிரியர்களுடன் மதிய உணவு சாப்பிடுவது வழக்கம். அதேபோல் நேற்றும் வழக்கம்போல் ஆசிரியகளுடன் பிந்து சாப்பிட்டார். அப்போது ஒரு ஆசிரியர் தான் கொண்டு வந்திருந்த செம்மீன் பிரியாணியை மற்ற ஆசிரியர்களுக்கு பகிர்ந்தளித்தார். அதனை ஆசிரியை பிந்துவும் வாங்கி சாப்பிட்டார்.


பேஸ்புக் மூலமாக ஆசிரியையை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர்!
[Friday 2018-11-09 12:00]

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜபிரவீன் (வயது 25). பட்டதாரி. இவருக்கு சமூகவலைதளமான


பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை: - முன்னாள் பிரதமர்
[Friday 2018-11-09 12:00]

கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை தடை செய்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்த நடவடிக்கை அமல்படுத்தி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடக்கம் முதலே கண்டித்து வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இதையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-


நானும் ஜெயலலிதாதான்: - கோட்டையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி
[Thursday 2018-11-08 17:00]

சர்கார் படத்துக்கு எதிராகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. `நடிகர் விஜய்யும் தினகரனும் அம்மாவுக்கு எதிரானவர்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் போராட்டம் நடத்துங்கள்' எனக் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.


எத்தனையோ பேரை காப்பாற்றினேன் ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை: - குமுறும் சிங்!
[Thursday 2018-11-08 17:00]

பரீட்சையில் தோற்றது, கடன் தொல்லைகளைச் சமாளிக்க முடியாதது, காதலித்தவர்களை மணம் செய்துகொள்ள முடியாதது என ஏதேதோ காரணங்களைச் சொல்லி தற்கொலை செய்துகொள்வார்கள். அப்படி கொடூரமாக தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல்களைத் தூக்க சொந்தங்களோ, உடன்பிறந்தவர்களோகூட வர மாட்டார்கள். ஆனால், அவ்வாறு இறந்தவர்களின் சடலங்களை எந்த மலை முகடாக இருந்தாலும், ஆழமான நீர்ப் பகுதியாக இருந்தாலும் தூக்கிவந்து இறுதி மரியாதை செய்ய உதவுவார்கள் சிலர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான் ஹரியானாவைச் சேர்ந்த பர்கத் சிங்.


இந்திய ஆயுதப்படையைப் உலகமே பாராட்டுகிறது:
[Thursday 2018-11-08 17:00]

ஐ.நா முன்னெடுத்திருந்த அமைதி காக்கும் நடவடிக்கைகளின் போது இந்திய ஆயுதப் படை வழங்கிய பங்களிப்பிற்கு உலக நாடுகள் பலவும் பாராட்டு தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. வட இந்தியாவில் இன்று(புதன்கிழமை) தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி இமயமலை எல்லைப் பகுதியில் இந்திய திபெத்திய வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.


மு.க.ஸ்டாலின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை: - பிரேமலதா விஜேயகாந்த்
[Thursday 2018-11-08 16:00]

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டுமென தே.மு.தி.க. பொருளாளரான பிரேமலதா விஜேயகாந்த் தெரிவித்தார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தே.மு.தி.க.வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,


மூன்று வயது குழந்தையின் வாயில் பட்டாசு வெடிக்க வைத்த இளைஞன்: - அதிர்ச்சி சம்பவம்
[Thursday 2018-11-08 16:00]

உத்தர பிரதேசத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்காதல் தகராறில் கடத்தி கொலை செய்யப்பட்ட பெண்!
[Thursday 2018-11-08 07:00]

வேலூர் கீழ்மொணவூர் டேங்க் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா (வயது 28), வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அனிதா, வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் மாயமானார். இந்த நிலையில் நேற்று சதுப்பேரி ஏரியில் அனிதா பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


நான்கு வாக்காளர்களுக்காக 15 கி.மீ நடக்கும் தேர்தல் அதிகாரிகள்!
[Wednesday 2018-11-07 17:00]

சத்தீஸ்கரில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் வெறும் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்குகாகத் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. மத்தியப்பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைகிறது. ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்றும், அதில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மட்டும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் எனவும் கடந்த மாதம் தலைமைத் தேர்தல் அதிகாரி ஓ.பி. ராவத் அறிவித்தார்.


காருக்குள் 6 மாத குழந்தையை ஒரு மணி நேரம் தவிக்க விட்டு சொப்பிங் சென்ற பெற்றோர்!
[Wednesday 2018-11-07 17:00]

உத்தரப் பிரதேசத்தில் காருக்குள் தனித்து விடப்பட்ட 6 மாத பச்சிளம் குழந்தை பெற்றோரை காணாமல் தவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீருட்டில் நொவ்சாண்டி சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து குழந்தையின் அழுக்குரல் கேட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சுற்றி இருந்த பொது மக்கள் கூடி விட்டனர். ஆனாலும் பெற்றோர் வர தாமதமானதால் காவல்துறையினருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர்.


திரைப்படங்கள் மூலமாக சமுதாய சீர்திருத்த கருத்துகளை சொல்வது வழக்கமான ஒன்றுதான்: - வைகோ
[Wednesday 2018-11-07 17:00]

திரைப்படங்கள், நாடகங்கள் மூலமாக அரசியல் ரீதியான கருத்துகளை கூறலாம் என்றும், திரைப்படங்கள் மூலமாக சமுதாய சீர்திருத்த கருத்துகளை சொல்வது வழக்கமான ஒன்றுதான் என்றும் வைகோ கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் பண்பானவர், அனைவரிடமும் மதிப்புடன் நடந்துகொள்பவர் என்று வைகோ கூறியுள்ளார்.


தாய் தங்கை கூட்டு துஸ்பிரயோகம்...அண்ணன் தந்தை கொலை: - குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்
[Wednesday 2018-11-07 09:00]

குஜராத் மாநிலத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராய்பரேலி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் முதலமைச்சரின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.


இளைஞரின் உயிரை பலி வாங்கிய காதல்!
[Wednesday 2018-11-07 09:00]

இந்தியாவின் மும்பை மாநகரில் ஒரே பாலின ஈர்ப்பு இளைஞரின் தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பாலின் ஈர்ப்பு இளைஞர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட காதலே இறுதியில் கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞர்கள் மூவர் காதலில் விழுந்துள்ளனர். இதில் ஒரு இளைஞரை வெளியேற்றவே இந்த கொலையை செய்துள்ளனர்.


35 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம்!
[Wednesday 2018-11-07 09:00]

குஜராத் மாநிலத்தில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு 35 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், உனா பகுதி அருகே உள்ள சாலையில் 16 வயது மாணவி ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்த உள்ளூர் வாசிகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


டெல்லியில் காற்று மாசு கடுமையான அளவு அதிகரித்திருப்பு!
[Tuesday 2018-11-06 18:00]

டெல்லியில் காற்று மாசு குறித்த தகவல்கள் கவலையளித்து வரும் நிலையில், நேற்று (திங்கள் கிழமை) காற்றின் தரம் மிகவும் கடுமையாக அளவு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வெளியிடும் புகை, அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பது போன்றவற்றால், டெல்லியில் தொடர்ந்தும் காற்று மாசுபட்டு வருகின்றது. காற்றின் தரத்தை உறுதிசெய்யும் அளவுகோலில், காற்றின் தரக்குறியீடு நேற்று 434 என்ற அளவுக்கு பதிவாகியிருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அளவு காற்றின் தரம் உச்சபட்சமாக மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும், கடுமையான ( Severe ) பிரிவு ஆகும். ஃபரிதாபாத், காஸியாபாத், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் காற்று கடுமையான அளவுக்கு மாசுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


பட்டாசு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு!
[Tuesday 2018-11-06 17:00]

சேந்தமங்கலம் அருகே பட்டாசு வெடித்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். வடுக்கப்பட்டியில் சிறுவன் மணிவேல்(12) வெங்காய வெடி வெடித்த போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெடி வெடித்ததில் வசந்த்(12) மற்றும் சூர்யா (12) ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நாய்களுக்கு மாலை சூட்டி நன்றி பாராட்டி தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நேபாள மக்கள்!
[Tuesday 2018-11-06 17:00]

இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை என்பது இருநாள், மூன்றுநாள் கொண்டாட்டமாக இருப்பதுபோல் இந்து மக்கள் அதிகமாக வாழும் நமது அண்டைநாடான நேபாளத்தில் தீபாவளியை மக்கள் ஐந்துநாள் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.


கோர விபத்தில் இறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: -விசாரணையில் மனைவி சொன்ன தகவல்
[Tuesday 2018-11-06 08:00]

திருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மகள் தேஜஸ்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


தாயின் கண்முன்னே சாலையை கடக்க முயன்ற போது பலியான சிறுவன்!
[Tuesday 2018-11-06 08:00]

தமிழகத்தின் அரியலூரில் தாயின் கண்முன்னே சாலையை கடக்க முயன்ற போது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரின் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், லாரி டிரைவரான இவரது மனைவி சரோஜினி, இவர்களது மகன் பார்க்கவன்(வயது 4).


காப்பகத்துக்குள் நுழைந்து புலியை கொடூரமாக அடித்துக் கொன்ற கிராம மக்கள்!
[Monday 2018-11-05 21:00]

இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கும் புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளை மனிதர்களை கொன்று உண்ணும் புலிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவற்றை வனத்துறை அதிகாரிகள் சுட்டு வீழ்த்துவதும் வழக்கம். இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் சால்டவ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புலி தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த மகனை கள்ளகாதலனுடன் சேர்ந்து சூடு வைத்த தாய்!
[Monday 2018-11-05 21:00]

கேரள மாநிலம் இடிக்கி மாவட்டம் அங்கமாலியை சேர்ந்தவர் குரியா கோஸ். இவரது மனைவி அசாமோல் (வயது 30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்துவேறுபாட்டால் கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். மகன் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.


திருமணமான இரண்டு மாதத்தில் காதலனுடன் இணைந்து தற்கொலை செய்து கொண்ட பெண்!
[Monday 2018-11-05 11:00]

கடலூர் மாவட்டத்தில் தனது காதலனை மறக்க முடியாத காதலி திருமணமான இரண்டு மாதத்தில் தனது காதலனுடன் இணைந்து தற்கொலை செய்துகொண்டார். சிலம்பரசன் என்பவருக்கும், தேவிஸ்ரீ என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.


எங்களை மன்னித்து விடுங்கள்: - ஒன்றாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன் உருக்கமான கடிதம்
[Monday 2018-11-05 08:00]

சென்னையில் தீபாவளி சீட்டை திருப்பி தர முடியாததால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூரைச் சேர்ந்தவர் அமலா ஜான் (60). இவரது மகன் ஜோஷ்வா (29). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமலா தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.


கணவர் உயிரிழந்தால் அவர் குடும்பத்தை சேர்ந்த வேறு நபரை திருமணம் செய்து கொள்ளும் மனைவி!
[Monday 2018-11-05 08:00]

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் கணவர் உயிரிழந்தால் அவர் குடும்பத்தை சேர்ந்த வேறு நபரை மனைவி திருமணம் செய்து கொள்ளும் கலாச்சாரம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. மத்தியபிரதேச மாநிலத்தின் மண்டலா மாவட்டத்தில் உள்ள பிஹங்கா கிராமத்தில் தான் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Gond எனப்படும் பழங்குடியினர் வாழும் இந்த கிராமத்தில் விதவைகளே கிடையாது.


மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காக சிறுமியை கழுத்தறுத்து கொன்ற பெண் மந்திரவாதி!
[Monday 2018-11-05 08:00]

தமிழகத்தில் 3 வயது சிறுமி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையை அடுத்த குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி - முருகாயி தம்பதியின் 3 வயது மகள் ஷாலினி கடந்த 26ஆம் திகதி மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார்.

Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா