Untitled Document
April 23, 2024 [GMT]
இராட்சத விமானம் அவசர தரையிறக்கம்! Top News
[Friday 2018-12-14 18:00]

உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான அன்டனோவ் -124 ரக சரக்கு விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து உகண்டா நோக்கி பயணித்த இந்த விமானம் நேற்று அதிகாலை 5.26 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கோளாறுகள் சரி செய்யப்பட்டு மத்தள விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.26 மணியளவில் மீண்டும் உகண்டா நோக்கி விமானம் பயணித்துள்ளது.


திங்களன்று புதிய அரசாங்கம்?
[Friday 2018-12-14 09:00]

எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் நடத்திய கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையும் திங்கட்கிழமை நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.


மஹிந்தவின் பதவி தப்புமா?
[Friday 2018-12-14 09:00]

மேன் முறை


நாளை ஐதேகவை சந்திக்கிறார் ஜனாதிபதி!
[Friday 2018-12-14 09:00]

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் இன்று நடக்கவுள்ள நிலையில், நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அதேவேளை, இன்று மாலை 3.00 மணியளவில் ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் விக்ரமசிங்க போச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.


நாங்களும் நீதிமன்றம் செல்வோம்!
[Friday 2018-12-14 09:00]

அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றின் ஊடாக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


மஹிந்தவை நீக்க முடியாது!
[Friday 2018-12-14 09:00]

மஹிந்த ராஜபக்ஷ தானாக பிரதமர் பதவியில் இருந்து விலகினாலே தவிர, அவரை பதிவில் இருந்து நீக்கமுடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பினாலேயோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் கூட மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என அவர் தெரிவித்தார்.


மடு புனித பிரதேசம் - ஜனாதிபதிக்கு எதிர்ப்பு!
[Friday 2018-12-14 09:00]

மன்னார், மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு தொடர்பாக, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சியை உடனடியாக நிறுத்தி, ஐனாதிபதி நேரடி கலந்துரையாடல்களை மேற்கொண்டு சரியானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய செயலாளர் ஜே.ஜே.கெனடி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தக்க பாடம் புகட்டியுள்ளது நீதிமன்றம்!
[Friday 2018-12-14 09:00]

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்து நடக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். உடல்நலக் குறைவினால் நேற்றுக்ககாலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


வடக்கிலும் வெடித்த பட்டாசுகள்!
[Friday 2018-12-14 09:00]

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டத்துக்குப் புறம்பானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஊடகங்களின் வாயிலாகவும், சமூக ஊடகங்களின் வாயிலாகவும் காட்டுத் தீ போல் நாடெங்கும் பரவியது.


வலுப்பெற்றது நீதிமன்ற நியாயாதிக்கம்!
[Friday 2018-12-14 09:00]

பாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது எமது நாட்டில் நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.


சிசிடிவியால் மாட்டிய சங்கிலித் திருடர்கள்!
[Friday 2018-12-14 09:00]

முல்லைத்தீவில் யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.நேற்று முன்தினம் யுவதி ஒருவர் உடுப்புக்குளம் பிரதான வீதி வழியே சிலாவத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் யுவதியை இடைமறித்து அவர் அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கலியை அறுத்துச் சென்றனர்.


நாடாளுமன்றம் கலைப்பு சட்டவிரோதம்! - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
[Thursday 2018-12-13 19:00]

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும், அது செல்லுபட்டியாகாது எனவும்,உயர்நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பளித்துள்ளது.


ரணில் இல்லை - மைத்திரி பிடிவாதம்!
[Thursday 2018-12-13 19:00]

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கின்றேன், ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று மாலை ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.


லேக்ஹவுசில் பதற்றம் - மோதலில் இருவர் காயம்! Top News
[Thursday 2018-12-13 19:00]

லேக்கவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இன்று மாலை பதற்ற நிலை ஏற்பட்டதில் இருவர் காயமடைந்தனர். விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி!
[Thursday 2018-12-13 19:00]

உயர்நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இன்றைய தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை, ஊடகங்களிடம் பேசிய அவர்-


ஜனாதிபதி தீர்ப்பை மதிக்க வேண்டும்!
[Thursday 2018-12-13 19:00]

உயர்நீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்து நடக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி சட்டவிரோதமானது என தெரிவித்து 7 நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.


தமிழ்கைதிகள் விடுதலை - பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
[Thursday 2018-12-13 19:00]

சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்றும், விடுதலை புலிகள் இயக்க போராளிகளை சட்டத்திற்கு முரணாக விடுதலை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மகிந்த அணி பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, தெரிவித்துள்ளார். தேசிய கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


கங்காரு நாட்டில் சாதனை படைத்த இளைஞன்! Top News
[Thursday 2018-12-13 19:00]

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல்மாணவனாக 95 புள்ளிகளை செல்வன் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் அவர்களும், இரண்டாம் இடத்தை 94 புள்ளிகள் பெற்று செல்வி ப்ரீத்தி சக்தி சிவபாலன் அவர்களும் எடுத்துள்ளனர்.


கூட்டமைப்பின் குற்றச்சாட்டு - மகிந்த தரப்பு மறுப்பு!
[Thursday 2018-12-13 19:00]

ரணில்- சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை என குற்றச்சாட்டுகள் தொடரும் பட்சத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமக்கு வழங்குவதாக ஒப்புகொண்ட விடயங்களை பகிரங்கப்படுத்துவோம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை அறிவித்துள்ளார்.


அரசில் இருந்து விலகத் தயார்!
[Thursday 2018-12-13 19:00]

அரசாங்கத்தில் இருந்து விலக தாங்கள் தயாராக இருப்பதாக மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் பேசிய பின்னரே, தாங்கள் அடுத்த முடிவினை எடுக்க தீர்மானிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கலைஞர் புறக்கணிப்பு - விழா ஒத்திவைப்பு!
[Thursday 2018-12-13 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் நடைபெறவிருந்த கலாபூஷணம் விருது விழா திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக, கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


விருப்பமானவரை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சி!
[Thursday 2018-12-13 19:00]


ரணிலுடன் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை! Top News
[Thursday 2018-12-13 19:00]

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணம் எதிலும் தான் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ரணில்- சம்பந்தன் உடன்பாடு என்று, ஈவணம் ஒன்று ஊடகங்களில் பரவி வரும் நிலையிலேயே, இரா.சம்பந்தன் அதனை நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


வாள்வெட்டுக் குழுவினர் அதிகாலையில் அடாவடி!
[Thursday 2018-12-13 19:00]

யாழ்ப்பாணம்- அரியாலையில், முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி அட்டகாசம் செய்துள்ளது. அரியாலை புருடி வீதியிலுள்ள வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இன்று மாலை முக்கிய தீர்ப்பு!
[Thursday 2018-12-13 10:00]

பாராளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 9 ஆம் திகதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கும் முரணானது என தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை 4 வழங்கப்படவுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.


எழுத்து மூலம் உத்தரவாதம் தந்தார் ரணில்!
[Thursday 2018-12-13 09:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூல உத்தரவாதம் வழங்கியுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.


ஓரம்கட்டுகிறது அரசாங்கம்
[Thursday 2018-12-13 09:00]

தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


வைரலாகப் பரவும் இரகசிய ஆவணம்! Top News
[Thursday 2018-12-13 09:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில், செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் ஒன்று கூறி ஒரு ஆவணப் பிரதி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா