Untitled Document
April 23, 2024 [GMT]
திருமணம் செய்ய மறுத்த இளைஞர்: - கட்டாயப்படுத்தி 17 வயது சிறுமியுடன் நடந்த திருமணம்!
[Thursday 2018-10-04 09:00]

தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை கடத்தி வந்து மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சதீஷ் (21) என்ற இளைஞர் வேறு ஜாதியை சேர்ந்த சுமதி என்ற 17 வயது மைனர் பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.


கணவர் மீது சந்தேகம் : - தூக்கில் சடலமாக தொங்கிய காதல் மனைவி
[Thursday 2018-10-04 09:00]

சென்னையில் பெண் இன்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவை சேர்ந்தவர் சாய்தேஜா (26). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திவ்யஸ்ரீ (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிகள் சென்னை மதுரவாயலில் உள்ள வீட்டில் தங்கியிருந்து வடபழனியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.


கவுசல்யா போல நீயும் துணிச்சலாக போராடி வெற்றி பெற வேண்டும்: அம்ருதாவை ஊக்கப்படுத்திய திருமாவளவன்
[Thursday 2018-10-04 09:00]

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி அன்று பிரணாய் என்ற தலித் இளைஞர் அவருடைய மனைவி மற்றும் தாய் ஆகியோரின் கண் எதிரிலேயே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வீடியோ இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அம்ருதாவும் பிரணாயும் ஒருவரைஒருவர் விரும்பி காதல் திருமணம் செய்துகொண்டதற்காக அமிர்தாவின் தந்தை மாருதிராவ் கூலி கும்பலை வைத்து ஆணவப்படுகொலையை செய்துள்ளார்.


ஆறு பேருடன் சேர்ந்து படுக்கையில் கணவனை கொன்ற மனைவி: - அதிர்ச்சி வாக்குமூலம்
[Wednesday 2018-10-03 18:00]

வேலூர் மாவட்டத்தில் மாடு வியாபாரம் செய்து வந்த அக்பர் என்பவர் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து அவரது கொலை குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன,அக்பருக்கு திருமணமாகி ரியானா என்ற மனைவியும் 3 வயது மகனும் உள்ளனர். இவர் கடந்த 7 ஆம் திகதி ழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


கேரள வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞனை காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லையே: - கண்ணீர் விட்டு கதறிய நண்பர்
[Wednesday 2018-10-03 17:00]

கேரள வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அவரை காப்பாற்ற யாரும் வரவில்லை என்று நண்பர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தின் போது, வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்காக மீட்பு படையினருடன் மீனவர்களும் இணைந்து மக்களைக் காப்பாற்றினார்.


சிறைக் கைதியின் வயிற்றில் செல்போன்: - அதிர்ச்சி சம்பவம்
[Wednesday 2018-10-03 16:00]

கொல்கத்தாவில் உள்ள பிரெஸிடென்சி சிறைச்சாலையில் கைதி ராமசந்திராவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வருக்கு வலி அதிகரிக்கவே உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் ராமசந்திராவின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருத்தது.


தமிழகத்தில் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்: - வைகோ எச்சரிக்கை
[Wednesday 2018-10-03 16:00]

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையை நிறுவிய வேதாந்தா குழுமத்துக்கு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த அனுமதியை திரும்ப பெறாவிட்டால் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தொடங்கி, தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நேற்று டெல்லியில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது.


இரண்டு கால்களும் ஒட்டிய நிலையில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை!
[Wednesday 2018-10-03 08:00]

கர்நாடக மாநிலத்தில் இரண்டு கால்களும் ஒட்டிய நிலையில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் இறந்துள்ளது. மூர்த்தி என்பவரின் மனைவி சின்னம்மாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சின்னம்மாவுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை அதிசய குழந்தையாக பிறந்தது.


நான் முதல்வரானா முதலமைச்சரா நடிக்க மாட்டேன்: - விஜய் அதிரடி
[Wednesday 2018-10-03 07:00]

நம்ம மாநிலத்துக்கு நல்ல தலைவன் தேவைப்படுது என சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியுள்ளார். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் மற்ற பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. தனியார் கல்லூரியில் நடந்த இவ்விழாவில் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி எனப் படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் பிற நடிகர்களும் கலந்துகொண்டனர்.


திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை!
[Tuesday 2018-10-02 18:00]

ஆகஸ்ட் 7-ம் தேதி பெங்களுரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது 23 வழக்குகள் உள்ளன.


மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி மருமகளை 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாமா!
[Tuesday 2018-10-02 18:00]

மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி மருமகளை 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு வழிகளிலும் அரங்கேறி வருகிறது. இப்படிதான் என்றில்லாமல் கிடைக்கும் அனைத்து காரணங்களையும் வைத்து பெண்கள் வேட்டையாடப்படுகின்றனர். இந்நிலையில் டெல்லியில் இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக தனது உறவினர் ஒருவரால் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.


மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து விசித்திர பூஜை நடத்திய அகோரி!
[Tuesday 2018-10-02 18:00]

இறைவனுக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்து கொண்டதாக கூறுபவர்கள்தான் அகோரிகள். நீண்ட தலைமுடி, உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்ணை குழைத்து பூசிக் கொள்வது, தியான நிலை என்று வாழும் அகோரிகள் பெரும்பாலும் இமாலய மலை பகுதிகளான கங்கோத்ரி, யமுனோத்ரி, நேபாளம் ஆகிய இடங்களில் அதிகமாக வசித்து வருகிறார்கள்.


கருணாஸின் எம்எல்ஏ பதவியை பறிக்க நடவடிக்கை: - சபாநாயகர் நோட்டீஸ்
[Tuesday 2018-10-02 18:00]

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அணிக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வந்தனர். அவர்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால் சபாநாயகர் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


மகாத்மா காந்தியால் ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவை மோடி பிளவுப்படுத்துகிறார்: - ராகுல் காந்தி
[Tuesday 2018-10-02 18:00]

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி மகாராஷ்டிரா மாநிலம், வார்தா நகரில் உள்ள காந்தி சேவாசிரமத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் இன்று வருகை தந்தனர். இங்கு நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 'காந்தி சங்கல்ப யாத்திரை


குடும்பத்தாரிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும்: - வாட்ஸ் அப் மூலம் கல்லூரி மாணவி பரபரப்பு வாக்குமூலம்
[Tuesday 2018-10-02 18:00]

குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் எழுதிய கடிதமும், அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் இன்று வாட்ஸ்-அப்பில் பரவியது. அந்த வீடியோவில் பேசும் மாணவி, நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதாக கூறுகிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்தது.


கள்ளத் தொடர்பை நியாயப்படுத்திய கணவன்: - உயிரை விட்ட மனைவி
[Monday 2018-10-01 19:00]

ஜான்பால் பிராங்கிளின் (26) அந்த பகுதியில் பூங்கா காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா (24). இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. நல்ல காதல் பூர்த்தி ஆனதும் கள்ளக்காதலுக்கு பிராங்கிளின் வலைவீச வலையில் சிக்கி இருக்கிறார் அதே பூங்காவில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த பெண்.


எனக்கு முகநூலில் எந்தக் கணக்கும் இல்லை: - பேராசிரியர் சாலமன் பாப்பையா
[Monday 2018-10-01 19:00]

மண உறவை மீறிய பாலுறவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் விதித்த தீர்ப்பை எதிர்த்து பட்டிமன்ற நடுவர் பேரா. சாலமன் பாப்பையாவின் பெயரில் சமூக ஊடகங்களில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அது தன்னுடையது அல்ல என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.


மனைவியின் தம்பியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை!
[Monday 2018-10-01 18:00]

மனைவியின் தம்பியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதால் தி.மு.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்தவர்கள், பெண்ணின் வீட்டுக்குத் தீ வைத்தனர். சென்னை குன்றத்தூர் அருகே உள்ள சிறுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிராஜன். தி.மு.க-வைச் சேர்ந்த இவர், ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


பாகிஸ்தானுடன் பேசுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை: - சுப்பிரமணியன் சுவாமி
[Monday 2018-10-01 18:00]

பாகிஸ்தானுடன் பேசுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றபிறகு இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சில முயற்சிகள் மேற்கொண்டார்.


மதுபோதையில் நண்பர்களால் கிணற்றில் தள்ளி விடப்பட்ட வாலிபர் பலி!
[Monday 2018-10-01 18:00]

வாணியம்பாடி அடுத்த சப்பந்தி குப்பத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் மவின்குமார் (வயது 24). பெங்களூரில் தச்சு வேலை செய்து வந்தார். நேற்று ஊருக்கு வந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து அங்குள்ள தென்னந்தோப்பில் மது குடித்தனர். போதையில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் தள்ளி விட்டு விளையாடினர். மவின்குமாருக்கு அதிகளவிலான போதை தலைக்கேறியது. இதனால் அவரை அங்குள்ள கிணற்றில் தூக்கி போடுவதற்காக தூக்கினர். இதனை அவரது செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் மவின்குமாரை தூக்கி கிணற்றில் போட்டனர்.


கூவத்தூரில் நடந்ததை வெளியிடுவேன்: - கருணாஸ் சவால்
[Sunday 2018-09-30 13:00]

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறைக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸை கடந்த 23ம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அன்று மாலையே பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையில், சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஐ.பி.எல் கிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் மேலும் 2 வழக்குகளை கடந்த 26ம் தேதி பதிவு செய்தனர்.


என்ன மாதிரியான நடவடிக்கை இது? - பேராசிரியர் அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்தில் கொதித்த ராகுல்
[Sunday 2018-09-30 13:00]

மத்தியப் பிரதேசத்தில் கல்லூரிப் பேராசிரியர் மாணவர்களால் அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளார்.


தோழியை கிண்டல் செய்த 15 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற நண்பர்கள்!
[Sunday 2018-09-30 13:00]

பீகார் மாநிலம், பாட்னாவின் புறநகர் பகுதியை சேர்ந்த சத்யம்(15) எனும் சிறுவன் கடந்த 27-ம் தேதி கடத்தப்பட்டார். அதே தேதியில் ஹோமியோபதி மருத்துவராக உள்ள மாணவனின் தந்தைக்கு போன் செய்த கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால், பதற்றமடைந்த சிறுவனின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆர்.பி.எஸ் கல்லூரி வளாகத்தில் இருந்து சிறுவனின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் சிறுவனின் சக நண்பர்கள் மூன்று பேரை கைது செய்தனர்.


அரசு கல்வித்துறையில் முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது: - பிரதமர் நரேந்திர மோடி
[Saturday 2018-09-29 18:00]

2022-ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கல்வித்துறை சார்பில் கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எனது தலைமையிலான அரசு கல்வித்துறையில் முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. கல்வித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரைஸ் ((RISE - Revitalization of Infrastructure and Systems in Education)) எனப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட வாலிபர்!
[Saturday 2018-09-29 18:00]

பொன்னேரி அருகே வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி திருவொற்றியூர் - பொன்னேரி நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் அஜீத் (25). இவரது நண்பர்கள், பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜவகர், வசந்த், பரத், பாலாஜி, வீரா. இவர்கள் வேலைக்கு செல்லாமல் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருட்டு, வழிப்பறி உட்பட பல வழக்குகள் பொன்னேரி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.


உயிர் ஊசல் ஆடிகிட்டு இருக்கு போய் பாருங்க: - பதறவைத்த தொலைபேசி அழைப்பு
[Saturday 2018-09-29 18:00]

சாவதாக இருந்தால் வீட்டிலேயே தூக்கில் தொங்கியிருக்க மாட்டானா. இங்கு வந்து தாவணியில் தூக்கில் தொங்க என்ன காரணம்? அவனது உடல் முழுவதும் காயங்களாக இருக்கின்றன. உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்" என்று உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருமணம் நடக்காததால் தாயுடன் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்!
[Saturday 2018-09-29 18:00]

கோபி அருகே உள்ள தாளக்கொம்பு புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவரது மகன் குணசேகரன் (40). விவசாயி. இவர்கள் நேற்று இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்க சென்றனர். இன்று காலை வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் சத்தம் இல்லை.


பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்த மருத்துவமனை: - பரபரப்பு புகார்
[Saturday 2018-09-29 17:00]

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே கீழைஈசனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் நாகை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். சேகருக்கு குடல் இறக்க நோய் இருந்து வந்தது. இந்நிலையில் சேகரை நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 7-ம் தேதி சிகிச்சைக்காக அவரது மகன் சுபாஷ் அனுமதித்தார். அங்கு சேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா