Untitled Document
April 19, 2024 [GMT]
விபத்தை தவிர்க்க 3 கிலோ மீட்டர் ஓடிய நோயாளி: - நெகிழ்ச்சி சம்பவம்
[Tuesday 2018-10-30 15:00]

தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த உடல்நலமில்லாத ஒருவர் பெரும் விபத்தை தவிர்க்க 3 கி.மீட்டர் ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கொரங்கிபாடியை சேர்ந்தவர் கிருஷ்ணா புஜாரி (53). இவருக்கு கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களை அவரை தினமும் வாக்கிங் போக சொன்னார்கள்.


வீட்டில் மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை!
[Tuesday 2018-10-30 15:00]

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கோத்தகிரியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ்குமார்(வயது 32) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி(25). கணவர் வெளிநாட்டில் வசித்து வந்த காரணத்தால், லோகேஸ்வர் தனது 4 வயது மகன் கார்த்திகேயனுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.


அரசு பள்ளியை சீரமைத்துக் கொடுத்த ராகவா லாரன்ஸ்!
[Tuesday 2018-10-30 07:00]

அமைச்சர் செங்கோட்டையன் ஒரு விழாவில் பேசும் போது,


பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை: - திடுக்கிடும் பின்னணி
[Tuesday 2018-10-30 07:00]

தமிழகத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தின் இருக்கன்குடியை சேர்ந்த திவாகரன் அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.


இரண்டாவது மனைவியை அடித்து துன்புறுத்திய முதல் மனைவி: - தெருவுக்கு வந்த பிரபல நடிகரின் குடும்ப மானம்
[Monday 2018-10-29 16:00]

பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி, அவரது இரண்டாவது மனைவியை அடித்து துன்புறுத்திய நிலையில் பொலிசிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார். நடிகர் துனியா விஜய் நாகரத்னா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்த நிலையில் கீர்த்தி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார்.


கணவன் இறந்த செய்தி கேட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!
[Monday 2018-10-29 16:00]

தெலுங்கானா மாநிலத்தில் கணவன் இறந்த செய்தி கேட்டு, பூச்சி மருந்து குடித்து மனைவியும் தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் யாதேரி புவனகிர் மாவட்டம் அருகே சிங்காரம் பகுதியை சேர்ந்த பந்தாரு ஸ்ரீநிவாஸ் ரெட்டி (38), கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக அபர்ணா (28) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.


ராஜபக்‌சேவை மன்னிக்க மாட்டேன்: - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!
[Monday 2018-10-29 08:00]

ஈழத் தமிழர்கள் படுகொலைக்குக் காரணமான ராஜபக்‌சேவை மன்னிக்க முடியாதென மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.


ராஜபக்சே பிரதமராகி இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கே ஆபத்தானது: - தொல்.திருமாவளவன்
[Monday 2018-10-29 08:00]

இலங்கையில் ராஜபக்சே பிரதமராகி இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கே ஆபத்தானது. இதன் மூலம் இந்தியா - இலங்கை வெளியுறவுக் கொள்கையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனத் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவன்!
[Monday 2018-10-29 08:00]

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 19). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மஞ்சுளாவுக்கும், அவரது எதிர் வீட்டில் வசித்த ஜோதி என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அங்கு அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதையறிந்த மஞ்சுளாவின் கணவர் மணிகண்டனும், உறவினர்களும் கள்ளக் காதலர்களை கண்டித்தனர்.


மது குடிக்க பணம் தராத தாயை வெட்டி கொன்ற குடிமகன்!
[Monday 2018-10-29 07:00]

நாகர்கோவில் அருகே மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கம்பியால் அடித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (62). இவரது கணவர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் வயற்காட்டில் கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்கினார். இவரது இரண்டாவது மகன் குமார் (37) மது போதைக்கு அடிமையாகியுள்ளார்.


ஐஏஎஸ் படிக்க சென்ற தமிழக மாணவி விடுதியில் திடீர் தற்கொலை: - டெல்லியில் சம்பவம்
[Sunday 2018-10-28 16:00]

டெல்லியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழக மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ் - மகாதேவி தம்பதியினர். இவர்களுடைய மகள் ஸ்ரீமதி, டெல்லியில் உள்ள வஜ்ரா ஐ.எ.ஏஸ் பயிற்சி மையத்தில் கடந்த 6 மாதங்களாக படித்து வந்தார்.


தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக நினைத்து தற்கொலை செய்த மாணவி: - அடுத்து காத்திருந்த அதிர்ச்சி
[Sunday 2018-10-28 16:00]

மும்பையில் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக நினைத்து கொண்டு தற்கொலை செய்த மாணவி தற்போது தேர்ச்சி பெற்றிருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. மும்பை எம்பிவி வால்யா கல்லூரியில், பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி ரிதி பராப். படிப்பில் எப்பொழுது கெட்டிக்காரியான ரிதி, தன்னுடைய செமஸ்டர் தேர்வுகள் முடிந்தததும், எப்படியும் 80 சதவிகித தேர்ச்சியுடன் வெற்றி பெற்றிடுவேன் என தோழிகளிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


7 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!
[Sunday 2018-10-28 16:00]

இந்தியாவில் 7 வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தா. இவர் மனைவி ஆர்த்தி. தம்பதிக்கு தஷி (7) என்ற மகள் உள்ளார். சித்தார்த்தா சில மாதங்களுக்கு முன்னர் மாரடைபால் இறந்துவிட்டார். அதிலிருந்து மன அழுத்தத்தில் இருந்துள்ளார் ஆர்த்தி.


கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததை பார்த்ததால் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!
[Sunday 2018-10-28 08:00]

திருப்பூர் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். ராமு - கவிதா தம்பதியினரின் மகன் கல்லூரியில் பயின்று வருகிறான். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மக்காச்சோளக்காட்டில், ராமு பிணமாக கிடந்தார்.


இனப்படுகொலை சம்பவத்தை மக்கள் மறந்து விட மாட்டார்கள்: - பொன்.ராதாகிருஷ்ணன்
[Saturday 2018-10-27 17:00]

புதுக்கோட்டை மாவட்டம் துவார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல்வாழ்வு மையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி 50 கோடி மக்களுக்காக நல்வாழ்வு திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.


ராஜபக்ச பிரதமராக பொறுப்பேற்றிருப்பதன் பின்னணி தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது: - ஸ்டாலின்
[Saturday 2018-10-27 17:00]

இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நேற்று திடீரென பொறுப்பேற்றார். இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.


பிரனய் ஆணவப்படுகொலை: - குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு
[Saturday 2018-10-27 17:00]

தெலங்கானாவில் பிரனய் என்ற இளைஞரை ஆணவப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது நல்கொண்டா சிறப்பு நீதிமன்றம். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.


மனைவியை கழுத்தறுத்தும் கொலை செய்த நபர்: : அம்பலமான உண்மை
[Saturday 2018-10-27 17:00]

மனைவியை நகைக்காக கொள்ளையர்கள் தான் கொலை செய்தார்கள் என கூறி நாடகமாடிய தொழிலதிபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் 75 வயது தொழிலதிபர் ஹர்னெக் சிங்கின் மனைவி வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றி திட்டமிட்டு படுகொலை செய்தவர் ராஜபக்ச: - வைகோ
[Saturday 2018-10-27 07:00]

இலங்கையின் பிரதமராக பதவியேற்ற ராஜபக்ச ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றி திட்டமிட்டு படுகொலை செய்தவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசில் இருந்து வெளியேறிய சிறிசேனா கட்சி, திடீரென மகிந்த ராஜபக்சவுடன் கூட்டணி அமைத்ததால், இரவோடு இரவாக ராஜபக்ச இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்.


மகிந்த ராஜபக்ச இலங்கை அதிபராக கூட ஆகலாம்: - சீமான் கருத்து
[Saturday 2018-10-27 07:00]

ராஜபக்ச இப்போது பிரதமராகி உள்ளார் என்பதைவிட அடுத்த தேர்தலில் அவர் அதிபராகக்கூட ஆக்கப்படுவார் என சீமான் கூறியுள்ளார். இலங்கை பிரதமராக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றுள்ளார். ஆளும் கட்சி உடைந்ததால் இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டு ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.


வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கின்னஸ் சாதனையாளர்: - திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
[Friday 2018-10-26 17:00]

திருப்பூரைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. திருப்பூரை அடுத்துள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். 27 வயதான இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27- ம் தேதியன்று, தனது விரல் நகத்தை துளையிட்டு, 22.5 கிலோ எடையுள்ள பொருளைத் தூக்கிக் காட்டி திருப்பூரில் கின்னஸ் சாதனையை நிகழ்த்திக் காட்டினார். அதையடுத்து அவரது அந்தச் சாதனையானது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தது. அந்தச் சாதனைக்குப் பிறகு வெகுவாகப் பிரபலமடைந்த ஹேமச்சந்திரன், பல்வேறு முன்னணி தொலைக்காட்சி சேனல்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நிறைய அசாத்திய முயற்சிகளை செய்துகாட்டி பாராட்டுப் பெற்று வந்தார்.


உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு நன்றி: -ரஜினிகாந்த்
[Friday 2018-10-26 17:00]

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக அவரது ரசிகர் மன்றத்தை


கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்: - சீமான்
[Friday 2018-10-26 09:00]

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்' என சீமான் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 'முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்புறத்தில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ள கேரள அரசின் முயற்சிக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


11-வது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வர மறுத்த கர்ப்பிணி பெண்!
[Friday 2018-10-26 09:00]

முசிறி கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி(45). இருவருக்கும் திருமணம் நடைபெற்று சுமார் 20 வருடங்களுக்குமேல் ஆகிறது. இந்நிலையில் சாந்தி 10 பிரசவங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குறிப்பாக அனைத்து குழந்தைகளுமே அவரது வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளன.


இரண்டாயிரம் கோடி பணத்துடன் நடுரோட்டில் நின்ற லொறியால் பரபரப்பு!
[Friday 2018-10-26 09:00]

மைசூரில் இருந்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு அமைந்தகரை பகுதியில் வந்தபோது அந்த லாரி திடீரென பழுதாகி நின்றது. சோதனையில் கியர் பாக்சில் பழுது ஏற்பட்டது தெரிய வந்தது.


போலி ரூபாய் நோட்டுக்களை கொண்டு தங்கம் வாங்கிய ஜோடி!
[Friday 2018-10-26 09:00]

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ஷியாம் சுந்தர் வர்மா. சமீபத்தில் இவரது கடைக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். தங்க நகைகள் வாங்க வந்துள்ளோம் எனக்கூறிய அவர்கள், அங்கிருந்த நகைகளில் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு 59 கிராம் எடையுள்ள தங்க நகைகளை வாங்கினர். அதன்பின்னர் அவர்கள் அதற்கான பணத்தை ஷியாம் சுந்தர் வர்மாவிடம் கொடுத்து விட்டு அவசரமாக அங்கிருந்து சென்று விட்டனர்.


சென்னை சிறையில் இலங்கை தமிழருக்கு நேர்ந்த கொடுமை: - நெஞ்சை உருக்கும் கடிதம்
[Thursday 2018-10-25 17:00]

சென்னை புழல் சிறையில் இருக்கும் இலங்கை தமிழர் தனக்கு சிறையில் நடக்கும் கொடுமைகள் குறித்து கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளார். சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார். இவர் உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்தி குத்து!
[Thursday 2018-10-25 17:00]

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக ஜெகன்மோகன் ரெட்டி இன்று விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது அருகே வந்த இளைஞர் ஒருவர், செல்ஃபி எடுப்பது போல் நடித்து திடீரென ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா