Untitled Document
March 29, 2024 [GMT]
கிளிநொச்சியில் ரிப்பர் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!
[Wednesday 2024-03-13 06:00]

கிளிநொச்சி - பொன்னகர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


ஒட்டாவா பொலிசை குழப்பிய 6 இலங்கையர்களின் கொலை!
[Wednesday 2024-03-13 06:00]

ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒட்டாவா பொலிஸார் பல தவறான தகவல் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிபிசி தெரிவித்துள்ளது.


வட்டுக்கோட்டை கொலையுடன் கடற்படைக்கு தொடர்பா? - கிளிநொச்சியில் 4 பேர் கைது. Top News
[Wednesday 2024-03-13 06:00]

பொன்னாலையில் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வட மாகாண பிரதம செயலாளராக இளங்கோவன் நியமனம்!
[Wednesday 2024-03-13 06:00]

வட மாகாண பிரதம செயலாளராக எல். இளங்கோவனும், வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால், இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.


மிருசுவிலில் இடியன் வெடித்து ஒருவர் காயம்!
[Wednesday 2024-03-13 06:00]

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் நேற்று இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்திய ட்ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு தீவக மீனவர்கள் போராட்டம்!
[Wednesday 2024-03-13 06:00]

யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய ட்ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி செவ்வாய்க்கிழமை தீவகப் பகுதி தெற்கு வேணைப் பிரதேச கடைத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மகஜர் கையளித்ததுடன் கண்டன போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.


மின்சாரம், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!
[Wednesday 2024-03-13 06:00]

அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளன.


கனடா வீசாவுக்குப் பயந்து உயிரை மாய்த்த மாற்றுத் திறனாளி!
[Wednesday 2024-03-13 06:00]

கால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ளார். கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


வானத்தில் இருந்து வீட்டின் மீது விழுந்த 50 கிலோ பனிக்கட்டி!
[Wednesday 2024-03-13 06:00]

ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.


வேட்டைக்குச் சென்றவரை வேட்டையாடிய துப்பாக்கி!
[Wednesday 2024-03-13 06:00]

துப்பாக்கி வெடிப்புச் சம்பவத்தில் வேட்டைக்குச் சென்ற இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழேயே தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்!
[Tuesday 2024-03-12 15:00]

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் வலுக்கட்டாயமாக பொலிஸாரால் அகற்றப்பட்டு சிலரை கைது செய்த சம்பவம் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற பேருண்மையை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!
[Tuesday 2024-03-12 15:00]

வவுனியா - வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் தொல்பொருட்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி - கோட்டாவின் நூல் குறிப்பிட மறந்து விட்டதா?
[Tuesday 2024-03-12 15:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்காக நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி நடவடிக்கை தொடர்பில் அவரது நூல் குறிப்பிட மறந்து விட்டதா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.


மரதன் போட்டியில் மாணவன் மரணம் - கல்வி அமைச்சு விசாரணை!
[Tuesday 2024-03-12 15:00]

பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


இளம் குடும்பஸ்தர் கொலை - 3 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
[Tuesday 2024-03-12 15:00]

யாழ்ப்பாணம் -வட்டுக்கோட்டை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


72 நாட்களில் 21 பேர் சுட்டுக்கொலை!
[Tuesday 2024-03-12 15:00]

2024 ஜனவரி 1 முதல் மார்ச் 12 வரையான 72 நாட்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


டொலரின் பெறுமதி 300 ரூபா வரை சரிவு!
[Tuesday 2024-03-12 15:00]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளது.


பால்மா விலை குறைகிறது!
[Tuesday 2024-03-12 15:00]

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒரு கிலோ பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாயால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


தாமரைக்கோபுரத்தில் போதை விருந்து! - இளைஞன், யுவதி மரணம்.
[Tuesday 2024-03-12 15:00]

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர்.


கரிப்பட்டமுறிப்பில் கவிழ்ந்தது பொலிஸ் வாகனம்!
[Tuesday 2024-03-12 15:00]

முல்லைத்தீவு, மாங்குளம்- ஒட்டுசுட்டான் வீதியில் நேற்று மாலை 06.00 மணியளவில் பொலிஸ் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் வாகனம் கரிப்பட்டமுறிப்பு தச்சடம்பன் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.


நேற்றிரவு 3 பேர் சுட்டுக் கொலை!
[Tuesday 2024-03-12 06:00]

எல்பிடிய மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர்.


வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை!
[Tuesday 2024-03-12 06:00]

வட்டுக்கோட்டையில் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது.


அம்பகாமத்தில் யானை தாக்கி ஒருவர் பலி!
[Tuesday 2024-03-12 06:00]

முல்லைத்தீவு- அம்பகாமம் பழைய கண்டி வீதி பகுதியில் நேற்றுப் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்தவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். கரிப்பட்ட முறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி 62 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை எனக்கு உள்ளது!
[Tuesday 2024-03-12 06:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை எனக்கு உள்ளது என தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.


சித்திரைக்குப் பின்னர் நிகழப்போகும் அதிரடி அரசியல் மாற்றங்கள்! - விமல் ஆரூடம்.
[Tuesday 2024-03-12 06:00]

நாமல் ராஜபக்ச விரைவில் எதிர்கட்சி தலைவராக பதவியேற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


இன்றும் கடும் வெப்பம்- எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!
[Tuesday 2024-03-12 06:00]

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மனித உடலினால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இராணுவ வாகனம் மோதி வயோதிப பெண் காயம்!
[Tuesday 2024-03-12 06:00]

எழுதுமட்டுவாள் பகுதியில் நேற்றுக்காலை இராணுவ வாகனம் மோதியதில் சிதம்பரப்பிள்ளை வசந்தாதேவி (வயது 60) என்ற வயோதிப பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பிக்குவை சுட்டுக் கொன்றவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி!
[Tuesday 2024-03-12 06:00]

கம்பஹா -மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை அழைத்துச் சென்ற போது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா