Untitled Document
April 20, 2024 [GMT]
தமிழ்மக்களை பிரதமர் ஏமாற்ற முயற்சி!
[Friday 2019-07-19 18:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதுகாத்து அவர்களுக்கான வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவே இரண்டு வருடத்தில் தீர்வு என்று சொல்லி பிரதமர், தமிழ் மக்களை ஏமாற்ற முற்பட்டிருக்கின்றார். என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


சம்மாந்துறையில் ஆயுதபாணிகளால் பதற்றம்! Top News
[Friday 2019-07-19 17:00]

அம்பாறை- சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இருவர் துப்பாக்கியால், சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.


வீட்டுக்கு தீவைத்த குடும்பஸ்தர்! Top News
[Friday 2019-07-19 17:00]

முல்லைத்தீவு - விசுவமடு மேற்கு பகுதியில் தனது வீட்டில் நின்ற நான்கு ஆடுகளை வெட்டிக் கொன்று விட்டு, வீட்டுக்கும் தீ வைத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில், வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், நான்கு ஆடுகளும் உயிரிழந்தன. சம்பவத்தின் போது வீட்டில் மனைவி, பிள்ளைகள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


கஞ்சாவுடன் ஒருவர் கைது; மற்றவர் ஓட்டம்!
[Friday 2019-07-19 17:00]

யாழ்ப்பாணம்- இளவாலை விளான் பகுதியில் இன்று காலை 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போதை தடுப்பு பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மற்றவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


பொலிஸ் தாக்கி இளைஞன் படுகாயம்!
[Friday 2019-07-19 17:00]

பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த மானிப்பாயைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வேலை முடித்து வீடு திரும்பிய இளைஞன் வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, வீதியால் வந்த போக்குவரத்து பொலிஸார் மூவர் இளைஞனைத் தாக்கினர்.இளைஞன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற போது, பொலிஸ் நிலையத்தில் வைத்து அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மரம் முறிந்து மூவர் பலி!
[Friday 2019-07-19 17:00]

சூரியவெவ, கந்தவுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். தாய், மகள் மற்றும் இன்னொரு பெண்ணுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். சீரற்ற காலநிலை காரணமாக முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


விஷமானது விருந்து!
[Friday 2019-07-19 17:00]

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் திருமண வீட்டில் விருந்துண்ட 24 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக புல்மோட்டை தள வைத்தியசாலையில் இன்றுஅனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வயிற்றுவலி, வயிற்றுக் கடுப்பு, வாந்தி பேதி காரணமாகவே இவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


சரிந்து விழுந்த கடைகள், ஒருவர் பலி! Top News
[Friday 2019-07-19 17:00]

மலையகத்தில் கினிகத்தேனை நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், 10 கடை தொகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. நிலச்சரிவில் சிக்குண்டு காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் ஈடுப்பட்டிருந்த நிலையில், 64 வயதுடைய கே.எம். ஜமால்டீன் என்ற நபர் காலை 9 மணி அளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


நடுக்கடலில் தத்தளிக்கும் 200 மீனவர்கள்!
[Friday 2019-07-19 17:00]

30 படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 200 மீனவர்கள் சீரற்ற காலநிலையினால், கரைக்குத் திரும்ப முடியாமல், கடலில் தத்தளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மீனவர்களை பாதுகாப்பான முறையில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை சென்றுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி கன்னியாவுக்கும் நீராவியடிக்கும் செல்ல வேண்டும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!
[Friday 2019-07-19 09:00]

இலங்கைத்தீவுக்கு சென்றுள்ள 'அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை' தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் அவர்கள், கன்னியா மற்றும் நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. இலங்கைத்தீவில் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை செய்வதற்கு, ஒன்பது நாள் பயணமாக ஐ.நா அதிகாரி சென்றுள்ள நிலையில், தமது மரபுரிமையினை காக்கவும், பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் அமைதியான முறையின் ஒன்றுதிரண்ட தமிழ்மக்கள் மீது ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த அவசர கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.


வாக்குறுதியை நிறைவேற்றினால் பேசலாம்!
[Friday 2019-07-19 07:00]

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக, வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோருடனான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.


பேச்சுக்கு சம்பந்தனை அழைக்கவில்லை!
[Friday 2019-07-19 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பில் பங்கேற்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


சுடுநீர் ஊற்றியது குறித்து இருவரிடம் விசாரணை!
[Friday 2019-07-19 07:00]

திருகோணமலை-கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமைவழிபடச் சென்ற பக்தர்கள் மீது தேநீர் சாயங்களை ஊற்றிய சம்பவம் தொடர்பாக இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கருணா குழு புதைத்த சடலத்தை கண்டுபிடிக்க முயற்சி!
[Friday 2019-07-19 07:00]

மட்டக்களப்பில், ஆயுதக்குழு ஓன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது.


விபத்தில் இளைஞன் படுகாயம்!
[Friday 2019-07-19 07:00]

வவுனியா - திருநாவற்குளத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளத்தில் இருந்து குருமன்காட்டை நோக்கி சென்ற டிப்பர் வாகனத்துடன், தாண்டிக்குளத்தில் உள்ள தனது வீடு நோக்கி சென்ற நல்லலிங்கம் உசாந்தன் (வயது 23) என்ற இளைஞனே விபத்துக்குள்ளாகியுள்ளார்.


2 பில்லியன் இழப்பீடு கேட்கும் மங்கள!
[Friday 2019-07-19 07:00]

வண. தினியாவல பாலித தேரரால் முன்வைக்கப்பட்ட பொய்யான கருத்துகளுக்கு பாரிய பிரசாரத்தை பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் இரண்டு தனியார் தொலைக்காட்சிகளிடம் தலா ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


வவுனியா வடக்கு முழு நிலா கலைவிழா! Top News
[Friday 2019-07-19 07:00]

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா வ/சேமமடு சண்முகானந்த ம.வி இல் வலயக்கல்விப் பணிப்பாளார் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் 16.07.2019 அன்று நடைபெற்றது.


கீத் நொயார் வழக்கில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்!
[Friday 2019-07-19 07:00]

த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் ஒன்பதாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் லலித் ராஜபக்ஷ நேற்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.


உதவிகளை அதிகரிக்கிறது உலக வங்கி!
[Friday 2019-07-19 07:00]

இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்கு, உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் இணங்கியுள்ளார். நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.


நீராவியடியில் தொல்பொருள் சின்னங்கள் இல்லை!
[Thursday 2019-07-18 18:00]

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அப்படி அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரையின் தேரர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி சந்திப்பை புறக்கணித்த கூட்டமைப்பு!
[Thursday 2019-07-18 18:00]

கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் இன்று பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது.


வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!
[Thursday 2019-07-18 18:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் வலியுறுத்தியுள்ளார்.


சோபாவில் கையெழுத்திடமாட்டேன்!
[Thursday 2019-07-18 18:00]

அமெரிக்காவுடன் சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


5ஜி தொடர்பாக எந்த உடன்பாடும் இல்லை!
[Thursday 2019-07-18 18:00]

5ஜி அலைவரிசை தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லையென யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும் 5ஜி அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று (போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மஹவ - ஓமந்தை இடையே புதிய ரயில் பாதை!
[Thursday 2019-07-18 18:00]

115 வருட காலம் பழைமை வாய்ந்த மஹவ - ஓமந்தை ரயில் பாதையை முழுமையாக புனரமைக்கப்பதற்காக, தற்போது பாவனையில் உள்ள ரயில் பாதையினை முழுமையாக நீக்கும் வேலைத்திட்டம் இன்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.


கவுணாவத்தை வேள்விக்கு தடை நீங்கியது!
[Thursday 2019-07-18 17:00]

இந்து கோவில்களில் மிருக பலியிட்டு வேள்வி நடத்தத் தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மேன்முறையீட்டாளரான கவுணவத்தை நரசிம்ம வைரவர் கோவில் நிர்வாகத்துக்கு வழக்குச் செலவை வழங்குமாறும் உத்தரவிட்டது.


நல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி!
[Thursday 2019-07-18 17:00]

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், தேர்த் திருவிழாவின்போது, வெளி வீதியில் நல்லூர்க் கந்தன் உலா வரமாட்டார் என வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பற்றியெரிந்த வயல்கள்; ஏ-9 முடங்கியது! Top News
[Thursday 2019-07-18 17:00]

விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வவுனியா அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது. ஏ9 வீதிக்கு அருகாமையில் இருக்கும் விதை உற்பத்திப் பண்ணை வளாகத்தில் இருக்கும் வயல் நிலங்களில் திடீரென ஏற்பட்ட தீயினால், வயல் நிலங்கள் தீக்கிரையாகின. தீ விபத்தினால் ஏற்பட்ட புகை மண்டலத்தினால், ஏ9 வீதியில் சிறிது நேரம் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா