Untitled Document
April 19, 2024 [GMT]
மட்டக்களப்பு குண்டுதாரியின் சடலத்தை புதைக்க முடியாமல் அல்லாடும் பொலிஸார்!
[Friday 2019-06-14 17:00]

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியின் சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமது பிரதேசங்களில் குறித்த சடலத்தை புதைக்க வேண்டாம் என்ற மக்கள் எதிர்ப்பின் காரணமாக மட்டக்களப்பு பொலிஸார் சடலத்தை புதைப்பதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியான காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மரபணு பருசோதனையில் அவருடையது என உறுதிப்படுத்தப்பட்டது.


தமிழர்களின் பூர்வீக நிலத்துக்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்துவைத்தது மிகப்பெரிய துரோகம்!
[Friday 2019-06-14 17:00]

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்திற்கு சிங்கள பெயரிட்டு திறந்து வைத்தமையானது தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி செய்த பெரும் துரோகம் என முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 8ஆம் திகதி தமிழர்களின் தொன்மையான நிலப்பகுதியில் உள்ள குளத்தை ஜனாதிபதி, ‘கிரி இப்பன் வெவ’ என்ற பெயரோடு திறந்து வைத்ததுடன், சிங்கள மக்களிடம் கையளித்திருந்தார். ஜனாதிபதியின் இத்தகைய செயலால் அப்பகுதியில் உள்ள காணிகளுக்கு உரித்துடைய தமிழ் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தனர். இதுகுறித்து முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், “அரசாங்கத்தினுடைய காணிக் கொள்கையானது இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைப்பதாக அமையக்கூடாது என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய அறிக்கையில்கூட அது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


வவுனியாவில் சுகாதார அமைச்சருக்கு எதிராக திடீர் ஆர்ப்பாட்டம்! Top News
[Friday 2019-06-14 17:00]

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் சுகாதார சேவைக்கு மிகவும் பாதகமான முறையில் நடந்துகொள்வதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் குற்றஞ்சாட்டினர்.


யாழில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு! Top News
[Friday 2019-06-14 17:00]

யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த சோதனை நடத்தியிருந்த நிலையில் குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்: - ஹிஸ்புல்லா விளக்கம்
[Friday 2019-06-14 16:00]

இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி அளிக்கும் போதே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதனைக் குறிப்பிட்டார்.


இலங்கை தேசிய புலனாய்வு சேவைக்கு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமனம்:
[Friday 2019-06-14 16:00]

தேசிய புலனாய்வு சேவை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுன் மாதம் முதலாம் தேதி முதல் இந்த நியமனம் அமலுக்கு வரும். தேசிய புலனாய்வு சேவை அதிகாரியாக கடமையாற்றிய முன்னாள் பிரதி போலீஸ் மாஅதிபர் சிசிர மெண்டீஸ், தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.


பாதுகாப்புத்துறை சரியாக செயற்பட்டிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் – வியாழேந்திரன் பேச்சு!
[Friday 2019-06-14 16:00]

பாதுகாப்பு துறையினர் தங்களது கடமைகளை சரியான முறையில் செய்திருந்தால் ஏப்ரல்-21 பயங்கரவாதத் தாக்குதல்களை தடுத்திருக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். அத்துடன், மட்டக்களப்பு வேடர் குடியிருப்புப் பகுதியில் ஏப்ரல் 16ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு குறித்து முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தால் ஏப்ரல் தாக்குதல் இடம்பெற்றிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


“மஹிந்தவும் கோத்தபாயவும் தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர்: ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு
[Friday 2019-06-14 16:00]

“மஹிந்தவும் கோத்தபாயவும் தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும். ஏனெனில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கடைசி வழியாக சஹ்ரான் குழுவினரை இவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். அதேவேளை, உண்மைகள் வெளியில் வந்து இவர்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைக் கலைக்குமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொதித்தெழுந்தார்.” – இவ்வாறு தெரிவித்தார் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.


ஆடை தொழிற்சாலையில் இன்று பாரிய தீ விபத்து:
[Friday 2019-06-14 15:00]

குருணாகலில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ( Omega Line) ஒன்றில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்னல – இரபடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


சிக்கிய மௌலவிக்கு நான்கு மனைவி – 28பிள்ளைகள்! - கதி கலங்கிய பொலிஸார்
[Friday 2019-06-14 15:00]

அண்மையில் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் பொலிஸார் வியப்பு அடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டார். கொச்சிக்கடை, போரதோட்டையில் வசிக்கும் இந்த மௌலவிக்கு நான்கு மனைவிகளும், 28 பிள்ளைகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை காண்பிக்குமாறு இலங்கையை வற்புறுத்துவோம்! - அமெரிக்கா
[Thursday 2019-06-13 18:00]

மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தும் என தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் அலைஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.


சஹ்ரானுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருந்தது! - ஹிஸ்புல்லா சாட்சியம்
[Thursday 2019-06-13 18:00]

2015 காலப்பகுதியில் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமுக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாக நாடாளுன்றத் தெரிவுக்குழு முன் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா சாட்சியம் வழங்கியுள்ளார்.


பதில் அமைச்சர்கள் விவகாரம் - ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு?
[Thursday 2019-06-13 18:00]

பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­க­ளின் இடங்­க­ளுக்கு பதில் அமைச்­சர்­களை ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன நிய­மித்­தமை சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பாடு எனத் தெரி­வித்து, உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்குகு சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் சிலர் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.


கிளிநொச்சியில் விமானப்படை ஜீப் மோதி இளைஞன் பலி!
[Thursday 2019-06-13 18:00]

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில், விமானப்படையின் ஜீப் மோதியதில், மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில், இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.


உலக அமைதி சுட்டெண் தரவரிசை- சிரியா முன்னேற்றம், இலங்கைக்கு பின்னடைவு!
[Thursday 2019-06-13 18:00]

உலக அமைதி சுட்டெண் தரவரிசையில், இலங்கை பின்னடைவைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அமைதி தொடர்பான நிறுவனம் வருடாந்தம் மேற்கொள்ளும் மதிப்பீட்டு தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆண்டில், 67 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இந்த வருடம் 72 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.


வடக்கு, கிழக்கில் அவதானமாக பயணம் செய்ய வேண்டும்! -அவுஸ்ரேலியா
[Thursday 2019-06-13 18:00]

குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை உடன் அமுலுக்கு வரும் வகையில் அவுஸ்ரேலியா தளர்த்தியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.


அடுத்தவாரம் அமைச்சரவை கூடும்!
[Thursday 2019-06-13 17:00]

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது. இந்த வாரம், அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. தெரிவுக்குழு விசாரணையை நிறுத்தாவிட்டால் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தமாட்டேன் என ஜனாதிபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் தொகை 254 ஆக அதிகரிப்பு!
[Thursday 2019-06-13 17:00]

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் பெர்னாந்து என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்தே, பலியானோர் தொகை 254 ஆக உயர்ந்துள்ளது.


50 பேர் கொண்ட பட்டாளத்துடன் தஜிகிஸ்தான் சென்றார் ஜனாதிபதி!
[Thursday 2019-06-13 17:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை 10:45க்கு தஜிகிஸ்தானுக்குப் பயணமானார். எமிரேட்ஸ் விமான ​சேவைக்குச் சொந்தமான ஈ.கே.651 என்ற விமானத்திலேயே, அவர் டுபாய் நோக்கி பயணமானார். அங்கிருந்து கிரிகிஸ்தான் சென்று, அதன்பின்னர் தஜிகிஸ்தானுக்கு செல்லவுள்ளார்.


திருநெல்வேலி சந்தியில் சங்கிலியனுக்கு சிலை!
[Thursday 2019-06-13 17:00]

யாழ்ப்பாணம்- திருநெல்வேலி சந்தியில் 30 இலட்சம் ரூபா செலவில், சங்கிலி மன்னனுக்கு சிலை அமைக்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி சந்தியில் நுழைவாயில் ஒன்றும், அதனுடன் சங்கிலி மன்னனின் சிலையும் அமைப்பதற்கு பிரதேச சபையினால் 30 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


4 முக்கிய வழக்குகளின் விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவு!
[Thursday 2019-06-13 17:00]

முக்கியமான நான்கு வழக்குகள் தொடர்பான விசாரணையை விரைவில் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.


நுணாவிலில் மர்ம கும்பலின் தாக்குதலில் இளைஞன் படுகாயம்!
[Thursday 2019-06-13 17:00]

சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர், கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதடி கிழக்கை சேர்ந்த குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்து, சாவகச்சேரி நகருக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை வீதியில் மறித்த கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.


தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி! - வெடிக்கிறது புதிய பிரச்சினை
[Thursday 2019-06-13 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த செயற்பாடு 19 வது அரசியலமைப்பிற்கு எதிரான செயல் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் பிரதமர் அனுப்பி வைத்துள்ளார்.


வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்!
[Thursday 2019-06-13 07:00]

வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவா குழு உறுப்பினர்களுடன் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி நட்பு வைத்துள்ளார் என்று தெரிவித்தே தனு ரொக் குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை அவரை பொல்லுகள் மற்றும் போத்தல்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தெரிவுக்குழு அமர்வில் ஊடகங்களுக்கு தடை!
[Thursday 2019-06-13 07:00]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணையின் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான தகவல்கள் முன்வைக்கப்படும் போது, ஊடகங்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காளி கோவிலை உடைத்து மீன் சந்தை கட்டினார்! - ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வியாழேந்திரன் முறைப்பாடு
[Thursday 2019-06-13 07:00]

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.


மீண்டும் திறக்கப்பட்டது கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்! Top News
[Thursday 2019-06-13 07:00]

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்த கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றது.


ரிஷாத், சாலி, ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்!
[Thursday 2019-06-13 07:00]

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் ​எதிராக முறைப்பாடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம், நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ளது. இந்தக் கால எல்லைக்குள், அவர்களுக்கு எதிராக, 21 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா