Untitled Document
April 16, 2024 [GMT]
விக்னேஸ்வரனின் மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!
[Thursday 2018-11-08 19:00]

வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பாக, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நிராகரிக்கப்பட்டுள்ளது.


கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் நவம்பர் - 11.11.2018.
[Thursday 2018-11-08 19:00]

நவம்பர் 11.11.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசிய வீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரப்படுவதை நாம் அறிவோம். 11.11.2018 அன்று கனடா வாழ் அனைத்து மக்களோடும் தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.


விகாரைகளில் வழிபட்டாலும் ஜனாதிபதியின் பாவம் போகாது! - பேராசிரியர் ஜயதேவ உயன்கொட Top News
[Thursday 2018-11-08 19:00]

ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்த அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற விதத்தில் செயற்படுத்துகின்றார் என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட தெரிவித்தார்.


ஜனாதிபதியை மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்! - முஜிபூர் ரஹ்மான்
[Thursday 2018-11-08 19:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.


ஜனாதிபதிக்கு எதிராக ஐதேக பாரிய வாகனப் பேரணி! Top News
[Thursday 2018-11-08 19:00]

அரசியலமைப்புக்கு விரோதமாக செயற்பட்டு வரும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சி வாகன பேரணியொன்றை நடத்தியது. கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாகவிருந்து மதியம் இரண்டு மணியளவில் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி மாலை நான்கு மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள டி.எஸ். சேனாநாயக்கவின் சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதுடன் நிறைவுக்கு வந்தது.


12 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்! - 19 வயது இளைஞன் கைது
[Thursday 2018-11-08 18:00]

பருத்தித்துறையில் 12 வயது பாடசாலை மாணவியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பாடசாலைக்கு காலை சிறுமி சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பவில்லை.


2 அமைச்சர்கள், 5 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! Top News
[Thursday 2018-11-08 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று காலை மேலும் இரண்டு அமைச்சர்கள் மற்றும் 5 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவும் பிரிட்டனும் மூக்கை நுழைக்கின்றன! - கடுப்பில் வாசுதேவ
[Thursday 2018-11-08 18:00]

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தலையீடு செய்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் கரு ஜெயசூரிய, பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தமைக்கு வாசுதேவ நாணயக்கார கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.


வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம்! - மஹிந்த பங்கேற்கவில்லை Top News
[Thursday 2018-11-08 18:00]

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியினால்,நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி நான்காவது தடவையாக இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.


விசேட மேல்நீதிமன்றங்களை கலைக்க புதிய அரசு திட்டம்?
[Thursday 2018-11-08 18:00]

மூவர் அடங்கிய விசேட மேல்நீதிமன்றம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக புதிய நீதியமைச்சராக பதவிபிரமாணம் செய்துக்கொண்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று தனது கடமைகளைப் பொறுப்​பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் அமைச்சரவை முழுமையாக பூர்த்தி செய்யப்படுமெனவும்,அதற்கமைய புதிய அரசாங்கம் ஒரு வருடத்துக்கு மேலாக நாட்டை ஆட்சி செய்யுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம்! - சரத் என். சில்வா
[Thursday 2018-11-08 18:00]

அரசமைப்பில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை அரசமைப்பின் 33 (2) உறுப்புரைக்கமைய, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் நாடாளுமன்ற கூட்டதொடரை ஆரம்பிக்கவும், நிறைவு செய்யவும், நாடாளுமன்றத்தை கலைப்பதற்குமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் கடும் மழையால் வெள்ளம் - போக்குவரத்துகள் துண்டிப்பு! Top News
[Thursday 2018-11-08 18:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில், தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், படுவான்கரைக்கான போக்குவரத்து பாதைகள் தடைப்பட்டுள்ளதுடன், மட்டு. நகர் உட்பட பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.


கொட்டித் தீர்க்கும் மழை - 2 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பும் இரணைமடுக் குளம்! Top News
[Thursday 2018-11-08 18:00]

இரண்டு வருடங்களுக்குப் பின் கிளிநொச்சி -இரணைமடு குளத்தில் நீர் அதன் முழுக்கொள்ளளவை அடைந்து வருகிறது என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் ந.சுதாகரன் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து - எச்சரிக்கிறது அமெரிக்கா!
[Thursday 2018-11-08 07:00]

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, நாடாளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர் நவுவட் இதனை தெரிவித்துள்ளார்.


14 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்துவதில் சபாநாயகர் விடாப்பிடி! - அரச தரப்பு கடும் எதிர்ப்பு
[Thursday 2018-11-08 07:00]

நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி நிலையியற் கட்டளைகளை கைவிட்டு, நிலை​யான அரசாங்கத்தை ​அமைப்பதற்கான இயலுமை தொடர்பில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய, தெரிவித்துள்ளார்.


வாக்கெடுப்பு நடக்காது, ஒத்திவைக்கப்படும்! - என்கிறார் லக்ஷமன் யாப்பா
[Thursday 2018-11-08 07:00]

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி ஜனாதிபதியின் அக்கிராசன உரை மட்டுமே இடம்பெறும் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன, அத்துடன், அன்றையதினம், நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அவசியம் இல்லை! - மஹிந்த
[Thursday 2018-11-08 07:00]

குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு, ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு எனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இருப்பதனால், அதற்கான தேவை ஏற்படாது என்று கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சி வரிசையில் அமர்வேன் - மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள குமார வெல்கம!
[Thursday 2018-11-08 07:00]

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவேன். மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபித்தாலும் நான் அவரது அமைச்சரவையில் அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம. கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்-


வேண்டாம் உங்களின் விருது! - ஜனாதிபதியிடம் திருப்பிக் கொடுத்தார் தேவநேசன் நேசையா
[Thursday 2018-11-08 07:00]

ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறார்.


பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது! -
[Thursday 2018-11-08 07:00]

பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றம் கலைப்பு உண்மையில்லை!
[Thursday 2018-11-08 07:00]

நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று அராசங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-


அரசுக்கு எதிராக ஐதேக இன்று வாகனப் பேரணி!
[Thursday 2018-11-08 07:00]

புதிய அரசாங்கத்தின் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் இன்று வாகன பேரணியொன்றை, ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவுள்ளது. கொழும்பு - காலி முகத்திடலில் பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் வாகன பேரணி, நாடாளுமன்ற சுற்றுவட்டாரம் வரை பயணிக்கவுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஊடகப்பிரிவு, அப்பேரணியில் பங்கேற்கமாறு, புதிய அரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.


சமல், எஸ்.பி., பவித்ராவுக்கு அமைச்சர் பதவிகள்! Top News
[Thursday 2018-11-08 07:00]

இரண்டு புதிய அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். சமல் ராஜபக்‌ஷ- சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சராகவும், எஸ்.பி திசாநாயக்க பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.


கூட்டமைப்புடன் ஜனாதிபதி நீண்ட பேச்சு!
[Wednesday 2018-11-07 18:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், பாராளுடன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம் ஏ.சுமந்திரன்ஆகியோர் இன்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில்- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது.


நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படலாம்?
[Wednesday 2018-11-07 18:00]

சட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி​பால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகிய இருவரும் இரண்டாவது சட்டவிரோத சதிக்காக தற்போது கூடியுள்ளனர் என்றும், சிலவேளைகளில் இன்று இரவு கூட நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.


சீனாவின் நீர்மூழ்கிகளுக்கு இலங்கையில் இடமில்லை! - சரத் அமுனுகம
[Wednesday 2018-11-07 18:00]

சீனாவின் நீர்மூழ்கிகளுக்கு இலங்கையில் இடமளிக்கப்படாது என புதிய வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.


மன்னார் புதைகுழியில் 232 எலும்புக்கூடுகள்! - பிஸ்கட் பக்கற் உள்ளிட்ட முக்கிய தடயப் பொருட்களும் சிக்கின
[Wednesday 2018-11-07 18:00]

மன்னார் புதைகுழியில் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் 232 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 18 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை என்றும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இன்று 102 வது நாளாகவும் இடம்பெற்ற போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடவில்லை! - ரணில்
[Wednesday 2018-11-07 18:00]

தமிழ் அரசியல் கைதிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கவே, நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதற்கு தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க,தெரிவித்துள்ளார்.

Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா