Untitled Document
March 29, 2024 [GMT]
வவுனியாவில் விகாரை அமைக்க முயற்சி! Top News
[Monday 2018-12-17 18:00]

வவுனியா- சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் பௌத்த விகாரையை அமைக்க முயன்ற தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாட்டினால், கிராம மக்களுக்கும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.


மஹிந்தவுடன் இருந்தால் பூனை எம்முடன் இருந்தால் புலியா?
[Monday 2018-12-17 18:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கிய போது, பூனைக்குட்டிகளாகத் தெரிபவர்கள், எம்மோடு இணையும் போது மாத்திரம் புலிகளாகத் தெரிகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இன்றுகாலிமுகத்திடலில் நடந்த ஜனநாயக வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அரசியலில் எந்த தோல்வியும் நிரந்தரமானதல்ல!
[Monday 2018-12-17 18:00]

எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியில் சேரும் எண்ணம் எனக்கில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ரணில்!
[Monday 2018-12-17 18:00]

பிரதமராக, ரணில் விக்கிரமசிங்க, பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறி, கொழும்பு - 07இல் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும், பிரதமரின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க நேற்றுப் பகல், அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.


பெண்ணுக்கு போலி தாலி கட்டிய கொழும்பு மாப்பிள்ளை!
[Monday 2018-12-17 18:00]

வடமராட்சி பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கவரிங் தாலியைக் கட்டி பெண் ஒருவரைத் திருமணம் செய்த நபர் , பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த போது அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை உறவினர்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
[Monday 2018-12-17 18:00]

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் பாம்பன், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த எட்டு மீனவர்களும் நேற்றிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு இருந்த வேளையிலேயே, கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


அரசியல் கைதிகள் - புதிய முட்டுக்கட்டை!
[Monday 2018-12-17 09:00]

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரச்சினை ஒன்றை கிளப்பியுள்ளார். நேற்று பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.


சர்வதேச தலையீடு அவசியம்!
[Monday 2018-12-17 08:00]

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என்று, முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்வி பதில் பகுதியில், கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இன்று புதிய அமைச்சரவை?
[Monday 2018-12-17 08:00]

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் கடந்த ஆறு வாரமாக நீடித்த நெருக்கடி நிலைமை நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.


வீடு மீது பெற்றோல் குண்டு வீச்சு! Top News
[Monday 2018-12-17 08:00]

யாழ்ப்பாணம், கலட்டி பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. இனந்தெரியாத நபர்களினால் குறித்த வீடு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


ஐதேக அரசு எதையும் செய்யாது!
[Monday 2018-12-17 08:00]

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் வாக்கு வங்கிக்கு பாதகமான விடயங்களை ஒருபோதும் நிறைவேற்றாது என ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.


குடியிருப்புகளுக்குள் புகுந்த கடல்நீர்! Top News
[Monday 2018-12-17 08:00]

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலின் தாக்கத்தினால், வடக்கு கிழக்கில் கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், கடல்நீர் பெருக்கெடுத்து மன்னார், முல்லைத்தீவு, திருகோணமரல, மட்டக்களப்பு உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. இதனால் மக்கள் பீதியடைந்ததுடன், வீடுகளை விட்டும் வெளியேறினார்.


கூட்டமைப்பு, ஜேவிபியுடன் பேசுவோம்!
[Monday 2018-12-17 08:00]

ஒன்றிணைந்த இலங்கையில் அனைவருக்கும் நீதியான அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருடன் பேச்சு நடத்த போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


ரணிலுக்கு சம்பந்தன் கூறிய ஆலோசனை!
[Monday 2018-12-17 08:00]

அரசில் இணைந்து செயற்படுவதற்குபு ஏனைய கட்சிகள், தரப்புகளில் இருந்து வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரவணைத்துக் கொள்ளுங்கள். புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு அனைவரினதும் ஆதரவு எமக்குத் தேவை, ரணில் விக்கிரமசிங்கவிடம், இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.


நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு - நாளை ஆலோசனை!
[Monday 2018-12-17 08:00]

புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக நாளை தீர்மானிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் நாளை கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கூடவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்படவுள்ளது.


மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்! Top News
[Sunday 2018-12-16 20:00]

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.


ஜனநாயகத்தை மதித்தே ரணிலை நியமித்தேன்!
[Sunday 2018-12-16 20:00]

பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயே, ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கினேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டன் பின்னர் புதிய பிரதமர் மற்றும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மைத்திரிக்கு சஜித் கொடுத்த வாக்குறுதி!
[Sunday 2018-12-16 20:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இல்லை என கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், ஐக்கிய தேசிய முன்னணியினரின் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதே அவர் இதனை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.


உறவுகள் பலமடையும் - இந்தியா அறிக்கை!
[Sunday 2018-12-16 20:00]

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளமையை இந்தியா ஏற்றுக்கொள்வதாகவும் தொடர்ந்து வரும் நாள்களில் இந்தியா- இலங்கைக்கிடையிலான உறவை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இந்தியா தெரிவித்துள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆட்சியைக் கலைப்போம் - செல்வம் எச்சரிக்கை!
[Sunday 2018-12-16 20:00]

எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடின் புதிய ஆட்சியை கலைப்போம் என்று எச்சரித்துள்ளார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். இன்று வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


மன்னாரில் தேசிய நத்தார் விழா! Top News
[Sunday 2018-12-16 20:00]

தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வானது 'கிறிஸ்து பிறப்பும் நத்தாரின் சிறப்பும்' எனும் தொனிப்பொருளில் இன்று மதியம் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.


சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை!
[Sunday 2018-12-16 20:00]

ஒரே கொள்கையுடைய ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கமே உருவாக்கப்படும் என்றும், 30 அமைச்சுக்கள் மாத்திரேம கொண்டு உருவாக்கப்படும் புதிய அமைச்சரவையில் சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.


ரணிலை வாழ்த்துகிறார் நாமல்!
[Sunday 2018-12-16 20:00]

புதிய பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாமல் தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே இவ்வாறு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


உலக சாம்பியன் ஆனார் புஷ்பராஜ்! Top News
[Sunday 2018-12-16 20:00]

இலங்கையின் ஆணழகன் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டி தாய்லாந்தில் இடம்பெற்று வருகிறது. இப்போட்டியில் 100 கிலோ எடை பிரிவிலேயே இவர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.


அரசில் இணைவது மைத்திரி கையில்!
[Sunday 2018-12-16 20:00]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புதிய அரசாங்கத்துடன் இணையுமா என்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிப்பார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புதிய அரசாங்கத்துடன் இணைவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி நேற்று வரை இருந்தது, எனினும், ஜனாதிபதி தலைமையில் நாளை ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


ஐதேகவினர் ரணில் பக்கம் திரும்பமாட்டார்கள்!
[Sunday 2018-12-16 20:00]

மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் மீண்டும் ஐ.தே.கவுடன் இணைந்து​கொள்ளமாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


விடமாட்டேன் - மகிந்தவின் சூளுரை!
[Sunday 2018-12-16 20:00]

பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் நாட்டுக்காக ஆரம்பித்துள்ள போராட்டத்தை கைவிடமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பதவியிலிருந்து விலகுவது தனக்கு கடினமான வேலையில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று பகல் தங்காலையில் உள்ள மஹிந்தவின் கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற நிக​ழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ரணில் பக்கம் தாவுகிறார் வியாழேந்திரன்!
[Sunday 2018-12-16 09:00]

மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா