Untitled Document
January 19, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
பத்து ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு!
[Saturday 2017-12-09 19:00]

கடந்த பத்து ஆண்டுகளாக வளர்மதி - சசிகுமார் என்ற காதல் ஜோடியை செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் தன்னுடைய கஸ்டடியில் வைத்துக் கொண்டு செங்கல் அறுக்க வைத்து மிக சொற்பனான கூலியை கொடுத்து பட்டினி போட்டதோடு வேறு எங்காவது வேலைக்குச் சென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார். அவர்களை செல்லியப்பன் என்ற வழக்கறிஞர் மீட்டு ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்திருக்கிறார்.


உயிரை மாய்த்துக் கொண்ட மாணவிகள்: - வகுப்பறையிலிருந்து பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட விபரீதம்
[Saturday 2017-12-09 15:00]

சேலம் சென்யிட் மேரீஸ் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள், இன்று காலை 9:30 மணிக்கு, சேலம் ராஜகணபதி கோயில் அருகே உள்ள விடுதியின் நான்காவது மாடிமீது ஏறி, சாமி கும்பிட்டு கைகளைக் கோத்தவாறு கீழே குதித்தனர். இதில், ஜெயராணி என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவிஶ்ரீ என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், சேலம் மாவட்டத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தவர் கைது!
[Saturday 2017-12-09 09:00]

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று பேசிய இந்து கோவில்களை இடித்து புத்த விகாரங்களை கட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாக கூறி அவரது தலையை வெட்டி கொண்டு வருபவருக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் கோபிநாத் தெரிவித்தார். இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


நான் இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று கூறவில்லை: - திருமாவளவன் மறுப்பு
[Saturday 2017-12-09 08:00]

"ராமர் கோயில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்து விட்டு அங்கே மீண்டும் இராமர் கோயிலை கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசி வருகின்றனர். இந்த வாதம் சரியென்றால் பௌத்த, சமண கோயில்களை இடித்து அந்த இடங்களில்தான் சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கே மீண்டும் பௌத்த விகார்களை கட்டுவோம் என கூறமுடியுமா? இந்த கேள்வியைத்தான் நான் எழுப்பினேன். அதைத்தான் திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


13 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்ற ஏழு பேர் கைது!
[Saturday 2017-12-09 08:00]

கரூரில் சிறுமி ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி கொண்டுபோய் திருப்பூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைக்கப் பார்த்த ஏழு பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.கரூர் நகரத்தில் உள்ள வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக கல்பனா என்பவர் அழைத்திருக்கிறார். வர மறுத்த சிறுமியிடம், 'திருப்பூரில் மாசம் பத்தாயிரம் சம்பளத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறோம். வா' என்று பேசி மனதை கரைத்திருக்கிறார். அந்த சிறுமியும் சம்மதிக்க, அவரை அழைத்துச் சென்ற கல்பனா,


மக்கள் பொய் பேசினால் குற்றம் அரசு பொய் பேசினால் அது அரசியல்: - சீமான் ஆவேசம்
[Friday 2017-12-08 17:00]

கொந்தளித்துக் கிடக்கின்றன தமிழக மீனவக் கிராமங்கள். தொடர் போராட்டம், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என அரசுக்கு எதிராகக் கொதிக்கின்றனர். ' ஒன்பது ஹெலிகாப்டர்களைக் கொண்டு தொலைந்துபோன மீனவர்களைத் தேடுகிறது கேரள அரசாங்கம். இங்கு தெருவுக்குத் தெரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். இப்படியொரு அரசை எங்குமே பார்த்ததில்லை' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.


சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது!
[Friday 2017-12-08 17:00]

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில் வசித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24) கற்பழித்து கொலை செய்தான். இதுகுறித்து வழக்குப்பதிந்த மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த செப்டம்பரில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ஐகோர்ட்டு ரத்துசெய்து ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து, அங்கிருந்து வீட்டை காலி செய்து குன்றத்தூருக்கு தனது பெற்றோருடன் சென்றார் தஷ்வந்த்.


தலையில் குல்லா அணிந்து வாக்கு சேகரித்த ஓ.பன்னீர்செல்வம்!
[Friday 2017-12-08 17:00]

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர், தலையில் குல்லா அணிந்து ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வி.ஐ.பி வேட்பாளர்கள் பள்ளி வாசலில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஏராளமான இஸ்லாமியர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நேதாஜிநகர் 4 வது தெருவிலுள்ள பள்ளி வாசலில் அவர்கள் வாக்குகளைச் சேகரித்தனர். தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தொப்பி அணிந்தபடி வாக்கு கேட்டனர்.


லட்சத்தீவில் தத்தளித்துக் கொண்டிருந்த 180 தமிழக மீனவர்கள் மீட்பு!
[Friday 2017-12-08 12:00]

லட்சத்தீவுப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 180 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழக தென்கடலோர மாவட்டமான கன்னியாகுமரியை ஒகி புயல் கடந்த 28-ம் தேதி தாக்கியது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன், கனமழை பெய்தது. மேலும், கடலில் சீற்றம் இருந்ததால், புயலுக்கு முன்னதாக மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரைதிரும்ப முடியாமல் அவதியுற்றனர். அவர்களின் கதி என்னவென்றே தெரியாமல் இருந்தது. அவர்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படைக் கப்பல்களும், விமானங்களும் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றன. ஆபரேஷன் சகாயம் என்ற பெயரில் இந்தத் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.


மனிதகுலத்தின் கலாசார பாரம்பர்ய நிகழ்வாக கும்பமேளாவை அங்கீகரித்த யுனெஸ்கோ!
[Friday 2017-12-08 10:00]

கும்பமேளா, மனிதகுலத்தின் கலாசார பாரம்பர்ய நிகழ்வு என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது. அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையிலும், நாசிக்கில் கோதாவரிக் கரையிலும், உஜ்ஜயினியில் க்ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நிகழும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுவர்.


இளம்பெண் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை: - தந்தை கிணற்றில் பிணமாக மீட்பு
[Friday 2017-12-08 10:00]

வேலூர் அருகே உள்ள அரப்பாக்கம் மசூதி தெருவை சேர்ந்தவர் நசீர் (வயது 50). பீடி சுற்றும் தொழிலாளி. இவரது மனைவி தமீம் தம்பதிக்கு 3 மகள்கள் ஒருவர் நோய் வாய்பட்டு இறந்துவிட்டார். மூத்த மகள் யாஸ்மின் (25). 2-வது மகள் சில ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். நசீரின் மனைவி தமீம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.இதனால் தந்தையுடன் யாஸ்மின் வசித்து வந்தார். இவர்களது வீட்டில் இருந்த சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றில் இன்று காலை நசீர் பிணமாக மிதந்தார்.


தாய்க்கு ஆதரவாக பேசிய மகளை கொன்ற தந்தை!
[Friday 2017-12-08 10:00]

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருவள்ளூரை சேர்ந்தவர் சசி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சைலஜா. இவர்களுக்கு ஷாலு (19) என்ற மகள் இருந்தார். இவர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.சசிக்கும் அவரது மனைவி சைலஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து விட்டனர். சைலஜா அதே காம்பவுண்டில் தனியாக வசித்து வந்தார்.


ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: இவான்கா ட்ரம்பை எச்சரிக்கும் யூ-டியூப் ஜோதிடர்
[Thursday 2017-12-07 17:00]

இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிக்கும், டிசம்பரில் சென்னை வெள்ளத்தில் மூழ்கும், 7வது இடத்துல சனி பாக்குறதுனால இந்தியா சனி கிரகத்துக்கு ராக்கெட் விடும்னு ஜோதிடர்களை அதிகம் பார்க்க முடியும். அப்படி ஒரு ஜோதிடர்தான் இப்போது இந்தியா வந்த இவான்கா ட்ரம்ப் பற்றி கணித்து மாஸ் காட்டியுள்ளார். ஒரு கரும்பலகையில் கட்டம் போட்டு இவான்கா வாழ்க்கையைப் பற்றி கணித்துச் சொல்லி இணையத்தில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.


தீபன் சுமதியை காணவில்லை: - ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலரிடம் விஷால் முறையீடு
[Thursday 2017-12-07 17:00]

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியைச் சந்தித்துப் பேசி வருகிறார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். மனு மீதான பரிசீலனையின்போது, வேட்புமனுவை நிராகரிப்பதாகத் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். வேட்புமனுத்தாக்கல் செய்பவரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன் மொழிய வேண்டும் என்பது விதி. விஷாலை முன்மொழிந்து முதல் கையெழுத்துப்போட்ட சுமதி மற்றும் ஒன்பதாவது கையெழுத்துப் போட்ட தீபன் ஆகியோர் கையெழுத்துப் போடவேயில்லை என்று பின்வாங்கிவிட்டனர். இதனால் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.


சொகுசு கார் இறக்குமதி வழக்கு: -சசிகலாவின் கணவர் நடராஜன் மீது பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவு
[Thursday 2017-12-07 17:00]

கடந்த 1994-ம் ஆண்டு, வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில், ரூ.1.6 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலாவின் கணவர் நடராசன், உறவினர் பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜாரிதா சுந்தரராஜன் ஆகிய 4 பேருக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நால்வர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை நிராகரித்த உயர் நீதிமன்றம், தண்டனையை உறுதிசெய்தது.


மைசூர் மன்னர் குடும்பத்துக்கு ஆண் வாரிசு: - 400 ஆண்டுக்கால சாபம் நீங்கியது!
[Thursday 2017-12-07 17:00]

400 ஆண்டுகளுக்கு முன், மைசூர் விசயநகர சாம்ராஜ்ஜியத்தை திருமலைராஜாவிடமிருந்து ராஜா உடையார் என்பவர் கைப்பற்றினார். அப்போது, அங்கிருந்து தப்பிய திருமலைராஜாவின் மனைவி அலமேலம்மா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன், உடையார் பரம்பரைக்கு ' தலக்காடு மண்ணாகப் போகட்டும், காவிரியில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும் என்றும், மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்' எனவும் அவர் சாபம் விடுத்துள்ளார்.


தமிழக ஆளுநர் டெல்லி ஏஜென்ட்டாகச் செயல்படுகிறார்: - வைகோ கண்டனம்
[Thursday 2017-12-07 17:00]

"தமிழக ஆளுநர், டெல்லி ஏஜென்ட்டாகச் செயல்படுகிறார்” என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.கோவையைத் தொடர்ந்து, நெல்லையில் இரண்டு இடங்களில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுமேற்கொண்டார். அங்கு, குப்பைகளைச் சுத்தம்செய்த அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். பேருந்து நிலையத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றில் ஆய்வு செய்த அவர், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.


என் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள்: - பா.ஜ.கவுக்கு கோரிக்கை விடுத்த ராகுல்
[Thursday 2017-12-07 17:00]

"பா.ஜ.க., தொடர்ந்து என் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, என்னை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.ஆளும் பா.ஜ.க, ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம் குஜராத். கடந்த 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து, ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.


வைரலாகும் விஜயகாந்த்தின் புதிய புகைப்படம்!
[Wednesday 2017-12-06 18:00]

மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ள தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று வந்திருந்தார். ஆனால், விஜயகாந்த்துக்கு பேசுவதில் தொடர்ந்து சிரமம் இருந்துவந்தது. இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் ஹோட்டல்களில் விஜயகாந்த் இருக்கும் போட்டோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகியது.


முதியவரைத் தோளில் சுமந்து காப்பாற்றிய பொலீஸ்: - குவியும் பாராட்டு
[Wednesday 2017-12-06 18:00]

கேரளாவை ஓகி புயல் கடுமையாகத் தாக்கியது. கொச்சி அருகேயுள்ள கண்ணமாலி என்ற பகுதியில், போலீஸ் ஏட்டு ஆன்ட்ரூஸ் மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒரு பகுதியில் வீட்டைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்திருக்க, 75 வயது முதியவரான ஆன்டனி என்பவர், வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். முதியவர் அபயக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, அந்த வீட்டுக்கு சென்ற ஆன்ட்ரூஸ், அவரை தோளில் சுமந்துசென்று காப்பாற்றினார்.


நாய்களிடமிருந்து பச்சிளம் குழந்தையைக் காப்பாற்றிய பிச்சைக்காரர்: - குவியும் பாராட்டுகள்
[Wednesday 2017-12-06 18:00]

அரியலூரில், பிறந்து ஒரு நாளான பச்சிளம் ஆண் குழந்தையைத் தாயார் கோயிலில் போட்டுவிட்டு சென்றுள்ளார். குழந்தையைச் சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்த நாய்களிடமிருந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் காப்பாற்றியிருக்கிறார். அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது.


மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
[Wednesday 2017-12-06 18:00]

முதுகுளத்தூர் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு செங்கற்படை பகுதியை சேர்ந்த சாமுண்டிஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டது.


தேர்தல் அலுவலர் சுதந்திரமாக செயல்படவில்லை: - திருமாவளவன் கருத்து
[Wednesday 2017-12-06 07:00]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேசியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், `தேர்தல் அலுவலர் சுதந்திரமாக செயல்படவில்லை. அவர் நீக்கப்பட வேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார்.


சுயேச்சையாக நிற்கும் இளைஞரில் ஒருவருக்காக பிரசாரம் செய்து ஜெயிக்க வைப்பேன்: - விஷால்
[Wednesday 2017-12-06 07:00]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நடிகர் விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பை கிளப்பியுள்ள நிலையில், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விஷால் தெரிவித்துள்ளார்.


பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது!
[Wednesday 2017-12-06 07:00]

மத்தூர் அருகே நர்ஸ் மகளை கடத்தி சென்று, திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் நத்தம்காலனியை சேர்ந்தவர் பெருமாள். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். பெருமாளின் மனைவி, வேலூர் மாவட்டம் பேரணம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.


செய்தியாளரைத் தாக்கிய வழக்கு: - விஜயகாந்துக்குப் பிடிவாரன்ட்
[Tuesday 2017-12-05 17:00]

செய்தியாளரைத் தாக்கிய வழக்கில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்துக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. சென்னை விமான நிலையத்தில் தனியார் பத்திரிகையின் செய்தியாளர் பாலு என்பவரைக் கடந்த 2013-ல் தாக்கியதாக தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீது புகார் எழுந்தது.


குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 13.6% பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2.9% அதிகரிப்பு!
[Tuesday 2017-12-05 17:00]

ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்தைய வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கைத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்படும். அதன்படி 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட குற்றங்களுடைய புள்ளி விவரங்களைத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டப் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 3% குறைந்திருந்தது. ஆனால், கடந்த வருடம் மீண்டும் 2.9% அதிகரித்திருக்கிறது.


ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்கான எழுச்சி கீதம் உருவாக்கம்!
[Tuesday 2017-12-05 17:00]

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமையவிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் இந்தப் பெருமுயற்சி, இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. இந்தச் செய்தியைத் தமிழர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கும் நிதியைப் பெறுவதற்கும் `ஹார்வேர்டு தமிழ் இருக்கை’ அமைப்பு பல்வேறு வழிகளில் முயன்றுவருகிறது. இந்த வரிசையில் உருவான `ஹார்வேர்டு தமிழ் இருக்கை’ எழுச்சி கீதம், கனடா தலைநகரான டொரன்டோவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா