Untitled Document
April 18, 2024 [GMT]
அடிப்படை உரிமையை கட்டிவைக்காது அமெரிக்கா!
[Thursday 2019-01-17 18:00]

ஒரு நாட்டின் பிரஜாவுரிமையை வைத்துக் கொள்வதும், நீக்கிக்கொள்வதும் தனது தனிப்பட்ட விடயம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


வடக்கின் அபிவிருத்தி, அரசியல் பிரச்சினைகள் - ஆளுனருடன் விக்கி ஆலோசனை! Top News
[Thursday 2019-01-17 09:00]

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது என்று ஆளுநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.


மாகாண சபையின் அதிகாரங்களை திரும்பப் பெறமுடியாது!
[Thursday 2019-01-17 09:00]

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசாங்கம் திரும்பப் பெறமுடியாதவாறு புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை பருத்தித்துறை நகரில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வில், உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.


சுவிஸ் விபத்தில் ஈழத்தமிழ்ப் பெண் மரணம்! Top News
[Thursday 2019-01-17 09:00]

சுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பெண் செலுத்தி வந்த கார் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.சம்பவத்தில் சர்வாணி சுரேஸ்குமார் 43 வயதுடைய பெண் ஒருவரே உயிரிந்தார். 22 வயதான கனரக வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.


அட்மிரல் ரவீந்திரவுக்கு எதிராக வழக்கு - ஏப்ரலுக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2019-01-17 09:00]

கொழும்பில், 11 இளைஞர்களைக் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நேவி சம்பத் என்றழைக்கப்படும் லெப்டினன்ட் கமாண்டர் சம்பத் முனசிங்க தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் முகத்தில் கரிபூசிய சிறிலங்கா
[Thursday 2019-01-17 09:00]

சிறிலங்கா இராணுவத்தின் 53வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது ஐ.நா மனித உரிமைச்சபையின் முகத்தில் அடித்தாற்போல் உள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி வேட்பாளராக சங்ககார களமிறங்கமாட்டார்!
[Thursday 2019-01-17 09:00]

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளராகக் களமிறங்க இணக்கம் தெரிவிக்கமாட்டார் என்றும், இது தொடர்பான எந்தவிதமான கலந்துரையாடல்களிலும் அவருடன் தான் ஈடுபடவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.


ஆபத்தில் சிக்குவதை தடுத்த காவலாளியை தாக்கி படுகாயப்படுத்திய இளைஞர்கள்!
[Thursday 2019-01-17 09:00]

கிளிநொச்சி- இரணைமடு குளப் பகுதிக்குள் இரகசியமாகச் சென்று ஆபத்தான பகுதியில் நீராட முயன்ற ஐவரை விரட்ட முயன்ற காவலாளியை இளைஞர்கள் தாக்கினர். இதில் காவலாளி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


மகாநாயக்கர்களையும் எச்சரிக்கிறது அரசாங்கம்!
[Thursday 2019-01-17 09:00]

சமஷ்டிக்கான வழியை அமைத்துக்கொள்ளும் நடவடிக்கையாகவே அரசியலமைப்பு தொடர்பான ஆலோசனை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை எதிர்க்காவிட்டால் அதுவே சட்டமூலமாக எதிர்காலத்தில் வரும். இதனை எதிர்க்கும் மகாநாயக்க தேரர்களையும் அரசாங்கம் ஆள்விட்டு எச்சரிக்க ஆரம்பித்துள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு இல்லை!
[Thursday 2019-01-17 09:00]

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் சுதந்திர கட்சியினுடனான புதிய கூட்டணி தொடர்பில் இதுரையில் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


ஒரு இலட்சம் ரூபா உதவிக்கு 15 ஆயிரம் ரூபா இலஞ்சம் - வசமாக மாட்டினார் பெண் அதிகாரி!
[Thursday 2019-01-17 09:00]

போரினால் பாதிக்


அநுராதபுர விமானப்படைத் தள தாக்குதல் - முன்னாள் புலிகள் இருவரையும் விடுவிக்க உத்தரவு!
[Wednesday 2019-01-16 20:00]

அநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்த உதவினார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்கள் இருவர் மீதான சிறைத் தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன், அவர்களை விடுவிக்குமாறும் உத்தரவிட்டார்.


மன்னார் புதைகுழியில் 300 எலும்புக்கூடுகள்! Top News
[Wednesday 2019-01-16 18:00]

மன்னார்- சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் நகர நுழைவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வு பணி இன்று 130 ஆவது நாளாக இடம்பெற்றது.


சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ இணக்கம்!
[Wednesday 2019-01-16 18:00]

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு தயார் என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்து பணிப்பாளர் கிறிஸ்டைன் லகர்டே பெப்ரவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்து பணிப்பாளர் கிறிஸ்டைன் லகர்டே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.


கூட்டமைப்பின் பணயக் கைதியாக அரசாங்கம் - சுமந்திரனின் தாளத்துக்கு ஆளும் பொலிஸ்!
[Wednesday 2019-01-16 18:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பணயக் கைதியாக அரசாங்கம் மாறியுள்ளது என, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஒற்றையாட்சிக்கு எதிராக வாக்களியுங்கள்! - கஜேந்திரன்
[Wednesday 2019-01-16 18:00]

புதிய அரசியலமைப்பு தொடர்பான சர்வசன வாக்கெடுப்பு நடக்கும் போது, ஒற்றையாட்சி அரசியலமைப்பினை நிராகரித்து வாக்களியுங்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


வவுனியா விபத்தில் பெண் படுகாயம்!
[Wednesday 2019-01-16 18:00]

வவுனியா ரயில் நிலைய வீதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா - சைவப்பிரகாச கல்லூரி வீதியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிள் புகையிரத நிலைய வீதிக்கு செல்ல முற்பட்ட சமயத்தில் புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சமல் ராஜபக்சவும் தயார்!
[Wednesday 2019-01-16 18:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தானும் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.ஜனாதிபதி பதவிக்கு நானும் பொருத்தமானவர் எனவும், ஜனாதிபதி​ தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரா​கவே இருக்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


பிலிப்பைன்சில் ஜனாதிபதி மைத்திரி - 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து! Top News
[Wednesday 2019-01-16 18:00]

ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு, பிலிப்பின்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அந்த நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேட்ரேவை சந்தித்துள்ளார். பிலிப்பைன்ஸிற்கு நேற்று பிற்பகல் நோக்கி பயணமான ஜனாதிபதி, நேற்று இரவு அங்கு சென்றடைந்தார். பிலிப்பின்ஸின் மனிலா நகரில் உள்ள நினோய் அகினோ சாவதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய ஜனாதிபதியை, அந்த நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.


கொழும்பு துறைமுக நகரத்துக்கான மணல் நிரப்பும் பணிகள் நிறைவு!
[Wednesday 2019-01-16 18:00]

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக கடலை மணலால் நிரப்பும் நடவடிக்கைகளிள் ஒரு கட்டம் இன்றுடன் நிறைவு பெற்றது. சுமார் 269 ஹெக்டயர் கடற்பரப்பு மணலால் நிரப்பப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பணிகள் நிறைவு நிகழ்வு இன்று காலை மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சேய்ன் சுயேங், போர்ட் சிட்டி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பியேங் ஹவுலியேங் தலைமையில் இடம்பெற்றது.


படுகொலைச் சதித் திட்டம் - நாமல் ராஜபக்ஷவை சிஐடி விசாரணைக்கு அழைப்பு!
[Wednesday 2019-01-16 18:00]

அரசியல் பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தல் தொடர்பிலான வாக்குமூலம் அளிக்க வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் சசி வீரவன்ச ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மதத் தலைவர்களுடன் வடக்கு ஆளுநர் சந்திப்பு! Top News
[Wednesday 2019-01-16 18:00]

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் யாழ்ப்பாணத்தில் உள்ள மதத்தலைவர்களை நேற்றும் இன்றும் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மன் கோவில்களுக்கும் சென்று அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.


சிறைக் கைதிகள் மீது மோசமான தாக்குதல் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு! Top News
[Wednesday 2019-01-16 18:00]

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி, தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பினால் இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் சில இன்று வௌியிடப்பட்டுள்ளன. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வௌியிடப்பட்டன.


கேபிள் இணைப்புகளை அகற்றிய யாழ்.மேயருக்கு எதிராக விசாரணை!
[Wednesday 2019-01-16 18:00]

யாழ். மாநகர சபை பகுதிகளில் கேபிள் இணைப்புக்களை அகற்றியமை தொடர்பாக யாழ். மாநகர மேயர் இ.ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்னர் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கேபிள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாநகர மேயரால் அகற்றப்பட்டிருந்தன.


வடக்கில் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா - அமைச்சரவை அனுமதி!
[Wednesday 2019-01-16 07:00]

வடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்படி யோசனையை முன்வைத்தார்.


வல்வை பட்டத் திருவிழா - பறக்கும் சமையலறைக்கு முதல் பரிசு! Top News
[Wednesday 2019-01-16 07:00]

தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் ஆண்டு தோறும் நடக்கும் பட்டத்திருவிழா நேற்றுமாலை இடம்பெற்றது. இதில் விதமான, வண்ணமயமான 84 பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. அதில் பறக்கும் நவீன சமையலறை முதல் பரிசைப் பெற்றது. இந்த பட்டத்திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதனை காட்சிப்படுத்துவதில் ஆர்வம் காட்டினர்.


1956ல் மொழியுரிமையை கொடுத்திருந்தால் போர் வெடித்திருக்காது!
[Wednesday 2019-01-16 07:00]

1956ல் தமிழ் மக்கள் மொழியுரிமையை தருமாறு கேட்டிருந்தனர். அதனை வழங்கியிருந்தால் கொடூரமான யுத்தத்தை நோக்கி நாடு சென்றிருக்காது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் தெரிவித்தார்.


சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்றியவர் ரணில்!
[Wednesday 2019-01-16 07:00]

எக்காலத்திலும் நாட்டை இரண்டாக பிளவுபடுவதற்கு, ஐக்கிய தேசிய கட்சி இடமளிக்காது என்று அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா