Untitled Document
April 24, 2024 [GMT]
வல்வெட்டித்துறையில் சங்கிலி அறுத்தவர்கள் துன்னாலையில் சிக்கினர்!
[Sunday 2019-04-14 18:00]

வல்வெட்டிதுறைப் பகுதியில் நேற்று இரவு பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை பொலிசார் துரத்திப் பிடித்தனர். வல்வெட்டித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்றதாக வல்வெட்டித்துறை பொலிசார் மூலம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது.


ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்! Top News
[Sunday 2019-04-14 18:00]

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு பாரம்பரிய கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றினர்.இந்த நிகழ்வில் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


படகை தீக்கிரையாக்கிய சந்தேக நபர் கைது!
[Sunday 2019-04-14 18:00]

வடமராட்சி கிழக்கு - பகுதியில் நேற்று மீனவர் ஒருவருடைய படகு ஒன்றும் பெறுமதியான வலைகளும் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.


புலோலியில் நள்ளிரவில் கத்திமுனையில் நகைகள் கொள்ளை!
[Sunday 2019-04-14 18:00]

புலோலி தெற்கு, புற்றளைப் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வீடு உடைத்து உள் நுளைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 17 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்த போது கதவை உடைத்து உள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டாரை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர்களிடமிருந்த 17 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


வடபகுதிக்கான ரயில் சேவைகள் முடக்கம்!
[Sunday 2019-04-14 18:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் ஒன்று அநுராதபுரம் - சாலியபுர பகுதியில் தடம் புரண்டுள்ளது. இதனால், வடபகுதிக்கான ரயில் சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. புதுவருட விடுமுறைக்குச் சென்றவர்கள் கொழும்பு திரும்பத் தயாராகும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால், பயணிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.


24 மணித்தியாலங்களில் விபத்துகளில் 12 பேர் பலி- 120 பேர் காயம்!
[Sunday 2019-04-14 06:00]

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.


வலைகளுடன் படகு தீவைத்து எரிப்பு!
[Sunday 2019-04-14 06:00]

வடமராட்சி கிழக்கு அம்பன், கொட்டோடை பகுதியில் நேற்றுக் காலை 8 மணியளவில் மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் விசமிகளால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. அம்பன் கொட்டோடை பகுதியில் கந்தன் சுரேந்திர ராசா என்பவர் புதிதாக கரை வலையை கொள்வனவு செய்து நேற்று முதல் முதலாக தொழிலை மேற்கொண்டு விட்டு படகு மற்றும் வலைகளை கடற்கரையில் வைத்து விட்டு வீடு சென்றுள்ளார்.


அனைத்து இலங்கையர்களிடமும் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!
[Sunday 2019-04-14 06:00]

சிங்கள -தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மர நடுகைக்கான சுப நேரமான, நாளை ஏப்ரல் 15 ஆம் திகதி மு.ப. 11.17 மணிக்கு, மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான உங்கள் பொறுப்பினை நிறைவேற்றுங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.


அரசியல் பிரமுகரின் ஆதரவுடன் காடுகளை அழித்த மூவர் கைது!
[Sunday 2019-04-14 06:00]

வவுனியா, புளியங்குளம் பகுதியில் காடு அழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காடழிக்க பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


வீடு, கடையை அடித்து நொருங்கிய காட்டு யானைகள்! Top News
[Sunday 2019-04-14 06:00]

மட்டக்களப்பு- மாவடி ஓடை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் வீடு ஆகியவற்றை காட்டுயானைகள் நேற்று தாக்கி சேதப்படுத்தியுள்ளன. இச்சம்பவத்தில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.


சரியான தருணம் பார்த்தே கோத்தா மீது வழக்குத் தொடுத்தேன்! - றோய் சமாதானம்
[Saturday 2019-04-13 19:00]

கோத்தபாய ராஜபக்ச மீது சரியான தருணம் பார்த்திருந்து காத்திருந்து வழக்குத் தாக்கல் செய்துள்ளேன்என கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் சமாதானம் என்ற புலம்பெயர் தமிழர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனை நடத்திய ஐ.நா குழு!
[Saturday 2019-04-13 19:00]

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு, இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர் முதல் முறையாக இலங்கையில் ஆய்வுப் பயணத்தை கடந்த 2ஆம் திகதி மேற்கொண்டனர். நேற்றுடன் இந்தக் குழுவினரின் பயணம் நிறைவடைந்தது.


ஜேர்மனியில் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக போர்க்குற்ற வழக்கு!
[Saturday 2019-04-13 19:00]

இலங்கை இராணுவத்தினர் 15 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜேர்மனியின் அரசாங்க சட்டவாளர்களால் நேற்று இந்த போர்க்குற்ற தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வான் விபத்து! - பெண் பலி, 5 பேர் காயம். Top News
[Saturday 2019-04-13 19:00]

புத்தளம் - ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 02.45 மணியளவில் வான் ஒன்றும் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்தார். 05 பேர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்தார்.


அமெரிக்காவின் புதுவருட வாழ்த்து!
[Saturday 2019-04-13 19:00]

இலங்கை மக்களுக்கு தமது மகிழ்ச்சியான புதுவருட வாழ்த்துக்களை அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்க மக்களின் சார்பில் இந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா, இலங்கையுடன் வலுவான பங்காளித்துவத்தை கொண்டிருக்கிறது.இந்த நிலையில் இலங்கை எதிர்நோக்கும் சவால்களை வென்றெடுக்க தமது நாடு உதவும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.


ஜனாதிபதியின் திருப்பதி பயணம் ரத்து!
[Saturday 2019-04-13 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்துள்ளார். சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர், திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார். எனினும், அந்தப் பயணத்தை அவர் திடீரென நிறுத்தியிருப்பதாகவும், அவர் இலங்கையிலேயே தங்கியிருப்பார் என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.


நாய்களுக்கான காப்பகத்தைக் கூட அமைக்க முடியாத வட மாகாண சபை!- தவராசா காட்டம்
[Saturday 2019-04-13 19:00]

நாய்களுக்கான காப்பகத்தைக் கூட வடக்கு மாகாண சபையால் அமைக்க முடியவில்லை என வடக்கு மகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு வழக்குகளால் அரசியல் முடிவுகளை மாற்ற முடியாது!- நாமல்
[Saturday 2019-04-13 19:00]

பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வௌிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்யவதன் மூலம், இந்த நாட்டு அரசியல் முடிவுகளை மாற்ற முடியாது என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, அரசியல் தீர்மானங்களை எடுப்பது இந்த நாட்டு மக்களே என்றும் கூறியுள்ளார்.


தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது கூட்டமைப்பு! - தினேஸ்
[Saturday 2019-04-13 19:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் எடுத்த முடிவுகளால் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


பாண்டிருப்பில் மின்கம்பம் மீது மோதிய வாகனம்! - ஒருவர் காயம்.
[Saturday 2019-04-13 19:00]

அம்பாறை - பாண்டிருப்பில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்தார். இந்த விபத்தினால், வாகனத்திற்கும் இரண்டு மின்கம்பங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்முனைக்குடி பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் ஒன்று பாண்டிருப்பு சந்தைக்கு அருகில் உள்ள இரண்டு மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இலங்கைச் சீரழிக்கும் சீனா! - அமெரிக்கா குற்றச்சாட்டு
[Saturday 2019-04-13 09:00]

பட்டுப்பாதைத் திட்டத்தின் மூலம், இலங்கை உட்பட பல நாடுகளின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்துவதுடன், அவற்றின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் சீனா செயற்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.


காட்டுவாசிகள் போல் வாழும் முள்ளிக்குளம் மக்கள்! - கடற்படைக்கு சொகுசு வசதிகள் Top News
[Saturday 2019-04-13 09:00]

மன்னார், முள்ளிக்குளத்தில் சொந்த இடத்தில் மீள் குடியேறி இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


மஹிந்தவோ, கோத்தாவே ஜனாதிபதியாக முடியாது! - துமிந்த
[Saturday 2019-04-13 09:00]

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவோ நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய இந்நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது. சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் களமிறங்குவாரென பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.


நாளை பிறக்கும் சித்திரை புதுவருட சுப கருமங்கள்!
[Saturday 2019-04-13 09:00]

விகாரி ஆண்டு நாளை பிறக்கின்றது. பிரம்மா சித்திரை மாத முதல் நாளில்தான் தனது படைப்புத் தொழிலை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. அடுத்தது வட திசை நோக்கிச் செல்லும் சூரியன் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய மூலஸ்தானத்தை கடந்து செல்லும் தினம் சித்திரை முதல் நாள் ஆகும்.


இயக்கச்சியில் நாய்களுக்கான காப்பகம்! Top News
[Saturday 2019-04-13 09:00]

கிளிநொச்சி, பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கிளிநொச்சியில் புத்தாண்டு வியாபாரம் மந்தம்! Top News
[Saturday 2019-04-13 09:00]

தமிழ்- சிங்களப் புத்தாண்டு நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், கிளிநொச்சியில் புத்தாடை கொள்வனவில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கடந்த காலங்களைப் போன்று இவ்வருடம் மக்கள் மத்தியில் கொண்டாட்டங்கள் மீதான ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், தற்போது காணப்படும் வறட்சி உள்ளிட்டவற்றுக்கு முகங்கொடுத்துள்ள கிளிநொச்சி மக்கள் அமைதியான முறையிலும், ஆடம்பரமற்ற முறையிலும் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனால் புத்தாண்டு வியாபாரங்கள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன.


பிரித்தானியா சென்ற நான்கு இலங்கையர்கள் கைது!
[Saturday 2019-04-13 09:00]

பிரித்தானியாவுக்குச் சென்ற நான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


முள்ளிவாய்க்கால் அவலங்களை வெளிப்படுத்தும் ஆங்கிலத் திரைப்படம்! - கனடிய இயக்குனர்
[Saturday 2019-04-13 09:00]

முள்ளிவாய்க்காலில் நடந்த அழிவுகளை ஆங்கிலத்தில் முழுநீள படமாக்கி உண்மைகளை திரைக்கு கொண்டு வரப் போவதாக, கனடாவைச் சேர்ந்த ஆங்கில திரைப்பட இயக்குநர் கந்தசாமி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா