Untitled Document
March 29, 2024 [GMT]
பொய்யான வாட்ஸ் ஆப் செய்தியால் நிறுத்தப்பட்ட திருமணம்!
[Tuesday 2018-04-10 09:00]

கேரளாவில் நடக்கவிருந்த திருமணம் ஒன்று பொய்யான வாட்ஸ் ஆப் செய்தியால் நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த கல்லூரி பெண் ஒருவருக்கு சில வாரங்களுக்கு முன் உறவுக்காரருடன் நிச்சயம் ஆன நிலையில் ஒரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்தது.


பெண்ணாக மாறிய காதலன் ஆணாக மாறிய காதலி:: - இந்தியாவின் முதல் விசித்திர திருமணம்
[Tuesday 2018-04-10 09:00]

இந்தியாவிலேயே முதன்முறையாக காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் சூர்யா (25). நடன கலைஞரான இவர் சினிமாவில் துணை நடிகராகவும் உள்ளார். இவரது தோழி இசான்கேசான் (19).


போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள்: -இயக்கநர் பாரதிராஜா
[Monday 2018-04-09 15:00]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் திரைத்துறை சார்பில் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நடிகர்கள் ,நடிகைகள் ,இயக்குநர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் பங்கேற்றனர். இதனையடுத்து இயக்குநர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளனர்.


மனைவியை கொலை செய்து நாடகம்: - கோவில் குருக்கள் கைது
[Monday 2018-04-09 15:00]

சென்னை வடபழனியில் ஞானப்பிரியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் பாலகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை கொலை செய்து நாடகமாடிய கோவில் குருக்கள் பாலகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பரின் உதவியுடன் மனைவி ஞானப்பிரியாவை கொலை செய்துவிட்டு குருக்கள் பாலகணேஷ் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. மனைவி ஞானப்பிரியாவை சுத்தியால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து மனைவியை கொன்றதாக குருக்கள் பாலகணேஷ் கூறினார்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் பறிபோகும் உயிர்கள்!
[Monday 2018-04-09 15:00]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் அவ்வப்போது சிலர் தங்களது உயிரை மாய்த்துகொள்கின்றனர். நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளைங்கோட்டை அருகே உள்ள கோவைகுளத்தை சேர்ந்தவர் செல்வம், இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றும் இவர் சில நேரங்களில் டிரைவர் வேலையையும் செய்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பில் இருந்து கோவை குளம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார்.


காதல் தகராறில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இன்ஜினியரிங் மாணவன்!
[Monday 2018-04-09 08:00]

காதல் தகராறில் இன்ஜினியரிங் மாணவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கல்லூரணியை சேர்ந்தவர் கருப்பையா (21). ராமநாதபுரம் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2ம் தேதி நண்பர்கள் அடசிவயலை சேர்ந்த கார்த்திக் (21), தேவகோட்டையை சேர்ந்த ராம் (23) ஆகியோருடன் கண்டதேவி ஊருணி பகுதியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.


கன்னடராகிய நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியாது: ரஜினியை சீண்டும் தமிழிசை!
[Monday 2018-04-09 07:00]

காங்கிரஸ், தி.மு.க ஆட்சியில் மறுக்கப்பட்ட காவிரியை கொண்டுவரப்போவது பா.ஜ.க தான் எனத் தமிழிசை பேசியுள்ளார். காவிரி பிரச்னை தமிழகத்தில் தீவிரமாகியுள்ள நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டது சரியல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழிசை, ``சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் கன்னடர் ஒருவர் நடிப்பதைப் பார்க்க மாட்டோம் என நினைத்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியாது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் திறமை யாரிடம் இருந்தாலும் பெற்றுக்கொள்ளும். இதில், மத்திய அரசு மீது குறை சொல்வது கேலிக்கூத்து.


இந்திராகாந்தி விமானநிலையத்தை பதறவைத்த ஜெட் ஏர்வேஸ்: - பெரும் விபத்து தவிர்ப்பு
[Monday 2018-04-09 07:00]

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தால் ஏற்பட இருந்த இரு பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம் வழக்கமான பரபரப்புடன் நேற்றிரவு இயங்கிக்கொண்டிருந்தது. விமான ஓடுதளம் அருகே கேட்டரிங் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், துபாயில் இருந்து 133 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கிக்கொண்டிருந்தது. அப்போது, விமானத்தை ஓடுதளத்தில் நிறுத்தும்போது அதன் இறக்கை அருகில் இருந்த கேட்டரிங் வாகனத்தின் மோதியது. இதில், கேட்டரிங் வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் உயிர்தப்பினர்.


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை: - பாதுகாவலர்கள் விரட்டியபோதும் அசரவில்லை
[Monday 2018-04-09 07:00]

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக வந்த காளை மாட்டை பார்த்து பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். தேவஸ்தான பாதுகாவலர்கள் அந்த காளையை விரட்டியபோதும் அது அசராமல் மலைக்கு நடந்து சென்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்லவர்கள், சோழர்கள், கிருஷ்ண தேவராயர், ஆங்கிலேயர்கள் வரை பல மாமன்னர்கள் பாத யாத்திரையாக வந்து சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கு விலைமதிப்புமிக்க வைர, வைடூரியம் அடங்கிய ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.


நடிகர் சங்கம் மௌனப் போராட்டம் நிறைவு: - சத்யராஜ் ஆவேசம்
[Sunday 2018-04-08 14:00]

விவசாயமும் விவசாயிகளும் நன்றாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தின் நகல் ஆளுநரிடம் வழங்கப்படும். போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி


விளையாட்டு முக்கியமா? - தோனி, ரோஹித் சர்மா உருவ பொம்மைகளை எரித்த அதிமுகவினர்
[Sunday 2018-04-08 14:00]

விவசாயியைவிட விளையாட்டு முக்கியமா ?


சிஎஸ்கே வீரர்களுக்கு ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்!
[Sunday 2018-04-08 14:00]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,


மான் குட்டிகளுக்கு பாலூட்டும் பிஷ்னோய் இனப் பெண்கள்: - சல்மான்கானின் நிம்மதியை கெடுத்த பின்னணி
[Sunday 2018-04-08 09:00]

மானை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது ஜோத்பூர் நீதிமன்றம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த வழக்கை இத்தனை காலம் நடத்தி, அதில் வெற்றியும் கண்டிருப்பவர்கள் பிஷ்னோய் எனும் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்தான். பிஷ்னோய் சமூகத்தினர் மரங்களை பாதுகாக்க வேண்டும், எல்லா உயிர்களிடமும் பரிவு காட்ட வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவத்தை கொண்டவர்கள். ராஜஸ்தானில் தார் பாலைவனப் பகுதியில் இவர்கள் வாழ்கின்றனர்.


உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தை: - போராடி காப்பாற்றிய டாக்டர்கள்
[Sunday 2018-04-08 09:00]

பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை வீட்டில் தவழ்ந்து விளையாடியபோது மீன் தொட்டியில் நீந்தி கொண்டிருந்த சிறிய மீனை எடுத்து வாயில் விழுங்கியது. மீன் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டது.இதனால் குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. மூச்சு விடவும் சிரமப்பட்டது. உடனே குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.


கொச்சியில் கொடிகட்டி பறக்கும் ஒன்லைன் விபசாரம்!
[Sunday 2018-04-08 09:00]

சென்னை, மும்பை, பெங்களூரை ஒப்பிடும் போது கொச்சி மிகச்சிறிய நகரம் தான். ஆனால் இந்த நகரங்களை விட கொச்சியில் தான் போதைப் பொருள் கடத்தல், விபசாரம், கூலிப்படையினரின் அட்டகாசங்கள் உட்பட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக கணக்குகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் கொச்சி 2வது இடத்தை பிடித்துள்ளது. பள்ளி மாணவர்களில் தொடங்கி ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு வரும் செல்வந்தர்கள் வரை போதைப் பொருளை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றனர்.


தமிழ்நாடும் எங்களைப் போலவே ஊனமாகிவிடும்: - கண்கலங்க வைத்த மாற்றுத் திறனாளிகள்
[Saturday 2018-04-07 17:00]

''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் கர்நாடக அரசு கண்டிப்பாக காவிரிக்கு தண்ணீர் தராது. அப்படி காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ்நாடும் எங்களைப் போலவே ஊனமாகிவிடும். அதனால் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்'' என மத்திய அரசை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கண் கலங்கப் பேசி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன்!
[Saturday 2018-04-07 17:00]

மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சல்மான் கான் மனுவை ஏற்று ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. நடிகர், சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில், 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.


செல்போன்களை விற்று ஆடம்பரமாக செலவழிப்பேன்: - போலீஸை பதறவைத்த ரவுடியின் வாக்குமூலம்
[Saturday 2018-04-07 17:00]

சென்னையில் காவலாளியின் கையை வெட்டிவிட்டு செல்போனைத் திருடிவிட்டு தப்பியோடிய திருடர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஒரு திருடன் கொடுத்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரவைத்துள்ளது.


காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழர்!
[Saturday 2018-04-07 08:00]

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் தமிழகத்தைச்சேர்ந்தவர் ஆவார். வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.


பஸ்சில் நகை திருடிய பெண்களை விரட்டிபிடித்த பெண் கண்டக்டர்!
[Saturday 2018-04-07 08:00]

கேரளாவில் பஸ்சில் பெண் பயணியின் செயினை பறித்துக் கொண்டு ஓடிய 2 தமிழக பெண்களை பெண் கண்டக்டர் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கோலத்து என்ற இடத்துக்கு நேற்று முன்தினம் மாலை கேரள அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ்சில் கண்டக்டராக சுஜா என்பவர் பணியாற்றினார். கூட்ட நெரிசலில் சரஸ்வதி என்ற பயணியின் மூன்றரை பவுன் செயினை யாரோ திருடினர். இதை அறிந்த அவர் கூச்சலிட்டார்.


விஷம் கலந்த மதுவை திருடி குடித்த கூலித் தொழிலாளி பலி!
[Saturday 2018-04-07 08:00]

துவரங்குறிச்சி அருகே தோட்டத்தில் புதைத்து வைத்த விஷம் கலந்த மதுவை திருடி குடித்த கூலித் தொழிலாளி பலியானார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோட்டப்பட்டியை சேர்ந்தவர் தீபன் (28). இவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பதுடன், அவ்வாறு விற்ற மதுபாட்டில்கள் தவிர மீதமுள்ள மதுபாட்டில்களை துவரங்குறிச்சி அருகே எல்லைக் காட்டுப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைப்பது வழக்கம். இப்படி புதைத்து வைத்த மதுபாட்டில்கள் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி திருட்டு போயுள்ளது.


பள்ளிக்குள் மது போதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்!
[Saturday 2018-04-07 08:00]

திருப்புவனம் அருகே அரசு பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர் போதையில்


நகைக்காக என் காதல் மனைவியை இழந்துவிட்டேன்: - கண்ணீர்விட்ட பிரியாவின் கணவர்
[Friday 2018-04-06 18:00]

வடபழனியில் கொலை செய்யப்பட்ட பிரியாவின் கணவர் பாலகணேஷ் என்ற பிரபு திடுக்கிடும் தகவலை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, நகைக்காக என் காதல் மனைவியை இழந்துவிட்டேனே என்று மருத்துவமனையில் கதறியழுதுள்ளார். சென்னை வடபழனி, தெற்கு சிவன்கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவர் பாலகணேஷ் என்ற பிரபு. இவர் வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக அர்ச்சகராகப் பணியாற்றுகிறார். இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலூர். இவர், வேலூர் மாவட்டம் நெமிலியைச் சேர்ந்த பிரியா என்ற ஞானபிரியாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக்கு குழந்தை இல்லை. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.


தூங்க முடியாமல் என் மகன் தவித்தான்: - போலீஸாருடன் போராடிய பிரகாஷின் தாய் சங்கீதா கண்ணீர் பேட்டி
[Friday 2018-04-06 16:00]

'இரவில் தூங்க முடியாமல் என் மகன் பிரகாஷ் தவித்தான்' என்று அவரது தாய் சங்கீதா கண்ணீர்மல்க நம்மிடம் தெரிவித்தார். தி.நகரில் போக்குவரத்து போலீஸாருடன் மல்லுக்கட்டிய பிரகாஷ், நேற்று மாலை ஜாமீனில் வெளியில் வந்தார். வீட்டுக்குச் சென்ற அவரை கட்டித்தழுவி கன்னங்களில் முத்தங்களைப் பதித்தார் அவரது அம்மா சங்கீதா. மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்த சங்கீதா, நம்மிடம் பேசினார்.


ஐ.பி.எல் போட்டிகளுக்கு தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு!
[Friday 2018-04-06 16:00]

காவிரி மேலாண்மை வாரியத்துக்காகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்தும் வரும் நிலையில், 'ஐபிஎல் போட்டிகள் நடைபெறக் கூடாது' என்ற குரல்களும் ஆங்காங்கே கேட்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சென்னை அணி இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருப்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நாளை துவங்க உள்ள போட்டிகளைக் காண, சென்ற வாரத்திலிருந்தே ரசிகர்கள் ஆயத்தமாகிவிட்டனர்.


இறந்த தாயின் உடலைப் பதப்படுத்திய மகன்: - பென்சனுக்காக நடந்த கொடூரம்
[Friday 2018-04-06 16:00]

ஓய்வூதியம் பெறுவதற்காக இறந்த தாயின் உடலை சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பதப்படுத்தி கைரேகை எடுத்து வந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கொல்கத்தாவில் வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூந்தர். இவருக்கு வயது 46. லெதர் டெக்னாலஜியில் மெரிட்டில் தேர்ச்சி பெற்ற இவர் தன் படிப்பைத் தாயின் உடலைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தச் சம்பவம் கொல்கத்தாவையே அதிரவைத்துள்ளது. இது குறித்து கொல்கத்தா போலீஸ் தரப்பில் கூறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு...


ஆட்டுக்குட்டியை காப்பாற்ற புலியோடு போராடிய இளம்பெண்!
[Thursday 2018-04-05 13:00]

மகாராஷ்டிரத்தில், ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட வந்த புலியை, இளம் பெண் ஒருவர் கம்பால் அடித்து விரட்டினார். பண்டாரா மாவட்டத்தில், சகோலி அருகேயுள்ள உஸ்கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண், ரூபாலி மெஸ்ராம். இவர், தன் வீட்டில் ஆட்டுக்குட்டி ஒன்றைப் பாசமாக வளர்த்து வந்தார். ஆட்டுக்குட்டியை எப்போதும் வீட்டு வாசலில் கட்டிவைப்பது வழக்கம். வீட்டருகில் வந்த புலி ஒன்று, ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட முயன்றது. ஆட்டுக்குட்டி அலறும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த ரூபாலிக்கு அதிர்ச்சி.


மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் குற்றவாளி: - அதிரடித் தீர்ப்பு
[Thursday 2018-04-05 13:00]

மான் வேட்டையாடிய வழக்கில், நடிகர் சல்மான்கானை குற்றவாளியாக அறிவித்தது, ஜோத்பூர் நீதிமன்றம்.கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின்போது, பாகாவாத் வனப் பகுதியில், சிங்காரா, பிளாக் பக் என்ற அறிய வகை மான்களை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாகவும், அவர் வேட்டையாடும்போது நடிகர் சாயிஃப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா