Untitled Document
July 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
திரையரங்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது: - அன்புமணி
[Friday 2017-07-07 16:00]

‘நான் அடிப்பதுபோல அடிக்கிறேன்; நீ அழுவதைப்போல் அழு’ என்று, அரசும் திரையரங்கு உரிமையாளர்களும் சொல்லி வைத்துக்கொண்டு நடத்தும் நாடகமாகத் தோன்றுகிறது என்று கூறியுள்ள பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, திரையரங்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.


முட்டம் கடல் பகுதியில் சிறுவனின் சடலம்: - அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்
[Friday 2017-07-07 16:00]

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் சுனிகர், இவர் கடந்த 3ம் திகதி தன்னுடைய மனைவி மற்றும் 2 வயது மகன் சகாயசான்சோவுடன் கன்னியாகுமரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.விசேஷ வீட்டில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சகாயசான்சோவை காணவில்லை.


கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மர்மகும்பல்: - மும்பையில் கொடூரம்
[Friday 2017-07-07 08:00]

மும்பையில் கல்லூரி மாணவியை மர்மகும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதனையடுத்து சர்க்காப் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பலாத்காரம் செய்த மர்மகும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


எலி பிடிக்க ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் கூலி: - அரசு மருத்துவமனையில் வினோதம்
[Friday 2017-07-07 08:00]

கர்னூல் அரசு மருத்துவமனையில் எலி பிடிக்க ஒரு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் கூலி வழங்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக ஒரு எலி பிடிக்க ரூ.13 ஆயிரம் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த, பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை எலி கடித்து உயிரிழந்தது. இதையடுத்து அரசு மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் எலிகளை பிடிக்க உத்தரவிட்டது.


மகளின் பிறந்தநாளை துப்பாக்கி வெடித்து கொண்டாடிய தந்தைக்கு யமனான குண்டு!
[Friday 2017-07-07 08:00]

அரியானா மாநிலம் கர்னால் நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார் (40). இவரது மகளுக்கு நேற்று 8-ஆவது பிறந்தநாள். மகளின் பிறந்தநாளுக்கு உறவினர்களை அழைத்த அவர் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அப்போது தான் வீட்டில் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்தார். மகிழ்ச்சியில் இருந்த அவர் துப்பாக்கியை மேலே காட்டி சுட ஆரம்பித்தார்.


உடல் நலத்தை மேம்படுத்த அமெரிக்க கேஸினோவில் ரஜினி சூதாடுகிறார்: - சுப்பிரமணியன் சுவாமி
[Thursday 2017-07-06 17:00]

நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.


காதலியின் உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்ற காதலன் கைது!
[Thursday 2017-07-06 17:00]

தமிழகத்தின் பண்ருட்டியில் காதலியை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி பேருந்து நிலையத்தில் கடந்த 1ம் திகதி பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அவரை அனுமதித்ததுடன் பொலிசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


ஐந்து வயது பிள்ளையின் தோற்றத்தில் ஐம்பது வயதான குள்ள மனிதர்!
[Thursday 2017-07-06 16:00]

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வறிய கிராமம் ஒன்றில் 5 வயது பிள்ளையின் தோற்றத்தில் 50 வயதான குள்ள மனிதர் வாழ்ந்து வருகிறார்.29 அங்குலம் உயரமான பாசோர் லால் என்ற இந்த நபரின் உடல் வளர்ச்சியடையா விட்டாலும் அவர் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக கிராம மருத்துவர் கூறியுள்ளார்.


திருமணமான இரண்டே மாதத்தில் தம்பதிகளுக்கு நேர்ந்த சோக சம்பவம்!
[Thursday 2017-07-06 16:00]

இந்தியாவில் திருமணமான இரண்டே மாதத்தில் கணவன் இறந்ததால் மனைவியும் தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் சங்கீத்(வயது25), இவருக்கு கடந்த மே மாதம் திவ்யா(20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் சங்கீத் கடந்த 29ம் திகதி வீட்டில் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நெகிழவைத்த யூத சிறுவன்!
[Thursday 2017-07-06 08:00]

இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஜெருசலேம் நகரில் ஒரு சிறுவனுடன் சிறப்பு சந்திப்பை மேற்கொண்டார்.2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த யூத சிறுவன் 'மோஷே'தான் பிரதமர் சந்தித்த சிறப்பு விருந்தினர். 2008 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் யூதர்களின் சபாத் இல்லத்தை தாக்கியபோது, குழந்தை மோஷே, தனது பராமரிப்பாளரால் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டான்.


பெற்ற குழந்தைகள் முன் தாய் பாலியல் பலாத்காரம்: - 4 கொடூரர்கள் கைது
[Thursday 2017-07-06 08:00]

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெற்ற குழந்தைகள் முன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் காஜுவாகா பகுதியைச் சேர்ந்த 35 வயது மிக்க பெண் ஒருவர் கடந்த திங்கள் கிழமை வீட்டில் தனது 3 குழந்தைகளுடன் தனியாக இருந்துள்ளார். அப்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதை அறிந்து கொண்ட சில மர்மநபர்கள் வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.


இந்து- முஸ்லிம் தம்பதியினருக்கு ரூம் கொடுக்க மறுத்த பெங்களூரு ஹொட்டல்: - அதிர்ச்சி தரும் காரணம்
[Thursday 2017-07-06 07:00]

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்து- முஸ்லிம் தம்பதியினருக்கு ஹொட்டலில் ரூம் தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் சபீஸ் சுபைதா ஹக்கிம் மற்றும் திவ்யா. இவர்கள் இந்து, முஸ்லிம்மாக இருந்தாலும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.


சென்னை காஞ்சிபுரம்-திருவள்ளூர்-அரக்கோணம் இணைந்து பெருநகரமாக மாறுகிறது:
[Tuesday 2017-07-04 20:00]

சென்னை பெருநகரத்தை விரிவாக்க காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணத்தை இணைப்பதால், 8,878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெருநகரமாக மாறுகிறது. சென்னை மாநகரம் பரந்து விரிந்து வருகிறது. இதனால் பெருநகர வளர்ச்சி குழுமம் ஆக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெருநகர குழுமம் கடந்த 2008-ம் ஆண்டு 2-வது மிகப்பெருந் திட்டத்தை வெளியிட்டது.


தமிழகத்தினை சோமாலியாவாக ஆக்க முயலும் பாஜக: - கொதிக்கும் சீமான்.!
[Tuesday 2017-07-04 20:00]

தங்கள் கிராமத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலம் கிராம மக்கள் தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில், கச்சா எண்ணெய் எடுப்பதற்காக பதிக்கப்பட்ட குழாய்களில் அடிக்கடி எண்ணெய் கசிவு ஏற்படுவது, தீப்பற்றி எரிவது போன்ற செயல்கள் தொடர்ச்சியாக நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது தடியடி நடத்தியது மட்டுமின்றி, பலரை கைது செய்தது காவல்துறை.


சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது:
[Tuesday 2017-07-04 20:00]

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் மகன் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சௌந்தர்யா, அஸ்வினைப் பிரிந்தே வாழ்ந்து வந்து வந்தனர். இந்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இருவரும் கடந்த டிசம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்து திருமண சட்டத்தின்படி 6 மாத அவகாசத்திற்கு பின் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.


மின்கம்பியில் சிக்கிய சிறுத்தை!
[Monday 2017-07-03 21:00]

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் காந்திநகருக்கு வெளியே உள்ள காட்டுக்கு அருகே உயர் மின் அழுத்த மின்கம்பியில் சிக்கி சிறுத்தை ஒன்று பலியாகியுள்ளது. உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து சிறுத்தை பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


26 வார சிசுவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!
[Monday 2017-07-03 21:00]

பெண்ணின் கருவில் வளரும் 26 வார சிசு குறைபாடுகளுடன் உள்ளதால், அதை கலைக்க இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. அரிதான வழக்காக இந்த விவகாரத்தைக் கருதி, இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது.இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தனர்.


குறுகிய தூர அதிவேக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை!
[Monday 2017-07-03 21:00]

தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடிய குறுகிய தூர அதிவேக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை ஒடிசாவின் சந்திப்பூர் அருகே சோதனை செய்யப்பட்டது.


அன்னை தெரசா தொண்டு நிறுவனங்களை சிறப்பாக நடத்திய sister நிர்மலா ஜோஷி இயற்க்கை எய்தினார்:
[Saturday 2017-07-01 08:00]

அன்னை தெரசா நிர்மாணித்த அறக்கட்டளையை நிர்வகித்து வந்த அருட்சகோதரி நிர்மலா ஜோஷி இன்று காலமானார் அவருக்கு வயது 81. 1934ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவரான நிர்மலா, பாட்னாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் கல்வி பயின்றார். அதன்பின் அன்னை தெரசாவை பற்றி கேள்விப்பட்டதும் அவரை போன்று சேவை செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து ரோமன் கத்தோலிக்கராக மதமாற்றம் செய்துகொண்ட அவர், தெரசா நிறுவிய அன்பின் பணியாளர் சபையில் தன்னை இணைத்துக்கொண்டார்.


தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ராஜேஷ் லக்கானி
[Saturday 2017-07-01 07:00]

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்தார்.தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளர் அறை அருகே உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளதாகக் கூறினார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்குசீட்டு வழங்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிற வாக்குசீட்டு வழங்கப்படும் எனவும்‌ லக்கானி தெரிவித்தார். தேர்தலுக்கான வாக்குபெட்டி மற்றும் தேர்தல் உபகரணங்கள் வரும் ஜூலை 13ம் தேதி சென்னைக்கு கொண்டுவரப்படும் எனவும் லக்கானி தெரிவித்தார்.


இந்தி திணிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது: சித்தராமையா
[Saturday 2017-07-01 07:00]

இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படித் திணித்தால் கட்டாயம் எதிர்த்துப் போராடுவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இந்தி மொழியை திணிப்பதை கர்நாடக அரசு ஒருபோது பொறுத்துக் கொள்ளாது. மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே பெங்களூரு மெட்ரோ ரயில்களில் இந்தி பயன்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றும் மத்திய அரசின் திட்டம் அல்ல. அத்திட்டத்திற்கு பெரும்பங்கு தொகை மாநில அரசின் நிதியில் இருந்து செலவிடப்பட்டுள்ளது. இந்தி வட இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப்படுகிறது. அதற்காக இந்தி நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பார்க்கக் கூடாது” என்றார்.


உதவி ஆட்சியரை கரம்பிடித்த எம்.எல்.ஏ
[Saturday 2017-07-01 06:00]

கே‌ரளாவில் எம்எல்ஏவை, உதவி ஆட்சியர் ஒருவர் காதலித்து கரம் பிடித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அவர்கள் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. கேரள முன்னாள் சபாநாயகரின் மகனும், அருவிக்கரை தொகுதி எம்எல்ஏவுமான சபரிநாதனுக்கும், திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் திவ்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டும் வந்தது. இந்த ‌சூழலில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள குமாரகோவிலில் இருவரும் இன்று திருமணம் நடைபெற்றது.


ஒரே இந்தியா, ஒரே வரி: அமலானது ஜிஎஸ்டி வரி
[Saturday 2017-07-01 06:00]

நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இருவரும் ஜி.எஸ்.டி. வரி முறையை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி. உருவாக்கத்தில் அனைத்து மாநிலங்களின் பங்கு உள்ளதாகவும், ஜி.எஸ்.டி புதிய இந்தியாவை உருவாக்கும் என்றும் கூறினார். குறுகிய அரசியல் நோக்கத்தில் இருந்து விடுபட ஜி.எஸ்.டி உதவும் என்றும், ஜி.எஸ்.டி. ஏழைகளுக்கு தேவையற்ற சுமைகளை கொடுக்காது என்றும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.


லண்டனில் நடந்த ஐ.கியூ தேர்வில் - ஐன்ஸ்டீனை முந்திய இந்திய சிறுவன்:
[Friday 2017-06-30 19:00]

லண்டனில் நடந்த ஐ.கியூ தேர்வில் 11 வயது இந்திய சிறுவன் 162 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிகமாகும். இங்கிலாந்தின் ரீடிங் நகரில் வசிக்கும் அர்னவ் ஷர்மா(11) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐகியூ அளவை சோதிக்கும் மென்சா தேர்வை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் கலந்து கொண்டார். பதற்றம் இல்லாமல் கலந்து கொண்டு கடினமான கேள்விகளுக்கு பதிலளித்து 162 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.


குட்கா விற்பனைக்காக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு 40 கோடி ரூபாய் வரை லஞ்சம்: - அறிக்கையளிக்க ஆளுநர் உத்தரவு.!
[Friday 2017-06-30 19:00]

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், குட்கா உள்ளிட்டகளை விற்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அறிக்கை அளிக்க ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார். குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு அரசு தடைவிதித்துள்ளது. இருந்தபோதிலும், குட்கா விற்பனையை சென்னையில் அனுமதிக்க உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் லஞ்சம் பெற்றது வருமான வரித்துறை சோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது.


மோடியின் முகத்திரை கிழிவது இது முதல்முறை இல்லையே!
[Friday 2017-06-30 09:00]

“பசுவின் பெயரால் அப்பாவிகள் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை காந்தி ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்”- இது நேற்று குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் இந்தியப் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் சாராம்சம். மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி நாட்டின் பல்வேறு இடங்களிலும், அப்பாவிகள் தாக்கப்பட்டதும் படுகொலை செய்யப்பட்டதும் நிகழ்ந்து வரும் நிலையில், இத்தனை நாட்கள் மௌனம் சாதித்த நம் இந்தியப் பிரதமர், நேற்று மௌனம் கலைத்திருக்கிறார்.


சொத்துக்காக சிறுவனை கொன்று மூட்டையில் அடைத்த மாமன்!
[Thursday 2017-06-29 06:00]

சொத்துக்காக ஒன்றரை வயது சிறுவனை அவனது மாமாவும் அத்தையும் கொன்று பிளாஸ்டிக் மூட்டையில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மலாத் பகுதியைசேர்ந்தவர் தர்மேந்திரா கண்டு. இவரது ஒன்றரை வயது மகன் விவான். இதே பகுதியில் தர்மேந்திரா கண்டுவின் உறவினர்களான விக்கியும் அவரது மனைவ்யும் வசித்து வருகின்றனர். தர்மேந்திரா கண்டு வேலை செய்யும் நிறுவனத்தில் விக்கியும் பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதாலும், ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாலும் குழந்தை விவான், விக்கியின் வீட்டில் அதிக நேரம் விளையாடுவதாக கூறப்படுகிறது.


ராணுவ வீரர்கள் பற்றி தரக்குறைவாக பேச்சு: சர்ச்சையில் ஆஸம் கான்
[Thursday 2017-06-29 06:00]

காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அத்துமீறும் ராணுவ வீரர்களை பழிக்கு பழியாக பெண்கள் அடித்து துவைப்பதும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளை நறுக்கும் சம்பவமும் நடைபெறுவதாக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆஸம் கான் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் ஆஸம் கான். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். அவர் தற்போது ராணுவ வீரர்கள் குறித்து புதிய கருத்தை ஒன்றை சொல்லி சிக்கலில் மாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஆஸம் கான், காஷ்மீர், திரிபுரா, ஜார்க்கண்ட், பெங்கால் உள்ளிட்ட இடங்களில் பெண்களிடம் ராணுவ வீரர்கள் அத்துமீறி நடந்துகொள்வதாகவும், அதனால் பெண்கள் ராணுவ வீரர்களை அடிப்பதும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளை வெட்டுவதும் நடைபெறுவதாக சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா