Untitled Document
April 19, 2024 [GMT]
சபாநாயகரின் பெயரில் போலி கடிதம் - சிஐடி விசாரணை!
[Thursday 2018-11-22 08:00]

போலிக் கடிதம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவின் பணிப்புரைக்கமைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் விடுத்துள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் பொலிஸ் மா அதிபரிடம் அனுமதி கோரியுள்ளது.


பிரதமரின் நிதிஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணையை விவாதிக்க விடமாட்டோம்!
[Thursday 2018-11-22 08:00]

பிரதமரின் செயலாளரின் நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணையை 29ஆம் திகதி விவாதத்திற்கு எடுக்கப்படமாட்டாது. அதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஆளும் தரப்பு பிரதம கொரடா , அமைச்சர் எஸ்.பி திசநாயக்க தெரிவித்தார்.


அமைச்சரவைக் கூட்டத்துக்கு வடிவேல் சுரேஸ் செல்லவில்லை!
[Thursday 2018-11-22 08:00]

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கலந்து கொண்டார் என வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என ஐ.தே.க தெரிவித்துள்ளது.


இராணுவ வாகனம் மோதி முறிந்தது உயர் அழுத்த மின்கம்பம்!
[Thursday 2018-11-22 08:00]

கிளிநொச்சி - ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவ ட்ரக் ஒன்று மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது. நேற்று மாலை 4.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால் மின்சார சபை உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு அனர்த்தம் ஏற்படுவதை தவிர்த்துள்ளனர்.


மாவீரர் நாளுக்கு நீதிமன்றத்தில் தடைகோருகிறது பொலிஸ்!
[Wednesday 2018-11-21 18:00]

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கும் கட்டளையைப் பிறப்பிக்கக் கோரி கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான கட்டளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அறிவித்தார்.


ருவிட்டரில் நாமலுக்கு பதிலடி கொடுத்த கனேடிய தூதுவர்!
[Wednesday 2018-11-21 18:00]

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ருவிட்டரில் இட்டிருந்த பதிவுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், இலங்கைக்கான கனேடிய தூதுவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.


அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க!
[Wednesday 2018-11-21 18:00]

ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சேனாநாயக்க இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியை துறக்கப் போவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்த வசந்த சேனநாயக்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளரர்.


ஜனாதிபதிக்கு எதிராக தொடங்கியது தொடர் சத்தியாக்கிரகம்! Top News
[Wednesday 2018-11-21 18:00]

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணமான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் தொடர் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் இந்தப் போராட்டம் தம்பர அமில தேரரின் உரையுடன் ஆரம்பமானது.


ஐதேகவை காப்பாற்றவே நீதிமன்றம் சென்றது கூட்டமைப்பு! - கஜேந்திரன்
[Wednesday 2018-11-21 18:00]

தமிழ் மக்களின் பிரச்சினைக்காக நீதிமன்றத்துக்கு செல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சியை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கூட்டமைப்பு மீது பாய்கிறது சுதந்திரக் கட்சி!
[Wednesday 2018-11-21 18:00]

வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை உறுதியற்ற நிலைக்கு கொண்டு செல்லும் சதித்திட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடந்தையாக இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச குற்றம்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


முல்லைத்தீவில் வீட்டுக்குள் நுழைந்த 13 அடி நீளமான முதலை!
[Wednesday 2018-11-21 18:00]

முல்லைத்தீவு- சிலாவத்தை பகுதியிலுள்ள வீடு ஒன்றினுள் இன்று அதிகாலை 1 மணியளவில் 13 அடி நீளமான முதலை ஒன்று புகுந்தது. இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த முதலையைப் பிடித்து வவுனிக்குளம் முதலைகள் சரணாலயத்துக்கு கொண்டு சென்று விட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


179 ரூபாவைத் தாண்டியது டொலரின் பெறுமதி!
[Wednesday 2018-11-21 18:00]

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலையின் பெறுமதி படி, இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மூன்றுமுறிப்பில் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!
[Wednesday 2018-11-21 18:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மூன்றுமுறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 20 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க, இந்த காணிகளுக்கான பத்திரங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்துள்ளார்.


யாழ். விபத்துகளில் இருவர் பலி - ஆணின் சடலமும் மீட்பு!
[Wednesday 2018-11-21 18:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். புலோலி கோழிக்கடைச் சந்தியில் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் புலோலி வடக்கைச் சேர்ந்த கந்தசாமி குலநாயகம் (வயது-84) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.


முல்லைத்தீவில் பேருந்து தீக்கிரையான மர்மம்! Top News
[Wednesday 2018-11-21 18:00]

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று மர்மமான முறையில் தீக்கிரையாகியுள்ளது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்று விட்டு திரும்பி வந்த பேருந்து வழமையாக நிறுத்தும் இடத்தில்- வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.


5 வயது குழந்தையை கடித்துக் குதறிய தந்தை!
[Wednesday 2018-11-21 18:00]

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த தந்தையால், கொடூரமாக கடித்து குதறப்பட்ட 5 வயது மகன், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விக்னேஸ்வரனின் கோரிக்கையை நிராகரித்தது கனடா!
[Wednesday 2018-11-21 08:00]

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணைத் தூதரகத்தை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கையை, கனேடிய தூதரகம் நிராகரித்துள்ளது.


பாரிய ஆபத்து - அபாய சங்கு ஊதுகிறார் மங்கள!
[Wednesday 2018-11-21 08:00]

நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளால், இலங்கையால் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களைச் செலுத்த முடியாத நிலைமை ஏற்படுமென, இலங்கையின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.


மகிந்த தரப்பு மீது தடைகளை விதிக்க தயாராகும் சர்வதேச சமூகம்!
[Wednesday 2018-11-21 08:00]

இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்கர், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வரலாம் என இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


இரணைமடு வதந்திகளை நம்பவேண்டாம்!
[Wednesday 2018-11-21 08:00]

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட போகிறது என வதந்திகளை நம்பவேண்டாம் என எந்திரி சுதாகரன் தெரிவித்துள்ளார்.


அதிகாரிகளும் பதில் கூறவேண்டி வரும்!
[Wednesday 2018-11-21 08:00]

அரசியலமைப்பிற்கு முரணான வகையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதென்றும், அதற்கெதிராக சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


இன்று மூவர் தாவுகின்றனர்?
[Wednesday 2018-11-21 08:00]

இன்றைய தினம் 3 கட்சித்தாவல்கள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த மூவர் இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வர் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 125 வரை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நிசாந்த சில்வா இடமாற்றமும் ரத்தும் பூஜிதவின் முடிவே!
[Wednesday 2018-11-21 08:00]

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உத்தரவிட்டதாக வெளியான தகவலை ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.


ஐதேக எம்.பியாகிறார் சுமந்திரன் - அமைச்சரின் ஆரூடம்!
[Wednesday 2018-11-21 08:00]

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட மாட்டார் என்றும், சுமந்திரனுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தேசியபட்டியல் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


மஹிந்தவின் 'ஹெலி உலா'வுக்கு ஆப்பு!
[Wednesday 2018-11-21 08:00]

மஹிந்த ராஜபக்ஷ ஹெலிகொப்டரில் நாடாளுமன்றத்திற்கு வருவதை முதலில் நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


அரசியல் நெருக்கடி குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு சம்பந்தன் விளக்கம்! Top News
[Tuesday 2018-11-20 18:00]

வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று மாலை நடந்த இந்தச் சந்திப்பில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்கு சம்பந்தன் விளக்கமளித்திருந்தார்.


ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாரா? - ஐதேக சவால்
[Tuesday 2018-11-20 18:00]

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த தயாரா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தமது கட்சியில் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களில் யார் பொதுவேட்பாளர் என்ற விடயம் இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


சர்வதேச உதவிகள் தடை- ஒப்புக்கொள்கிறது அரசாங்கம்!
[Tuesday 2018-11-20 18:00]

ஐக்கிய தேசிய கட்சியின் சில முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக இன்று நாட்டுக்கு கிடைக்கப் பெறவிருந்த நிதியுதவிகள் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, தெரிவித்துள்ளார்.

Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா