Untitled Document
August 17, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா? - படங்கள் வெளியானதால் பரபரப்பு!
[Tuesday 2017-07-18 08:00]

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நட்சத்திர ஓட்டல் போல் சிறப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா சொன்னது கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. ரூபா கூறுகையில்,


பள்ளி சீருடையுடன் போதையில் மயங்கி கிடந்த மாணவர்கள்!
[Monday 2017-07-17 17:00]

அரசு பள்ளிக்கூட மாணவர்கள் மது அருந்திவிட்டு போதையில் பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. மதுகடைகளை மூட வேண்டும் என பல்வேறு போராட்டங்களும் அடிக்கடி நடைப்பெற்று வருகிறது.


ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து போன மகளின் இதயத்தை தேடும் பெற்றோர்: - பரிதாபமான கதை
[Monday 2017-07-17 17:00]

இந்தியாவில் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து போன மகளின் இதயத்தைத்தேடி தற்போது வரை பெற்றோர்கள் போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2012ம் ஆண்டு மும்பை சேர்ந்த சனம் ஹாசன் என 19 வயது மாணவி தோழிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய போது மர்மமான முறையில் இறந்தார்.


கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்!
[Monday 2017-07-17 17:00]

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.


மனைவியின் ஆபாச புகைப்படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டிய கணவரை கைது செய்த பொலிசார்!
[Monday 2017-07-17 17:00]

மனைவியின் ஆபாச புகைப்படத்தை காட்டி அவரிடம் 25 லட்சம் கேட்டு மிரட்டிய கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மும்பையில் தனது கணவருடன் வசித்து வந்தார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக இளம் பெண் கோபித்து கொண்டு ராஜஸ்தானுக்கு வந்து விட்டார்.


பசுவைக் காப்பேன் என்ற பெயரில் சட்டத்தை மீறக்கூடாது: - மோடி எச்சரிக்கை
[Monday 2017-07-17 08:00]

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, 'பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக அமைதியைக் குலைப்பவர்களுக்கு எதிராக, மாநில அரசுகள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.


தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் வசனம் பேசுவதே வேலையாக இருக்கிறது: - அன்புமணி ராமதாஸ்
[Monday 2017-07-17 08:00]

பா.ம.க. 29-வது ஆண்டு விழா வேலுரில் நடந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது, ''தமிழத்தில் தி.மு.க., அ.தி.மு.க-வை எதிர்க்கும் ஒரே கட்சி பா.ம.க. மட்டும்தான். இந்த இரண்டு கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பூரண மதுவிலக்கு, ஏரி குளங்கள் தூர் வாறுதல் எல்லாம் பா.ம.க-வின் கொள்கைகள். அதைத்தான் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் காப்பி அடித்துக்கொண்டிருக்கின்றன.


ஜெயலலிதா இருக்கும்போது கமலுக்கு தைரியம் இருந்ததா? -தமிழிசை கேள்வி
[Monday 2017-07-17 08:00]

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் கரை படிந்துள்ளது என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, தமிழக அமைச்சர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்கள். இதையடுத்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கமலுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன் நீட்சியாக தற்போது பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கமலை விமர்சித்துள்ளார்.


குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்து: - ஹெச்.ராஜா ஆவேசம்
[Monday 2017-07-17 08:00]

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகிலுள்ள ராஜகம்பீரத்தில் இருக்கும் பா.ஜ.க பிரமுகர் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஹெச்.ராஜா.


ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: - அமர்நாத் யாத்ரிகர்கள் 16 பேர் பலி!
[Sunday 2017-07-16 19:00]

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் ரம்பான் மாவட்டத்தில் யாத்ரிகர்கள் சென்ற பேருந்து ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சிப்ஸ் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து: - 30 பேர் காயம்
[Sunday 2017-07-16 16:00]

சென்னை கொடுங்கையூரில் உள்ள சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.சென்னை கொடுங்கையூர் அருகே முருகன் என்ற சிப்ஸ் கடை உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் அந்தக் கடையில் உள்ள சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.


தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல: - தைப்புரட்சி அமைப்பின் கருத்தரங்கம்
[Sunday 2017-07-16 16:00]

தமிழர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவாக மதுரை மாட்டுத்தாவணி எதிரே உள்ள ராமு சுப்பு அரங்கில் தைப்புரட்சி அமைப்பின் சார்பாக 'தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.


ஆண்டவன்தான் கொடுத்தான் அவனே பறிச்சுக்கிட்டான்: - பரிதவிக்கும் பெற்றோர்கள்!
[Sunday 2017-07-16 16:00]

2004 ஜூலை, 16ம் தேதி காலை 10.30 மணி இருக்கும், கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், சமைப்பதற்காக பற்ற வைத்த தீ, கூரையால் வேயப்பட்ட வகுப்பிற்குள் புகுந்து கொளுந்துவிட்டு எரிந்த தீ தன்னுடைய கோரப்பசிக்கு 94 குழந்தைகளை விழுங்கியது. 18 பேரை மட்டும் தீக்காயங்களுடன் விட்டுவைத்தது. அன்று இச்சம்பவம் உலகையே உலுக்கிப்போட்டது. இன்று பதிமூன்று ஆண்டுகளாகியும், ஆறாத வடுக்களை நெஞ்சில் சுமந்தப்படி நினைவு நாளை அனுசரித்து வருகிறார்கள் குழந்தைகளை தீக்கு இரையாக கொடுத்த பெற்றோர்கள்.


நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை: - மீண்டும் ஒரு ஆவணம் கண்டுபிடிப்பு!
[Sunday 2017-07-16 16:00]

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1947-ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை என்று பிரான்ஸை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். தைவான் நாட்டில் 1945-ம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்துவிட்டார் என்கிறது மத்திய அமைச்சகத்தின் ஆவணங்கள். மேலும் கடந்த ஜனவரி மாதம், (நேதாஜியின் 120வது பிறந்தநாள் அன்று) நேதாஜி மரணம் தொடர்பான 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த ஆவணங்கள் அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள்!
[Sunday 2017-07-16 16:00]

தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள், அதிகாரிகள், கல்லூரி மாணவ மாணவிகள் என 2000 பேர் இணைந்து செயல்பட்டனர்.நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக தாமிரபரணி ஆறு உள்ளது. பாரதி, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா என சுதந்திர போராட்ட வீரர்களின் காலடிபட்ட இந்த புண்ணிய நதியானது சமீப காலமாக மாசிபட்டு வருகிறது. மணல் கொள்ளையர்களின் கைங்கர்யத்தால் முகம் சிதைந்த தாமிரபரணி ஆற்றில் வணிக நிறுவனங்களின் கழிவுகள் கலக்கின்றன. அத்துடன், பொதுமக்களும் பிளாஸ்டிக் குப்பைகளை தாமிரபரணி ஆற்றில் கொட்டுகின்றனர்.


மதுபான கடையை அகற்ற வந்த 300 பெண்கள்: - போலீஸ் தடுத்ததால் பரபரப்பு
[Saturday 2017-07-15 18:00]

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாள்தோறும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பல போராட்டங்கள் நடந்து வருகிறது. திங்கள் சந்தை அருகே குருந்தன் கோடு பகுதியில் அரசு அங்கன் வாடி அருகே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கேட்டு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் மக்கள் சாலை மறியல் செய்தனர். இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த சில நாள்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி சென்னையில் தற்கொலை மிரட்டல்!
[Saturday 2017-07-15 18:00]

சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி சென்னையில் இருக்கும் தனது அலுவலகக் கட்டடத்தின் மேல் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக போலீஸாரை மிரட்டி வருகிறார். 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. விவசாயிகள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. கதிராமங்கலத்தில் நடந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 10 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்'


கிராமத்தில் பாலம் இல்லாததால் உயிரை பணயம் வைக்கும் மக்கள்!
[Saturday 2017-07-15 18:00]

கிராமம் ஒன்றில் பாலம் இல்லாததால் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து தினமும் ஆற்றை கடந்து வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் தவி நதி அமைந்துள்ளது, இதன் ஒருபக்கம் 4 கிராமங்கள் உள்ளன.இங்குள்ள கிர்ச்சி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்லவும், பள்ளிக்கூடத்துக்கு செல்லவும் அங்குள்ள ஆற்றை கடக்க வேண்டியுள்ளது.


இசைக்கு மொழி ஒரு பிரச்னையில்லை: - ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாடகர்கள்
[Saturday 2017-07-15 18:00]

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் லண்டனில் கடந்த வாரம் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ’நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான தமிழ், இந்தி ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி லண்டன் தமிழர்களுக்காக நடத்தப்பட்டதால் அவர் தமிழில் பேசினார்.


இனயம் துறைமுகத்தினால் வறண்ட பூமியாக மாறும் குமரி: - கொதிக்கும் மக்கள்!
[Saturday 2017-07-15 08:00]

கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் உச்சப் போராட்டம் இனயம் துறைமுகப் போராட்டம். ஆரம்பம் முதல் போராட்டம் வீறுகொண்டு நடக்கிறது. குமரிமாவட்டத்தில் இனயம் பகுதியில் துறைமுகம் அமைந்தால், இனயம் முதல் குளச்சல் வரை உள்ள 10 கிலோமீட்டர் நீளமுள்ள கடலோரப் பகுதிகள் 5 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு மக்களுக்கு நிரந்தர இழப்புப் பகுதியாக மாறும். ஸ்பெயின் நாட்டு டிப்ஸா நிறுவனத் தொழில் நுட்ப பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மோடி அரசுக்கு 73 சதவிகிதம் மக்கள் ஆதரவு: - ஆய்வில் தகவல்
[Saturday 2017-07-15 08:00]

மோடி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் ஆய்வின் படி, மோடி அரசுக்கு 73 சதவிகிதம் மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. உலகிலேயே நம்பிக்கை உள்ள அரசாங்கம் என்ற பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பெற்றுள்ளது.உலகில் அதிக நம்பிக்கை கொண்ட அரசுப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது சுவிட்சர்லாந்து. இந்த அரசுக்கு 80 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 79 சதவிகித மக்கள் ஆதரவுடன் இந்தோனேசியா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது.


ரயிலில் இஸ்லாமிய குடும்பம் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல்!
[Saturday 2017-07-15 08:00]

உத்தரப்பிரதேசத்தில், இஸ்லாமிய குடும்பம் ஒன்றை ரயிலில் வைத்து மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பம் கடந்த புதன் கிழமை ரயிலில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது மர்ம நபர்கள் இரும்பு ராடு மூலம் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக, அதில் ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையும் காயமடைந்துள்ளது. பெண்களும், இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.


நாளை ஓவியர் வீர சந்தானத்தின் உடல் தகனம்: - தமிழின உணர்வாளர்கள் நேரில் அஞ்சலி
[Friday 2017-07-14 18:00]

சென்னையில் நேற்று காலமான ஓவியர் வீர சந்தானத்தின் உடலடக்கம் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, அவரின் இல்லத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.தற்போது, சென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையில், ஆனந்தா ஓட்டல் எதிரில், பாரதியார் தெரு, 47ஆம் இலக்கத்தில் உள்ள சந்தானத்தின் வீட்டில், அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் கர்ப்பமாக திரும்பிய கடத்தப்பட்ட மாணவி: - அதிர்ச்சி சம்பவம்
[Friday 2017-07-14 18:00]

இந்திய தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி, கர்ப்பமாகத் திரும்பிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.தென்கிழக்கு டெல்லியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், இரண்டு மாதத்துக்கு முன் ஐஸ் கிரீம் வாங்கி வருதாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார்.ஆனால் வீட்டுக்குத் திரும்பி வரவே இல்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார். ஆனால், ஒரு தகவலும் கிடைக்கவில்லை.


ஓவியாவுக்கு ஓட்டுப் போட்ட 1.5 கோடி மக்கள் எனக்கு வாக்களித்திருந்தால்... - அன்புமணி ராமதாஸ்
[Friday 2017-07-14 18:00]

பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தமிழகத்தின் ஹாட் டாபிக், கலாசார சீர்கேடு மற்றும் சேரி பிஹேவியர் போன்ற இழிவான வார்த்தைகள் பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் அரசியல் தலைவர்கள்.


தமிழ் இன விடுதலைக்காக வாழ்ந்த அந்த ஒளிச்சுடர் அணைந்து விட்டது: - வைகோ இரங்கல்
[Friday 2017-07-14 08:00]

நான் உயிராக நேசித்த ஈழத்தமிழ்ப் போராளி ஓவியர் வீர சந்தானம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு என் இதயம் துக்கத்தில் உறைந்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் வெளியிட்டுள்ளார்.முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துச் சிற்பங்களின் மூலவடிவான ஓவியங்களை உருவாக்கிய தமிழ்த் தேசிய சிந்தனையாளன் தூரிகை நெருப்பு ஓவியர் வீர சந்தானம் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.


தமிழ் பாடல்கள் பாடிய ஏ.ஆர். ரஹ்மான்: - பாதியிலேயே வெளியேறிய வட இந்தியர்கள்
[Friday 2017-07-14 08:00]

ஏ.ஆர். ரஹ்மான் பல்வேறு இந்திய மொழிகளில் இசையமைத்துள்ளார். குறிப்பாக, ஆங்கிலப்படங்களிலும் இசையமைத்துள்ளார். இதனால், தேசிய விருது முதல் ஆஸ்கர் வரை ரஹ்மானைத் தேடி வந்தன. இதனால், உலகம் முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது. இதன் காரணமாக ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், அங்கு அட்டண்டன்ஸ் போட்டு விடுவார்கள்.


குழந்தை வரத்திற்காக பெண்கள் மீது ஏறி ஆசீர்வாதம் வழங்கும் நபர்: - வினோத வழிபாடு
[Friday 2017-07-14 08:00]

இந்தியாவில் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் மீது கடவுள் என்று கூறி நபர் ஒருவர் அவர்கள் மீது ஏறிச் சென்று ஆசீர்வாதம் வழங்கும் வினோத வழிபாடு நடைபெற்றுள்ளது.இந்தியாவின் Andhra Pradesh மாநிலத்தில் உள்ள Anantapur மாவட்டத்தில் அமைந்துள்ள Lakshmi Narasimha Swami கோவிலில் ஆண்டுதோறும் ஏகாதசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அது இந்தாண்டிற்கான ஏகாதசி திருவிழா இந்தமாதம் நடைபெற்றுள்ளது.

Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா