Untitled Document
March 29, 2024 [GMT]
சம்பந்தனை அவசரமாக சந்தித்தார் ஐ.நா உயர் அதிகாரி!
[Wednesday 2018-11-28 19:00]

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இலங்கைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேற்றிரவு சந்தித்துள்ளார். இலங்கைக்கு வந்தவுடன் நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து இரா. சம்பந்தனுடன் அவசர சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.


சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்! Top News
[Wednesday 2018-11-28 19:00]

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமையில் சபாநாயகரின் செயற்பாடுகள்


கஞ்சா கடத்தியவர் கனகராயன்குளத்தில் கைது!
[Wednesday 2018-11-28 19:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி 13 கிலோ கஞ்சாவினை கெப் ரக வாகனம் ஒன்றில் கடத்த முற்பட்ட நபர், வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


தேடப்பட்டு வந்த ஆவா குழு சந்தேகநபர் நீதிமன்றில் சரண்!
[Wednesday 2018-11-28 19:00]

ஆவா குழுவை சேர்ந்தவர் என கூறப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற நபர்சட்டத்தரணி ஊடாக இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் குறித்த நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்தவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.


தாயக துயிலுமில்லங்களில் மாவீரர் நாள்! Top News
[Wednesday 2018-11-28 07:00]

தாயகப் பிரதேசத்தில் உள்ள மாவீரர் அதுயிலுமில்லங்களில் நேற்று மாலை மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. மாவீரர்களுக்கு பெற்றோர், உறவுகள், பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.


கடற்புலி மாவீரர்களுக்கு நினைவுச்சுடர்! Top News
[Wednesday 2018-11-28 07:00]

மாவீரர் நாளான நேற்று யாழ். மாவட்டத்தில் கடற்புலி மாவீரர்களை நினைவுகூர்ந்து, படகில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


நாளை ஆளும்கட்சி ஆசனங்களைக் கைப்பற்ற ஐதேக திட்டம்!
[Wednesday 2018-11-28 07:00]

நாளை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் போது, ஆளும்கட்சியின் ஆசனத்தில் அமரப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.இன்று மோசமான அரசாங்கம் ஒன்று உள்ளதாகவும் அதனை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன! -வி.உருத்திரகுமாரன்
[Wednesday 2018-11-28 07:00]

அரசியல் யதார்த்தத்தை நன்கு ஆராய்ந்து பார்ப்பின் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறி்யுள்ளார்.


சிஐடியில் இருந்து நழுவி நீதிமன்றில் இன்று முன்னிலையாகிறார் அட்மிரல் ரவீந்திர!
[Wednesday 2018-11-28 07:00]

கொழும்பில் 5 மாணவர் உள்


தமிழரசு கட்சி அலுவலகத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி! Top News
[Wednesday 2018-11-28 07:00]

தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் மாவீரர்கள் தின நிகழ்வு நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர்மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


நீதி, நியாயத்துக்காக
[Wednesday 2018-11-28 07:00]

நான் குற்றம் செய்திருந்தால் நீதி, நியாயத்துக்காக


ஜனாதிபதியின் முடிவினால் நாடு சீரழிகிறது! - குமார வெல்கம
[Wednesday 2018-11-28 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான தீர்மானத்தை எடுக்காமையின் காரணமாக, நாடு சீரழிந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். ' நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பவர்களுக்கு ஆட்சியை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சிறிசேன தொடர்ந்தும் இவ்வாறான முடிவுகளை எடுத்து வந்தால் நாடு முழுமையாக சீரழிந்துவிடும் என்றார்.


ஐதேகவின் வாயை அடைக்க பிணைமுறி அறிக்கையை வெளியிடத் திட்டம்!
[Wednesday 2018-11-28 07:00]

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் வாரங்களில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே! - சுசில் பிரேமஜயந்த
[Wednesday 2018-11-28 07:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐ.தே.க ஆட்சியமைத்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என்றும், அதனை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம்! Top News
[Tuesday 2018-11-27 16:00]

தமிழினத்தின் விடுதலைக்காய் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்கள் என்றுமே நினைவுகூரப்பட வேண்டியவர்கள் . இந்த நாள் புனிதர்களுடைய நாள். தமக்கென வாழாது பிறரின் நன்மைக்காக நமது தேசிய இனத்தின் விடுதலைக்காகவும் தேசிய இனம் தனது தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதற்காகவும் எந்தவொரு பிரதியுபகாரத்தையும் எதிர்பாராது உயிரைதுச்சமென மதித்து தமது உயிரை தமிழ் இனத்திற்காக ஆகுதியாக்கிய நாள் நவம்பர் 27.


இன்று மாலை மாவீரர்களை நினைவுகூரத் தயாராகும் தமிழர் தாயகம்!
[Tuesday 2018-11-27 09:00]

தாயக விடு


தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர்தின அறிக்கை:
[Tuesday 2018-11-27 09:00]

தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்
கார்த்திகை 27, 2018.

எங்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று 27ஆம் நாள் கார்த்திகை திங்கள் 2018 ஆம் ஆண்டு. எங்கள் தாயக ஈழ மண்ணின் காவல் தெய்வங்களான மாவீர செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரும் ஒரு புனிதமான நாள். தாயக விடுதலையே குறிக்கோள் என்ற ஒற்றை சொல்லை முழு மூச்சாக கொண்டு, தங்கள் இன்னுயிர்களை ஈழ விடுதலைப்போருக்கு காலம் நேரம் இன்றி அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள்.


மின்கம்பத்தில் பறந்த புலிக்கொடி! - பிடுங்கிச் சென்றனர் பொலிசார் Top News
[Tuesday 2018-11-27 09:00]

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக மின்கம்பம் ஒன்றில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு நிற துணியில்


இறந்தவர்களை நினைவுகூரத் தடையில்லை! - ஊர்காவற்றுறை நீதிமன்றம்
[Tuesday 2018-11-27 09:00]

யாழ்ப்பாணம், வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடைகள், அவற்றை அணிந்த உருவப்படங்கள், கொடிகள் என்பவற்றை காட்சிப்படுத்த ஊர்காவற்துறை நீதிவான் அ.ஜூட்சன் தடையுத்தரவு வழங்கியுள்ளார். சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தடையுத்தரவு வழங்க வேண்டுமென கோரி ஊர்காவற்துறை பொலிஸார் நீதிமன்றில் மனு தாக்கல் ஒன்றை செய்தனர்.


தமிழர்களின் முன் இரண்டு தேர்வுகளே உள்ளன : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தி !
[Tuesday 2018-11-27 09:00]

இலங்கைத்தீவின் இன்றைய அரசியல் யதார்த்தத்தில் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். 'உரிமைகளுக்காக விட்டுக் கொடுப்பின்றிப் போராடி, எமக்கான சுதந்திர தாயகத்தை அமைத்து வாழ்தல் ஒரு தெரிவு. இத்தெரிவில் வெற்றியடைவதற்கான நடைமுறைச் சாத்தியம் குறைவு என்று ஐயம் கொள்வோர் பலருண்டு.


புலிகளின் கொடி,சின்னங்கள், பாடல் இன்றி மாவீரர் தினத்தை நடத்த மட்டக்களப்பு நீதிமன்றம் அனுமதி!
[Tuesday 2018-11-27 09:00]

மாவீரர் நினைவு தின அனுஷ்டிப்பின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள் மற்றும் பாடல்கள் என்பன பாவிப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று மாலை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்


முன் வைத்த காலை ஜனாதிபதி பின்வைக்க வேண்டும்! - குமார வெல்கம
[Tuesday 2018-11-27 09:00]

தனிநபர்கள் குறித்தும், கட்சி குறித்தும் யோசிக்காமல் நாட்டைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் ஒன்றுக்கு வர வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.


7 ஆம் திகதி தீர்ப்பு வராது! - அடித்துச் சொல்கிறார் கம்மன்பில
[Tuesday 2018-11-27 09:00]

பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது டிசம்பர் ஏழாம் திகதி தீர்ப்பு வழங்கப்போவதாக உச்சநீதிமன்றம் தீர்மானிக்கவில்லையென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


அரசியல் குழப்பங்களால் மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு!
[Tuesday 2018-11-27 09:00]

அரசாங்க பாடசாலைகள் 3 ஆம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ஆம் திகதி மூடப்படவுள்ள நிலையில், இன்னும் பாடசாலை மாணவர்களுக்கான புதிய புத்தகங்கள், சீருடைத் துணிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லையென கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. அடுத்தாண்டுக்காக 39714000 பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையால் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளது.


சுவிஸ் நகரசபைத் தேர்தலில் வெற்றியீட்டினார் தர்ஷிகா கிருஸ்ணானந்தம்!
[Tuesday 2018-11-27 09:00]

சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற ஈழத்தமிழ் பெண் போட்டியிட்டு வெற்றிவாகை சூட்டியுள்ளார்.கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 2003 வாக்குகளை பெற்ற இவர், நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், 2916 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.


இன்று மீண்டும் கூடும் பாராளுமன்றம் - ஆளும்தரப்பு பங்கேற்குமா?
[Tuesday 2018-11-27 09:00]

பாராளுமன்றம் இன்றுபிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட பொதுமக்கள் மற்றும் விசேட விருத்தினருக்கு இன்றும் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அங்குமிங்கும் தாவிய வசந்த சேனநாயக்க மன்னிப்புக் கோருகிறார்!
[Tuesday 2018-11-27 09:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே புதிய அரசாங்கத்தில் தாம் இணைந்து கொண்டதாக தெரிவித்த வசந்த சேனாநாயக்க அங்கு ஜனநாயகம் இல்லாத காரணத்தினாலேயே அங்கிருந்து வெளியேறினேன் என கூறினார்.


உரிமைகளுக்காக உயிர்நீத்த விடுதலை வீரர்களை நினைவுகூருவது கடமை! -விக்னேஸ்வரன்
[Monday 2018-11-26 19:00]

தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக உயிர்நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது எமது கடமை என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர்நாள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா