Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
போர்க்குற்ற விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டுக்கு இடமில்லை! - ரவி கருணாநாயக்க
[Monday 2017-06-12 07:00]

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையீடு செய்ய அனுமதியளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளையோ அல்லது கண்காணிப்பாளர்களையோ இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கவில்லை.


வடக்கு கல்வி அமைச்சர் மீது பொய்க் குற்றச்சாட்டு! - விசாரணைக் குழுவைச் சாடும் மாகாணசபை உறுப்பினர்
[Monday 2017-06-12 07:00]

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்த விசாரணைக்குழு பொய்யான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. நான் கூறாத விடயங்களைத் கூறியதாகப் பதிவு செய்து, எனது பெயரையும் பயன்படுத்தியுள்ளது என்று வடமாகாணசபை உறுப்பினர் பசுபதி அரியரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.


பிரதமரை நேரடியாகத் தெரிவு செய்யும் முறைக்குப் பரிந்துரை!
[Monday 2017-06-12 07:00]

பிரதமரை நேரடியாக தெரிவு செய்வதற்கான யோசனை, புதிய அரசியலமைப்பு வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புதிய பிரதமரை நேரடியாக தெரிவு செய்து கொள்வதற்கு, பிரதமர் பதவிக்காக முன்கூட்டியே பெயர் குறிப்பிட்டு வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தற்போதைய முறையிலான, வெஸ்ட்மி னிஸ்டர் முறைமையின் கீழ் தெரிவு செய்தல் ஆகிய யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.


உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிட்டால் ஜெனிவா செல்வோம்! - ரிஷாட் எச்சரிக்கை
[Monday 2017-06-12 07:00]

முஸ்லிம்களுக்கு உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிடின், ஜெனிவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கமாட்டோம், அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் நான் தயாராகவே உள்ளேன் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, சாய்ந்தமருதுவில் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.


வித்தியா கொலை வழக்கு - விசாரணை இன்று ஆரம்பம்!
[Monday 2017-06-12 07:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு தீயிட்ட பிரதான சூத்திரதாரி கைது!
[Monday 2017-06-12 07:00]

நுகேகொட மற்றும் விஜேராம பிரதேசங்களில், முஸ்லிம்களுக்கு சொந்தமான நான்கு வர்த்த நிலையங்களுக்கு தீ வைத்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், 2014ஆம் ஆண்டு முதல் பொதுபல சேனா அமைப்புடன் இணைந்து செயற்பட்டவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்


இன்று யாழ். வருகிறார் ஜனாதிபதி - ஊடகங்களுக்கு தடை!
[Monday 2017-06-12 07:00]

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கு இன்று செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விசாரணைக்குழுவின் பாலியல் குற்றச்சாட்டு - கிளிநொச்சி பொது அமைப்புகள் முதல்வருக்கு கண்டனக் கடிதம்!
[Monday 2017-06-12 07:00]

கிளிநொச்சி பாரதிபுரம் பாடசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவி ஒருவர், பாடசாலை அதிபரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, அபாண்டமானது, அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என பிரதேசத்தைச் சேர்ந்த பதினொரு பொது அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.


இனவாதத்தைத் தூண்டுபவர்கள் பிக்குகள் அல்ல! - சந்திரிகா
[Monday 2017-06-12 07:00]

இனவாதத்தை தூண்டும் காவியுடை தரித்தவர்களை நான் பௌத்த பிக்குகள் என அழைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


கேப்பாப்பிலவு முகாமுக்குள் மக்களை அடைத்து வாயிலை இராணுவம் மூடியதால் பதற்றம்! Top News
[Sunday 2017-06-11 19:00]

கேப்பாபிலவில், இராணுவத்தினர் வசமுள்ள, காணிக்குள் வழிபாட்டுக்குச் சென்ற மக்களை வைத்து இராணுவத்தினர் பிரதான நுழைவாயிலை மூடியதால் பதற்றம் ஏற்பட்டது. கேப்பாபிலவு பிரதான வீதி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்காக இன்று இராணுவத்தினரால் திறந்து விடப்பட்டது. தமது காணிகளை பார்த்து கதறியழுதவண்ணம் மக்கள் ஆலயத்திற்கு சென்றனர்.


முடிவு விக்னேஸ்வரனின் கையில்! - சம்பந்தன்
[Sunday 2017-06-11 19:00]

வட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் விடயத்தில் தாம் தலையிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


பதவி விலகல் கடிதத்தை மாவைக்கு அனுப்பினார் வடக்கு மாகாண கல்வி அமைச்சர்!
[Sunday 2017-06-11 19:00]

வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா பதவி விலகியுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தனது முடிவு குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாவற்குழி விகாராதிபதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
[Sunday 2017-06-11 19:00]

நாவற்குழி விகாராதிபதி அம்பிலிப்பிட்டிய சுமண தேரருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. நாவற்குழியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் விகாரைக்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபையினால் சாவகச்சேரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததையடுத்தே நாவற்குழி விகாராதிபதியை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தும்பளை விபத்தில் ஒருவர் பலி!
[Sunday 2017-06-11 19:00]

பருத்தித்துறை- தும்பளைப் பகுதியில், நேற்றிரவு 9 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தும்பளை மணியகாரன் சந்தியில் நடந்த இந்த விபத்தில், படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


கொழும்பு வந்தது அமெரிக்கப் போர்க்கப்பல்!
[Sunday 2017-06-11 19:00]

அமெரிக்க கடற்படைக் கப்பலான லேக் ஈரி இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. லேக் ஈரி கப்பலை கடற்படை சம்பிரதாயங்களுக்கு ஏற்ப வரவேற்றுள்ளதாக, இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது. இக் கப்பல் இலங்கையில் இருந்து எதிர்வரும் 25ம் திகதி புறப்படும். இக் காலப்பகுதியில், கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும், குறித்த கப்பல் பணியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.


செல்பியால் சகோதரர்கள் பலி!
[Sunday 2017-06-11 19:00]

கொழும்பு- கொள்ளுபிட்டி, ரயில் பாதையில் நின்று செல்பி எடுக்க முற்பட்ட சகோதரர்கள் இருவர், பின்னால் வந்த ரயில் மோதியதால் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர் 22 மற்றும் 24 வயதுடைய அண்ணன் தம்பியான இளைஞர்களாவர்.


பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை பெண் ஒருவர் வெற்றி, ஒருவர் தோல்வி!
[Sunday 2017-06-11 19:00]

பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளிப் பெண்ணொருவர் வெற்றியை பெற்றுள்ளார். தொழிற்கட்சி சார்பில் பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர் என்ற பெண்ணே வெற்றி பெற்றுள்ளார். இவர் 47,213 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் 9,877 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். தங்கம் டெபோனயரின் தந்தை ஒரு இலங்கைத் தமிழர். அவரது தாயார் பிரித்தானிய வெள்ளையின பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சுதந்திரக் கட்சி பிரமுகர்களுடன் ஜப்பானில் மஹிந்த இரகசியப் பேச்சு!
[Sunday 2017-06-11 18:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சு நடத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களுடன் மஹிந்த பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கபீர் காசிம் பதவி விலகத் திட்டம்!
[Sunday 2017-06-11 18:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான, பொது முயற்சியாண்மை அமைச்சர் கபீர் ஹாசீம் பதவி விலகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அமைச்சர் ஹாசீம் அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமது அமைச்சின் கீழ் இயங்கி வந்த சில நிறுவனங்கள் வேறு அமைச்சிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் கபீர் ஹாசீம் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டின் மிகப்பெரிய கொள்ளை அச்சுவேலியில்!
[Sunday 2017-06-11 18:00]

அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியில் உள்ள வீட்டுக்குள், வெள்ளிக்கிழமை மாலை புகுந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த பெண்ணைத் தாக்கி, 52 பவுண் தங்க நகை மற்றும் 16 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், தெரிவித்தனர்.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்க நாளை யாழ். வருகிறார் ஜனாதிபதி!
[Sunday 2017-06-11 09:00]

யாழ்ப்பாணத்திற்கு நாளை வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இனரீதியான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும்! - ஐ.நா
[Sunday 2017-06-11 09:00]

இன ரீதியான தாக்குதல்கள், வன்முறைகள் தடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி உனா மெக்கலி தெரிவித்துள்ளார். ருவிட்டர் செய்தி ஒன்றில் அவர்,ஒற்றுமை மாத்திரமே இலங்கையை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும். இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்தது. எனவே இன ரீதியான தாக்குதல்கள், வன்முறைகள் தடுக்கப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.


கிளிநொச்சியில் கொள்ளைக் கூட்டம் அட்டகாசம்- அதிகாலையில் 74 பவுண் நகைகள் அபகரிப்பு!
[Sunday 2017-06-11 09:00]

கிளிநொச்சி- கல்லாறில் கணவன், மனைவி, பிள்ளைகளைக் கட்டி வைத்து விட்டு 74 பவுண் நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபா பணம் என்பன இன்று அதிகாலை 3 மணியளவில் கொள்ளையிடப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட கொள்ளையர் குழுவே சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேலாக நின்று இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.


வடக்கு, கிழக்கில் வறட்சியால் நான்கரை இலட்சம் பேர் பாதிப்பு!
[Sunday 2017-06-11 09:00]

வடக்கு - கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக இரண்டு இலட்சத்து 44 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த எட்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வறட்சி நிலவரம் தொடர்பாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, வட மாகாணத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, 54 சதவீதமானவர்கள் வட மாகாணத்திலே பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.


விரைவில் கைதாவார் கோத்தா!
[Sunday 2017-06-11 09:00]

பல்வேறு கொலை சம்பவங்களுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக தொடர்புபட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றுக்கான சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களுக்கு அமைய கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


போரில் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை உள்ளது! - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
[Sunday 2017-06-11 09:00]

போரின்போது உயிரிழந்த தமது உறவினரை நினைவு கூரும் அனைத்து உரிமைகளும் அவர்களின் குடும்பத்தினருக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த காரணத்தை வைத்து இந்த உரிமையை மறுப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல" என்றும் இந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.


முடிகிறது ஒப்பந்தம்- தொடருமா கூட்டணி?
[Sunday 2017-06-11 09:00]

இரண்டு ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான முக்கிய பேச்சுவாரத்தை மாத இறுதிக்குள் இடம்பெறவுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கமாக செயற்பட இரண்டு கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கும் என அரசியல் எதிர்பார்க்கப்படுகின்றது.


நிதி முறைகேடுகள் குறித்த வெளிநாடுகளின் துப்பறிய விசேட புலனாய்வுப் பிரிவு!
[Sunday 2017-06-11 09:00]

அரசாங்க நிதி மையங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோசடி முறைகேடுகளை கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பிக்க புதிய புலனாய்வு பிரிவுவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசேட பிரிவினால் பெறப்படும் தகவல்கள் நிதியமைச்சர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் வகையில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா