Untitled Document
June 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கவிஞர் அப்துல் ரகுமான் காலமானார்: - இறுதி சடங்கு நாளை மறுநாள் (ஜுன் 4ம்தேதி) நடக்கவிருக்கிறது.
[Friday 2017-06-02 20:00]

கவிஞர் அப்துல் ரகுமான்(80) உடல் நலக்குறைவு காரணமாக இன்று(ஜூன் 2) அதிகாலை காலமானார். சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் அப்துல் ரகுமான், மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். சென்னை பனையூர் வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் உயிர் பிறந்தது.


அவுஸ்திரேலியாவுடன் மலபார் போர் ஒத்திகை..! - இந்தியா மறுப்பு !
[Thursday 2017-06-01 18:00]

மலபார் கூட்டுப்படை போர் ஒத்திகை பயிற்சிற்கு விருப்பம் தெரிவித்திருந்த அவுஸ்திரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்துசமுத்திர எல்லையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்து கடல்தள போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மலபார் கூட்டு கடற்படை போர் ஒத்திகை என பெயரிடப்பட்டிருந்தது.


தீப்பிடித்த சென்னை சில்க்ஸ்..! - மொத்த சேதம் ரூ.300 கோடி!
[Thursday 2017-06-01 18:00]

தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் உள்ளே தோராயமாக 400 கிலோ தங்கம் மற்றும் 2,000 கிலோ வெள்ளி இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, ரூ.20 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தீ விபத்தில் எரிந்த துணிகளின் மதிப்பு மட்டும் ரூ.80 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும், மொத்த சேதம் ரூ.300 கோடியைத் தாண்டும் என்றும் தோராயமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.


மரத்தில் இருந்து வாடிக்கையாளரே பறிக்கலாம்..! - முன்னோடி இயற்கை விவசாயி சூப்பர் மார்க்கெட்!
[Thursday 2017-06-01 18:00]

முன்பெல்லாம் பெரும்பாலும் உள்ளூரில் இருக்கும் அண்ணாச்சி கடையிலோ, பெரிய மளிகைக்கடையிலேயோ பொருள்களை வாங்குவது வழக்கம். அதன்பிறகு சூப்பர் மார்க்கெட்களின் வரவுக்குப் பின்னர், அதில் மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது, இன்றும் அது தொடர்கிறது... இதற்குக் காரணம் கேட்டால், "அண்ணாச்சி கடையில அவர் எடுத்து கொடுக்கிறதை மட்டும்தான் வாங்க முடியும். ஆனா, சூப்பர் மார்க்கெட்டுல நமக்குப் பிடிச்ச பொருள்களை நாமே செலக்ட் பண்ணிக்கலாம்" என்பது உள்ளிட்ட பல காரணங்கள் சொல்வதுண்டு. ஆனால், இவ்வாறு இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு மத்தியில் தனது இயற்கை விவசாய பண்ணையையே சூப்பர் மார்க்கெட்டாக வைத்திருக்கிறார், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பாரதி.


மத்திய அரசின் மாட்டிறைச்சிக்குத் தடை..! தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டு
[Thursday 2017-06-01 09:00]

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்குத் தடை என்பது பசுவதைத் தடுப்பு அல்லது மாடுகளை வதை செய்யக்கூடாது என்ற நோக்கத்துக்காகக் கொண்டு வந்ததல்ல. மாடுவளர்ப்புத் தொழிலை முடக்கிவிட்டு அதை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக ஒப்படைப்பதற்காகத்தான் மோடி அரசு முயற்சிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.


'ஸ்வாதி கொலை வழக்கு' படத்துக்கு எதிர்ப்பு : - ஸ்வாதியின் தந்தை மனு!
[Thursday 2017-06-01 09:00]

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கை திரைப்படமாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தந்தை டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மென் பொறியாளராக பணியாற்றிவந்த சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும்!
[Wednesday 2017-05-31 13:00]

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் 68 சொத்துகளை பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான நடவடிக்கைகளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்ட கலெக்டர்களும் தொடங்கினர்.


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர்: - கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்
[Wednesday 2017-05-31 13:00]

தமிழ்நாட்டில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் உட்பட இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் சலீம் (65), இவர் அந்த பகுதியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறார்.இவருக்கு ஷாகீரா என்ற மனைவியும் ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர்.


திருமணமான 8 மாதத்தில் சாலை விபத்தில் பலியான இளம் தம்பதி!
[Wednesday 2017-05-31 07:00]

தமிழ்நாட்டில் திருமணமான 8 மாதத்தில் இளம் தம்பதி சாலை விபத்தில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கோகுலகண்ணன்(33), இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும் திண்டிவனத்தை சேர்ந்த சங்கீதா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.


மாட்டு இறைச்சி தடை விவகாரம்: - மத்திய அரசு பரிசீலனை செய்வதாக வெங்கையா நாயுடு தகவல்
[Wednesday 2017-05-31 07:00]

இறைச்சிக்காக கால்நடை சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எதிர்ப்பு போராட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த நிலையில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


திருமண வரன் தேடும் இணைய தளத்தால் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்!
[Wednesday 2017-05-31 07:00]

வரன் தேடும் இணையதளம் மூலம் பழக்கமாகிய இளம்பெண்ணுடன் உறவு வைத்துவிட்டு பின்னர் கொலையும் செய்ய முயன்ற இளைஞர் கைதான சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் 26 வயதான சுபைன் பர்மன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.


மே 17, தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ள மத்திய, மாநில அரசுகளை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது:
[Tuesday 2017-05-30 18:00]

மே 17 இயக்கம், தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ள மத்திய, மாநில அரசுகளை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. 2008 ல் ஆரம்பித்து 2009 மே மாதம் நடுப்பகுதியில் கொடுரமாக சிங்கள இனவெறியர்களால் முடித்து வைக்கப்பட்ட இன அழிப்பு போரில் ஒன்றரை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது இங்கே இந்தியாவில் இருந்த மத்திய, மாநில அரசுகள் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக கடுமையான அடக்குமுறைகள் மூலம் தன்னெழுச்சியான‌ போராட்டங்களை ஒடுக்கின, இலங்கை அரசை சர்வதேசத்திடம் இருந்தும் காப்பாற்றின‌. போர் முடிந்து 8 வருடங்கள் ஆன பின்பும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் இன்னமும் அடக்குமுறைகளும், கைதுகளும் தொடர்கின்றன். சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு இன்னமும் ஆரம்பிக்கபடாமலேயே உள்ளன.


தமிழக மண்ணை ஆள்வதற்கு அயலானுக்கு உரிமையில்லை: - இயக்குநர் பாரதிராஜா
[Tuesday 2017-05-30 18:00]

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்தான் தலைவனாக வேண்டும். இந்த மண்ணை ஆள்வதற்கு அயலானுக்கு உரிமையில்லை என்று ஆவேசமாகக் கூறினார் இயக்குநர் பாரதிராஜா.மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், நான்கு பேர்மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து இன்று சேப்பாக்கத்திலிருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.


விசாரணைக்காக அழைத்துச் சென்ற சிறுவனை அடித்துக் கொன்ற பொலிஸ்!
[Tuesday 2017-05-30 17:00]

தமிழ்நாட்டில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சிறுவனை பொலிஸ் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மணப்பாறை கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த தம்பதி துரைசாமி- சாந்தி, இவர்களது மகன் முகேஷ்(வயது 17). திருட்டு வழக்கில் விசாரிப்பதாக கூறி காவல் ஆய்வாளர் சிவக்குமார் முகேஷை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.அத்துடன் முகேஷ் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தையும் பொலிசார் கைப்பற்றி உள்ளனர்.


திருமுருகன் காந்தி கைது: - களம் இறங்கிய திரைப்பட பிரபலங்கள்!
[Tuesday 2017-05-30 17:00]

கடந்த மே 21-ஆம் தேதி சென்னை காவல்துறை விதித்திருந்த தடையை மீறி 'மே 17 இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.


திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது: - தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்!
[Tuesday 2017-05-30 08:00]

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்குப் பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளனர். இதுகுறித்து, இன்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குண்டர் சட்டத்தைப் பிரயோகம் செய்வதை, தமிழகத்தில் பேச்சுரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் நிகழ்வாகவே கருதுகிறேன். ஜனநாயகரீதியில் சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எதிராக, காவல்துறை அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுவது கொடுமையான அதிகார துஷ்பிரயோகம்' எனக் கூறியிருந்தார்.


மதுபான விடுதியை திறந்து வைத்த பெண் அமைச்சர்!
[Tuesday 2017-05-30 08:00]

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மதுபான விடுதி ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சுவாதிசி்ங், இவரது கணவர் தயாசங்கர்சிங், அந்த மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் லக்னோவில் பீர் விற்பனை மையத்தில் புதிய மதுபான விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் சுவாதி சிங் பங்கேற்றார்.


மாட்டிறைச்சி தடை உத்தரவு: - திருமாவளவன் சொல்லும் பகீர் காரணம்!
[Monday 2017-05-29 18:00]

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்திப்பதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரிக்குச் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர், "இறைச்சித் தடை உத்தரவை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இது இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைக்கும் தாக்குதலாக இல்லாமல், ஒட்டு மொத்த இந்திய மக்களின் கலாசார, பொருளாதாரத்தின்மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.


அரசு விழாவில் அரைகுறை ஆடையுடன் மேடையில் வலம் வந்த அழகிகள்!
[Monday 2017-05-29 18:00]

தமிழக அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழாவில் மொடலிங் துறையை சேர்ந்த பெண்கள் அரைகுறை ஆடையுடன் மேடையில் வலம் வந்தது அங்கிருந்த பொதுமக்களை முகம் சுழிக்க செய்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளமான ஏலகிரியில் கோடை விடுமுறையின் போது ஆண்டு தோறும் பரதநாட்டியம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கமாகும்.


பேண்ட் பெல்ட்டுக்கு பதில் நாடாவை கட்டிக் கொள்ள முடியுமா? - குஷ்பு கேள்வி
[Monday 2017-05-29 18:00]

மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை எருமை, பசு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்று தடைவிதித்தது.இதற்கு நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இதைத் தாண்டி கேரளா மாநிலத்தில் இந்த விவகாரத்தால் தனி திராவிடம் கோரி தனி ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு இதுகுறித்து கூறுகையில், மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை அரசு கூற வேண்டாம்.


அரிவாளை நேர்த்திக்கடனாகச் செலுத்தும் பக்தர்கள்: - விசித்திர பிரார்த்தனை
[Monday 2017-05-29 07:00]

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் பிரார்த்தனைசெய்யும் பக்தர்கள், அரிவாளை நேர்த்திக்கடனாகச் செலுத்தும் விசித்திர வழக்கம் பின்பற்றப்பட்டுவருகிறது.


பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டவருக்கு நேர்ந்த கொடுமை!
[Monday 2017-05-29 07:00]

டெல்லியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களை தட்டிக் கேட்ட ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காந்தி மரணத்தில் உள்ள சதியின் பின்னணியை வெளிக்கொண்டு வர வேண்டும்: - நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
[Monday 2017-05-29 07:00]

இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி மரணத்தில் உள்ள சதியின் பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் பங்கஜ் பத்னிஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், காந்தியின் மரணத்தில் மிகப்பெரிய சதி புதைந்து கிடக்கிறது. அதை வெளியில் கொண்டு வர வேண்டும். இதற்காக புதிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


இரு பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 14 இளைஞர்கள்!
[Sunday 2017-05-28 17:00]

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் உத்தரபிரதேசத்தில் 2 பெண்களை 14 இளைஞர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ராம்பூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் இந்த குற்ற சம்பவம் நடத்துள்ளது. தங்களை விட்டுவிடுமாறு அந்த பெண்கள் கெஞ்சுகின்றனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் 14 இளைஞர்கள் அவர்களை பலாத்காரம் செய்யும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளன.


விண்ணில் மனிதர்களுடன் பாய தயாராகும் மெகா ராக்கெட்: - இஸ்ரோவின் அடுத்த அதிரடி!
[Sunday 2017-05-28 15:00]

மாதம் ஒரு மைல் கல்லை எட்டி வருகிறது இஸ்ரோ. இந்நிலையில், உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, மிகப்பெரிய ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. மனிதர்களை, விண்ணில் செலுத்தி ஆய்வு செய்வதற்காக, இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உள் நாட்டில் தயாரிக்கப்பட்டதில் இதுதான் மிகப்பெரிய ராக்கெட் என்று கூறப்படுகிறது.


நரபலிக்காக கடத்தப்பட்ட ஒரு வயது குழந்தை: - அதிர்ச்சி சம்பவம்
[Sunday 2017-05-28 15:00]

தமிழகத்தில் நரபலிக்காக ஒரு வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த தம்பதி சத்யராஜ்- புவனேஸ்வரி. இவர்கள் தங்களுடைய ஒரு வயது மகனுடன் இரு நாட்களுக்கு முன் பனப்பாக்கம் அருகே உள்ள மதகு காத்த அம்மன் கோவிலுக்கு அமாவாசை பூஜைக்காக சென்றுள்ளனர்.இரவு பூஜை முடிந்தவுடன் கோவிலில் தங்கியுள்ளனர், இரவு 11 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.


மனைவியை பழிதீர்க்க தம்பிகளுக்கு விருந்தாக்கிய கணவர்!
[Sunday 2017-05-28 15:00]

இந்தியாவில் நபர் ஒருவர் மனைவியை பழிதீர்க்க தனது மூன்று தம்பிகளுக்கும் விருந்தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் தஹோட் மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. அபால்ட் கிராமத்தை சேர்ந்த இளம்ஜோடிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் 19 வயதான மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியின் வீட்டிற்கு சென்ற கணவன் வலுக்கட்டாயமாக அவரை அழைத்து வந்துள்ளார்.


இன்றுடன் நிறைவடையும் அக்னி நட்சத்திரம்: - வெயில் தாக்கம் குறையுமா?
[Sunday 2017-05-28 08:00]

அக்னி நட்சத்திரம் எனப்படும் அதிகப்பட்ச வெப்பநிலை நிலவும் காலம் தமிழகத்தில் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து படிப்படியாக வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா