Untitled Document
March 28, 2024 [GMT]
பாரதியாரின் தேசபக்தி கவிதையை தமிழில் வாசித்து உரையாற்றிய பிரதமர் மோடி!
[Wednesday 2018-08-15 17:00]

இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.


காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன்: - ராகுல்
[Wednesday 2018-08-15 17:00]

ஐதராபாத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டதாக தெரிவித்தார். ஆனால், இது குறித்து பிரதமர் மோடி, ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.


கருப்பு பணம் வைத்திருப்போருக்கு மன்னிப்பே கிடையாது: - பிரதமர் மோடி
[Wednesday 2018-08-15 17:00]

நாட்டின் 72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-


குழந்தைகளுடன் படுத்து தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி!
[Wednesday 2018-08-15 17:00]

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் லகாத்புரி தாலுகா தாமன்காவ் பகுதியை சேர்ந்தவர் மனிஷா ஜாதவ். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மனிஷா ஜாதவ் தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலை விரித்து அதற்குள் தூங்கவைத்தார். பின்னர் அவரும் தூங்க சென்றுவிட்டார்.


உடலில் சோயா பீன்ஸ் செடியுடன் சுற்றித்திரிந்த எலி: - வினோத சம்பவம்
[Tuesday 2018-08-14 17:00]

இயற்கையின் உருவாக்கத்தில் ஒவ்வொரு உயிர்களும் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் ஒரு தனித்துவம் பெற்றுள்ளன. சில சமயங்களில் படைப்பின் குணத்தையும் மீறி சில அதிசயங்கள் நடந்து விடுகின்றன. மத்தியப்பிரதேசம் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த தாதர் சிங், தனக்கு சொந்தமான இடத்தில் சோயா பீன்ஸை சமீபத்தில் விதைத்துள்ளார்.


கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பி‌ஷப்பிடம் 9 மணி நேரம் விசாரணை!
[Tuesday 2018-08-14 10:00]

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த குருவிலாங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பி‌ஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார். புகாரில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை குருவிலாங்காடு கன்னியர் மடத்தின் விருந்தினர் இல்லத்தில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறி இருந்தார்.


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!
[Tuesday 2018-08-14 09:00]

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 26). ரப்பர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனிதா (22). இவர்களுக்கு 2 வயதில் சசிபிரியா, 3 மாதமே ஆன கவிஸ்ரீ என்ற குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை வீட்டில் தொட்டிலில் தூங்க வைத்த 3 மாத குழந்தையை யாரோ மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாக வனிதா சத்தம் போட்டார்.


திருவிழாவில் தகராறு: - ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை
[Tuesday 2018-08-14 08:00]

மதுரையின் செல்லூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த மதுரைவீரன் மகன் பிரவீன் (எ) பல்செட் பிரவீன் (23). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. செல்லூர் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பிலிருந்த பிரவீன் மற்றொரு தரப்பை தாக்கினார்.


9 கி.மீ. தூரம் கடந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்!
[Tuesday 2018-08-14 08:00]

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அதேபோல் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்கள் முழுவதிலும் உள்ள ஏரிகள், ஆறுகள் நிறைந்து வருகின்றன.


ஆற்றின் வெள்ளத்தில் பயணிகளுடன் சிக்கிய ஜீப்: - இளைஞர்கள் காப்பாற்றிய அந்த நிமிடங்கள்
[Monday 2018-08-13 19:00]

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே மோயாறு ஆற்றின் வெள்ளத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தெங்குமரஹடா. இது நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இந்த தெங்குமரஹடா பகுதியில் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்ட மக்கள் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தெங்குமரஹடாவிலிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால், மோயாறு என்னும் ஆற்றைக் கடந்து, அதன்பிறகு கிட்டத்தட்ட 15 கி.மீ அடர்ந்த காட்டினுள் பயணம் செய்து பவானிசாகர் பகுதியைத் தாண்டித்தான் செல்ல முடியும்.


வரதட்சணை கேட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!
[Monday 2018-08-13 19:00]

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 32). இவர் வானூர் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் புதுவை கூடப்பாக்கத்தை சேர்ந்த சவீதா (25) என்பவர் வேலை பார்த்து வந்தார். வெங்கடேசுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. அதனை மறைத்து, சவீதாவை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த வெங்கடேசின் முதல் மனைவி கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். வெங்கடேஷ் தனது 2-வது மனைவி சவீதாவுடன் பூத்துறை காலனி பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.


மனைவியை சந்தேகப்பட்டு கொடூரமாக வெட்டிய கணவர்!
[Monday 2018-08-13 19:00]

சேலம், கருப்பூர் அருகே உள்ள மூங்கில்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லா கவுண்டர். கட்டிட தொழிலாளி (வயது 41). இவரது மனைவி மகேஸ்வரி (36). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கடந்த 10-ந்தேதி ஆன்மீக சுற்றுலா செல்ல ஊரில் உள்ள மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக அவர்கள் ஒரு சுற்றுலா பஸ் பிடித்தனர்.


நாட்டின் மிகப்பெரிய கொள்ளையில் மோடியும் கூட்டாளி: - ராகுல் காந்தி கடும் தாக்கு
[Monday 2018-08-13 19:00]

கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று நடைபெற்ற


200 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தும் யூ.கே.ஜி. மாணவன்!
[Monday 2018-08-13 19:00]

பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், இவரது மனைவி சுகன்யா இவர்களது மகன் ஹரி சரண் (வயது 4) இவன் பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறான். பெற்றோர்களிடம் கல்வி கற்று வந்த சிறுவன் ஹரிசரனை கடந்தாண்டு பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் ப்ரி கே.ஜி.யில் சேர்த்தனர்.


நாட்டின் பொருளாதாரம் உயரும் போது எப்படி வேலை வாய்ப்புகள் உயராமல் போகும்? - பிரதமர் மோடி
[Sunday 2018-08-12 16:00]

அம்பேத்கரின் கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை. அதுவரை இட ஒதுக்கீடு நிச்சயம் இருக்கும் எனப் பிரதமர் மோடி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். ஜி.எஸ்.டி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு என எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்துள்ளார்.


வெள்ள நிவாரணத்திற்கு லாட்டரி சீட்டை விற்பனை செய்த அக்காள்-தம்பி!
[Sunday 2018-08-12 16:00]

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பேய் மழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சூர் கொடக்கரையை சேர்ந்த ஜெயா-சுனில் தம்பதியின் மகள் விஷ்ணுபிரியா, மகன் விஷ்ணுதாஸ் ஆகியோர் வெள்ள நிவாரண நிதி வழங்க லாட்டரி விற்பனையில் ஈடுபட்டனர்.


தந்தை வைத்திருந்த ரூ.46 லட்சத்தை திருடி நண்பர்களுக்கு கிப்ட் கொடுத்த பாசக்கார மாணவன்!
[Sunday 2018-08-12 16:00]

மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபால்புர் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் நபரின் மகன் சமீபத்தில் வித்தியாசமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளார். தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூ.60 லட்சம் பணத்தில் ரூ.46 லட்சம் திருடிய அந்த மாணவன், தனது பள்ளி மற்றும் டியூசன் நண்பர்களுக்கு நண்பர்கள் தினத்தை ஒட்டி பரிசுகளை அள்ளி கொடுத்துள்ளார். தினக்கூலி ஒருவரின் மகனுக்கு ரூ.15 லட்சம், தனது வீட்டுப்பாடத்தை முடிக்க உதவி செய்த நண்பனுக்கு ரூ.3 லட்சம் என வாரி இறைத்துள்ளார்.


கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம்! மத்திய அரசு தாமதிக்காமல் உதவ வேண்டும்! - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
[Saturday 2018-08-11 21:00]

கேரளாவில் இடைவிடாது பெய்யும் மழையின் காரணாமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி,பாலகோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுவரை சுமார் 40 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ வேண்டியது மனிதநேயமுள்ள ஒவ்வொருவரின் கடமையுமாகும். இந்தப் பேரிடர் பாதிப்புச்சூழலில் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் தேவையான உதவிகளை கேரள அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.


கலைஞர் கருணாநிதி காலமானார்: கண்ணீர் கடலில் மூழ்கிய தமிழகம்
[Tuesday 2018-08-07 19:00]

தமிகழத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி வயதுமூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.


கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: - காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை
[Tuesday 2018-08-07 18:00]

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.


பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்: -
[Tuesday 2018-08-07 18:00]

உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சௌதார்புர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தாபால் என்பவர் தனது குழந்தையை கொன்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனந்தாபாலுக்கு 6 வயதில் தாரா என்ற மகள் இருந்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தாராவின் உடல்நிலை மருத்துவ சிகிச்சையில் முன்னேறவில்லை.


சிதைக்கப்பட்ட முகங்கள்...உடல்களில் காயங்கள்: - ஆந்திரா காட்டில் கிடந்த காஞ்சி ரவுடிகள்!
[Tuesday 2018-08-07 18:00]

தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை வனப்பகுதியில் இரண்டு ரவுடிகள் சடலமாகக் கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த செங்கரை பகுதியில் காட்டுச் செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த வனப்பகுதியில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக ஊத்துக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.


4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது: - ராகுல் காந்தி
[Tuesday 2018-08-07 18:00]

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாராகியுள்ளதாக டெல்லியில் மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆனால் மசோதாவை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.


5.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்ட அரிய வகை மீன்: - சகோதரர்களுக்கு அடித்த ஜாக்பாட்
[Tuesday 2018-08-07 18:00]

மீன்பிடிக்கச் சென்ற சகோதரர்களுக்கு அடித்தது ஜாக்பாட். வலையில் சிக்கிய அரிய வகை மீனை ஏலத்தில் விட்டத்தில், அவர்களுக்கு ரூ.5.5 லட்சம் கிடைத்துள்ளது. மும்பை-பால்கர் கடலோரப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மகேஷ் மெஹர் மற்றும் பரத் என்ற சகோதரர்கள் வலையில் அரியவகை மீன் ஒன்று சிக்கியிருக்கிறது. கோல் (ghol) என்ற ஒரு ரக மீன் அவர்களது வலையில் சிக்கியது.


கவலைக்கிடமான நிலையில் கருணாநிதி!
[Monday 2018-08-06 19:00]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என காவேரி மருத்துவமனை இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருணாநிதியின் உடல் நிலை - தொடர்ந்து ஏற்ற இறக்கம்!
[Sunday 2018-08-05 17:00]

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவி வருகின்றது. நேற்று முன்தினம், நள்ளிரவு முதல் அவரது உடலில் ரத்த அழுத்தம் மற்றும் மஞ்சள் காமாலை தொடர்பான பிரச்னைகள் நீடிப்பதாக குடும்ப உறவுகள் தெரிவிக்கின்றனர்.


கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் இந்திய ஜனாதிபதி!
[Sunday 2018-08-05 17:00]

சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நலம் விசாரித்து வருகின்றனர்.


அமெரிக்காவில் விஜயகாந்த் என்ன செய்கிறார்?
[Sunday 2018-08-05 17:00]

தே. மு. தி.க., தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகாந்த், அவருடைய டுவீட்டர் பக்கத்தில் " அமெரிக்காவில் குடும்பத்துடன் நான் " - என சில படங்களை வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர்.

NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா