Untitled Document
March 28, 2024 [GMT]
போர்க்குற்றவாளியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார் சிறிசேன! - சமந்தா பவர்
[Tuesday 2018-10-30 18:00]

போர்க்குற்றவாளியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன என்று, ஐக்கிய நாடுகளிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


எண்ணெய் வள ஆய்வு - மன்னார் மீனவர்களுக்கு தடை!
[Tuesday 2018-10-30 18:00]

மன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்படுவதால் மன்னார் பகுதி மீனவர்களை குறிப்பிட்ட சில தினங்களுக்கு குறித்த கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மன்னார் கடற்தொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


மற்றொரு ஐதேக எம்.பிக்கு அமைச்சர் பதவி!
[Tuesday 2018-10-30 18:00]

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த துனெஸ் கன்கந்த சுற்றாடல் துறை இராஜாங்க அமைச்சராக இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


சமூக வலைத்தளங்களை தடை செய்யும் தீர்மானம் இன்னமும் இல்லை!
[Tuesday 2018-10-30 18:00]

முகநூலை இலங்கையில் தடை செய்யப் போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். முகநூல் மட்டுமல்ல வேறெந்த சமூக வலைத்தளங்களையும் இலங்கையில் தடை செய்வது குறித்து இதுவரை எதுவித தீர்மானங்களும் எடுக்கப்பட்டவில்லையென நாலக களுவெவ மேலும் தெரிவித்துள்ளார்.


அரசமைப்புக்கு அமைவாகச் செயற்படுமாறு ஜனாதிபதியிடம் வெளிநாட்டுத் தூதுவர்கள் வலியுறுத்தல்! Top News
[Tuesday 2018-10-30 18:00]

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல், தெளிவுபடுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவுசெய்யும் தீர்மானத்துக்கு காரணமாக அமைந்த முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய நிலைமைகளை, இதன்போது ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.


கூட்டமைப்பு, ஜேவிபியுடன் இணைந்து இடைக்கால அரசை அமைக்க ஐதேக முயற்சி!
[Tuesday 2018-10-30 18:00]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க ஐக்கிய தேசிய கட்சி, பேச்சுக்களை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளபடுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


சகோதரியின் கணவனை கொலை செய்த சகோதரர்கள் இருவருக்கு மரணதண்டனை!
[Tuesday 2018-10-30 18:00]

சகோதரியின் கணவரைப் படுகொலை செய்தமை தொடர்பில் கொலைக் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்ட சகோதரர்கள் இருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கி, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடீன், இன்று தீர்ப்பளித்தார். களுவாஞ்சிகுடியில் வயல் பகுதியில் 2005ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம், 29ஆம் திகதி, மயில்வாகனம் வடிவேல் என்பவர் கடுமையான முறையில் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


சிவசக்தி ஆனந்தனுக்கு வலை வீசும் ரணில், மஹிந்த தரப்புகள்!
[Tuesday 2018-10-30 18:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக ரணில், மஹிந்த தரப்புக்கள் முயற்சிகளை எடுத்துள்ளன.


உடனடியாக நாடாளுமன்றதை கூட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு அழுத்தம்!
[Tuesday 2018-10-30 07:00]

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக நாடு ஆபத்திற்குள்ளாகியுள்ளதாக எச்சரித்துள்ள ஐரோப்பா ஒன்றியம் உடனடியாக நாடாளுமன்றதை கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.


இன்று மஹிந்தவைச் சந்திக்கிறார் சம்பந்தன்!
[Tuesday 2018-10-30 07:00]

அரசியல் குழப்ப நிலை தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று சந்திக்கவுள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பிரதான இரு கட்சிகளும் நம்பி இருக்கின்றன. மஹிந்த தரப்புக்கா, ரணில் தரப்புக்கா தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு என்ற கேள்வி அதிகரித்து வருகிறது.


தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன்! - பேரம் பேசும் மகிந்த தரப்பு
[Tuesday 2018-10-30 07:00]

கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவு ஒன்றில் அவர் இதனை வெளியிட்டுள்ளார். தமக்கு ஆதரவு வழங்கும் கட்சித் தலைவர்களுக்கு 500 மில்லியன் ரூபாவினையும், அமைச்சுப் பதவியில் இருந்தவர்களுக்கு 300 மில்லியன் ரூபாவையும் வழங்குவதாக மஹிந்த ராஜபக்ச-மைத்திரிபால சிறிசேன தரப்பு பேரம் பேசி வருகின்றது என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


அரசியலமைப்பு தொடர்பிலான மீயுயர் அதிகாரம் உயர்நீதிமன்றத்திடமே உள்ளது! - ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல்
[Tuesday 2018-10-30 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் நாட்டின் அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பிலான மீயுயர் அதிகாரம் உயர்நீதிமன்றத்திடமே உள்ளது என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புவதாக ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் தெரிவித்துள்ளது.


வடக்கு வீடமைப்பு வெறும் பேச்சாகவே இருந்தது! - என்கிறார் ஜனாதிபதி
[Tuesday 2018-10-30 07:00]

வடபகுதி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது தொடர்பில் வெறும் பேச்சு மட்டுமே இருந்தது. கிடைத்த வெளிநாட்டு உதவியை, வெளிநாட்டு கடனை எந்த அமைச்சர் பொறுப்பேற்பது, எந்த அமைச்சரின் கீழ் இதனை கொண்டுவருவது என கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் இழுபறிநிலையே இருந்தது. பொறுப்பானவர்கள் அந்த மக்களின் வீடுகளைக் கூட கட்டிக்கொடுக்காமல் இருந்து விட்டனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.


அரச தகவல் திணைக்களமே அதிகாரபூர்வமானது! - நாலக்க கலுவெவ
[Tuesday 2018-10-30 07:00]

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நிறுவனம், அரசாங்க தகவல் திணைக்களமே என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திணைக்கள ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.


அரசியல் கைதிகளைத் தேடிச் சென்ற நாமல்!
[Tuesday 2018-10-30 07:00]

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று வெலிக்கடை மற்றும் மகசின் ஆகிய சிறைச்சாலைகளுக்கு சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெற்றோரும் அங்கு சென்றுள்ளனர்.


மன்னார் மனிதப் புதைகுழி- இதுவரை 207 எலும்புக்கூடுகள் மீட்பு!
[Tuesday 2018-10-30 07:00]

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணியில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று 96 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடம்பெற்றன. இதன் போது தற்போது வரைக்கும் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என சுமார் 207 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் வீட்டுக்குச் செல்வர்! - ஐதேக எச்சரிக்கை
[Tuesday 2018-10-30 07:00]

மைத்திரி - மஹிந்த கூட்டிணைந்து அமைத்து வரும் சட்டவிரோத ஊழல் ஆட்சியை விட்டு , கூடிய விரைவில் வீடு திரும்ப வேண்டி நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு 128 எம்.பிக்கள் கோரிக்கை!
[Tuesday 2018-10-30 07:00]

உட


புதிய அமைச்சரவை பதவியேற்பு! - டக்ளஸ், ஆறுமுகனுக்கும் அமைச்சு Top News
[Monday 2018-10-29 21:00]

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறும், 12 அமைச்சர்கள் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த நிகழ்வில், பதவியேற்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இவர்கள் பதவியேற்றனர்.


சர்வாதிகார ஆட்சியை அனுமதிக்க முடியாது! -மைத்திரியின் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார் ரணில்
[Monday 2018-10-29 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன் மீதும் அமைச்சர்கள் மீதும் சுமத்திய குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தைக் கூட்டுவது குறித்து சபாநாயகர் நாளை ஆலோசனை! - சர்வதேச அழுத்தங்களும் அதிகரிப்பு Top News
[Monday 2018-10-29 18:00]

நாளை முற்பகல் 11 மணிக்கு நடைபெறவிருக்கின்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலும், சர்வதேச அழுத்தங்களை அடுத்துமே சபாநாயகர் இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை டிசெம்பர் 1 ல் கலைகிறது : - புதிய தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம்!
[Monday 2018-10-29 18:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.


அர்ஜூன ரணதுங்க கைது - பிணையில் விடுவிப்பு!
[Monday 2018-10-29 18:00]

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கொழும்பு குற்றப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.


பிரதமராக கடமைகளைப் பொறுப்பேற்றார் மஹிந்த! Top News
[Monday 2018-10-29 18:00]

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் அலுவலகத்தில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.சர்வ மத ஆசிர்வாதத்துடன் புதிய பிரதமர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.இலங்கை ஜனநாயக குடியரசின் 22 ஆவது பிரதமராக மஹிந்த தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், மகாசங்கத்தினரும் பங்கேற்றனர்.


கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும்! - சுரேஸ் பிரேமச்சந்திரன்
[Monday 2018-10-29 18:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி அதற்கான ஆதரவினை தெரிவிக்க வேண்டும். இதற்கு ஆதரவு இல்லாது விட்டால் நடுநிலைமை வகிக்கின்ற முடிவினை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


பாராளுமன்றத்தைக் முடக்கியதற்கு காரணம் கூறுகிறார் வாசு!
[Monday 2018-10-29 18:00]

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்காகவும் பாராளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்குவதற்காகவுமே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பாராளுமன்றம் அங்கீகரித்தாலே புதிய அரசாங்கம் தொடரும். அதனால் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து கொண்டு வெளியேறமாட்டேன் என தெரிவிப்பது அந்த பதவிக்கே அகௌரவமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


கூட்டமைப்பை விட்டு வெளியேறி விட்டோம்! - சிவசக்தி ஆனந்தன்
[Monday 2018-10-29 18:00]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் வெளியேறி விட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


மஹிந்தவின் எம்.பிக்களை இழுப்பதில் ஐதேகவும் தீவிரம்!
[Monday 2018-10-29 18:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக கொள்வர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை நாளுக்கு நாள் மிகவும் பலமிக்கதாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா