Untitled Document
April 25, 2024 [GMT]
காணாமல் போன பெண் பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்பு!
[Saturday 2019-03-23 18:00]

வடமராட்சியில், பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து வயோதிப பெண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளங் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் மணி கடந்த 20ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மன்னார் புதைகுழி அகழ்வு - முடிவெடுப்பதில் இழுபறி!
[Saturday 2019-03-23 09:00]

மன்­னா­ர் புதைகுழியில் இருந்து, மீட்­கப்­பட்ட மனித எச்­சங்­கள் தொடர்­பான துறை­சார்ந்த அறிக்­கை­களை மூன்று மாதங்­க­ளுக்­குள் பெற்­றுக் கொள்­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மன்­னார் நீதி­மன்­றத்­தில் நேற்று இடம்­பெற்ற இரண்டு மணித்­தி­யால கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர் மேற்­படி முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.


கலப்பு விசாரணையை நிராகரித்து நாட்டின் சுயாதீனத்தன்மை பாதுகாப்பு! - ரணில்
[Saturday 2019-03-23 09:00]

கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஜெனிவா கூட்டத்தொடரில் நிராகரித்ததன் மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில், கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


டிப்பர் மோதி இளைஞன் பலி! Top News
[Saturday 2019-03-23 09:00]

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார். அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த நிதர்ஷன் (வயது 21) என்பவரே உயிரிழந்தவராவார். மோட்டார் சைக்கிளில் வந்த இளம் குடும்பத் தலைவர், டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானார்.


மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து - முதியவர் பலி!
[Saturday 2019-03-23 09:00]

யாழ்ப்பாணம் - துண்டிச் சந்தியில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். நல்லூர்- யமுனா ஏரியைச் சேர்ந்த 79 வயதான சேது அன்ரனி என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.


9 மாவட்டங்களுக்கு அதிதீவிர எச்சரிக்கை!
[Saturday 2019-03-23 09:00]

கடுமையான வெயில் காரணமாக அதிதீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை ஒன்பதாக, அதிகரிக்கப்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு அதிதீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது ஒன்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


புலிகளின் ஆயுதங்கள் விற்பனை - 12 பேர் மீது பயங்கரவாத தடைச் சட்டம்!
[Saturday 2019-03-23 09:00]

புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, தெற்கிலுள்ள பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எந்த தண்டனையையும் ஏற்கத் தயார்! - ரிஷாட் பதியுதீன்
[Saturday 2019-03-23 09:00]

நாட்டின் பெறுமதிமிக்க சொத்தான வில்பத்து சரணாலயத்துக்கு ஏதாவது அழிவை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


நீதிமன்றக் கூண்டுக்குள் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர்!
[Saturday 2019-03-23 09:00]

ஆறு மாத சிறைத்­தண்­டனை தீர்ப்­பு அளிக்கப்பட்ட பின்­னர், கைதி ஒரு­வர் கழுத்து அறுக்­கப்­பட்ட நிலை­யில் வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். வவு­னியா நீதி­மன்­றிற்கு வழக்கு நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கச் சென்ற நபர், நீதி­மன்­றின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு குழப்­பத்தை விளை­வித்­தார் என்ற குற்­ற­சாட்­டின் அடிப்­ப­டை­யில் ஆறு ­மா­தம் சிறைத்­தண்­டனை விதித்து தீர்­ப­ளிக்­கப்­பட்­டது.


கைக்கு எட்டிய புதையல் - பொலிஸாரிடம் சிக்கியது!
[Saturday 2019-03-23 09:00]

புளியங்குளத்தில், நிலத்தை தோண்டி எடுத்த புதையல்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வரை புளியங்குளம் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். வவுனியா- புளியங்குளம், ஊஞ்சல்கட்டி பகுதியில் புதையல் தோண்டி, பழங்காலத்து பொருள்கள் பலவற்றை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட பொருள்களை முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட போது, நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த வாகனம் மற்றும் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


தடி வெட்டச் சென்றவர் கட்டுத்துவக்கில் சிக்கினார்!
[Saturday 2019-03-23 09:00]

முல்­லைத்­தீவு- ஒட்டுசுட்டான், கோடா­லிக்­கல்லு 11 ஆம் கட்டை காட்­டுப்­ப­கு­தி­யில் நேற்று தடி வெட்­டச் சென்ற குடும்­பத் தலை­வர் கட்­டுத்­து­வக்­கில் சிக்கி படு­கா­ய­ம­டைந்து முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். முள்­ளி­ய­வளை 3ஆம் வாட்­டா­ரத்­தைச் சேர்ந்த 52 அக­வை­யு­டைய வி.விஜ­ய­க­ரன் என்ற குடும்­பத் தலை­வரே இவ்­வாறு படு­கா­ய­ம­டைந்­துள்­ளார்.


கார்பன் அறிக்கையை வைத்து காலவரையறையை தீர்மானிக்க வேண்டியதில்லை! - சாலிய பீரிஸ்
[Friday 2019-03-22 20:00]

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு, கால வரையரையை தீர்மானிக்க வேண்டிய தேவை இல்லை எனத் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை! - கூட்டமைப்பு
[Friday 2019-03-22 19:00]

ஐ.நா தீர்மானத்துக்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் தவறினால், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இரட்டை வேடம் போடும் தமிழரசுக் கட்சி தலைவர்கள்! - சிவசக்தி ஆனந்தன்
[Friday 2019-03-22 19:00]

தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் தமிழரசு கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கின்றமை அவர்களின் இரட்டை முகத்தையே வெளிப்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


காணி சுவீகரிப்பை தடுக்க கடற்படை முகாம் முன் ஒன்று கூடிய மக்கள்! Top News
[Friday 2019-03-22 19:00]

வலி.வடக்கில் கடற்படையினருக்கும் சுற்றுலா திணைக்களத்திற்கும் காணிகள் சுவீகரிப்பதற்காக, அளவீட்டுப் பணி இடம்பெறவுள்ளதாக தகவலறிந்த மக்கள் இன்று காலை கடற்படை முகாமிற்கு முன்பாக ஒன்றுகூடினர்.


அனைவரும் ஏற்கக் கூடியவரையே போட்டியில் நிறுத்துவோம்! - வாசு
[Friday 2019-03-22 19:00]

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளார் யார் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரையே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக களமிறக்குவோம் என்றும், தெரிவித்துள்ளார் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார.


காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு 20 இலட்சம் ரூபா! - கேட்கிறார் அனந்தி
[Friday 2019-03-22 19:00]

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது பிச்சைக் காசு எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர், அனந்தி சசிதரன் "குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாவினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


புத்தளம் விபத்தில் படுகாயமுற்ற சிறுமி மரணம்!
[Friday 2019-03-22 19:00]

புத்தளம் - பாலாவி, நாவில்லு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - பிரான்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.


நாமல் வெளிநாடு செல்வதற்கு அனுமதி!
[Friday 2019-03-22 19:00]

நிதி மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் வெளிநாடு செல்வதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.


போட்டி போட்டு ஓடிய பஸ் மின்கம்பத்தில் மோதி ஒருவர் படுகாயம்! Top News
[Friday 2019-03-22 19:00]

யாழ்ப்பாணம்- சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை இரு பேருந்துகள் போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்டபோது, தனியார் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பேருந்துக்குள் அகப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத்தின் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


புதுக்காட்டு சந்தி விபத்தில் இளைஞன் படுகாயம்!
[Friday 2019-03-22 17:00]

கிளிநொச்சி- புதுக்காடு பகுதியில் பாண் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞன் ஒருவர் காயமடைந்தார். இன்று நடந்த இந்த விபத்தில் அறத்தி நகரைச் சேர்ந்த இளைஞன் காயமடைந்தார்.


45 நிமிடங்கள் கொட்டியது செயற்கை மழை! Top News
[Friday 2019-03-22 17:00]

இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டம் வெற்றியளித்துள்ளது. செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக மவுஸ்ஸாகலை நீர்த்தேக்க பகுதிகளில் இலங்கை விமானப்படை ஹெலிகப்டர் மூலம் மேக மூட்டங்கள் மீது இரசாயணப் பதார்த்தம் தூவப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் இரசாயணப் பதார்த்தம் தூவப்பட்டதையடுத்து பகல் 01.00 மணி முதல் 01.45 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ளைவான் கடத்தல்கள் கடற்படைத் தலைமைக்கு தெரியும்! - நீதிமன்றில் சிஐடி தகவல்
[Friday 2019-03-22 09:00]

2009ஆம் ஆண்டு கொழும்­பில் வெள்­ளை ­வா­னில் தமிழ் இளை­ஞர்­கள் கடத்­தப்­பட்டு காணா­ம­லாக்­கப்­பட்­டமை தொடர்­பில், அந்­தக் காலப்­ப­கு­தி­யில் கடற்­ப­டைக்­குத் தலைமை வகித்­த­வர்­கள் அறிந்­தி­ருந்­த­னர் என்று குற்­றப்­பு­ல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தி­னரால் நீதி­மன்­றத்­தில் நேற்று அறி­விக்­கப்­பட்­டது.


ஜெனிவா தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது! - நாடுகடந்த தமிழீழ அரசு
[Friday 2019-03-22 09:00]

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானமானது, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மாறாக, நாடுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் கருத்து வெளியிட்டுள்ளார்.


காலவரம்புக்கு அமைய போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும்! - பிரித்தானியா
[Friday 2019-03-22 09:00]

இலங்கையில் நடந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள், போர் குற்றங்கள் அனைத்தும் காலவரம்புக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதில், உரையாற்றிய போதே பிரித்தானிய பிரதிநிதி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.


இந்த நிலைமைக்கு கூட்டமைப்பே பொறுப்பு! - கஜேந்திரகுமார்
[Friday 2019-03-22 09:00]

இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது, நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


யாழ். நகரில் சுவரொட்டிகளை ஒட்ட தடை! - யாழ். மேயர் உத்தரவு
[Friday 2019-03-22 09:00]

யாழ்.நகரப் பகுதியில் பொது இடங்களில் விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில் நேற்றுக் காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


சிறிலங்காவின் ஏமாற்று வித்தைகளை ஐ.நா ஆணையாளர் அம்பலப்படுத்தியுள்ளார்! - நாடுகடந்த தமிழீழ அரசு Top News
[Friday 2019-03-22 09:00]

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் வெளியிட்டிருந்த அறிக்கையும், நிலைப்பாடும், சிறிலங்காவின் ஏமாற்றுவித்தைகளை அம்பலப்படுத்துவதாக அமைந்திருந்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா ஒருங்கிணைப்பாளர் மு.சுகிந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா