Untitled Document
January 17, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
குளிப்பதற்குக் கூட தகுதியற்ற இந்தியாவின் புண்ணிய நதிகள்!
[Wednesday 2012-12-26 20:00]

இந்தியாவின் வடமாநிலங்களில் பாயும் கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், குளிப்பதற்கு ஏற்ற தகுதி கூட இல்லாத அளவிற்கு மாசடைந்துள்ளதாக அரசு சாரா அமைப்பு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பத்மஸ்ரீ விருது வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் ஜோஷி தலைமையில், டேராடூனில் இயங்கி வரும் ஹெஸ்கோ என்ற அரசுசாரா அமைப்பு, இந்தியாவின் வடக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் ஓடும் நதிகள் குறித்து ஆய்வு நடத்தும் பொருட்டு, அப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.


வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 1000 பேர் சென்னையில் கைது!
[Wednesday 2012-12-26 19:00]

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அண்ணாநகர் மேற்கில் உள்ள வால்மார்ட் நிறுவன கிளை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம், நடத்தப்போவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்தன. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.


இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரும் விடுதலை!
[Wednesday 2012-12-26 19:00]

இலங்கையில் கைதான தமிழக மீனவர்கள் 27 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 21ம் தேதி நாகை பகுதியில் இருந்து 14 பேரும், காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 13 பேரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் ஞாயிறு அன்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இன்று நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப் பட்டனர். இந்நிலையில், அவர்கள் 27 பேரையும் விடுதலை செய்து திரிகோணமலை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை அடுத்து அவர்கள் ஓரிரு நாளில் கரை திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கே தரவேண்டும்! - மன்மோகனுக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்
[Wednesday 2012-12-26 07:00]

தமிழகத்திலுள்ள மத்திய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் 2830 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் மாநிலத்தின் பயன்பாட்டுக்கே வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து, அவர் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:


மதுரை மாவட்ட ஆட்சியரின் நோட்டீஸை வாங்க மறுத்தார் ராமதாஸ்!
[Wednesday 2012-12-26 07:00]

மதுரை மாவட்ட ஆட்சியர் முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென பா.ம.க. நிறுவனர் ராமதாஸூக்கு வழங்க அளிக்கப்பட்ட நோட்டீஸை மீண்டும் திங்கள்கிழமை காவல்துறையினர் அளிக்கச் சென்ற போது அதனை அவர் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.மதுரையில் அனைத்து சமுதாய பாதுகாப்புப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தை அண்மையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நடத்தினார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பினார்.


நான்காவது தடவையாக இன்று முதல்வராகப் பதவியேற்கிறார் நரேந்திரமோடி!
[Wednesday 2012-12-26 07:00]

குஜராத் முதல்வராக தொடர்ந்து நான்காவது தடலையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்க உள்ளார். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி பார்வையாளராகப் பங்கேற்றார். சட்டப் பேரவை பாஜக எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவர் பதவிக்கு நரேந்திர மோடியை, அக்கட்சியின் மூத்த தலைவர் வஜுவாலா முன்மொழிந்தார். தலைவராக மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இனியாவது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - கெஞ்சுகிறார் கருணாநிதி
[Wednesday 2012-12-26 07:00]

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதற்கு முற்றுப் புள்ளி வைக்க இனியாவது மத்திய அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை மத்திய அரசை வற்புறுத்துவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மீண்டும் நோட்டமிட்ட கேரள வாலிபர் கைது!
[Tuesday 2012-12-25 19:00]

மத்திய மந்திரி ப.சிதம்பரம் கடந்த நவம்பர் மாதம் 13-ந்தேதி சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது அமிர்தவா என்ற கேரள வாலிபர் அவரை செல்போனில் போட்டோ எடுத்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுபற்றி கேள்விப்பட்டதும் ப.சிதம்பரம், தன்னை படம் எடுத்த வாலிபரை மன்னித்து, விட்டு விடும்படி வேண்டுகோள் விடுத்தார்.


காங்கிரசுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் கொள்கை முரண்பாடு கிடையாது! - தொல்.திருமாவளவன்
[Tuesday 2012-12-25 19:00]

ஈரோடு மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் 50-வது பிறந்தநாள் விழா, பொற்காசுகள் வழங்கும் விழா, இலவச திருமண விழா ஆகிய முப்பெரும் விழா ஈரோடு மல்லிகை அரங்கத்தில் நடந்தது. இதில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


சேலத்தில் பட்டாசுக் கிடங்கில் வெடிவிபத்து - 10 பேர் வரை பலி?
[Tuesday 2012-12-25 18:00]

சேலம் அருகே உள்ள மேச்சேரியில் பட்டாசு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். காமநேரி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் முயன்று கொண்டிருக்கும் நிலையில் பட்டாசு தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் மேலும் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.


டெல்லி பலாத்கார சம்பவம் - அமெரிக்கா கருத்து!
[Tuesday 2012-12-25 18:00]

பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற போர்க்களமான காட்சிகளை அமெரிக்க ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட நிலையில் தற்போது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்திருக்கிறது.


தில்லி கற்பழிப்பு சம்பவத்திற்கு பிரதமரே அறிக்கை விடுகிறார் - தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மாணவியின் சம்பவத்துக்கு..? - கருணாநிதி கேள்வி
[Tuesday 2012-12-25 11:00]

தில்லியிலும், தமிழகத்திலும் நடைபெற்ற சம்பவங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்போது அதனைக் கண்டிப்பதில் இடத்துக்கு இடம் சில அரசியல் கட்சிகள் வேறுபாடு காட்டுவது வேதனை அளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


கர்நாடக துணை முதல்வர் வீட்டில் அதிரடி சோதனை - 39 கிலோ தங்கம், வெள்ளி சிக்கியது!
[Tuesday 2012-12-25 08:00]

கர்நாடக துணை முதல்வரும், மாநில பாஜ தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 7 இடங்களில் லோக்அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வழக்கறிஞர் வினோத் என்பவர் ஷிமோகா லோக்அயுக்தா நீதிமன்றத்தில் கொடுத்த புகார் மனுவில், மாநில துணைமுதல்வர் ஈஸ்வரப்பா, 2004 மற்றும் 2008ல் நடந்த பேரவை பொதுத்தேர்தலின் போது, கொடுத்துள்ள சொத்து பட்டியலுக்கும், தற்போது அவரிடம் உள்ளது சொத்துக்கும் அதிகம் வித்தியாசம் உள்ளது.


கூடங்குளத்தில் ரஷ்ய அதிபருக்கு எதிராக போராட்டம் - உருவபொம்மையும் எரிப்பு!
[Tuesday 2012-12-25 08:00]

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக இடிந்தகரையில் 497வது நாளாக நேற்று போராட் டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புடினை திரும்பிச் செல்ல வலியுறுத்தியும் அவரது உருவ பொம்மை யை எரித்து போராட்டம் நடத்தினர். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் புஷ்பராயன், முகிலன் மற்றும் போராட்ட குழுவினர் இடிந்தகரை நுழைவுவாயில் அருகே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கூடங்குளம் அணுஉலையின் அடுத்த கட்டப்பணிகள் குறித்த பேச்சுக்களில் இணக்கம்!
[Tuesday 2012-12-25 07:00]

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது யூனிட் நிறுவும் பணி அடுத்த ஆண்டில் முடியும் என்றும், 3 மற்றும் 4வது யூனிட் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்தார். இந்தியா,ரஷ்யா உச்சி மாநாடு, டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் இந்தியா வந்துள்ளார். அவருடன் பிரதமர் மன்மோகன் சிங் பல்வேறு துறைகள் குறித்து விவாதித்தார்.


மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலி - மூடப்பட்டது இந்தியா கேட்!
[Tuesday 2012-12-25 07:00]

மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்து நடைபெறும் போராட்டத்தை கட்டுப்படுத்த டெல்லி இந்தியா கேட் பகுதியில் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அருகேயுள்ள 9 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். பஸ்சில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, டெல்லியில் கடந்த ஒரு வாரமாக மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கபாலீஸ்வரர் கோவில் கருவறைக்குள் நுழையமுயன்ற பெரியார் திராவிடர் கழகத்தினர் 500பேர் கைது!
[Monday 2012-12-24 15:00]

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு ஊர்வலமாக செல்லப்போவதாகவும் அறிவித்திருந்தனர். இதையொட்டி இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செலயாளர் கோவை ராம கிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் லஸ்கார்னர் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பார்க் அருகே திரண்டனர்.


மீண்டும் 27 தமிழக மீனவர்களை பிடித்துச் சென்றது இலங்கைக் கடற்படை!
[Monday 2012-12-24 15:00]

இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 27 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலிருந்து 4 மீன்பிடி படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


பலாத்காரத்துக்கு தூக்குதண்டனை என்பது நியாயமில்லை! - நடிகர் கமலஹாசன் எதிர்ப்பு
[Monday 2012-12-24 15:00]

பலாத்காரத்துக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை என்பது நியாயமில்லை என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். கொச்சி வந்த நடிகர் கமலஹாசனிடம் செய்தியாளர்கள், டெல்லியில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து கருத்துக் கேட்டதற்கு, அது என்னுடைய பேருந்து, அது என்னுடைய தலைநகரம், அந்த மாணவி என்னுடைய சகோதரி, அந்த குற்றவாளியும் என்னுடைய சகோதரன்தான். இந்த சம்பவம் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.


ராஜிவ்காந்தியின் இறப்பு சான்றிதழை முதல் மனைவியிடம் கொடுத்த அதிகாரி இடமாற்றம்!
[Monday 2012-12-24 14:00]

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் முதல் மனைவி என்று கூறிய ஆந்திர பெண்ணிடம் ராஜிவ் இறப்பு சான்றிதழை கொடுத்த அதிகாரி இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமையன்று ஆந்திராவைச் சேர்ந்த சபீஹா பையர்டோஸ் என்ற பெண் வந்திருக்கிறார். அப்போது பணியில் இருந்த அதிகாரியிடம் ராஜிவ்காந்தியின் முதல் மனைவி தாம்தான் என்று கூறி அவரது இறப்பு சான்றிதழைக் கேட்டிருக்கிறார்.


மக்களவைத் தேர்தலில் பலத்தை நிரூபித்துக் காட்டப் போகிறாராம் விஜயகாந்த்!
[Monday 2012-12-24 08:00]

மக்களவைத் தேர்தலில் தேமுதிக தன் பலத்தை நிரூபித்துக் காட்டும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார். தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு கேக் மற்றும் பிரியாணி வழங்கி விஜயகாந்த் பேசியது:


செங்கல்பட்டு சிறப்புமுகாமில் 7 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்!
[Monday 2012-12-24 07:00]

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் 7 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கியூ பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் 41 பேர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.


மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் - தமிழகஅரசு மீது குற்றம்சாட்டுகிறார் நாராயணசாமி!
[Monday 2012-12-24 07:00]

இலங்கை மீனவர் அமைப்புகளுடன் தமிழக மீனவ அமைப்பினரை பேச வைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு வெளியுறவு துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தும், தமிழக அரசிடம் இருந்து முறையான பதில் வரவில்லை என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். நேற்று நண்பகல் விமானம் மூலம் சென்னை அவர்.விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:


மதுரைக்குள் நுழைய ஏன் தடைவிதிக்கக் கூடாது? - ராமதாசுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ்!
[Monday 2012-12-24 07:00]

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 20ம்தேதி மதுரையில் செய்தியாளர்க ளிடம் பேசும்போது ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேட்டி அளித்துள்ளார். இதற்காக அவரை மதுரை மாவட்டத்திற்குள் நுழைவதற்கு ஏன் தடை உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்பதற்கான முகாந்திரம் கோரி குற்ற விசாரணை முறைசட்டம் பிரிவு 144ன் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


மணிப்பூரில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் பலி!
[Sunday 2012-12-23 19:00]

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் திரைப்பட நடிகை மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதலைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள அரசு மருத்துவமனையில் ஊடகவியலாளர் நனாவோ சிங் உயிரிழந்தார்.


நடிகை ரோகிணி தலைமையில் மெரீனாவில் நள்ளிரவில் திரண்ட மாணவ- மாணவிகள்!
[Sunday 2012-12-23 19:00]

டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு 12 மணிக்கு நடிகை ரோகிணி தலைமையில் மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவ- மாணவிகள், கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.


ராஜீவ்காந்தியின் மனைவி என்று இறப்புச்சான்றிதழ் பெற்ற ஆந்திரப் பெண்ணை தேடுகிறது உளவுத்துறை!
[Sunday 2012-12-23 19:00]

தன்னை ராஜீவ்காந்தியின் மனைவி என்று மரணச்சான்றிதழ் பெற்றுச்சென்ற ஆந்திரப் பெண்னை மத்திய உளவுத்துறை தேடிவருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சபீஹா பைதோஸ் (50) என்பவர், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தனது கணவர் என்று விண்ணப்பித்து இறப்பு சான்றிதழ் கேட்டார். இதனை பரிசீலனை செய்த சார்பதிவாளர் ராமலிங்கம், சபீஹா பைதோசிடம் ராஜீவ் காந்தி இறந்ததற்கான சான்றிதழை நேற்று கொடுத்தார்.


50 சதங்களை அடிக்கும் கனவு நனவாகாமலேயே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார் சச்சின்!
[Sunday 2012-12-23 19:00]

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களை அடிக்கும் கனவு நனவாகாமலேயே அவர் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்து வரும் டெண்டுல்கரின் அண்மைய ஆட்டங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. இதனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற குரலும் வலுத்தது.

Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா