Untitled Document
April 19, 2024 [GMT]
பெயரைச் சொன்னால் வாப்பா காதுகளை அறுத்து விடுவார்! - அஞ்சி நடுங்கும் சஹ்ரானின் மகள்
[Friday 2019-05-10 19:00]

“வாப்பாவின் பெயரை கூறமாட்டேன். வாப்பாவின் பெயரை சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என, சஹ்ரானின் நான்கு வயது, மகள் கூறியுள்ளார் என, அம்பாறை பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு -படை அதிகாரிகளின் எதிர்மனுக்கள் நிராகரிப்பு!
[Friday 2019-05-10 19:00]

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில், இராணுவ அதிகாரி உள்ளிட்ட எதிர்மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் அனைத்தையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களுக்கு விரைவில் நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.


மேற்குலகைச் சாடுகிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்!
[Friday 2019-05-10 19:00]

மேற்குலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நம்பி ஏமாறாது, அனைத்தின மக்களும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும் என்று பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தெரிவித்தார். கொழும்பில் இன்று நடத்தப்பட்ட சர்வமதத் தலைவர்களின் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


காத்தான்குடி கடற்கரையில் வெடிபொருட்கள், குண்டுகள்! Top News
[Friday 2019-05-10 19:00]

சாய்ந்தமருதில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள், மறைத்து வைத்த பெருந்தொகையான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியின் கடற்கரை பகுதியொன்றில் இருந்து இன்று மாலை இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் குண்டு ஒன்றும் செயலிழக்கச் செய்யப்பட்டது.


விஜயகலா மீதான நடவடிக்கை என்ன? - சட்டமா அதிபரிடம் நீதிமன்றம் கேள்வி
[Friday 2019-05-10 19:00]

விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்​கு,​ கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கை சம்பந்தமாக அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.


4 மணிநேரத்துக்கு முன்னரே விமான நிலையம் வருமாறு பயணிகளிடம் கோரிக்கை!
[Friday 2019-05-10 19:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. அத்துடன், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணித்தியலத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பில் விபத்தில் ஒருவர் பலி!
[Friday 2019-05-10 19:00]

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். தேற்றாதீவு, கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் தேற்றாத்தீவினை சேர்ந்த அமிர்தநாதன் தருமராஜா (43வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.


வெடிபொருள் குறித்து தகவல் வழங்காத கூலித் தொழிலாளி கைது!
[Friday 2019-05-10 19:00]

வெற்றிலைக்கேணியில், ஆபத்தான வெடிபொருள் தொடர்பாக தகவல் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில், கூலி தொழிலாளி ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நீண்டகாலமாக ஆட்கள் அற்று இருந்த வீடொன்றின் காணியை ஒருவர் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.


யாழ்ப்பாணத்தில் வீடு வீடாக சோதனை - குடும்ப விபரங்களை திரட்டும் இராணுவம்!
[Friday 2019-05-10 08:00]

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினரும் பொலிசாரும், இணைந்து வீடு வீடாகத் தேடுதல்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். அத்துடன், வீடுகளின் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களையும், அடையாள அ்ட்டை தொடர்பான பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


இரத்மலானை அருகே விமான பயிற்சிக்கு தடை!
[Friday 2019-05-10 08:00]

இரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாகவே, இரத்மலான விமானப்படைத் தளத்திற்கு அருகில் விமானப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கவா மாணவர்கள் கைது? - கஜதீபன் கேள்வி
[Friday 2019-05-10 08:00]

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் திசைதிருப்பவே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் குற்றம்சாட்டியுள்ளார்.


மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழக மர்மங்கள் - ஆராயப்படும் என்கிறார் ருவன்!
[Friday 2019-05-10 08:00]

மட்டக்களப்பு ஷரீஆபல்கலைக்கழகம் குறித்து ஆராய வேண்டும். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று தேட வேண்டியுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


சஹ்ரானின் நெருங்கிய சகா அலியார் கைது!
[Friday 2019-05-10 08:00]

தற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவரும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை கவனித்து வந்தவர் என்றும் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸாரினால் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


குருநகர் தேவாலயத்தை நோட்டம் விட்ட மௌலவி - இருவருக்கு விளக்கமறியல்!
[Friday 2019-05-10 08:00]

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகில், சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மௌலவி உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.


தாவடி பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் வெடிபொருட்கள்!
[Friday 2019-05-10 08:00]

யாழ்ப்பாணம், தாவடி பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்திலிருந்து வெடிபொருட்கள், வயா்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் சுன்னாகம் பொலிஸாா் மேற்கொண்டிருந்த தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். 9 மி.மீற்றா் துப்பாக்கி ரவை கூடு மற்றும் 5 தோட்டாக்கள், வயா்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


மகிந்தவின் வழியில் தலைகீழாக நிற்கும் கோத்தா! Top News
[Friday 2019-05-10 08:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும், படங்கள் வெளியாகியுள்ளன. யோகா பயிற்றுவிப்பாளர் நந்த சிறிவர்தனவின் பயிற்சி நிலையத்தில் கோத்தாபய நீண்டகாலமாக யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


ஹிஸ்புல்லாவை நீக்கக் கோரி கிழக்கில் இன்று ஹர்த்தால்! Top News
[Friday 2019-05-10 08:00]

கிழக்கு மாகாணத்தில் இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கினைப் பாதுகாக்கும் அமைப்பு என்ற பெயரில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு இது குறித்த துண்டுப்பிரசுரங்கள் கிழக்கின் பல பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன.


சவுதிக்கு தப்பிச் சென்ற தற்கொலைக்குண்டுதாரிகள்! - 4 பேர் கைது
[Friday 2019-05-10 08:00]

இலங்கையில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் விசாரணை!
[Thursday 2019-05-09 20:00]

யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் கோப்பாய் பொலிஸார் இன்று வாக்குமூலம் பெற்றனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பொலிஸாரால் பதியப்பட்டது.


வாழைச்சேனை தேடுதலில் சிக்கிய துப்பாக்கிகள்! Top News
[Thursday 2019-05-09 19:00]

மட்டக்களப்பு - வாழைச்சேனை மீராவோடை கிராமத்திலும், கும்புறுமூலை பிரதேசத்திலும் நேற்று பமாலை நடத்தப்பட்ட தேடுதலின் போது - துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


தேவாலயங்களில் மீண்டும் ஞாயிறு ஆராதனை! - பேராயர் அனுமதி
[Thursday 2019-05-09 19:00]

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சகல ​தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் வழமை போன்று இடம்பெறும் என்று, பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.


ஞானசாரரை விடுவித்தால் நீதிமன்றம் செல்வேன்!- சந்தியா எச்சரிக்கை
[Thursday 2019-05-09 19:00]

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைதண்டனை அனுபவித்து வரும் ஞானசாரருக்கு,பொதுமன்னிப்பு வழங்குவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.


ஐஎஸ் அமைப்பு பரவலாகி வருவதைக் காட்டுகிறது இலங்கை தாக்குதல்! - கேணல் ஹரிகரன்
[Thursday 2019-05-09 19:00]

இலங்கையில் குண்டுவெடிப்புகளுக்கான திட்டமிடல் மிகவும் துல்லியமாக முன்னெடுக்கப்பட்டதையும் தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தினையும் அடிப்படையாக வைத்து பார்க்கும் போது இலங்கை தாக்குதல்களுடன் சர்வதேச பயங்கரவாதத்திற்கு தொடர்புள்ளது என்ற முடிவிற்கு வரமுடியும் என கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.


கட்டுநாயக்கவில் கட்டுப்பாடுகள் தளர்வு - நுழைவாயில் வரை வாகனங்களுக்கு அனுமதி!
[Thursday 2019-05-09 19:00]

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விமானப்படை பேச்சாளர் இதனைக் கூறினார்.


மாளிகாவத்தை பள்ளிவாசல் கிணற்றில் மேலும் வாள்கள், கத்திகள்!
[Thursday 2019-05-09 19:00]

மாளிகாவத்தைப் பிரதேசத்தில் நேற்று பள்ளிவாசல் கிணற்றிலிருந்து ஒரு தொகை வாள்கள், கத்திகள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இன்று ​​மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் 16 கத்திகள் மற்றும் இரண்டு வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தாக்குதல் குறித்து முன்னரே எச்சரித்தாரா மகிந்த? - சுமந்திரன் சிறப்புரிமை பிரச்சினை
[Thursday 2019-05-09 19:00]

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இந்த செய்தியினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.


பள்ளிவாசல்களில் ஒரே மாதிரி வாள்கள் சிக்குவது எப்படி?
[Thursday 2019-05-09 19:00]

படையினரின் சுற்றிவளைப்பில் பள்ளிவாசல்களில் இருந்து மீட்கப்படும் வாள்கள் அனைத்துமே ஒரே ரகமாக இருப்பது எப்படி, அப்படியென்றால் இந்த வாள்களின் பின்னணியில் பாரிய திட்டமொன்று இருந்துள்ளதா என்பதை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் செமசிங்க தெரிவித்தார்.


பாகிஸ்தான் அகதிகளை வடக்கில் குடியமர்த்துவதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்!
[Thursday 2019-05-09 19:00]

பாகிஸ்தான் அகதிகளை வடக்கில் குடியேற்றுவது, இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே சிவாஜிலிங்கம் இதனைக் கூறினார்.

Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா