Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி மாலை இன்று அறிவிப்பு?
[Wednesday 2017-06-07 15:00]

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவரது பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே அதற்கான தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை. எனவே குடியசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது வேலைகளை தொடங்கி விட்டது.


லிங்கம் எடுக்க நெடுஞ்சாலையில் பெரிய பள்ளம் தோண்டிய பக்தர்; கனவில் வந்த சிவன்
[Tuesday 2017-06-06 22:00]

தெலங்கானாவில் ஹைதராபாத்- வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் லிங்கம் இருப்பதாக மக்களை நம்பவைத்து 15 அடிக்கு பெரிய பள்ளம் தோண்டிய சிவ பக்தரும், உடந்தையாக இருந்த பஞ்சாயத்து தலைவரும் கைது செய்யப்பட்டதேசிய நெடுஞ்சாலையில் னர்.ஜான்கான் மாவட்டம் பெம்பார்தி கிராம் பகுதியில் ஐதராபாத்- வாராங்கால் பூமிக்கு அடியில் சிவலிங்கம் மண்ணிற்குள் புதைந்து இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிவபக்தர் லாகான் மனோஜ் (வயது 30) கூறியுள்ளார்.


விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு: இருவர் பலி!
[Tuesday 2017-06-06 22:00]

மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் பலியாகினர். வெங்காயம், மற்றும் பருப்புவகை விலைகளை உயர்த்தக்கோரி மத்தியப்பிரதேச மாநிலம், மண்ட்சார் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி அவர்கள் நடத்திய போராட்டம் வன்முறைக் களமாக மாறியது.


மோடி அரசு டிவியில் ஹீரோ நிஜத்தில் ஜீரோ... :காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
[Tuesday 2017-06-06 22:00]

மோடி அரசு டிவியில் ஹீரோவாகவும் நிஜத்தில் ஜீரோவாகவும் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட நாட்டில் பல்வேறு பிரிவினருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்றார்.


லாபம் ரூ. 4 கோடி; கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்....
[Tuesday 2017-06-06 22:00]

ஹைதராபாத் அருகே சிறைக் கைதிகள் நடத்தி வரும் பெட்ரோல் பங்க் ஒன்று நான்கு கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. அந்தத் தொகை சிறைத்துறை மேம்பாட்டிற்குச் செலவு செய்யப்பட உள்ளது. ஹைராபாத்தின் புறநகரான சான்சல்குடா பகுதியில் உள்ள அந்த பெட்ரோல் பங்க், தெலங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளிலேயே பெட்ரோல் விற்பனையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.


அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம்
[Tuesday 2017-06-06 22:00]

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகளில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் தொங்கவிடப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.தமிழக அமைச்சர்களின் அலுவலக அறைகள், அரசாங்க அலுவலக கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில், தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவரின் புகைப்படங்கள் வைக்கப்படுவது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


வெயில் கொடுமையால் காருக்குள் பாய்ந்த குதிரை!
[Tuesday 2017-06-06 15:00]

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் குதிரை ஒன்று வெயில் கொடுமையால், காரை உடைத்துக்கொண்டு பாய்ந்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ''வெயிலின் தாக்கத்தைத் தாங்காமல் குதிரை தன் சேனையை உடைத்துக் கொண்டு, எதிர்ப்புறத்தில் வந்துகொண்டிருந்த காரின் உள்ளே பாய்ந்தது. காரின் பேனட் மீது ஏறிய குதிரை, முன்பக்கக் கண்ணாடியைக் உடைத்துக்கொண்டு உள்ளே நழைந்தது'' என்றனர்.


புதைச்சாங்களா, எரிச்சாங்களா? உதாரணத்துக்கு ஜெயலலிதா!
[Tuesday 2017-06-06 15:00]

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகிலுள்ளது இந்திராபுரம். இங்கு வசிப்பவர் துளசி கவுர். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவரது மனைவி ஷீலா கவுர். வயது 66. கடந்த சில நாட்களுக்கு முன் ஷீலா உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இவரை தனது வீட்டின் வாசலில் அடக்கம் செய்ய, துளசி கவுர் முடிவெடுத்தார். இதற்கு அக்கம் பக்கத்து வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காசியாபாத் மேம்பாட்டுக் கழகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து துளசி கவுர் வீட்டுக்கு அதிகாரிகள் போலீசுடன் வந்தனர். கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரீத்தி ஜெய்ஸ்வாலும் வரவழைக்கப்பட்டார்.


ஆட்சி நிலைக்குமா? ஸ்டாலின்
[Tuesday 2017-06-06 15:00]

சட்டப்பேரவை கூடுவதற்குள் அ.தி.மு.க ஆட்சி நிலைக்குமா என்பதே கேள்விக்குறிதான் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம், திண்டல் அருகே காரப்பாறையில் உள்ள குளத்தை தி.மு.க-வினர் இன்று தூர் வாரினர். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பணிகளை ஆய்வு செய்தார்.


மூத்த அரசியல்வாதி இரா.செழியன் இன்று காலமானார்.
[Tuesday 2017-06-06 15:00]

இந்தியாவின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், திமுகவின் துவக்க கால உறுப்பினரும், அவசரநிலைச் சட்டத்திற்கு எதிராக போராடியவருமான இரா.செழியன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். கண்ணியமிக்க நாடாளுமன்ற உரைகளை ஆற்றியவர் அவருக்கு வது 94. சமீப காலமாக அவர் உடல் நலம் குன்றியிருந்தார். மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் இளைய சகோதரரான இரா.செழியன், மாணவ பருவத்தில் திராவிடர் கழக பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவர்.


குழந்தையை வீசி கொன்றுவிட்டு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!
[Tuesday 2017-06-06 09:00]

பெண்ணின் கையில் இருந்த குழந்தையை தூக்கி வீசி கொன்றுவிட்டு, இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குர்கான் அருகே உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் 8 மாத கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்தார். கணவர் இரவு வேலைக்குச் சென்றிருந்தார். அப்போது பக்கத்து வீட்டுக்காரருடன் அவருக்குப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இரவு மட்டும், கண்டா சாலையில் உள்ள அம்மா வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தார்.


தலித்தைத் திருமணம் செய்த முஸ்லீம் பெண் கர்நாடகாவில் எரித்துக் கொலை?
[Tuesday 2017-06-06 09:00]

கர்நாடகா மாநிலத்தில் ஒரு தலித் இளைஞனை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமாகி வீட்டிற்கு திரும்பிய முஸ்லீம் பெண்ணை, அந்த பெண்ணின் குடும்பத்தினர் உயிருடன் எரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.விஜயபுரா மாவட்டத்தில் உள்ள குண்டகன்னலா என்ற கிராமத்தில் வசித்துவந்த 24 வயதான சயபன்னா ஷரனப்பா கொன்னுர், மீது பானு பேகம் காதல் கொண்டிருந்தார்.இருவரின் காதல் பற்றி தெரிந்துகொண்ட பானுவின் பெற்றோர் தங்களது மகள் வயது குறைவானவள் என்றும் சயபன்னா தங்களது மகளை மயக்கியுள்ளதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையின் உதவியை நாடினர்.


மாட்டிறைச்சி தட்டுப்பாடு: கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்பு
[Monday 2017-06-05 21:00]

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதால் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் நிலவுகிறது. இதன் விளைவாக, கோழி இறைச்சியின் விலை 30 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.கடந்த 2013-14 ஆண்டுகளில் மாட்டிறைச்சியின் விலை பத்து சதவீதம் வரை அதிகமாகவும், அதற்கு எதிராக பண்ணைக் கோழியின் விலை ஒன்பது சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.


60 நாட்கள் கால அவகாசம்: பதுங்கி பாய்வாரா தினகரன்?
[Monday 2017-06-05 21:00]

இன்னும் 60 நாட்களுக்கு ஒதுங்கியிருக்க வி.கே.சசிகலா வழங்கிய அறிவுரையை ஏற்று தாம் காத்திருக்கப்போவதாக டி.டி.வி.தினகரன் இன்று திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய டி.டி.வி.தினகரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அப்போது தொடர்ந்து பேசிய டி.டி.வி.தினகரன், தன்னை வழக்கமாக சந்திக்க வரும் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினரை சந்திப்பேன் என்றும் கூறினார்.


`ராட்சத ராக்கெட்' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது: இஸ்ரோ சாதனை
[Monday 2017-06-05 21:00]

ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 (GSLV MkIII-D1) ராக்கெட் இன்று திங்கள்கிழமை மாலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ நிறுவனத்தால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மிக அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ`ராட்சத ராக்கெட்` என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். மேலும் இதன் எடை முழுவதுமாக வளர்ந்த 200 யானைகளின் எடையாகும்.


என்டிடிவி செய்தித் தொலைக்காட்சி நிறுவகர் பிரணாய் ராயின் டில்லி மற்றும் டெராடூன் வீடுகளில் சிபிஐ சோதனை.
[Monday 2017-06-05 21:00]

என்டிடிவி வெளியிட்ட தனியார் வங்கி பற்றிய செய்தியால் அந்த வங்கிக்கு நட்டம் ஏற்பட்டது தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா, ஆர்.ஆர்.பி.ஆர் ஹோல்டிங்ஸ் ஆகியோர், வங்கிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டியிருக்கும் ஐசிஐசிஐ நிறுவனம், அவர்கள் மீது 48 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.


சாதி மாறி திருமணம் செய்ததால் கர்ப்பிணி பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற குடும்பம்!
[Monday 2017-06-05 17:00]

இந்தியாவில் தலித் சாதி இளைஞரை திருமணம் செய்ததால் இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணை அவர் குடும்பமே சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் Gundakanala கிராமத்தில் பானு பேகம்(21) என்ற இஸ்லாமிய பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.அதே பகுதியில் வசிக்கும் Sayabanna Sharanappa (24) என்னும் தலித் இளைஞருடன் பானுவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.


இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தாய்: - கைது செய்த பொலிசார்
[Monday 2017-06-05 17:00]

நாகர்கோவில் அருகே இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.நாகர்கோவில் ஈத்தாமொழியை சேர்ந்த தம்பதி கண்ணன்- திவ்யா. இவர்களுக்கு ஏற்கனவே அனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 22ம் திகதி திவ்யாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.பிரசவத்துக்கு பின்னர் திவ்யா குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.


மோகன்லால் படத்திற்கு எதிர்ப்பா...? நானிருக்கிறேன் என்கிறார் மோடி.
[Monday 2017-06-05 16:00]

நடிகர் மோகன்லால் நடிப்பில் விரைவில் தொடங்கவுள்ள ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் படமான மகாபாரதத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த படத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எம்.டி.வாசுதேவனின் விருது பெற்ற பிரபல நாவலான ரண்டாமூழம் என்ற நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு மகாபாரதம் என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.


ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு வந்த சோதனை
[Monday 2017-06-05 15:00]

ஓமலூர் அருகே இளைஞர் சதீஸ்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தன்னை சிக்க வைக்க சிலர் முயற்சிப்பதாக பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. கூலி தொழிலாளியான இவரது இளைய மகன் சதீஸ்குமார். இவர் நேற்று மாலை அங்குள்ள ரயில்வே ட்ராக் ஓரமாக பிணமாக கிடந்தார். இதற்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனின் மிரட்டலே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.


தமிழக சட்டப்பேரவை ஜூன் 14ஆம் தேதி கூடுகிறது
[Monday 2017-06-05 15:00]

தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 14 ஆம் தேதி கூடுவதாக பேரவை பொறுப்பு செயலர் அறிவித்துள்ளார்.மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் அப்போது நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை ஜூன் 14ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவையை விரைவாக கூட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கோரி வந்துள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
[Monday 2017-06-05 15:00]

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என திமுகவின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில், காயிதேமில்லத் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், இந்த கோரிக்கையை முன்வைத்தார்.


விரைவான நீதி கிடைக்க நீதிபதிகளும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
[Monday 2017-06-05 08:00]

பொதுமக்களுக்கு விரைவான நீதி கிடைக்க நீதிபதிகளும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 98 வக்கீல் அறைகள், வக்கீல்களுக்கான கூட்ட அரங்கம் மற்றும் உணவுக்கூடம் ஆகியவை கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.8.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக 30 வக்கீல் அறைகள், கூட்ட அரங்கம் மற்றும் உணவுக்கூடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளுக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.


சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு பறந்த எம்.எல்.ஏக்கள்!
[Monday 2017-06-05 08:00]

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கு விரைந்துள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அ.தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. ஓ.பி.எஸ் போர்கொடி, சசிகலா சிறை, எடப்பாடி ஆட்சி, ஆர்.கே.நகர் வேட்பாளர் டி.டிவி தினகரன், டி.டி.வி தினகரன் கைது, கட்சியில் இருந்து தினகரன் விலகல் என பல திருப்பங்கள் நடந்து வருகின்றன.


மாட்டிறைச்சி தடை பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்
[Monday 2017-06-05 08:00]

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இறைச்சிக்காக மாடுகள்விற்பனை செய்ய தடை, மக்களின் உணவுப் பழக்கத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய விலங்குகள் நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். பசு, காளை, எறுமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த மே மாதம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடத்தபட்டு வருகின்றன.


தவறு செய்தவர்களுக்கு காலம் பதில் சொல்லும் - டிடிவி தினகரன்
[Monday 2017-06-05 07:00]

கட்சியின் தலைமை அலுவலகத்தில் எங்கள் பேனர்களை அகற்றி மிகப்பெரிய தவறைச் செய்து இருக்கின்றனர். காலம் அதற்கு பதில் சொல்லும் என அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது, சசிகலாவின் ஆணையை ஏற்று, அவர் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன். 'நீங்கள் கட்சியிலிருந்து ஒதுங்க வேண்டும்' என்று அமைச்சர்கள் கூறியதால், கட்சியின் நலனுக்காக ஒதுங்கிக் கொண்டேன்.


பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்ற கொடூரம்!
[Monday 2017-06-05 07:00]

ஒடிசாவில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றது தொடர்பாக 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் தோமுஹனி கிராமத்திற்குள் சென்ற பெண்ணை, அங்கிருந்தவர்கள், குழந்தை கடத்தும் பெண் என்று கூறி அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.


நொடியில் மரணம்... சமயோசிதமாக உயிர்பிழைத்த இளம்பெண்!
[Sunday 2017-06-04 20:00]

அந்தப்பெண் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்தான். ஐந்து நொடிகளில் நிகழ இருந்த ரயில் விபத்தில் இருந்து தனது சமயோசித முடிவால் மரணத்தை வென்றிருக்கிறார் அந்த 19 வயது பெண். மும்பையில் உள்ள குர்லா ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 13 ம் தேதி நடைபெற்ற அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பதபதப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா