Untitled Document
April 19, 2024 [GMT]
கண்ணீரும் கதறலுமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2019-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில், உணர்வுபூர்வமாக- கண்ணீரும் கதறலுமாய் நடந்தேறியது.


வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Saturday 2019-05-18 15:00]

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக சபையினர், சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு இன்று காலை 9.3 0மணியளவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக வி.உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு! Top News
[Saturday 2019-05-18 15:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்தின் பிரதமராக வி.உருத்திரகுமாரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் அரசியல் சாசனம் வரையப்பட்ட National Constitution Centre வரலாற்றுக் கூடத்தில் அரசவை அமர்வு இடம்பெற்று வருகின்றது.


மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2019-05-18 15:00]

முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த மக்களின் 10 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் இன்று இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து மலர் மாலை அனுவித்து, மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


அம்பாறையில் ஆற்றில் மீன் பிடித்த சிறுவன் மின்னல் தாக்கி மரணம்!
[Saturday 2019-05-18 15:00]

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில், நேற்று மாலை மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். காஞ்சிரம்குடா - சிறிவள்ளிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 15) என்ற சிறுவனே, உயிரிழந்தவர் ஆவார். சிறுவன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றிருந்த வேளையிலேயே, மின்னல் தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.


முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி! Top News
[Saturday 2019-05-18 09:00]

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக நந்திக்கடல் நீர் ஏரியில் இன்று அதிகாலை மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு- 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!
[Saturday 2019-05-18 08:00]

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மிகஅமைதியான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஓரணியாக பங்கேற்க வேண்டும்! - சம்பந்தன்
[Saturday 2019-05-18 08:00]

“தமிழினத்தின் விடுதலைக்காக எமது உறவுகள் சாவைத் தழுவிய மண்ணான முள்ளிவாய்க்காலில் இன்று தமிழர்கள் ஓரணியில் திரளவேண்டும்.முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிகழ்வில் தமிழ் மக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று அனைத்துத் தரப்பும் ஒற்றுமையுடன் ஒன்றுதிரண்டு உயிர்நீத்த எமது உறவுகளை சுடர் ஏற்றி - அஞ்சலி செலுத்தி நினைவுகூர வேண்டும்." என்று கேட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.


முள்ளிவாய்க்கால் பகுதியில் தீவிர பாதுகாப்பு கெடுபிடிகள்!
[Saturday 2019-05-18 08:00]

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்லும் வீதிகளில் படையினர் சோதனை நிலையங்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வு, இன்று மக்களால் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் படையினர், பொலிஸார், புலனாய்வாளர்களின் காண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


வடக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!
[Saturday 2019-05-18 08:00]

வெளிநாட்டிலிருந்து வட மாகாணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில் மூலம் வட மாகாணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு 50 வீதம் வரை கழிவு வழங்கப்படவுள்ளது. நான்கு பேருக்கு மேற்பட்ட வெளிநாட்டு குழுவினருக்கே இந்த வசதி வழங்கப்படவுள்ளது.


வெளிநாட்டு அகதிகள் வவுனியாவுக்கு கொண்டு வரப்பட்டனர்!
[Saturday 2019-05-18 08:00]

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஒரு தொகுதி அகதிகள் நேற்று வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


தமிழின அழிப்பின் 10ம் ஆண்டில் சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்!
[Saturday 2019-05-18 08:00]

முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கு எமது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


முள்ளிவாய்க்காலில் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு! Top News
[Saturday 2019-05-18 08:00]

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி கடற்கரையில் வளர்மதி கடற்தொழிலாளர் சங்கத்திற்குச் சொந்தமான காணி ஒன்றில் கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஓய்வு மண்டபம் அமைத்துக் கொடுப்பதற்கு பெரண்டீனா நிறுவனம் வேலைகளைச் செய்து வந்துள்ளது.


மகிந்தவின் கட்சிக்குள் ஐஎஸ் அமைப்பு ஊடுருவல்!
[Saturday 2019-05-18 08:00]

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நெருக்கிய தொடர்பினை வைத்திருந்தவர் என்று கைது செய்யப்பட்டவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மொஹமட் ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


கொக்குவிலில் நடமாடிய முஸ்லிம்கள் இருவர் கைது!
[Saturday 2019-05-18 07:00]

யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குற்றச்சாட்டில் முஸ்லிம்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்!
[Saturday 2019-05-18 07:00]

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை, நேற்று மாலை நீக்கப்பட்டதாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 13ஆம் திகதி நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குப் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழின அழிப்பு அறிவியற் கிழமை சட்டமூலம் 104 Top News
[Friday 2019-05-17 19:00]

கடந்த பல மாதங்களாக ஒன்ராறியோ மாநிலமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம் அவர்கள் கனடிய தமிழ் சமூகத்தின் ஆதரவுடன் மேற்கொண்டுவந்த முயற்சியால் ‘தமிழின அழிப்பு அறிவியற் கிழமை’ என்ற சட்டமூலம் (எண் 104) ஒன்ராறியோ மாநிலமன்றத்தில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது, இன்று மே 16ஆம் திகதி இதன்மீதான இரண்டாவது வாசிப்பின் பின்னர், வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


அமெரிக்காவிடம் உதவி கோரினார் வெளிவிவகார அமைச்சர் மாரப்பன! Top News
[Friday 2019-05-17 16:00]

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அமெரிக்காவுடன் உயர் மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு வொசிங்டன் சென்றுள்ளது.


இராணுவத்தில் மீண்டும் புலத்வத்தே - லசந்தவின் மகள் கடும் கண்டனம்!
[Friday 2019-05-17 16:00]

மகிந்த ராஜபக்ச காலத்தில் பத்திரிகையாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்டார் என கருதப்படும் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி பிரபாத் புலத்வத்தே மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறித்து படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.


சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம் - தமிழின அழிப்பு நாள் மே 18 - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
[Friday 2019-05-17 16:00]

மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு எமக்கு உணர்த்தியிருக்கும் செய்தியாகும்.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கமாட்டோம்!- இராணுவத் தளபதி
[Friday 2019-05-17 16:00]

வடக்கு கிழக்கில் மக்கள் நினை­வேந்தல் நிகழ்­வு­களில் ஈடுபடலாம். அவர்­களின் உணர்­வு­க­ளுக்கும் உரி­மைக்கும் மதிப்பளிக்­க­ வேண்டும். எனவே நினை­வேந்­தலை இரா­ணுவம் ஒரு­ போதும் தடுக்­காது என இரா­ணுவ தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனா­நா­யக்க தெரி­வித்தார்.


நல்லைக் கந்தனுக்கும் அதிரடிப்படை பாதுகாப்பு! - படையினர் குவிப்பால் பதற்றம் Top News
[Friday 2019-05-17 16:00]

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் மீது குண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவில் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலை சூழவுள்ள சுற்று வீதிகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிகளவான இராணுவம், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், பரபரப்பான நிலை காணப்படுகின்றது.


அமெரிக்க அரசியல் சாசன கூடத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !
[Friday 2019-05-17 16:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்கால முதலாவது நேரடி அரவை அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (மே 17)அமெரிக்காவில் இடம்பெற இருக்கின்றது. அமெரிக்காவின் அரசியல் சாசனம் வரையப்பட்ட வரலாற்று மையமான (National Constitution Centre) அமெரிக்க அரசியல் சாசன கூடத்தில், தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச இந்த அமர்வு இடம்பெறவுள்ளது.


ரிஷாத்தை தோற்கடிக்காவிடின் கடும் விளைவுகள் ஏற்படும்!- சிங்கள எம்.பிக்களுக்கு எச்சரிக்கை
[Friday 2019-05-17 16:00]

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காவிடின், எதிர்வரும் தேர்தர்களில் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ராவணா பலய அமைப்பு எச்சரித்துள்ளது.


யாரையும் விடுவிக்குமாறு இராணுவத் தளபதியிடம் கோரவில்லை! - என்கிறார் ரிஷாத்
[Friday 2019-05-17 16:00]

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டஎவரையும் விடுவிக்குமாறு, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்காவிடம், தான் ஒருபோ​தும் கோரிக்கை விடுக்கவில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


ஜிகாத் பயங்கரவாத்துக்கு எதிராக இணைந்து போராடுவோம்! - இந்திய தூதுவர்
[Friday 2019-05-17 16:00]

இலங்கைக்கு ஏற்படும் அச்சுறுத்தல் இந்தியாவுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தலுக்கு சமமானது என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். கண்டியில் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கரைச் சந்தித்த பின்னர், தலதா மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


கற்பிட்டியை வட்டமிட்ட ட்ரோன்! - நள்ளிரவில் பதற்றம்
[Friday 2019-05-17 16:00]

கற்பிட்டி வான்பரப்பில், இன்று அதிகாலை, 1 மணியளவில் பறந்த ட்ரோன் கமெரா ஒன்று தொடர்பாக, இலங்கை விமானப் படையினருக்கு அறிவித்ததாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இது, ட்ரோன் ​கமெராவாகவோ அல்லது சிறிய ரக விமானமாகவோ இருக்கலா​மென, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார்.


சஹ்ரான் பயிற்சி பெற்ற முகாம் கண்டுபிடிப்பு - இரு முக்கிய சகாக்களும் சிக்கினர்!
[Friday 2019-05-17 16:00]

ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரான் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் பயிற்சி முகாமொன்று, கண்டி, அருப்பல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த பல நாள்களாக தொடர்ச்சியாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பயனாக, மேற்படி முகாம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா